நிறத்துக்கு வாக்களிக்க வாங்க!
உ. தாமரைச்செல்வி
ஒருவர் வாக்களிக்க வேண்டுமானால் அந்த வாக்கெடுப்புக்கு என்று சில தகுதிகள் இருக்கும். ஆனால் இங்கு வாக்களிக்க வயது, கல்வி அல்லது வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. இங்கு வாக்களிக்க சின்னங்கள் ஏதுமில்லை. நிறங்கள்தான் இங்கு போட்டியாளர்கள்.
இந்தப் போட்டியில் வாக்களிக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆம்! இந்த இணையதளத்தில் நிறத்திற்கு வாக்களிப்பு நடத்தப்படுகிறது.
ஆம். இந்த இணையதளத்தில் இருவேறு நிறங்களில் சதுரக் கட்டங்கள் உள்ளன. இந்த இரு கட்டங்களிலுள்ள நிறங்களில் தங்களுக்குப் பிடித்த நிறத்தைச் சொடுக்குவதன் மூலம் அந்நிறத்துக்கு வாக்களிக்கலாம்.ஒரு வாக்களிப்பு நடந்த பின்பு அடுத்து இருவேறு நிறங்கள் பார்வைக்குக் கிடைக்கின்றன. இப்படியே தொடர்ந்து இரு நிறங்கள் கிடக்கின்றன.
ஒவ்வொரு வாக்களிப்பின் போதும் இரு நிறங்களுக்குக் கிடைத்த வாக்குகளின் சதவிகிதம் கிடைக்கிறது. இத்துடன் குறிப்பிட்ட இருவேறு நிறங்களின் சில புள்ளிவிவரங்களும் கிடைக்கின்றன. இறுதியாக வெற்றிக்கான விகிதமும் அளிக்கப்படுகின்றன.
அப்புறமென்ன, தாங்களும் தங்களுக்குப் பிடித்த நிறங்களுக்கு வாக்களித்து அந்நிறங்களை வெற்றி பெறச் செய்ய வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.