உங்கள் பெயரைக் குறியீடுகளாக்குங்கள்
உ. தாமரைச்செல்வி
உங்கள் பெயரையோ அல்லது உங்களுக்கு விருப்பமானவர்கள் பெயரையோ படுகைதளக் குறியீடுகள் (Hieroglyph) மூலம் தட்டச்சு செய்து பார்க்க விருப்பமா?
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் காலி இடத்தின் கீழ் ஆங்கில எழுத்துக்களுடனான தட்டச்சு விசைப்பலகை ஒன்று இருக்கிறது. இந்த விசைப்பலகையில் இருக்கும் எழுத்துக்களின் மேல் வைத்துச் சொடுக்கினால் மேல் பகுதியிலிருக்கும் காலியிடத்தில் அந்த எழுத்துக்குரிய குறியீடு கிடைக்கிறது.
இந்த தட்டச்சு விசைப்பலகை உதவியுடன் உங்கள் பெயரையோ அல்லது உங்களுக்கு விருப்பமானவர்கள் பெயரையோ ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதற்கான குறியீட்டுடனான பெயரைப் பெற முடியும்.
இரகசியக் குறியீடாக தட்டச்சு செய்து கொள்ளலாமா? இதை மின்னஞ்சலில் அனுப்ப முடியுமா? அச்சிட்டு எடுக்க முடியுமா? என்றுதானே கேட்கிறீர்கள்.
இவையனைத்திற்கும் இத்தளத்தில் வசதிகள் உள்ளன.
அப்படியானால் முகவரியைக் கொடுங்க என்கிறீர்களா? இதோ... உங்களுக்காக...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.