கலைந்திருக்கும் உருவத்தை ஒன்று சேருங்கள்!
உ. தாமரைச்செல்வி
கலைந்து கிடக்கும் உருவத்தை ஒன்று சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கி விட்டால் சற்று ஆர்வத்துடன் தங்களையே மறந்துவிடும் பலர் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு உதவுவதற்காகவே ஒரு இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்திற்குள் நுழைந்தவுடன் அமெரிக்காவில் பிரபலமான ஒருவரின் உருவப்படம் தோன்றுகிறது. இந்த உருவப்படத்தின் கீழுள்ள பகுதியில் தொடங்கு எனும் பொத்தானில் சொடுக்கினால் அந்தப்படம் அப்படியே கண்ணாடி உடைந்து கிடப்பது போல் துண்டுதுண்டாகச் சிதறிப் போய் விடுகிறது. இந்தத் துண்டுகளையெல்லாம் சரியான இடத்தில் பொருத்திப் படத்தை முழுமையாக்கலாம்.
இப்படி பல படங்கள் குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் தளத்தின் கீழ்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் விரும்பும் படத்தைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.
பொழுதே போக மாட்டேங்குது என்று புலம்புபவர்களுக்கு இந்தத்தளம் சிறப்பான தளம்தான். என்ன? பொழுது போகவில்லையா....? வாங்க...உங்களுக்குத்தான்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.