கடந்த பிறப்புத் தகவல்கள்
உ. தாமரைச்செல்வி
இந்த உடலுக்குத்தான் அழிவு. ஆன்மாவிற்கு அழிவில்லை என்று சில சமயங்கள் சொல்கின்றன. இந்த சமயக் கோட்பாடுகளில் கடந்த பிறப்பு (முன் ஜென்மம்) குறித்த தகவல்களுக்குப் பஞ்சமிருக்காது. உண்மையில் கடந்த பிறப்பு என்று ஒன்று இருக்கிறதா?
கடந்த பிறப்பு என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ... கடந்த பிறப்பு குறித்த தகவல்களைத் தரும் இணையதளம் ஒன்று உள்ளது.
இந்த இணையதளத்தில் உங்கள் பிறந்த நாளை மட்டும் உள்ளீடு செய்தால் போதும்.உங்கள் முன் ஜென்மத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் பிறந்த நாள், மாதம், ஆண்டுக்கான காலிக்கட்டத்தில் சரியாக உள்ளீடு செய்து கீழுள்ள மூலமறியச் சொடுக்கு எனுமிடத்தில் சொடுக்கினால் தங்கள் முன் ஜென்ம தகவல்களைக் கொண்ட தனிப் பக்கம் கிடைக்கிறது. அதில் கடந்த பிறப்பில் பிறந்த பகுதி, ஆண்டு, செய்த தொழில் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்ததாக கடந்த பிறப்பில் தங்கள் உளவியல் வாழ்க்கைக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்து தங்களது கடந்த பிறப்பு இந்த வாழ்க்கைக்கு வழங்கும் பாடங்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. இறுதியாக ”தற்போது உங்களால் நினைவுபடுத்த முடிகிறதா” என்று ஒரு கேள்வியும் இருக்கிறது.
தங்களுக்கு தங்களின் கடந்த பிறப்பு குறித்த தகவலை அறிந்து கொள்ள ஆசையா? வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.