பாறையின் மேல் பாறை
உ. தாமரைச்செல்வி
வாழ்க்கையில்தான் எத்தனை மேடு பள்ளங்கள்...? சிலர் உயர்வுக்கு சிறு விசயங்களே உதவியிருக்கின்றன என்று சொல்வதுண்டு. சிறிய கற்கள் கூட பெரும்பாறையைத் தாங்கி நிற்பதுண்டு. இவையெல்லாம் சாத்தியமா? என்று சில சமயம் நாம் நினைப்பதுண்டு. இதுபோன்ற அதிசயக் காட்சிகளைப் பார்க்கும் போது ஆச்சர்யப்பட்டுப் போகிறோம்.
பாறையின் மேல் பாறை என குறிப்பிட்ட தூரம் அடுக்கி வைப்பதும் கூட ஒரு கலைதான். இந்தக் கலையின் மூலம் பாறை அடுக்கக் கற்றுக் கொள்ளும் முறைகளைக் கொண்ட ஒரு இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்தில் பாறையின் மேல் பாறை அடுக்கப்பட்ட வித்தியாசமான படக் காட்சிகள், பாறை அடுக்கலைக் கற்றுத் தரும் செய்முறைகள், பாறை அடுக்கலுக்கான சமுதாயம், நிலையாக இருப்பதற்கான பயிற்சிகள் என பல தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
பாறை மேல் பாறை அடுக்கலைத் தெரிந்து கொள்வதை விட வாழ்க்கையில் ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.