வாங்க...! திரைப்படம் உருவாக்குங்க...!!
உ. தாமரைச்செல்வி
திரைப்படத்தில் நடிக்க வேண்டும், திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை சிலருக்குள் புகுந்து கொண்டு ஆட்டிப்படைக்கும். சிலர் திரைப்படம் எடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு குறும்படமாவது எடுப்போம் என சில நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத் தயாரிப்பில் இறங்கி விட்டனர். இதனால் இன்று பல குறும்படங்கள் வந்து விட்டன.
நீங்கள் குறும்படம் தயாரிக்க முடியாவிட்டாலும் ஒரு சிறு எண்ணிம திரைப்படம் (Digital Film) ஒன்றை இணையத்தில் உருவாக்கலாம். இதற்கு ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்திற்குள் சென்று புதிய திரைப்படம் எனுமிடத்தில் சொடுக்குங்கள். அங்குள்ள திரைப்படத்தின் பெயர் எனும் கட்டத்தில் திரைப்படத்தின் பெயரைத் தட்டச்சு செய்யுங்கள். இயக்குனர் எனும் கட்டத்தில் உங்கள் பெயரைத் தட்டச்சு செய்யுங்கள். பின்புலத்திற்கேற்ற வடிவமைப்பைத் தேர்வு செய்யுங்கள். அசைவூட்டத்தைத் தேர்வு செய்யுங்கள். அதன்பிறகு தலைப்பைத் திரையில் ஓடச் செய்து பாருங்கள். அடுத்து காட்சி எனுமிடத்தைச் சொடுக்குங்கள். அங்கிருக்கும் படங்களில் ஒன்றைத் தேர்வு செய்து திரைப்படக் காட்சியை உருவாக்குங்கள். அவ்வளவுதான்! இனி நீங்களும் திரைப்பட இயக்குனர்தான்.
என்ன திரைப்பட இயக்குனராக ஆசை வந்திடுச்சா? வாங்க... உங்கள் ஆசைப்படி திரைப்படம் உருவாக்குங்க...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.