செல்லப் பெயர் வேண்டுமா?
உ. தாமரைச்செல்வி
தாய் தந்தையர் விருப்பப்பட்டு ஒரு பெயரை வைத்தாலும், பின்னர் அவர்களே வைத்த பெயரைக் கூப்பிடாமல் செல்லப் பெயர் ஒன்றை வைத்துக் கூப்பிடுவார்கள். இப்படி பலருக்கும் சான்றிதழுக்கு ஒரு பெயர், கூப்பிடுவதற்கு ஒரு பெயர் என வீடுகளில் இரண்டு பெயர் பயன்பாட்டிலிருக்கும்.
சிலருக்கு வீட்டில் வைத்த செல்லப் பெயர் பிடிக்காமல் இருக்கலாம் அல்லது சிலருக்கு செல்லப் பெயரே இல்லாமல் இருக்கலாம். இவர்களுக்கு உதவ ஒரு இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்திலுள்ள காலிக்கட்டத்தில் உங்கள் பெயரை உள்ளீடு செய்யுங்கள். அதன் வலதுபுறமுள்ள பெட்டியிலிருக்கும் பல குறிப்புகளில் உங்களுக்குப் பிடித்த குறிப்பைத் தேர்வு செய்யுங்கள்! அதன் கீழுள்ள ஆண், பெண் பாலினத்தில் சரியானதைத் தேர்வு செய்து கீழுள்ள சமர்ப்பி எனும் பொத்தானை அழுத்துங்கள். உங்கள் பெயருக்கேற்ற ஐந்து செல்லப் பெயர்கள் கிடைக்கும். இந்தப் பெயர்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் செல்லப் பெயரை நீங்களாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
என்ன செல்லப் பெயரை உருவாக்கப் போகிறீர்களா? உங்களுக்காகவே...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.