விருது வாங்க விருப்பமா?
உ. தாமரைச்செல்வி
பாராட்டும், பரிசுகளும் என்றால் பலருக்கும் விருப்பம்தான். உங்களுக்கும் கூட அந்த விருப்பம் இருக்கலாம். கவலைப்படாதீர்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற விருதே வழங்கிச் சிறப்பிக்கிறோம்.
உண்மையாகவே உங்களுக்கு விருது வழங்க ஒரு இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் பல வகையான விருதுகளுக்கான தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. தங்களுக்குப் பிடித்தமான ஒரு தலைப்பைத் தேர்வு செய்து சொடுக்குங்கள். அங்குள்ள காலிக் கட்டத்தில் உங்கள் பெயரையோ அல்லது உங்களுக்கு விருப்பமானவர் பெயரையோ உள்ளீடு செய்யுங்கள். அதன் பிறகு சமர்ப்பி பொத்தானை சொடுக்குங்கள். உங்களுக்கு விருதுக்கான சான்றிதழ் தயார்!
இந்த விருதை நீங்களே உங்களுக்கு உருவாக்கிக் கொண்டாலும் சரி! அல்லது உங்கள் நண்பருக்கோ அல்லது விருப்பமானவருக்கோ உருவாக்கி வழங்கினாலும் சரி!
விருதுகளைத் தாராளமாக அளிக்க விருப்பமுடையவராக இருந்தாலும் சரி, வாங்கிக் கொள்ள விருப்பமுடையவராயிருந்தாலும் சரி... வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.