பித்துபிடித்த படத் தொகுப்பு!
உ. தாமரைச்செல்வி
சிலருக்கு வித்தியாசமான படங்கள் பிடிக்கும். ஆனால் இந்த வித்தியாசத்திலிருந்து சற்று உயர்ந்து பித்துபிடித்தது (Crazy) போன்று பல படங்களை உருவாக்குவது உண்டு. இதுபோன்ற படத்தொகுப்புகளை நீங்கள் பார்த்ததுண்டா? பார்க்க விரும்பியதுண்டா?
விருப்பமிருந்தால் இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
இந்த இணையதளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களின் தொகுப்பு இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 20 படங்களும், அந்தப் படத்திற்கான சிறு விளக்கக் குறிப்புகளும் தரப்பெற்றுள்ளன. இங்குள்ள படத்திலோ அல்லது படத்திற்கான குறிப்பின் தலைப்பிலோ சொடுக்கினால் போதும். அந்தப் படத்திற்கான தனிப்பக்கத்துக்குச் செல்கிறது. அங்கு படமும் அந்தப் படத்திற்கு வாக்களிக்க வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, அந்தப்படத்தை நண்பர்களுக்கு அனுப்ப விரும்பினால் அதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
என்ன? பித்துபிடித்த படங்களைப் பார்க்கத் தயாரா? வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.