உங்கள் விருப்பப்படி உருவாக்கலாம்
உ. தாமரைச்செல்வி
T சட்டைகள் (T-Shirts), துருவச் சட்டைகள் (Polo Shirts), பைகள் (Bags), தொப்பிகள் (Hats), சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் (Poster and Banners), குழுச் சீருடைகள் (Team Uniforms) போன்றவைகளை உங்கள் விருப்பத்திற்கேற்றபடி வடிவமைக்க முடியும்
இதற்கு ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் மேற்காணும் தலைப்புகளில் ஒன்றில் சொடுக்கினால் அந்தத் தலைப்பின் கீழான பொருள் பல்வேறு நிறங்களிலான படம் கிடைக்கிறது. ஒவ்வொருபடத்தின் கீழும் வடிவமைப்பு, உபயோகத் தகவல் என்கிற பொத்தான்கள் உள்ளன.
இந்தப் பொத்தான்களில் வடிவமைப்புப் பொத்தானைச் சொடுக்கினால் தேர்வு செய்த படம் பார்வைக்குக் கிடைக்கிறது. இதன் இடதுபுறம் அந்தப் படத்தில் தங்களுக்குத் தேவையான வடிவமைப்பை உருவாக்குவதற்கான வசதிகள் உள்ளன.
இதிலிருந்து ஏற்கனவே உள்ள சில படங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது நம் கணினியிலுள்ள படத்தினைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இந்தப் படத்தில் நம் விருப்பத்திற்கேற்ற சொல்லையோ அல்லது வாசகத்தையோ சேர்த்துக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்குப் பிடித்தமான வடிவமைப்பு செய்து உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்யவோ அல்லது உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளவோ முடியும்.
நீங்கள் தயாரித்த வடிவமைப்பிலேயே வாங்கிக் கொள்வதற்கும் வசதி உள்ளது.
அப்புறம் என்ன உங்களுக்குப் பிடித்த வழியில் வடிவமைப்பு செய்து வாங்கி அணிந்து மகிழுங்கள்... உங்களுக்காகவே...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.