இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

மட்டக்களப்புத் தேச ஆலய நிருவாகக் கட்டமைப்பில்
முக்கியத்துவம் பெறும் ‘வண்ணக்கர்’ - சொற்பதம் குறித்த தேடல்

கவிக்கோ வெல்லவூர்க் கோபால்
இலங்கை.


(குறிப்பு: பல ஆய்வாளர்களதும் கல்விமான்களதும் வேண்டுகோளின் நிமித்தம் மேற்கொள்ளப்பட்ட தேடலின் பிரதிபலிப்பான இக்கட்டுரையின் தகவல்கள் ஆரம்பநிலைப்பட்டவையாகும். இது குறித்த மேலதிகத் தகவல்கள் தெரியவரின் அவை மேலும் பயனுள்ளவையாக அமையும. இக்கட்டுரையானது இதுவரை எவராலும் முழுமையாக முன்னெடுக்கப்படாத தன்மையில் மேலதிக ஆய்வுகளுக்கும் மீளுருவாக்கத்திற்கும் உரித்துடையது எனலாம்)

மட்டக்களப்புத் தேசத்தின் ஆலய நிருவாகக் கட்டமைப்பின் தலைமைத்துவத்தைக் குறிப்பதான ‘வண்ணக்கர்’ எனும் சொற்பிரயோகம் பிரதேச சிறப்பியல்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும். இலங்கையின் ஏனைய ஆலய நிருவாகக் கட்டமைப்பில் பேணப்படாத இச்சொற் பிரயோகம் மிக நீண்டகாலமாக அறியப்பட்டத் தமிழகத்தின் ஆலய நிருவாகச் செயல்பாட்டிலோ அன்றேல் கேரளத்தின் ஆலய நிருவாகக் கட்டமைப்பிலோ கூட அறியப்படவில்லை. நாம் தொடர்பு கொண்ட பொலநறுவையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான்களும் கண்டி சார்ந்த சிங்களப் பேராசிரியர்களும் அளித்த தகவல்களில் ‘வண்ணக்குறாள’ என்ற சொற்பிரயோகம் மட்டக்களப்புத் தேசத்தை ஒட்டிய சிங்களக் கிராமங்களில் இருந்த போதும் அது பௌத்த மக்களின் வழிபாட்டோடு சம்பந்தப்பட்டதாக அமையவில்லையென்பதுவும் மட்டக்களப்பின் இந்து மக்களின் பாரம்பரியத்தினூடாகக் கலந்ததொரு சொற்பிரயோகமாகவே கொள்ளப்படத்தக்கதெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வண்ணக்கன் எனும் பெயர்ச் சொல்லானது உள்ளூர்ப் பயன்பாட்டில் காரிய நிருவாகி எனும் - Manager என்ற ஆங்கிலப் பதத்திற்கு ஒப்பானதெனத் தமிழ்ப் பேரகர முதலியை (1924) சான்றுபடுத்திக் கூறப்படுவதும் கவனத்திற்குரியதாகும். இதனிடையே அரச்சலூர்க் கல்வெட்டினை ஆய்வு செய்த மகாதேவன் அதில்வரும் கொடையாளனான மலைய வண்ணக்கனை மலைநாட்டைச் சேர்ந்த கொடையாளனென கருதுகின்றார். அவரது கருத்தின்படி வண்ணக்கன் என்பது கொடையாளன் என்ற கருத்தில் வருவது உணரப்படுகின்றது.

சங்ககாலப் புலவர்களில் சிலர் வண்ணக்கன் என்ற அடைமொழியோடு குறிப்பிடப்படுவதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

“புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்க்கிளான்
வண்ணக்கன் தாமோதரனார்
வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வண்ணக்கன் சோருமருங் குமரனார்”

போன்ற புலவர்களை இதில் பட்டியலிடலாம். ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியின் உரையாசிரியர் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பற்றிய குறிப்பில் அவர் நாணயப் பரிசோதனையை மேற்கொள்ளும் தொழிலில் இருந்தவராகக் காண்பிக்கும் நிலையில் அத்தொழிலினை மேற்கொள்பவர்களை வண்ணக்கன் எனும் பதவிப்பெயரால் அழைத்திருக்கமுடியும் எனச் சில ஆய்வாளர்கள் கருதவும் செய்கின்றனர்.

இதனிடையே 1997ன் பின்னர் தொடராகச் சில ஆண்டுகள் கொங்கு நாட்டின் முக்கிய நகரமான கோயம்புத்தூரில் நாம் வாழ்ந்த நிலையில் அங்குள்ள ஒரு முதன்மைச் சமூகமான கொங்கு வேளாளரின் கல்விமான்களுடனும் கலை இலக்கியவாதிகளுடனும் நெருங்கிப்பழகிய தன்மையில் பெறப்பட்ட பல தகவல்கள் இதில் ஒரு ஆரம்பகட்டத் தேடலுக்கு வழிகாட்டலாக அமைவது தெரிகின்றது. கொங்குநாடு என்பது இன்றைய கரூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம், சேலம் மாவட்டம், தருமபுரி மாவட்டம், கோவை மாவட்டம், உதகை மண்டலம் என விரிவுபட்டு தமிழகத்தின் வடமேற்கு மலைத்தொடர்வரை நீண்டிருந்தது.

கொங்கு மண்டலச் சதகம் அதன் எல்லை குறித்துப் பின்வருமாறு கூறும்.

“வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்கு பொருப்புவெள்ளிக் குன்று - கிடக்கும்
கழித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டுக்
குளித்தண் டலையளவு கொங்கு”

வரலாற்றில் இப்பிரதேசம் தனித்தும் சோழர் ஆதிக்கத்திலும் சில பிரிவுகள் சேரர் ஆதிக்கத்திலுமென மாறிமாறி நிருவகிக்கப்பட்டது. இங்கு பரவலாக வாழுகின்ற கொங்கு வேளாளர் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற சமூகத்தினராக அடையாளப் படுத்தப்படுகின்றனர். அவர்களிடையே;

கோவேந்தர், சேரர், பாண்டியர், தேவேந்திரர், வண்ணக்கர், கணக்கர், ஓதாளர், ஒழுக்கர், தனஞ்செயர், சேடர் எனத் தொடரும் அறுபது குல மரபினர் வாழுகின்றனர்.



இவர்களில் வண்ணக்கர்குல மரபினரை ‘வண்ணக்கர்குல வள்ளல்கள்’ என்ற அடைமொழியால் அழைப்பதை இன்றும் அவதானிக்க முடிகின்றது. கொங்கு நாட்டு வேளாளர்கள் நிருவாக வசதிக்காக தாம் வாழ்ந்த நாட்டில் 24 நிருவாகப் பிரிவுகளை ஏற்படுத்தினர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு அவையிருந்தது. அதில் அனைத்து ஊர்களும் அங்கம் வகித்தன. அவர்கள் ஒன்றுபட்டு நாட்டுக் கருமங்களை சிறப்பாக மேற்கொண்டனர். மிக முக்கியமாக ஆலயங்களுக்கு நன்கொடையளித்தலும் திருப்பணிகளை மேற்கொண்டு அவற்றைச் செவ்வனே பராமரித்தலும் முன்னுரிமை பெற்றிருந்தது. இதனைத் தமிழகத்தின் எப்பகுதியிலும் இல்லாத ஒன்றாகவே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆலய வழிபாட்டியலில் இவர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவர்களாகவே இன்றுமுள்ளனர். இவர்கள் தங்கள் தங்கள் சமூகப் பண்பாட்டுத் தேவையின் நிமித்தம் கொங்கு சிவப்பிராமணர்களையும் குலகுருக்களையும் கொண்டவர்களாகவுள்ளனர்.

மட்டக்களப்புத்தேச வரலாற்றில் கி.பி 1ஆம் 2ஆம் நூற்றாண்டுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதை வரலாறு பதிவு செய்துள்ளது. மட்டக்களப்பு பூர்வீக வரலாற்று ஏடுகளின் காலக்கணிப்பினையும் அதனோடு சம்பந்தப்பட்ட தமிழக நிகழ்வுகளின் காலக்கணிப்பினையும் ஒப்புநோக்கும் தன்மையில் 30 ஆண்டுகள் தொடக்கம் 90 ஆண்டுகள் வரையான வேறுபாடுகளை ஆய்வுகளில் அவதானிக்க முடிகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை சிலப்பதிகாரக் காலமான கி.பி 2ஆம் நூற்றாண்டை மையப்படுத்தியதாகவே பெருமளவு வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை மறுக்க முடியாதுள்ளது. இலங்கை வரலாற்றிலும் அன்றைய காலக்கணிப்புகள் முழுமையடையவில்லை என்றே கொள்ள வேண்டும். இக்காலத்தே மட்டக்களப்பு வரலாறு நாகர்முனை (திருக்கோவில்) சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வரலாற்று நிகழ்வுகளை விரிவாகவே பதிவு செய்துள்ளது.

இவ்வாலயம் தமிழகத்தின் சோழராட்சியின் துணைகொண்டு செப்பனிடப்பட்டு சிறப்பாகக் குடமுழுக்குச் செய்யப்படுவதையும் தமிழகத்தின் அந்தணர் மற்றும் காராளர் (வேளாளர்) வரவினையும் அதில் முக்கியப்படுத்துவதையும் நம்மால் அவதானிக்க முடிகின்றது. இதன் போது தமிழக ஆட்சியாளனான திருச்சோழன் பற்றியும் அவனது திருக்கோவில் ஆலயப்பங்கு பணி பற்றியும் பேசப்படுவதையும் பார்க்கின்றோம். இதுவரையான ஆய்வுகளின் அடிப்படையிலும்

‘கரிபரி காலாட் பொருதளற் சென்னி
விரிதரு கருவூர்த் திருமாச் சோழ…’

எனவரும் பாடலடியை அடியொற்றியும் கொங்குநாடு உட்பட்ட தமிழகத்தின் ஆட்சியாளனாகவும், ஈழம் வரை படைநடாத்திய சோழவேந்தனாகவும் கருதப்பட்ட திருமாவளவன் கரிகால் சோழனே திருமாச்சோழனாகவும் திருச்சோழனாகவும் குறிப்பிடப்படுகின்றான் என்பதனை நம்மால் பதிவு செய்யமுடிகின்றது. இவனது காலத்தை கி. பி 1ஆம் நூற்றாண்டாகவே தமிழகத்தின் தலைச்சிறந்த ஆய்வாளர் பேராசிரியர் வே. தி. செல்லம் கருதவும் செய்கின்றார்.

திருமாச் சோழனுக்கு முன்னர் இவனது தந்தையான சோழன் இளஞ்சேட் சென்னியும் இவனுக்குப் பின்னர் சோழன் நெடுங்கிள்ளியும் ஆட்சியாளர்களாக அறியப்படுகின்றனர். நெடுங்கிள்ளி சேரன் செங்குட்டுவனுடன் இணைத்துப் பேசப்படுவதால் திருமாச்சோழனது ஆட்சிக்காலமானது மட்டக்களப்பு வரலாறு குறிப்பிடும் காலத்தை நெருங்கிவருவதை நம்மால் உறுதி செய்யமுடிகின்றது.

இவையனைத்தையும் கவனத்தில் கொள்ளும் தன்மையில் திருக்கோவில் ஆலயத்தின் கடமைகளின் நிமித்தம் திருமாவளவனின் ஆட்சிக்காலத்தில் அங்கிருந்து அழைத்துவரப்பட்ட வேளாள மரபினர் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்த கொங்குநாட்டின் ஆலய நிருவாகச் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற்று விளங்கிய கொங்குநாடு வண்ணக்கர்குல வேளாள மரபினராகவிருக்க வாய்ப்புள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அத்தோடு அக்காலகட்டத்தில் அவர்களுடன் அங்கு வந்தவர்களாகக் கருதப்படும் அந்தணர் மரபினர் கொங்கு சிவப்பிராமணராக இருக்கவும் வாய்ப்புள்ளது. 2004ல் அக்கரைப்பற்று, தம்பட்டை, திருக்கோவில் பகுதியில் சிவப்பிராமணர் தொடர்பில் நாம் மேற்கொண்ட களஆய்வில் பெறப்பட்ட தகவல்களையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

திருக்கோவில் கோரக்களப்பில் குடியமர்ந்த வேளாளர், பின்னர் அவர்களது பணிநிமித்தம் முதலில் அவ்வாலய வண்ணக்கர்களாகவும் அதன்பின்னர் அங்கிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் சிலர் மட்டக்களப்புத் தேசத்தின் திருப்படை மற்றும் தேசத்துக் கோவில்களின் வண்ணக்கர்களாகவும் பணியாற்றியுள்ளமையும் பணியாற்றி வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவர்களால் அறியப்பட்ட வண்ணக்கர் எனும் ஆலய நிருவாகச் செயல்பாட்டாளர் காலப்போக்கில் மட்டக்களப்புத் தேசத்தின் எல்லா ஆலயங்களிலும் உள்வாங்கப்பட்ட நிலையில் முக்கியத்துவம் பெற்ற அனைத்துச் சமூகத்தினருக்கும் ஏற்புடைத்தான ஆலயத் தலைமைத்துவ அடையாளமாக மாற்றமுற்று இன்று நிலைபெற்றுள்ளமையைப் பார்க்கின்றோம்.



கி.பி 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகோனது சமூகக் கட்டமைப்பின் உருவாக்கத்தினைத் தொடர்ந்து ஒரே சமூகக் கட்டமைப்பில் நிலைபெற்றிருந்த இவ்வேளாளகுலத்தினர் பின்னர் ஏனைய மட்டக்களப்புச் சமூகத்தினரைப் போல் ஏழு குடிமரபினராக மாற்றம் பெறலாயினர்.

இவையனைத்தையும் ஒப்புநோக்கும் தன்மையில் ‘வண்ணக்கர்’எனும் சொற்பிரயோகம் கொங்கு வேளாளர் மரபு சார்ந்த ஆலயச் செயல்பாடுகளில் இன்றும் மிக்க ஈடுபாடு கொண்ட ‘வண்ணக்கர் குல வள்ளல்கள்’எனப்படுவோரின் முன்னோர்களை மையப்படுத்தியதாக உருவாக்கம் பெற்றிருக்கலாமென்றே கருதமுடிகின்றது.

துணைச் சான்றுகள்

1. அகநானூறு - 125:18, 246:8

2. கார்மேகக் கவிஞர், கொங்கு மண்டல சதகம் - சாரதா பதிப்பகம் -2008

3. அரிச்சலூர் கல்வெட்டு - வாசிப்பு மகாதேவன்

4. தமிழ் பேரகரமுதலி- தமிழகராதி - 1924

5. இராமச்சந்திரன் செட்டியார; கோ.ம, கொங்குநாட்டு வரலாறு -1954

6. புலவர் செ. இராசு, கொங்குநாடு -கொங்கு வேளாளர் பேரவை, ஈரோடு

7. மேற்படி - கொங்கு வேளாளர்குல வரலாறு (தொகுதி 02) மேற்படி

8. முனைவர் இரா. கா. மாணிக்கம், வளமார் கொங்கு - பண்பாடும் வரலாறும் (டாக்டர் பி. கே.கிருஷ்ணராஜ வானவராயர் நூலாக்கக் குழு:

9. Kavundans or Vellalas." - Indian Antiquary - Volume 44 -, Swati Publications, 1985

10. Dr.K.A. Meenakshisundaram, A Brief Study of the Marriage System of the Kongu Vellala Gounder Community, Journal of Tamil Studies Vol. 6, December 1974.

11. பேராசிரியர் வே. தி. செல்லம் - தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம்- 2000

12. கவிக்கோ வெல்லவூர்க் கோபால் - மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் - (திருத்திய 3ஆம் பதிப்பு) 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p20.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License