உங்கள் குரலைப் பதிவு செய்து அனுப்ப வேண்டுமா?
உ. தாமரைச்செல்வி
பண்டிகைக் காலங்களில் உங்கள் உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ உங்கள் வாழ்த்துக்களை படங்களாகவோ, எழுத்துக்களாகவோ அனுப்பி வைப்பீர்கள்.
இனி உங்கள் வாழ்த்துக்களை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப முடியும்.
இதற்கு ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் உள்ள கட்டத்திலிருக்கும் பதிவு செய்யச் சொடுக்கு எனுமிடத்தில் சொடுக்கினால் உங்கள் குரல் பதிவு செய்வதற்கான இணைப்பு கிடைக்கும். தாங்கள் விரும்பும்படியாக உங்கள் குரலில் வாழ்த்துச் செய்தி அல்லது வாழ்த்துப் பாடல் அல்லது உங்களுக்கு விருப்பமான தகவல்களைச் சொல்லிப் பதிவு செய்யுங்கள்.
அதன் பிறகு பதிவை நிறுத்தி விட்டால் தங்கள் குரலில் பதிவு செய்யப்பட்ட பதிவை உங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
என்ன? உங்கள் குரலைப் பதிவு செய்து அனுப்ப விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக இதோ...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.