இதற்குக் கூடவா புள்ளி விவரம்?
உ. தாமரைச்செல்வி
ஏதாவது படம் கிடைத்தால் போதும் அதற்கு மீசை, தாடி என்று வரைந்து விளையாடும் பழக்கம் சிலருக்குண்டு.
இணையத்திலும் இதுபோல் சில படங்களை அளித்து அந்தப் படத்தைப் பார்வையிட்டவர்கள் படத்தில் எந்த இடத்தில் நகர்த்தியை (Mouse) வைத்துச் சொடுக்கிப் பார்த்திருக்கிறார்கள் என்று காண்பிக்க ஒரு தளம் இயங்குகிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் படத்தில் நாம் விரும்புமிடத்தில் நகர்த்தியை வைத்துச் சொடுக்கி விட்டால் போதும். அந்தப்படத்தில் எந்தெந்த இடங்களிலெல்லாம் நகர்த்தியை வைத்துச் சொடுக்கியிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரத்தை... இல்லையில்லை புள்ளிகளிட்டுக் காண்பிக்கிறது. அதன் கீழ் இவ்விளையாட்டைத் தொடர அடுத்த படத்திற்குச் செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
குறும்பான இந்த விளையாட்டை நீங்களும்தான் விளையாடித்தான் பாருங்களேன்... வாங்க...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.