இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

யாழ்ப்பாணத் தமிழரும் தமிழும்

வாசுகி நடேசன்
மேனாள் ஆசிரியர்,
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்.
(தற்போது வசிப்பு: இத்தாலி)


முன்னுரை

ஒவ்வொரு சமூகமும் தனது வேரைத் தேடுவதன் மூலமும் அதை நிறுவுவதன் மூலமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்தாலும் அவர்கள் பூர்வ குடிகளாக இந்தியாவிலும் இலங்கையிலுமே வாழுகின்றனர். இலங்கையில், வடக்கிலும் கிழக்கிலுமாய் இவர்கள் வாழ்ந்த போதும், ஆய்வு விரிவு கருதி யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய சிறப்பம்சங்களே இங்கு நோக்கப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர் சிறந்த பண்பாடுடன் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் நாகர் என்ற இனக்குழுவாக அடையாளம் காணப்படுகின்றனர், பெருங்கற்பண்பாட்டுக்கால ஈமத்தாலிகள், பிராமி தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்கள், பொருட்கள், நாகசிலைகள் முதலியன கந்தரோடை, ஆனைக்கோட்டை, நவாலி, வட்டுக்கோட்டை பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் மணிநாகன் என்ற பெயர் பிராமித் தமிழில் எழுதப்பட்டுள்ளதாக பேராசிரியர் சி பத்மநாதன் எடுத்துக் காட்டுகிறார். மேலும், இவர் கி மு 8ஆம் நூற்றாண்டளவில் பெருங்கற்பண்பாடு இங்கு பரவியதாகக் கூறுகிறார்.

வரலாற்றுக்குட்பட்ட காலம் தொட்டு கி.பி 12 ஆம் நூற்றாண்டுவரை யாழ்ப்பாண வரலாறு துலக்கமாக இல்லை, ஆனாலும் கந்தரோடையை தலைநகராகக் கொண்ட தமிழரசுகளின் ஆட்சிக்குக் கீழ் யாழ்ப்பாணம் இருந்திருக்கலாம் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. கி.பி 12ஆம் நூற்றாண்டு முதல்17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கக்காலம் வரை தமிழ்நாட்டிலிருந்து வந்தவரான ஆரியச் சக்கரவர்த்திகளது ஆட்சி இங்கு நிலவியது இந்த ஆட்சி பற்றி யாழ்ப்பாண வைபவ மாலை கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்கள் வாயிலாக அறியமுடிகிறது. பின்னர், காலனித்துவ ஆட்சி இங்கு நிலவியது. போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் தொடர்ந்து ஆட்சி செய்தனர். 1948இன் பின் இலங்கைக் குடியரசு நாடாக வந்தபோது யாழ்ப்பாணம் அதன் ஒரு மாவட்டமாக்கப்பட்டது.

யாழ்ப்பாணத் தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கும் பண்பாட்டு அப்படையில் நெருங்கிய உறவும் கொடுக்கல் வாங்கல்களும் இருந்தாலும், கடல் இடைவெளிக்கப்பால் வாழ்வதாலும் பூர்விகமாகத் தொடர்ந்து தனித்து வாழ்வதாலும் சில தனித்துவமான பண்புகளும் காணப்படுகின்றன. சமயம், சாதியமைப்பு, பெண்ணுரிமை, தமிழ் கல்வி, பேச்சுத் தமிழ் முதலிய எல்லாவற்றிலும் இத்தகைய தனித்துவப் பண்புகளைக் காணலாம்.


சமயம்

சைவம் முதன்மைச் சமயமாக இங்கு விளங்குகிறது. காலனித்துவ ஆட்சியின் பின்னர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியவரும் சிறிய அளவினராக இஸ்லாமியரும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ் நாட்டினைப் போல வைணவம், சைவம் என்ற வேறுபாடு இங்கு இல்லை. இங்கு விஷ்ணு கோவில் இருந்தாலும் அதனையும் சைவரே வழிபட்டு வருகின்றனர். நாகவழிபாடு, கண்ணகி வழிபாடு, முருக வழிபாடு என்பன இந்நிலத்தில் தொன்மையான வழிபாடுகளாக இருக்கின்றன. பிள்ளையார், சிவன் வழிபாடும் முதன்மையுடையனவாக உள்ளன.

சாதி அடிப்படையில் வைரவர், அண்ணமார், முனி முதலிய தெய்வங்களும் முன்பு வணங்கப்பட்டு வந்தன. ஆனால், ஆறுமுக நாவலர் முதலான உயர் வகுப்பினர் ஆகம நெறிக்கு மிகுந்த முதன்மை அளித்தமையால் கண்ணகி பேய்ச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் இராஜராஸ்வரியாகவும், நாச்சியார் காமட்சியாகவும் மாற்றப்பட்டுவிட்டனர். வரலாற்றுக் காலத்துக்கு முன், இங்கு நாக வழிபாடு நிலவியது. அதன் தொடர்ச்சியாக நாகவழிபாடு நாகதம்பிரானாக இன்றும் வழிபடப்பட்டு வருகிறது. நயினை நாக பூசணி அம்மன், வடமராட்சி நாகர்கோயில் நாகதம்பிரான், புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆகிய ஆலயங்களை இவ்வகையில் குறிப்பிடலாம். ஆனாலும், இங்கும் ஆகம விதிப்படியேப் பூசைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல யாழ்ப்பாணத்தில், இன்றும் கண்ணகி என்ற பெயருடனேயே வரணி சிட்டிவேரம் கண்ணகியம்மன், வரணி சிமிழ் கண்ணகியம்மன், பன்றிதலைச்சி கண்ணகியம்மன் கோயில்கள் கண்ணகி வழிபாட்டின் எச்சமாக விளங்குகின்றன. மேலும், வல்வட்டித்துறை முத்துமாரியம்மன் தீர்த்தத்தின் போது சித்திராப் பௌர்ணமியன்று இந்திரவிழா மிகவும் பெரியளவில் கொண்டாடப்படுவதும் கண்ணகி வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம்.

சாதிஅடையாளங்களை துறக்க விரும்பியமையால் அண்ணமார் பிள்ளையாராகவும் முனி முனீஸ்வரனாகவும் மாற்றப்பட்டுவிட்டன. சன்னதி முருகன் கோயிலில் மட்டும் கதிர்காமம் போன்று ஆகம விதிவழிபாடு அல்லாது வாய்கட்டி மௌனமாக வழிபடும் முறை காணப்படுகிறது. இங்கு மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரையாகப் பூசை செய்து வருகின்றனர். யாழ்ப்பாண கலாச்சாரத்தை, கந்தபுராணக் கலாச்சாரம் என வழங்கும் மரபு உண்டு. இங்கு கோயில்களில் கந்த புராணம் வாசிக்கப்பட்டு பொருள் கூறும் மரபு காணப்படுகிறது. அது போல், சைவசித்தாந்தத் தத்துவமே யாழ்ப்பாணர் தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


சாதி

தமிழ்நாடு போன்றே இங்கும் சாதியமைப்பு போன நூற்றாண்டு வரை மிக இறுக்கமாகப் பேணப்பட்டு வரப்பட்டிருக்கிறது. இங்கு பிராமணர் மிகக் குறைந்த அளவிலேயே வாழ்கின்றனர். பெரும்பான்மையினரான வெள்ளாளரே ஆதிக்க சத்தியாக விளங்கின்றனர். மிகவும் ஒடுக்குமுறைக்குட்பட்ட பஞ்சமர் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினரும்,

1) 1920களில் காங்கிரஸ் கட்சி வகுத்துக்கொண்ட கொள்கை

2) 1940களில் மார்ச்சியக் கொள்கையின் எழுச்சி

3) மறுமலர்ச்சி இலக்கிய இயக்கத்தின் வருகை

4) 1960களில் எல்லோருக்கும் கல்வி என்ற இலவசக்கல்வியின் வருகை

5) 1970-80களில் விடுதலை இயக்கங்களின் தோற்றம்

6) 1980 - 90களில் தொடங்கிய வெளிநாட்டு புலம்பெயர்வினால் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி

என்பன காரணமாக, தம் பெரும்பாலான உரிமைகளைப் பெற்று வருகின்றனர் என்பது உண்மையே. ஆனாலும், சாதி உணர்வு இன்னும் நீறு பூத்த நெருப்பாக உள் கனன்று கொண்டுதான் இருக்கிறது. இன்னும் சில கோயில்களில் கூட சாதியத் தாக்கம் தெரிகிறது. குறிப்பாக, திருமண ஊடாட்டங்களில் இன்றும் சாதி முதன்மைப்படுத்தப்படும் நிலை காணப்படுகிறது. 40 சாதிகளாக இருந்த சாதியமைப்பு உட்பிரிவுகளில் ஏற்றதாழ்வுகள் நீக்கப்பட்டு இன்று சாதிகளின் தொகையும் மிகவும் குறைவடைந்துள்ளது.

பெண்ணுரிமை

இங்கு யாழ்ப்பாணத் தேசவழமைச் சட்டத்தின் மூலம் பெண்களுக்குச் சீதனம் வழ்ங்குவது சட்டத்துக்கு உட்பட்டதாக உள்ளது. பெண்களுக்குப் பெற்றோரால் வீடு, வளவு, தோட்டக்காணி, வயல்காணி முதலிய அசையாச் சொத்துக்களும் நகை ரொக்கப்பணமும் வழங்கப்படுவது தொடர்ச்சியான பழக்கமாக உள்ளது. ஆண்களுக்கு முதிசம் என்ற பெயரில் பொருள் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கே பொருள் வழங்குவதில் முதன்மை வழங்கப்படுகிறது. பெற்றோர், தாமே உழைத்த தேட்டத்திலும் பெண்களுக்குப் பங்கு உண்டு. இதனால், திருமணத்தின் பின் மணமகன் பெரும்பாலும் தமக்கு வழங்கப்பட்ட சீதன வீட்டிலேயே வாழும் நிலையேக் காணப்படுகிறது. இவ்வாறு பொருள் வழங்குவது பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது என்பது உண்மையே. ஆனாலும், இங்கு பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து விடுபட்டவர்களாக இல்லை. சீதனம் என்பது இன்று மணமகனின் கல்வி உத்தியோகம் என்பவற்றின் அடிப்படையில் நிர்னயிக்கப்படுகிறது. பொருளாதார வசதியில் மிகவும் குறைந்தவர்களும் சீதனம் வழங்க நிர்பந்திக்கப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் தாய் மாமனுக்குத் தனித்துவமான இடம் உண்டு. தாய் மாமனைத் திருமணம் செய்யும் வழக்கில்லை. தந்தைக்கு அடுத்தபடியான முதன்மையான உறவாகத் தாய்மாமன் கருதப்படுகிறார். கண்ணகி வழிபாடு, பெண்களுக்காண சொத்துரிமை, மாமன் - மருமகள் உறவு முறையின் தனித்துவம் என்பன தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியாகவே நோக்க வேண்டியுள்ளது.

கல்வி

இலங்கையில் 19ஆம் நூற்றண்டு வரை சமயச் சார்புடன்கூடிய தமிழ்க் கல்வியே நிலவி வந்தது. அக்கல்வி பெரும்பாலும் சமூகத்தின் அடிநிலைக்குச் சென்றடைவதே இல்லை. “இத்தகைய சமூகத்தில் நிலவும் அறிவு - முறைமையும், சமூகப் பாரம்பரியங்களைப் பேணுவதாகவே அமையும். இங்கு வரன்முறையான கல்வியென்பது மதம் சார்ந்ததாகவும், சமூகத்தின் சகல ஆக்கங்களையும் உள்ளடக்காததாகும். உண்மையில் இச்சமூகத்தின் அடிநிலையினருடன் சம்மந்தப் படாததாகவே இருக்கும்” எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவது நோக்கத்தக்கது.

காலனித்துவ ஆட்சியின் போது ஆங்கிலக் கல்வியும் கிறிஸ்தவ மதச்சார்பான கல்வியும் குறிப்பிடத்தக்க வகையில் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், இக்கல்வியைப் பெற்று பயன் கொண்டவர்களும் உயர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. ஆறுமுக நாவலர், ஆங்கிலக் கல்வியின் வாயிலாகச் சில உத்திகளைப் பெற்றுக் கொண்டு அவற்றைத் தமிழ் மரபையும் சைவப் பாரம்பரியத்தையும் மேலும் முன்னெடுக்கப் பயன்படுத்திக் கொண்டார். தமிழுக்குச் சிறந்த உரைநடையை வகுத்துக் கொண்டார். அதன் வழி சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டார். அச்சு இயந்திரப் பயன்பாடு கொண்டு பழந்தமிழ் நூல்களை அச்சிட்டுப் பதிப்பு முயற்சிக்கும் கால்கோள் செய்தார். தாமே தமிழ் நூல்களை எழுதியதுடன் பாடசாலையையும் நிறுவி நடத்தி வந்தார். இவரைத்தொடர்ந்து சி. வை தாமோதரம் பிள்ளை, சதாசிவம்பிள்ளை, சிதம்பரம்பிள்ளை என வேறு அறிஞரும் இவ்வழி சென்று தமிழுக்குப் பல நூல்களை மீட்டுத் தந்தனர். நாவலர் வழி நீர்வேலி சங்கரபண்டிதர், காசிவாசி செந்திநாதையர்,சோமசுந்தரப் புலவர், பண்டிதமணி சி கணபதிப்பிள்ளை என்ற பல அறிஞர்கள் 20 ஆம் நூற்றாண்டிலும் தமிழ்பணியாற்றினர். யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கந்தபுராண கலாசாரமாக வளர்த்தவர்களும் சைவசித்தாந்த நெறி நிற்பவர்களும் இவர்களே. மேலும், யாழ்ப்பாணத் தமிழில் வட மொழி, டச்சுமொழி, ஒல்லாந்தமொழி ஆங்கில மொழிச் சொற்கள் கணிசமானம் அளவில் கலந்துள்ளன. ஆனாலும், வடமொழி தவிர்த்து ஏனைய மொழிச் சொற்களைக் கலந்து எழுதாத மரபு மேற்கூறியவர்களின் ஆளுமைகளால் தொடர்ந்து நிலவி வருகிறது.


ஒல்லாந்தர் காலத்திலேயே எல்லோருக்கும் கல்வி என்ற கருதுநிலை எற்பட்டாலும், 1960களில் அரசினால் இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பே சமூகத்தின் எல்லா மட்டத்தில் இருந்தவர்களும் கல்வி கற்கும் நிலை சாத்தியமானது. கே.டானியலின் பஞ்சமர் கானல் முதலிய நாவல்கள் 150ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சமருக்குக் கல்வி வாய்ப்பே இல்லை என்ற உண்மையையும் எடுத்துக் கூறுகின்றன.ஆனால், இந்நிலைகளில் இருந்து சிறிது சிறிதாக 1920 களில் மாற்றம் நிகழ்கிறது. சமயம், கல்வி, சாதியம், தேசியம் பற்றிய பார்வை அக்காலத்தில் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பதை யாழ்ப்பாண மாணவக் காங்கிரஸின் பின்வரும் தீர்மானங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

1) தாய்நாட்டு நலனுக்காகச் சமயங்கள் யாவற்றையும் ஒரே நிலையில் வைத்து நோக்குவது வேண்டும்.

2) தற்போது நாட்டில் நிலவும் சாதி வேறுபாடுகள் முன்னேற்றத்திற்குக் தடையென இக்காங்கிரஸ் கருதுகின்றது. நம்மிடையே இருந்து தீண்டாமை என்னும் காயத்தை இயன்றளவு அகற்றுவதற்குக் காங்கிரஸ் அங்கத்தவர் முயல வேண்டும்.

3) தென்னிலங்கையில் தமிழும், வட இலங்கையில் சிங்களமும் படிப்பிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக காங்கிரஸ் எடுக்க வேண்டும்.

4) 1925 ஏப்பிரலில் நடத்தப்படவுள்ள காங்கிரஸ் அமர்வுடன் எல்லா இனங்களினதும் (பிரதானமாக சிங்களவர்களினதும் தமிழர்களினதும்) கொள்கைகளையும் நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்ககைகளை எடுக்க வேண்டும்

(3ஆம் 4ஆம் தீர்மானங்கள் சரிவர தமிழராலும் சிங்களவராலும் ஏற்று நடத்தப்பட்டிருக்குமாயின் தமிழர் சமுதாயம் 30 ஆண்டுப் போரையும் அழிவையும் கண்டிருக்காது என்பதுடன் தமிழர்கள் கௌரவத்துடனும் சுய மரியாதையுடனும் தமது நிலத்தில் வாழ்ந்திருப்பார்கள் என்பது உறுதி)

மேற்கூறிய தீர்மானங்களை நோக்குகையில் இலங்கைச் சமூகத்தில் எற்பட்டு வந்த மாற்றங்கள் எவ்வாறு எல்லோருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கித் தள்ளின என்பது புரியவரும்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்க் கல்வி

1) இலங்கையில் அரச கரும மொழியாகத் தமிழ் விளங்குகிறது.

2) தமிழ் ஆரம்பக் கல்வியிலிருந்து 11ஆம் தரம் வரை கட்டாயம் கற்க வேண்டிய மொழியாக விளங்குகிறது.

3) தமிழ் வழி மூலம் அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. (அண்மைக்காலத்தில்தான் மாணவர் விரும்பினால் இடைநிலைக் கல்வியில் குறிப்பிட்ட சில பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது)

4) தமிழ் கல்விப் பாடத்திட்டம் இலக்கியம், இலக்கணம், மொழியியல், நாட்டாரியல், மானிடவியல் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது.

இதனால் இலங்கையில் உள்ள மாணவருக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிவதுடன் அவர்களது சொல்வளம் ஓரளவு உயர் நிலையிலேயேக் காணப்படுகிறது.

உயர்தரத்தில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது. பல்கலைக்கழகங்களில் தமிழ் இளநிலை தொட்டு கலாநிதிப் பட்டம் வரை தமிழ் பாடமாக உள்ளது. மேலைத்தேயங்களில் குறிப்பாக இத்தாலி போன்ற நாடுகளில் இடை நிலைப் பள்ளிகளில், இரண்டாம் மொழியாக ஆங்கிலமும், மூன்றாம் மொழியாக, பிரான்சியமொழி, டொச்மொழி அல்லது ஸ்பானிய மொழி கற்பிக்கப்படுகின்றது. இம்மொழிகள் இந்நாடுகளின் அயல் மொழிகளாக உள்ளன. இவ்வாறு கற்பிப்பதற்கான நோக்கங்களாகப் பின்வருவனவற்றை அவர்கள் முன் வைக்கிறார்கள்.

1) அயல் நாடுகளது மொழிகளைக் கற்பதனால் பரஸ்பரம் உறவை வளர்த்துக் கொள்ளலாம். பண்பாடு பற்றிய புரிந்துணர்வை எற்படுத்திக் கொள்ளலாம்.

2) அந்நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமையும்.

3) மொழியியல் ரீதியில் தனது தாய் மொழிபற்றிய புரிதலுக்கும் உதவும்.


1924 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாணவ காங்கிரஸ் தனது தீர்மானங்களில் ஒன்றாக, தமிழ் சிங்களக் கல்வி பற்றிக் கூறியது இவ்விடத்தில் நினைவு கூரத்தக்கது.

மொழி என்பது பண்பாட்டை கோர்த்து வைக்கும் நூல் போன்றது. நூலை அறுத்துவிட்டால் பண்பாட்டு மணிகள் அறுந்து சிதறிப்போக வாய்ப்புண்டு. இலங்கையில் 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டம் “அரச கரும மொழிகளில் தமிழ்” என்ற அந்தஸ்தை இழக்க வைப்பதாக இருந்தது. இது அக்காலத்தில் தமிழ் கட்சிகளின் எதிர்ப்பை மட்டுமன்றி, சிங்களக் கட்சிகள் சிலவற்றின் எதிர்ப்பையும் சந்தித்தது. இதுவே தமிழருக்கும் சிங்களவருக்குமான முரண்பாடுகளின் தொடக்கப்புள்ளியாகவும் அமைந்தது. பின் இச்சட்டம் மாற்றப்பட்ட போதும், அம்மாற்றங்கள் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இப்பொழுது தமிழருக்குச் சிங்களக் கல்வியும், சிங்களருக்குத் தமிழ் கல்வியும், பாடசாலைகளிலில் இடம் பெறுகிறது. இனங்களுக்கிடையேத் தொடர்பாடலையும் நல்லிணக்கத்தையும் இக்கல்விமுறையால் ஏற்படுத்தலாம் என அரசு குறிப்பிடுகிறது.

தனித்துவமான சொல்லாட்சிகள்

யாழ்ப்பணத்தில் ஆங்கிலம் தவிர்த்து, சிங்களம் உட்பட ஏனைய மொழிகளின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதனால், அது தன்னகத்தே பல பழைய சொற்களைப் பேணி வைத்திருக்கிறது. தமிழ் நாட்டில் இருந்து வரும் தமிழறிஞர் பலர் யாழ்ப்பாணத்து தமிழில் காணப்படும் தனித்துவமான சொல்லாட்சியை எடுத்துரைப்பதற்கு இதுவேக் காரணம் எனலாம். கிருபானந்தவாரியார் தோய்தல் என்ற சொல்லையும், சுகி சிவம் அவர்கள் அனுக்கம் எனற சொல்லையும் எடுத்துக்காட்டி வியந்தது போனது நினைவுக்கு வருகிறது.

“தோய்தல் என்பதே நீராடுவதற்குச் சரியான தமிழ் வார்த்தை. தோய்தல் என்றால் ஒன்றிலே முழுமையாக அமிழ்ந்து போதல் என்று பொருள். அந்தத் தொல்காப்பியத் தமிழை ஒரு வேலைக்காரனே சாதாரணமாகப் பேசுகின்றான் யாழ்ப்பாணத்தில். தூய தமிழ் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டில் அல்ல. அது யாழ்ப்பாண மக்களாலேயே பேசப்படுகின்றது. அங்குதான் அது வாழ்கின்றது”

அது போல, அனுக்கம் என்ற சொல் யாழ்ப்பாணத்தவரால் அசைதல் என்ற பொருளில் வழங்குவதை (கம்பன் பல்லவம் அனுங்க எனப் பயன்படுத்திய இலக்கியச் சொல்) சுகி சிவம் அவர்கள் எடுத்துக்காட்டுவர்.

தமிழகத்தில் ஆம் எனப் பயன்படுத்தும் சொல்லை யாழ்ப்பாணத்தார் ஓம் எனவேச் சுட்டுவர்.

புரிந்து விட்டதா என்பதை, விளங்கிவிட்டதா எனவே கேட்பர். விளக்கம் - தெளிவாக புரிந்ததா என்ற கூடுதல் பொருளுடையது.

தொல்காப்பியத்திலும் வழங்கும் உவன் உவள் முதலிய சொற்பிரயோகமும் யாழ்ப்பாணத்தமிழில் வழங்கி வருகிறது.

அட்டல் (சமைத்தல்) அடுப்பு என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் வருகின்றன. அடுப்படி என்ற சொல் யாழ்ப்பாணத்தில் சமையலறையைக் குறிக்க வருகிறது. சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக, சோறு என்ற சொல்லும் வழங்கி வருகின்றது.


யாழ்ப்பாணப் பேச்சு வழக்குச் சொற்கள்

யாழ்பாணத்தை மையமாகக் கொண்டெழுந்த நாவல்கள் சிறுகதைகளில் யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்குச் சொற்களும் யாழ்ப்பாணப் பேச்சுத்தொனியும் உரிய வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அட்டவணையை இங்கு தந்துள்ளேன். அதில் உள்ள சொற்கள் பல ஏனைய தமிழ் பேசும் பிரதேசங்களில் இடம்பெறாதவை ஆகும்.

உறவு முறைச் சொற்கள்

அப்பு-அப்பா - என்ற மனிசி. - மனைவி

என்ற மனுசன் - கணவன் -அப்புச்சி - தாத்தா- அம்முச்சி - பாட்டி

-அம்மம்மா -பாட்டி . அப்பம்மா. பாட்டி --அப்பப்பா -தாத்தா ////

அம்மப்பா-தாத்தா- கோத்தை - தாய் - கொம்மா -அம்மா

கொப்பர் அப்பா*

பெயர்ச்சொற்கள்

பெடியன் -சிறுவன், பெட்டை -சிறுமி, விசர் பெட்டை - பைத்தியமான பெண்ணே, இளந்தாரிப் பெடியன் - இளைஞன் சரியான சூரி. சரியான கெட்டிக்காரி ஒழுங்கை - சிறு தெரு முகரி - சிறு தெருவும் பிரதான தெருவும் சந்திக்கும் இடம். முடுக்கு- தெருவின் திருப்பம், சந்தி - தெருக்கள் பல சந்திக்கும் இடம், தட்டுவம் தட்டம் .-உணவுத்தட்டம் . கொட்டில் - குடிசை, திருகல் வண்டி - ஒற்றை மாட்டு வண்டி , தரவை - புற்றரை, திறப்பு -சாவி, படலை -வெளிவாசல் கதவு

வினைச் சொற்கள்

கதைக்கிறான் - பேசுகிறான், எத்தினான் - தெளித்தான், பறையிறன் - பேசுகிறேன் , கவனித்தேன் - அவதனித்தேன்

உணவு பற்றிய சொற்கள்

யாழ்ப்பாணத்தவர் பிரதானமான உணவாக பிட்டு விளங்குகிறது.

பால்புட்டு, கீரைப்புட்டு, ஒடியல்புட்டு, குரக்கன்புட்டு, குழல் புட்டு எனப் பிட்டினில் பலவகை

பனை சார்ந்த உணவு - ஒடியல் கூழ், பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல் மா, பனைங்காய் பணியாரம்

சோறு, பால்கொழுக்கட்டை, சம்பல்.


பேச்சுத் தொனி

மேற்காட்டிய சொற்களில் பல இன்று வழக்கிழந்திருக்கலாம். கல்வி, சினிமா பிற ஊடகங்களின் தாக்கம் என்பவற்றால் புதிய சொற்கள் தமிழ் நாட்டின் பொதுமரபை ஒட்டித் தோன்றியிருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணப் பேச்சில் உள்ள தொனி மாறுவதில்லை.

“கதைகண்ட இடம் இவனுக்கு கைலாயம். கபரி! வலையில சின்னப் பீத்தல் இருக்குதில்லை... அதைச் சரிப்படுத்தினியே? இண்டைக்கு காத்தமுத்துச் சம்மட்டியிண்டை மெசின் போட்டிலை கடலுக்குப் போறமெண்டு தெரியும்தானே...? அவன் டேவிட் ஒரு கொதியன். நடுக்கடலிலை நிண்டு கத்துவன்”

“ஒமன அப்பு ராசனும் நானும் அதை நல்லாச் சரிக்கட்டிப் போட்டம். நீ யோசியாதை.”

ஒரு சமூகத்தையும், அதன் மொழியையும் முழுமையாக விபரிப்பதென்பது இலகுவான காரியமன்று.பெரும் சமுத்திரத்தில் சில முத்துக்களை எடுப்பது போன்று, இங்கு சில பதிவுகள் மட்டுமே தர முடிந்துள்ளது. மொழி தேங்கி நிற்கும் குட்டையுமன்று. புறச்சூழல்களில் எற்படும் மாற்றங்கள் மொழியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது இயல்பே. மொழியில் பழைய வழக்குகள் அழிந்து, புதிய வழக்குகள் இடம் பெறுகின்றன. ஆனாலும் தமிழின் அடிப்படை அம்சங்களில் மாற்றம் ஏற்படாததால் அது2500 ஆண்டுகள் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு யாழ்ப்பணத்திலும் வாழ்ந்து வருகிறது.

துணை நூல்கள்

1) சி. பத்மநாதன், இலங்கைத் தமிழ் சாதனங்கள், இலங்கை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், 2006

2) பொ ,இரகுபதி, பெருங்கற்கால யாழ்ப்பாணம், 1983

3) பக்தவக்சல பாரதி, யாழ்ப்பாண நினைவுகள், 2011

4) கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு, 1995

5) கே டானியல், தண்ணீர், ஆசீர்வாத அச்சகம், 1987

6) க. சொக்கலிங்கம்(சொக்கன்), இலக்கியக் கருவூலம், திருவள்ளுவர் அச்சகம், 2001

7) திருமுருக கிருபானந்தவாரியார், விளக்கு

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p25.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License