இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
சமூகம்

சடங்குமுறைகள் - இலங்கையின் புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்
பற்றிய ஒரு சமயம் சார் சமூகவியல் நோக்கு

செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா
தற்காலிக உதவி விரிவுரையாளர்,
சமூக விஞ்ஞானங்கள் துறை (சமூகவியல் மற்றும் மானிடவியல்),
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை


ஆய்வுச் சுருக்கம்

சமயம் என்பது சமூக நிறுவனங்களில் முக்கியமானதொன்றாகவும், மக்களை நல்வழிப்படுத்தி மனிதநேயப் பண்புகளுடன் வாழ வழி வகுக்கின்ற ஸ்தாபனமாகவும் விளங்குகின்றது. எமைல்டுர் கைமின் (Emile Durkheim) இன் கருத்துப்படி, சமயம் என்பது “புனிதமான ஒன்றைப் (Sacred Thing) பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓர் ஒழுங்கமைந்த முறை என்கிறார். சடங்கு முறைகள் என்பது சமயத்தின் கருப்பொருளாகக் கருதப்படும் புனிதத்தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பாகும். அதாவது, புனிதத் தன்மையோடு தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்படும் முறையான செயல்முறைகளாகும். அவ்வகையிலே இவ்வாய்வுக் கட்டுரையானது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலயத்தில் இடம்பெறும் சடங்கு முறைகளை சமயம் சார் சமூகவியல் நோக்கில் விளக்குவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயமானது பத்ததி முறைப்படியே வழிபாடு நடத்தி வருகின்றனர். இது “சடங்கு” என்றே அழைக்கப்படுகின்றது. இச்சடங்கில் உடுக்கடித்தல், காவியம் பாடல், தேவாதிகளை உருவேற்றி ஆடச்செய்தல் என்பன இடம் பெறும். ஆண்டு உற்சவமானது, ஆனி மாதத்தில் ஓர் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு இடம் பெறக்கூடியவாறான ஆறு நாட்கள் சடங்குகள் இடம் பெறுகின்றன. இவற்றினடிப்படையிலே, இவ்வாலயத்தில் இடம் பெறும் சடங்கு முறைகளையும், அச்சடங்கு முறைகளுக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்பையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள்

சமயம், சமூகம், சடங்குமுறைகள், இடைவினை

1. அறிமுகம்

சடங்குகள் என்பது சமயத்தின் கருப்பொருளாகக் கருதப்படும் புனிதத்தன்மையின் பால் மக்கள் மேற்கொள்ளும் நடத்தைக் கோலங்களின் தொகுப்பாகும். புனிதத் தன்மை என்னும் பிரம்மையைத் தோற்றுவித்து, அதன் மூலம் சமயம் என்னும் முறையை ஏற்படுத்திய நிகழ்வில் இரண்டாம் கட்டமாக “சடங்குகள் (Rituals)” ஏற்பட்டன. சமய நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சடங்கும், அதில் பங்குபெறுவோr அனைவரையும் ஒன்றுபட வைக்கிறது. எமைல்டுர் கைமின் (Emile Durkheim) இன் கருத்துப்படி சமயம் என்பது “புனிதமான ஒன்றைப் (Sacred Thing) பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓr ஒழுங்கமைந்த முறை என்கிறாr. இதன் மூலம் அனைவரின் ஒன்றுபட்ட நடத்தை முறை (Collective Behaviour) ஏற்படுகிறது என்பது எமைல்டுர் கைமின் கருத்தாகும்.

சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த டச்சு நாட்டு மானிடவியல் அறிஞரான அர்னால்டுவான் கென்னப் (A.vanGennep) என்பவர் வாழ்வியற் சடங்குகளை மிகவும் நுட்பமுடன் ஆராய்ந்து தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of Passage) என வரையறை செய்தார். ஒவ்வொரு தகுதிப் பெயர்ச்சிச் சடங்கும் மக்களை ஒரு நிலையிலிருந்து பிரித்து மறுநிலைக்கு அறிமுகப்படுத்துகிறது என்றார். இந்நிகழ்வு வரிசையில் அடங்கும் சடங்குகளைப் பிரித்தல் சடங்குகள் (Rites of Seperation), நிலை மாற்றும் சடங்குகள் (Rites of transition), இணைத்தல் சடங்குகள் ;(Rites of Incorporation) எனப் பகுத்தார். சடங்கு நிகழ்த்தப்படும் இடம், காலம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணங்களை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன. சடங்குகள் செயல், நிகழ்த்துதல், நனவு, தன்னார்வம், கருவி, பகுத்தறிவு, கூட்டுத்தன்மை, சமூகம், சமூகஉறவுகள், புனைவு, குறியீட்டு வெளிப்பாடு, நடத்தை, அழகியல், புனிதம் ஆகியவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றன.


சமயச் சார்புடைய சடங்குகள் தவிர, வாழ்வியல் சடங்குகளும் மக்கள் வாழ்வில் நிறைந்துள்ளன. இவை பண்பாட்டின் பல நிறுவனங்களின் செயல்முறைகளோடு தொடர்புடையன. இவ்வகையிலே சித்தாண்டி கிராமத்தில் வாழ்வியற் சடங்குகளில் ஒன்றான திருமணச் சடங்குகளைப் பொறுத்தவரையில், இவை சமயச் சடங்குகளுடன் தொடர்புபட்டதாக அமைந்துள்ளது. அவ்வகையிலே, கிழக்கிலங்கையில் அமைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் “புன்னைச்சோலை”எனும் கிராமம் அமைந்துள்ளது. இது சுமார் 925.34 கிலோமீற்றர் பரப்பைக் கொண்டது. நகரிலிருந்து வடக்கே ஏறக்குறைய நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

இவ்வூருக்குக் கிழக்காக மாமாங்கம், பாலமீன்மடு என்னும் கிராமங்களும், மேற்காக திராய்மடு, முப்பதுவீடுத்திட்டம் என்பனவும், வடக்கே ஜெயந்திபுரம், இருதயபுரம் என்பனவும், தெற்கே அமிர்தகழிஎன்னும் கிராமங்களும் புன்னைச்சோலைக்குஅரண் செய்கின்றன.

புன்னைச்சோலையின் கிழக்குப் புறமாக வங்கக் கடலோடு மட்டக்களப்பு வாவியும், ஆறுகளும் (மட்டிக்கழி) சங்கமமாதல் இதன் சிறப்பாகும். மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சூழ்ந்திருக்கும் ஏழு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களாகிய மாமாங்கக்குளம், அனுமார் தீர்த்தம், கங்கைத் தீர்த்தம், பழையாறு நற்றண்ணீர்மடு, பாலமீன்மடு, மட்டக்கழிஓடை எனப்படும் கிண்ணையடித்தோளா, திராய் மடுத் தீர்த்தங்களும் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் “பழையாறு நற்றண்ணீர்மடு” புன்னைச்சோலைக் கிராமத்திலே அமைந்துள்ளது.

புன்னைமரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இக்கிராமம் புன்னைச்சோலை என்னும் காரணப் பெயரைப் பெற்றது. இச்சோலைகளின் மத்தியில் ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் ஆலயம் விளங்குகிறது. பற்றைக் காடுகளாகக் காணப்பட்ட நிலத்தை வெட்டி, வெளியாக்கி குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். இக்கிராமத்தில் பாரம்பரியம் சலவைத் தொழிலேக் காணப்பட்டது. இன்றும் இக்கிராம மக்கள் தமது தொழிலைக் கைவிடவில்லை. ஆனால், இன்று படித்தவர்களை அதிகமாகக் கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இக்கிராமத்தில் கூலி வேலை செய்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், விவசாயம்செய்பவர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், தனியார் உத்தியோகஸ்தர்கள் என பலர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கிராமமானது 600 குடும்பங்களை உள்ளடக்கியுள்ளது. அண்ணளவாக 3000 மக்கள் இக்கிராமத்தில் வசிக்கின்றனர். அதிகமாக, இந்துக்கள் காணப்பட்டாலும் கிறிஸ்தவர்களும் அக்கிராமத்தில் வசிக்கின்றனர். அத்துடன் இக்கிராமத்தில் கலப்புத் திருமணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இந்துக்கள் (கிராம மக்கள்) சிங்களவர்கள், கிறிஸ்தவர்களைக் கலப்புத் திருமணம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், புன்னைச்சோலை ஆலயத்திற்கு யாராக இருந்தாலும் சென்று வழிபடலாம். இன்று பல்வேறு பிரதேசங்களில் இருந்து சிங்களவர்கள் அதிகளவாக வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, ஒட்டுமொத்தமாக நோக்கும்போது, இக்கிராமமானது சமூகக் கட்டமைப்பின் (சாதி) அடிப்படையில் தண்டக்காரர்களை முற்றிலும் புடை சூழ்ந்த கிராமமாகவும், ஆலயமும் சமூகக் கட்டமைப்பின் அடிப்படையில் இயங்கி வருகின்ற நிலையும் காணப்படுகின்றது. ஆனாலும், ஏற்றத்தாழ்வு இன்றி, பல கோடி மக்களைக் கவர்ந்த ஆலயமாகவும் பிரதேசமாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


1.1 ஆலயத்தின் வரலாற்றுப் பின்னணி

மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே நாலரை கிலோ மீற்றர் தொலைவில் புன்னைச்சோலை எனும் கிராமம் உள்ளது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் அடர்ந்த காடாக இருந்த இப்பிரதேசத்தில் தம் தொழில் நிமித்தம் (சலவைத் தொழில்) காடுகளை வெட்டித் துப்பரவு செய்து குடியேற்றங்களை அமைத்தனர். அன்றையக் காலகட்டத்தில் புன்னைச்சோலைப் பிரதேசத்தில் ஆறு, ஏழு குடும்பங்களே வசித்தனர். பின்னர், புன்னைச்சோலைக் கூடாக புகையிரதப் பாதை அமைத்ததனாலும், திருமண உறவுகளினாலும் குடியேற்றங்கள் அதிகரித்தன. இவ்வாறு வந்து குடியேறியவர்களில் பெரியார் என்றுஅழைக்கப்படும் பெரிய தம்பியும் ஒருவராவார். இவர் இறைபக்தி மிக்கவராகவும் காணப்பட்டார்.

பெரியார் மலைநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். தனது வீட்டில் சிறு பந்தலிட்டு காளியைச் சூலமாக வழிபட்டு வந்தார். அந்த வேளையில், மட்டக்களப்பில் தென்னந் தோட்டத்தைப் பராமரிக்கும் தொழில் இவருக்குக் கிடைத்தது. அதன்பொருட்டு, இவர் ஒருநாள் காட்டு வழியாகச் சென்று கொண்டிருக்கும் போது சிவப்புநிறச் சேலையுடன் அம்மன் தரிசனம் கொடுத்து வழிபடச் சொன்னதாகவும், கனவிலும் பெண் உருவில் அம்மனைக் கண்டதாகவும் பெரியார் கூறினார். 1910 ஆம் ஆண்டளவில் பெரியார் என்பவர் இத்தி மரத்தின் கீழ் ஓர் ஓலைக்குடிசை வைத்து தமது சொந்த வணக்கத்திற்காகவே வழிபட்டார் என்று இன்னொரு கதை நிலவுகின்றது. அவருக்கு மந்திரங்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அவ் ஓலைக் குடிசையில் காளிக்குச் சாதம் செய்து படைத்து வழிபட்டு வந்தார். இத்தி மரத்தின் கீழ் ஓலைக்குடிசையில் வழிபாடு நடத்தி வந்த காலத்தில், இக்கிராமத்தில் மிகக் குறைவான மக்களேக் குடியிருந்தனர். பெரியாரது தனிப்பட்ட வழிபாடாக ஆரம்பிக்கப்படாலும், அது படிப்படியாக மாற்றமடைந்து, அங்கு குடியிருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து தினந்தோறும் பூ வைத்தும், பொங்கிப் படைத்தும் வருடமொரு முறை பந்தலிட்டுச் சடங்கு செய்தும் வந்தனர். இக்காலக்கட்டத்தில் காடுகள் சூழ்ந்து காணப்பட்டதனாலும், போக்குவரத்து வசதியின்மையாலும் இவ்வழிபாடு பிரபல்யம் அற்றவையாக இருந்தமையாலும், பிற ஊரார் இவ்வழிபாட்டில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு, காளியம்மன் வழிபாடு சலவைத்தொழிலாளர்களுக்கே (தண்டக்காரர்) உரித்தாக்கப்பட்டது.

இவ்வாலயத்தின் வரலாறு பற்றி இன்னொரு கதையும் நிலவுகிறது. முன்னர் புன்னைச்சோலை கிராமத்தின் பெரும்பகுதி காடாகவே இருந்தது. அவ்வழியால் சென்ற பெரியார் என்னும் அடியவருக்கு பத்திரகளியம்பாள் காட்சியளித்தார். அந்த அதிர்ச்சியில் அவர் மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து, அம்பாளைக் காணாது உருகுகின்ற அடியவர் அம்பாளுக்கு அவ்விடத்திலேயேச் சிறிய ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினார். அம்மனின் அருட்கடாட்சம் எங்கும் பரவவே, ஆலயத்திற்கு அடியார் கூட்டம் பெருகியது. ஆலயம் புதுப்பொலிவு பெற்றது.


ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் நிலத்திற்கு அனுமதிச்சீட்டு வழங்கும் முறை காணப்பட்டது. பெரியாரால் அமைக்கப்பட்ட இவ்வாலயம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்ததால் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. மேலதிகாரிகளோஅதனைப் பிரித்தெறியக் கட்டளையிட்டனர். அவ்வாறு, பிரித்தெறியாமல் தனக்கு ஏதாவது கெடுதல் நேரும் என உயர் பதவியில் இருந்த இலங்கையர் சிலர் அஞ்சியதால் இப்பிரச்சினையில் இருந்து மீள முயற்சித்தனர். அக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்த பிரீமனும் வன்னியனார், உடையார், விதானை ஆகிய பதவிகளில் இருந்த நமசிவாயம், நல்லையா, கணபதிப்பிள்ளை, ஏகாம்பர மூர்த்தியும் சேர்ந்து கலந்தாலோசித்து பெரியாரின் பெயரில் அனுமதிப் பத்திரத்தினைப் பெறுதலே வழி எனக் கூறி ஆலயத்திற்கென்று ஓட் உறுதியான இடத்தினைப் பெற்றுக் கொடுத்தனர். இவ்விடத்திலேயே இன்று மிகப் பிரதித்தமாக இவ்வாலயம் திகழ்கின்றது.

பெரியாரால் உருவாக்கப்பட்ட இவ்வாலயமானது வீரகாளியம்மன் ஆலயமாக இருந்து, பின் பத்திரகாளியம்மன் ஆலயமாக மாற்றப்பட்டது. அக்காலத்தில் பாடப்பட்ட காவடிப் பாடல் ஒன்றிலே, “தாயே வீரகாளியம்மா” என்று பாடப்பட்டுள்ளது. ஆதிகாலத்திலே, பிள்ளையாரடியைச் சேர்ந்த “முருகன்”என்பவர் பூசாரியாக இருந்தார். பின்பு, சௌந்தரம் என்பவரும், கிளிவெட்டியைச் சேர்ந்த சீனித்தம்பி என்பவரும், அதனைத் தொடர்ந்து பல பூசாரிமாரும் பூசை முடித்தனர். இதில் சீனித்தம்பி என்பவர் 40 வருடம் பூசாரியாக இருந்தார்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், ஆலயப் பூசை நிகழ்வின் போது, பங்குபற்றும் அனைத்து மக்களும் அவர்களது குலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். பிறருக்கு, அன்று முதல் இன்று வரைஅப்பணியில் ஈடுபட இடம் கொடுக்கப்படவில்லை. இது இன்றும் மிக இறுக்கமாகவேப் பின்பற்றப்பட்டு வருகின்றது. புன்னைச்சோலை காளி கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் மாத்திரமே தண்டக்காரர்கள் (சலவைத் தொழிலாளர்கள்) வம்சத்தினர் வாழ்வதனால் அவ் ஆலயத்தின் ஆட்சியினை ஏனைய சமூகத்தினர் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்ச உணர்வும், அவர்களது தனிப்பட்ட கோயிலாகக் காணப்படக் காரணமாகியது. ஏனெனில், ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு எந்த ஆலயத்திலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை. சகலத் துறையிலும் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். தமது உரிமைக்காக, தமது குலத்தவர்களால் இவ்வாலயம் இன்றும் பேணப்பட்டு வருகின்றது. இக்குலத்தவர்களுக்குரிய பிரதான கடவுள் பெரிய தம்பிரான், நீலோசோதையனாக மன்னர்களால் வகுக்கப்பட்டாலும் இவ்வாலயத்தில் காளியைத் தமது குலமாக மதித்து வழிபடுகின்றனர்.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயமானது, ஓலைக்குடிசையில் இருந்து படிப்படியாக மாற்றமடைந்து கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது. 1910 ஆம் ஆண்டில் தனியொருவரால் வழிபடப்பட்ட இவ்வாலயம், 1935 ஆம் ஆண்டில் அவ்வூராருக்குரிய பொதுவான கோயிலாக மாறி, ஓலைக்குடிசையிலேயே வழிபாடு நடாத்தப்பட்டது. அக்காலகட்டத்தில் மாநகரசபைத் தேர்தலில் வெற்றியடைந்த கனகசபை என்பவர் ஆலய வீதிஅமைத்து, அதற்குப் பெயரிட்டுப் பல உதவிகளை வழங்கினார். பின்னர் 1945ஆம் ஆண்டளவில் காளி, மாரி, வீரபத்திரருக்குரிய முகக்களை வைத்து வழிபடும் நிலை காணப்பட்டது. 1951க்கும் 1977க்கும் இடைப்பட்டக் காலங்களில் இவ் ஆலயமானது அழிவுற்ற நிலையிலேயேக் காணப்பட்டது. 1952 ஆம் ஆண்டு மீண்டும் அவ்வூராரின் முயற்சியால் கற்கோயிலாகக் கட்டப்பட்டது. இவ் ஆலயத்தின் முன்னேற்றத்துக்கு ஓர் சமூகப் பின்னணியும் காரணமாக அமைகின்றது. அதாவது, சாதிப் பாகுபாட்டால் ஏற்பட்ட புறக்கணிப்பால் மாமாங்கப் பிள்ளையார் கோயில், கண்ணகியம்மன் கோயில், மட்டிக்கழி திரௌபதயம்மன் கோயில்களில் சலவைத் தொழிலாளர்கள் செய்து வந்த பூசையினை சம உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டதால், அதனை உறுதியுடன் இப் புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தினைப் புத்தெழுச்சியடையச் செய்தனர். இம்முயற்சியில் அயராது உழைத்து மக்கள் வெற்றியும் கண்டனர்.

கற்கோயில் கட்டப்பட ஆரம்பித்த ஆண்டுகளில் தலைவர், தனாதிபதி, பொக்குசாதிபதி என்னும் பெயரில் ஆலயப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தது. 1978ம் ஆண்டில் ஏற்பட்ட சூறாவளியால் ஆலயம் சேதமடைந்த போது, அதனைத் திருத்தி அமைப்பதற்காகப் புது நிர்வாகம் 1979 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டது. இதில் வண்ணக்கர், கங்காணி, செயலாளர் , தலைவர், பொருளாளர் என்றபெயரில் நிர்வாகம் மாற்றப்பட்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. இப்பதவியில் நியமிக்கப்பட்டோர் முறையே கணபதிப்பிள்ளை, சீனித்தம்பி, வெற்றிவேல், மனோகரன், நாகையா போன்றவர்களாவர். இவர்கள் ஒன்றிணைந்து தமக்கென்று ஓர் ஆலயத்தினைச் சிறப்பாக அமைத்து வழிபடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 1982 ஆம் ஆண்டில் இடம்பெற்றப் பொதுக்கூட்டத்தில் ஞானப்பு தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பதவி மாற்றம் இடம் பெறுகின்றது.

ஆரம்பகாலத்திலிருந்து இவ்வாலயத்தில் திரு. நாகமணி, திரு.நாகையா, திரு.நாகப்பிரகாசம், திரு. வெற்றிவேல, திரு.ஞானப்பு ஆகியோர் தலைவர் பதவியில் இருந்தனர். ஞானப்பு என்பவர் 47 வருடங்களாக இன்றும் மாறாமல் தலைவராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பொருளாளராக, திரு.தாமோதரம், திரு.கோபாலப்பிள்ளை, திரு.நந்தகுமார் ஆகியோர் பதவி வகித்ததுடன் இன்று திரு. நா. சசிகரன் என்பவரும், செயலாளராக, திரு.க. சிவபாலசேகரும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் பரிபாலன சபை கூட்டம் மூலம் தெரிவுசெய்யப்படுவர். மொத்தமாக, நிருவாகத்தில் 14 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.

இன்று, புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயமானது, அழகுற பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் கொண்டுள்ள ஆலயமாககாணப்படுகின்றது. கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று ஆகம முறைப்படி அமைக்கப்பட்டு 03.07.2000 ஆம் ஆண்டில் சிவஸ்ரீ. ச. காசிபதீஸ்வரக் குருக்கள் தலைமையில் ஆகம விதிப்படி ஆலயம் அமைத்து கும்பாபிஸேகம் இடம் பெற்றது. சங்காபிசேகம் சிறப்பு நிகழ்வாக நடைபெற்றது.


அடுத்து 2007 இல் ஒரு கும்பாபிசேகமும், 2014 இல் ஒரு கும்பாபிசேகமும் இடம் பெற்றது. 2014 இல் சுற்றுமண்டபம் அனைத்தும் கட்டப்பட்டு நடைபெற்றது. இவ்வாண்டில் வானூர்தியில் சுவாமிக்கு பூப்போடும் நிகழ்வு இடம் பெற்றது. அந்த வகையில், பத்திரகாளியம்மன் ஆலயத்தில் உயரமான கொடிக்கம்பமும், பிரதானஆலயத்தைச் சுற்றிப் பல சிறு பரிபாரக் கோயில்களும் அமைத்துக் காணப்படுகின்றன. இன்று, கோபுரவாசலுக்கான புனருத்தாரணபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை இந்தியச் சிற்பாச்சாரியார்கள் சிலைகளைச் செதுக்கி அழகுற அமைத்து வருகின்றனஎ. இக்கோபுரமானது நவதளகோபுரம் என அழைக்கப்படுகின்றது. அதற்குரிய கும்பாபிசேகம் 2021 இல் இக்கோபுரத்திற்கு அம்பாளின் நடைபெறும் எனக் குறிப்பிட்டனர். ஏறத்தாழ 5 கோடிக்கு அதிகமாக இக்கோபுரத்திற்கு முழுமையாகத் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

காளியின் ஊர்தி சிங்கமாகவும், படைக்கலம் சூலமாகவும் காணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் பெரியார் வழிபட்ட சூலமான புனிதப்பொருளே இன்றுள்ள மூலஸ்தான அடி அத்திவாரத்தில் காணப்படுகின்றது. அது எவ்வாறான பொருள் என்று யாராலும் கூறமுடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓலைக்குடிசை இருந்த இடத்திலே இன்றைய மூலஸ்தானம் அமையப் பெற்றுள்ளது. இவ்வாலயம் தனிப்பட்ட குலத்துக்குரியதாகக் காணப்படுகின்றது.

ஆலயத்தின் பௌதீகக் கட்டமைப்பின் அடிப்படையில் ஆலயத்திற்கு முன்வாசல், பின்வாசல் எனக் காணப்படுகின்றது. இது தவிர, பரிபாரத் தெய்வங்களாக மாரியம்மன், பேச்சியம்மன், திரௌபதை அம்மன், கம்பகாமாட்சி, வைரவர், வீரபத்திரர், புள்ளிக்காரர், பத்தினியம்மன், வதனமார், காடேறி, நாகதம்பிரான், பிரத்தியங்கிரர் காளி, நரசிங்கர், நீலாசோதயன் போன்ற பலதெய்வங்கள் சிறுகோயிலாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் உற்சவக் காலங்களில் பூசை நடைபெறும். இவை தவிர, அன்னதானமண்டபம், கலாச்சார மண்டபம், அறநெறிப் பாடசாலை, பாலர்பாடசாலை என்பனவும் ஆலயத்திற்குரியதாகக் காணப்படுகின்றன.


இவ்வாலயத்தில் கருவறைக் கதவு ஆனி மாதத்தில் ஆறு நாள் சடங்கின் போது மாத்திரமேத் திறக்கப்படும். குறிப்பாக, ஆனி மாதத்தில், அதாவது கண்ணகியின் சடங்கு முடிந்து ஒரு வாரத்தில் இவ்வாலயத்தின் கதவு திறக்கப்படும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை திறந்து, வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு வரக்கூடியவாறு சடங்கு இடம்பெறும். இவ்வாலயத்திற்கு திதி என்று இல்லாததால் ஆனி மாதத்தில் குறிப்பிட்ட தினத்திலேக் கதவு திறக்கப்படும். இதில் அம்மாள் எடுத்து வரல், கன்னிமார் பிடித்தல், கல்யாணக்கால் வெட்டுதல், நெல்லுக்குற்றுதல், கள்ளிவெட்டுதல், தீ மிதித்தல், பலி கருமப் பூசை, பூப்பூசை, தீக்குழிக்குப் பால் ஊற்றுதல் எனப் பல வகையானசடங்குகள் நிகழ்கின்றன.

அதுமட்டுமன்றி, தைப்பொங்கல், சித்திரை வருடம், தீபாவளி,பௌர்ணமி பூசைகளும் சிறப்பாக நடைபெறும். இந்நாட்களில் மூலஸ்தான கதவு திறக்காமல் முன் வாயில் கதவு திறந்து வெளியிலேப் படையல்கள் படைக்கப்பட்டு, பூசை நடைபெறும். பௌர்ணமியன்று பூப்போடுதல் நிகழ்வு சிறப்பாக மக்களால் நேர்த்தியாக மேற்கொள்ளப்படுகின்றது. ஏழு கிழமைகள் பூப்போட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும், நோய் நொடி அகலும், நினைத்தவை வெற் றிபெறும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. இதுவே, உண்மையாக நடந்த நிகழ்வுகள் எனவும் பலராலும் சப்படுகின்றது. இதுதொடர்பான மேலதிக விளக்கத்தை “சடங்கு முறைகள்”என்ற தலைப்பின் கீழ் காணலாம்.


மேலும், புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயமானது, பதிவு செய்யப்பட்டு சபையாக இயங்கி வருகின்றது. இச்சபையானது மகாசபை, அதிகார சபை, பரிபாலன சபை என மூன்று சபைகளைக் கொண்டது. சபையினுடைய நியமனம், கடமை போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதாக, 1997 ஆம் ஆண்டு ஆலய பரிபாலசபையினரால் யாப்பு வரைந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த யாப்பானது இவ் ஆலயத்தின் அமைப்பு விதிகளும் உப விதிகளும் என்னும் தலைப்பின் கீழ் வரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் ஆலய நிர்வாகத்தின் செயற்பாடுகளும் சட்டதிட்டங்களும் காணப்படும்.

புன்னைச்சோலை பத்திரகாளியம்மனை அவ்வூர் மக்கள் மாத்திரமின்றி, நான்கு திசைகளில் இருந்து வந்து வழிபடுவதனைக் காணலாம். பல கோடி மக்களை புடை சூழ்ந்த தலமாகக் காணப்படுவதனை அங்கு நடைபெறும் தீமிதிப்புச் சடங்கு எடுத்துக் காட்டுகின்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/community/p28.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License