நமக்கு நாமே பெயரை உருவாக்கலாம்!
உ. தாமரைச்செல்வி
பலருக்கும் தங்கள் பெயர் பலர் பார்வையில் படும்படி இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. கோயிலுக்கு ஒரு மணி வழங்கினால் கூட அதில் உபயம் என்று போட்டு தன் பெயர் பளிச்செனத் தெரிய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.
இவர்களைப் போன்றவர்கள் இணையத்திலும் இருக்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களுக்காகவே ஒரு இணையதளம் இயங்குகிறது.
இந்த இணையதளத்தில் உங்கள் பெயரைப் பல்வேறு இடங்களில் சேர்த்துப் படமாக்கிப் பார்க்கலாம். இத்தளத்தில் மக்கள், பொது இடங்கள், வணிக அட்டைகள், வெற்றிக் கோப்பை மற்றும் இதர வகைகள் எனும் ஐந்து பிரிவுகள் இருக்கின்றன. இப்பிரிவுகளின் கீழ் பல்வேறு மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து சொடுக்கினால் தனியாக ஒரு பக்கம் திறக்கிறது. இதில் நாம் பெயர் அல்லது விரும்பும் சொற்களை உள்ளீடு செய்து கொண்டு, நிறம், அளவு, எழுத்துரு போன்ற தகவல்களைத் தேர்வு செய்து கீழுள்ள சமர்ப்பி எனும் பொத்தானைச் சொடுக்கினால் போதும்! நீங்கள் விரும்பிய மாதிரியில் உங்கள் பெயர் கிடைக்கும்.
யாரையும் எதிர்பார்க்காமல் நமக்கு நாமே பெயரைப் போட்டு உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான் என்கிறீர்களா? வாருங்கள்! உங்களுக்காக...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.