பத்து வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்!
உ. தாமரைச்செல்வி
சில வித்தியாசங்களைக் கொண்ட ஒரே மாதிரியான இரு படங்களை வெளியிட்டு இர்ண்டுக்குமிடையிலிருக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கும் விளையாட்டை சில பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள்.
இப்படி இரு படங்களுக்கிடையிலான பத்து வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கச் சொல்லும் இணையதளம் ஒன்று இருக்கிறது.
இந்த இணையதளத்திற்குள் நுழைந்தவுடன் மேலும் கீழுமாக இரண்டு படங்கள் இருக்கின்றன. இந்த இரு படங்களுக்குள் வித்தியாசத்தைக் கண்டுபிடித்தவுடன் கீழுள்ள படத்திற்கு நகர்த்தி (Mouse) கொண்டு சென்றால் அந்தப் படம் இரண்டாக விரிந்து அதனுள் வித்தியாசமுள்ள இடங்கள் சிகப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள படங்களுக்கிடையில் பத்து வித்தியாசங்கள் இருக்கின்றன.
வித்தியாசம் கண்டுபிடித்து மகிழ்ச்சி அடைய விருப்பமுடையவர்கள் இந்தத் தளத்திற்குச் செல்லலாம்!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.