தலை முடி இழப்பு தெரிய வேண்டுமா?
உ. தாமரைச்செல்வி
கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் நாம் நமக்கு எவ்விதத் துன்பத்தையும் தராத முடியை மொட்டையடித்துக் கொள்வதாக வேண்டிக் கொள்கிறோம். சிலர் சபதத்திற்குக் கூட மொட்டையடித்துக் கொள்வதாக சவால் விடுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் முடி மீண்டும் வளர்ந்து விடும் என்பதே.
ஆனால் நாம் வளர்க்கும் முடி கறுப்பு நிறத்திலிருந்து சிறிது வெள்ளை நிறத்துக்கு மாறினாலே கறுப்பு அல்லது வேறு ஏதாவது பிடித்த நிறத்தின் சாயத்தைப் பூசிக் கொள்கிறோம். நம் குறையை மறைத்துக் கொள்கிறோம். ஆனால் சரியான பராமரிப்பில்லாமல் விட்டு அல்லது ஏதோ கவலைப்பட்டு நம் முடியை இழக்கத் தொடங்கி விட்டால் அதற்காக பெரும் கவலையடையத் தொடங்கி விடுகிறோம்.
நமக்கு நம் முடியின் இழப்பு தெரியாமல் போய்விடுகிறது. இதைக் கண்டுபிடிப்பதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது என்றால் ஆச்சர்யமாயில்லை.
இந்த இணையதளத்தில் நம் தலை முடி இழப்புக்கான கணக்குக்கு சிறு தகவல்களை மட்டும் உள்ளீடு செய்தால் போதும். அதாவது முதலில் வயது உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பின்பு கீழுள்ள முடியின் அமைப்புக்கேற்ற சில படங்களில் நமக்கேற்ற படத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.அதன் பின்பு நம் மன அழுத்தம் குறித்த தகவலை சரியாகத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் கீழுள்ள குடும்பத்தினர் முடி இழப்பு குறித்த தகவலைத் தேர்வு செய்து கொண்டு கீழுள்ள கணக்கிடும் பொத்தானைச் சொடுக்குங்கள். உங்கள் முடி இழப்புக்கான சதவிகிதம் உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
என்ன உங்கள் முடி குறித்து முடிவு செய்யத் தயாரா? வாருங்கள் உங்களுக்காக...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.