புகழ் பெற்றவர்களின் கல்லறைத் தகவல்கள்
உ. தாமரைச்செல்வி
உலகின் மிக முக்கியமான சில அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்களாக இருந்தவர்கள், இறந்து போன பின்பும் அவர் /அவரது திறன் மேல் நம்பிக்கை கொண்ட சிலரின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வாழும் போது புகழ் பெற்று, பின்னர் மறைந்து போனாலும் அவர்களுக்கென அமைக்கப்படும் கல்லறைகள் அவரது நினைவைப் போற்றுவதாக இருக்கின்றன. இப்படி புகழ்பெற்றவர்களின் கல்லறையைப் பற்றிய தகவல்களை அளிக்கும் இணையதளம் ஒன்று உள்ளது.
இந்த இணையதளத்தில் 53 வருடங்களுக்கு முன்பு மறைந்து போன எழுபத்தைந்து மில்லியனுக்கும் அதிகமான நபர்களது கல்லறை குறித்த விவரங்கள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் புகழ் பெற்ற கல்லறை, கல்லறை அமைந்துள்ள இடம், புகழ்பெற்ற நினைவுச் சின்னங்கள் என்பது போன்ற பல தலைப்புகளில் கல்லறைகளைத் தேடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கு விருப்பமான, புகழ் பெற்று மறைந்து விட்டவர்களின் கல்லறை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.