குறுந்தகவல் அனுப்ப செய்திகள் தேவையா?
உ. தாமரைச்செல்வி
நகர் பேசி (Mobile Phone) வழியாக குறுந்தகவல்கள் (SMS) அனுப்புவதில் சிலருக்கு அதிகமான ஈடுபாடு இருப்பதுண்டு. இவர்களுக்கு எவ்வளவு குறுந்தகவல்கள் இருந்தாலும் அது பற்றாக்குறையாகவே இருக்கும். இவர்கள் புதிதாக குறுந்தகவல் செய்திகள் ஏதாவது இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்காகவே வேடிக்கைக் குறுந்தகவல்கள் (Funny SMS), காதல் குறுந்தகவல்கள் (Love SMS), சுட்டிக் குறுந்தகவல்கள் (Naughty SMS), விவேகமான சொற்கள் (Wise Words), சிறப்பு நாள் (Special Day) என சில தலைப்புகளின் கிழ் குறுந்தவல் செய்திகள் ஒரு இணையதளத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த இணையதளத்திலிருக்கும் தலைப்புகளில் சொடுக்கினால் இத்தலைப்புகளின் கீழான பல்வேறு துணைத் தலைப்புகள் கிடைக்கின்றன. இத்துணைத் தலைப்புகளின் கீழ் ஏராளமான குறுந்தகவல் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இதிலிருந்து விருப்பமான குறுந்தகவல்களைத் தேர்வு செய்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழலம்.
என்ன குறுந்தகவல் அனுப்ப முடிவு செய்து விட்டீர்களா? உங்களுக்காக...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.