கேலிச்சித்திரம்
உ. தாமரைச்செல்வி
பல பத்திரிகைகளில் திரைப்படம், அரசியல் எனும் துறைகளிலுள்ள முக்கிய நபர்களைக் கேலிச்சித்திரப் படங்களாகப் போட்டு இருப்பார்கள். உங்கள் படத்தையும் கேலிச்சித்திரப் படமாக்கிப் பார்க்க வேண்டுமென்கிற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? கவலையை விடுங்கள் இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் உங்கள் படத்தைக் கேலிச்சித்திரமாக்க மூன்று நிலைகள் இருக்கின்றன. முதல் நிலையில் தங்கள் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யுங்கள். இரண்டாம் நிலையில் அங்குள்ள கேலிச்சித்திர மாதிரிப் படங்களில் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்வு செய்யுங்கள். மூன்றாம் நிலையில் தற்போது கேலிச்சித்திரமாக்கு எனும் பொத்தானைச் சொடுக்குங்கள். அவ்வளவுதான்! உங்கள் புகைப்படம் கேலிச் சித்திரமாகிவிடும்.
என்ன... உங்கள் படத்தைக் கேலிச்சித்திரமாக்கி விட்டீர்களா? உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.