வேடிக்கையான தகவல் பலகை
உ. தாமரைச்செல்வி
தாங்கள் சொல்லும் தகவல்களை வித்தியாசமாகச் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் உண்டு. அது பிறர் செய்யாததாக இருக்க வேண்டும் என்கிறதாகவும் இருக்கும்
இப்படி வித்தியாசமான தகவல் பலகையை உருவாக்க ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், கேலிச்சித்திரம், விலங்குகள் போன்ற தலைப்புகள் இருக்கின்றன. இதில் விருப்பப்பட்ட ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்தத் தலைப்பின் கீழ் ஏராளமான பட மாதிரிகள் இருக்கின்றன. இந்தப் பட மாதிரிகளில் ஒன்றைத் தேர்வு செய்து நாம் சொல்ல விரும்பும் தகவல்களை அதற்கான இடத்தில் உள்ளீடு செய்து கோண்டு எழுத்துரு, நிறம் மற்றும் அளவு போன்றவைகளையும் தேவையானால் மாற்றம் செய்து கீழுள்ள மாற்றத்திற்கான பொத்தானை அழுத்தினால் போதும். தாங்கள் தேர்வு செய்த மாதிரிப் படத்திலிருக்கும் பலகையில் உள்ளீடு செய்த தகவல் இடம் பெற்று இருக்கும்.
உங்கள் தகவல்களை வித்தியாசமாக அறிவிக்க வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.