காதலிக்கப் போகிறீர்களா?
உ. தாமரைச்செல்வி
இளம் வயது என்றாலே அவர்கள் மனதிற்குள் காதல் எட்டிப் பார்க்கிறது.
இந்தக் காதலில் அனைவருக்கும் ஆர்வம் அதிகம்தான். சிலர் காதல் என்றால் எனக்குப் பிடிக்காது என்று சொன்னாலும் அவர்களுக்குள்ளும் காதல் ஒளிந்து கிடக்கத்தான் செய்யும். அவர்கள் வீட்டில் விதித்த கட்டுப்பாடுகள் காதலுக்குள் போய்விடாமல் தடுத்தாலும் மனதுக்குள் காதல் ஓட்டம் வேகமாகத்தான் இருக்கும்.
காதலைப் பற்றி என்னதான் நினைக்கிறார்கள்?
காதலுக்கான ஆலோசனைகள், காதலுக்கான கடிதங்கள், காதல் கவிதைகள், காதல் சோதனைகள், காதல் அளவீடுகள், காதல் குறுந்தகவல்கள் என்பது போன்று பல காதல் தலைப்புகளில் இந்த இணையதளம் முழுக்க காதல் தகவல்கள்தான்.
இந்த இணையதளத்திலிருக்கும் காதல் கணக்கீட்டுக் கருவி (Love Calculator) மூலம் உங்களுக்கும், உங்கள் காதல் துணைக்கும் எவ்வளவு சதவிகிதம் பொருத்தம் இருக்கிறது என்று கணக்கிடலாம்.
இந்த இணையதளத்திலிருக்கும் காதல் அளவீடு (Love Meter) மூலம் எவ்வளவு அளவு என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இந்தக் காதல் உங்களுக்கும், காதல் துணைக்கும் அதிக அளவாக இருந்தால் சந்தோசப்படுங்கள்... இல்லையென்றால் இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்...
ஏனெனில் இது ஒரு பெயரளவிலான பொருத்தம்தான்...!
என்ன உங்கள் காதலுக்கு இந்த இணையதளம் உதவுமா? என்று பார்க்க வேண்டுமா? இதோ...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.