வேற்று கிரகங்களில் உங்கள் வயது?
உ. தாமரைச்செல்வி
இந்த பூமியில் உங்கள் பிறந்த நாளைக் கொண்டு உங்களுக்கான வயதைக் கணக்கிட்டு விடுகிறீர்கள்.
365 நாட்கள் கடந்து விட்டால் உங்களுக்கு ஒரு வயது கூடிவிடும் என்று கணக்கை எளிமையாகப் போட்டு விடுகிறீர்கள்.
ஆனால், இந்த பிறந்த நாளுக்கு வேற்றுக் கிரகங்களில் உங்களுக்கு என்ன வயதாகிறது? அடுத்த பிறந்த நாள் எப்பொழுது வரும் என்று உங்களால் கணிக்க முடியுமா?
உள்ளூருக்குள்ளய நம்ம கணக்கு சரிவர மாட்டேங்குது... இதுல வெளிநாடுன்னால் கூட பரவாயில்லை.... வெளி கிரகத்துக்கெல்லாம் கணக்கு போடவா?
அய்யோ என்னை ஆள விடுங்க சாமி...ன்னு ஓடப் போறீங்களா?
உங்களுக்கு ஒரு இணையதளம் உதவுகிறது...
இந்த இணையதளத்திற்குச் சென்று உங்கள் பிறந்த நாளை மட்டும் உள்ளீடு செய்யுங்கள்
வேற்றுக் கிரகங்கள் ஒவ்வொன்றிலும் உங்க வயதை அப்படியே நாள் கணக்கிலும் வருடக் கணக்கிலும் ஒரே சமயத்தில் பட்டியலிட்டுவிடும்.
அதன் கீழ் ஒவ்வொரு கிரகத்திலும் உங்களின் அடுத்த பிறந்த நாள் எப்போது கொண்டாட முடியும் என்றும் தெரிவித்து விடும்.
அப்படியா? என்று ஆச்சர்யத்துடன் வேற்று கிரகங்களில் உங்கள் பிறந்த நாளைக் கணக்கிட.... முடிவு செய்தவர்களுக்கு மட்டும்...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.