உங்கள் மரணத் தேதி என்ன?
உ. தாமரைச்செல்வி
பிறப்பு நாள் தெரிந்தால் சந்தோசப்படலாம். ஆனால் இறப்பு நாள் தெரிந்தால் சந்தோசப்படுவீர்களா? இல்லை சங்கடப்படுவீர்களா? இல்லை சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்களா?
சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்கள் என்றால் உங்கள் மரணத் தேதியை முன் கூட்டியே கணித்துச் சொல்கிறது ஒரு இணையதளம்.
இந்த இணையதளத்தில் உள்ள காலிப் பெட்டிகளில் உங்கள் பெயர், பிறந்த நாள், உயரம், எடை போன்றவைகளை உள்ளீடு செய்யுங்கள். பின்னர் தாங்கள் மது அருந்தும் பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் அதையும் குறிப்பிடுங்கள். அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.
அதன் பிறகு கீழுள்ள கணக்கிடு என்று இருக்கும் பொத்தானைச் சொடுக்குங்கள்
உங்கள் மரணத் தேதி உங்கள் பார்வைக்குக் கிடைக்கும். அதன் கீழ் பகுதியில் இன்னும் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கப் போகிறீர்கள் என்பதை வருடம், மாதம், நாள் கணக்கிலும், வினாடிக் கணக்கிலும் காண்பித்து விடும்.
மனிதன் மட்டுமில்லை, உயிரினங்களாகப் பிறந்த அனைத்திற்கும் மரணம் என்பது வாழ்க்கையின் கடைசி நிகழ்வு. இந்த நிகழ்வு வாழ்க்கையில் அனைவருக்கும் உறுதி என்பதும், இதில் நாம் எப்படிப் பிறந்தோமோ அப்படியே ஒன்றுமில்லாமல் செல்லப் போகிறோம்... என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்...
இருப்பினும் இடைப்பட்ட காலத்தில் நாம் ஆடும் ஆட்டங்கள்தான் எத்தனை? நாம் போடும் வேடங்கள்தான் எத்தனை? அத்தனையிலும் தான் தொடர்ந்து இருக்கப் போவதாக எண்ணி இறுமாப்பு கொள்வது... என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் நிலையில் சற்று மாற்றம் ஏற்படுத்திக் கொள்ள நம் மரணத் தேதியை முன்கூட்டியேத் தெரிந்து கொள்ளலாமே...?
இது ஒரு சாதாரண கணக்குதானே தவிர, உண்மையில் உறுதியான மரணத் தேதி என நினைத்து விடாதீர்கள்...
வாருங்கள்! பயமில்லாமல் உங்கள் மரணத் தேதியைப் பாருங்கள்!!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.