இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ்ச் செவ்விலக்கிய உரை மரபில் 21 ஆம் நூற்றாண்டில் கரு.அழ.குணசேகரன்

முனைவர் சு. மாதவன்


கலைஞன், கலை ஆய்வாளன் என்ற இருபெரும் முத்திரைப் புகழோடு, 20-21 ஆம் நூற்றாண்டுகளின் திசையெங்கும் நிறைந்திருக்கிற கேஏஜி, தன் இறுதிக் காலத்தில் பதித்துவிட்டுப் போன உரைகள் எனும் உரைகல் குறித்து பதிற்றுப்பத்து (2010), பட்டினப்பாலை (2015) இந்தக் கட்டுரை பறைகிறது.

செவ்விலக்கியங்களும் உரையாசிரியர்களும்

இன்றைக்கும் சரி, அன்றைக்கும் சரி... பண்டைய இலக்கியங்களை - செவ்விலக்கியங்களைப் பயில ஆர்வப்படுபவர்கள் தேடுவது உரையுடன் கூடிய புத்தகங்களையே! பழந்தமிழ்ச் செய்யுள் நடை - அதிலும் யாப்பிலக்கிணப் பாவமைப்பால் சிக்கும் சிடுக்குமாகத் தோன்றும் நடை - அதாவது இலக்கண அடிப்படையில் சீர் பிரிக்கும் போது ஒரு சொல்லின் ஒரு பகுதியும் தொடர்சொல்லின் முன்பகுதியும் புனர்ந்து பரிந்து, நிற்கும் நடை - கண்டு அஞ்சி உரையின்றி இவற்றைப் படிக்கவியலாது என்ற எண்ணவோட்டத்தால் பெரும்பான்மையோர் உரையையே நாடுகின்றனர். இத்தகைய வாசிப்புத் தேவையை எளிமைப்படுத்தவே உரைகள் தோன்றின. அந்த வகையில், உரைகளின் தேவையைப் புறந்தள்ளிவிடமுடியாது. ஆனால், உரை எழுதுபவர் அவரது புரிதலிலிருந்து மட்டுமே உரை எழுதுவார். இலக்கிய நூலாசிரியரின் கருத்தை உரை எழுதுபவர் விளங்கிக் கொண்ட வகையிலேயே உரை வரைவார். என்னதான் புலமைமிக்கவராயினும் நூலாசிரியரின் எண்ணக் கருத்தை முற்றுமுழுவதாக வெளிப்படுத்த வல்லவர் என்று எந்த உரையாசிரியரையும் குறிப்பிட்டுவிட முடியாது. இந்த நோக்குநிலையில், தமிழிலக்கிய உலகம் அறிந்த உரையாசிரியர்கள் பலரும் மேல்தட்டு மக்கள் சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் அவரவர் சார்ந்த சாதி, சமயங்களின் கண்கொண்டு உரைவரைந்துள்ள பகுதிகள் சிலவோ, பலவோ உண்டு. இதற்கான சமூக, வரலாற்றுப் பண்பாட்டுப் பின்னணிக்கு அடையளமாக அவரவர் கல்விபெற்ற காலக் கணக்கு விளங்குகிறது.

20-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய செவ்விலக்கிய - இலக்கண உரையாசிரியர்கள், இவர்கள் பற்றிய புரிதலைப் பிரிதொரு வேளையில் ஆராயலாம்.



20-ஆம் நூற்றாண்டின் இலக்கிய உரையாசிரியர்கள்

20-ஆம் நூற்றாண்டில் இலக்கிய உரையாசிரியர்களாய்த் திகழ்ந்தவர்களின் பட்டியலிலிருந்து பார்வையை அணுகலாம் :

1. பொன்னம்பல சுவாமிகள் (1932 - 1904)

2. திருமயிலை சண்முகம் பிள்ளை (1958 - 1905)

3. சிவசம்புப் புலவர் (1830 - 1909)

4. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1962 - 1914)

5. பூவை. கலியாணசுந்தர முதலியார் (1854 - 1918)

6. வெ.குப்புசாமி ராசு (___?____ - 1921)

7. குமராசுவாமிப் புலவர் (1854 - 1922)

8. ஆலாலசுந்தரம் பிள்ளை (1853 - 1953)

9. பானுகவியடிகள் (____ - 1926)

10. வேலுப்பிள்ளை (1847 - 1930)

11. கந்தசாமிக் கவிராயர் (_______)

12. டி. என். சேஷாசல ஐயர் (1891-1938)

13. கர. கோவிந்தராச முதலியார் (1972 - 1952)

14. திருவளங்கம் (_____)

15. சிவபாத சுந்தரனார் (______)

16. அரசன் சண்முகனார் (1868 - 1955)

17. கோ. வடிவேல் செட்டியார் (_______)

18. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் (_____)

19. வை. மு. கோபாலா கிருஷ்ணமாச்சாரியார்

20. ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1854 - 1944)

21. திரு. வி. க. (1883 - 1953)

22. மாகறல் கார்த்திகேய முதலியார் (1857 - 1915)

23. செல்வகேசவராய முதலியார் (1864 - 1921)

24. தி. த. கனகசுந்தரம் பிள்ளை (1863 - 1922)

25. சுன்னாகம் குமாரசாமிப் புவலர் (1855 - 1922)

26. ஆ.சிங்கராவேலு முதலியார் (1855 - 1934)

(பட்டியல் மட்டும், அரவிந்தன்., மு.வை. 2012 : 663 - 669).

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 26 பேரில் தங்கள் சாதிப் பட்டத்தைப் போட்டுக்கொண்டவர்

முதலியார்-5

பிள்ளை-4

ஐயர்/ஐயங்கார் - 4

செட்டியார் - 1

நாட்டார் - 1

எனப் 15 பேர் (15/26) உள்ளனர். சாதிப்பட்டம் போடாவிட்டாலும் பிள்ளைஎன அறியப்படுவோர் சுமார் 7, சாதிப்பட்டம் அறியப்படாதோர் (அவர்களும் மேலாதிக்கச் சாதியினரே) - 4 என்றவாறு உள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையோர் சைவ, வைணவ, வைதீக மதங்களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களது வாழ்வியல் ஏற்புநிலை எந்தக் கருத்தியல் சார்ந்ததாக உள்ளதோ அதன் சார்புச் சாரம் அவர்களது உரைகளில் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவர்களுள்ளும் வைதீக நெறியைச் சார்ந்தவராயினும் சமண நூலான சீவகசிந்தாமணிக்குப் பதிப்புரைக் குறிப்பு எழுதும் போது அறிவு நேர்மையுடன் நடந்து கொண்டவர்களும் ஒரு சிலர் இருத்தல் கூடும். விமர்சனத்துக்கு உட்பட்ட நிலையிலும் அப்பாற்பட்ட பாங்கு உள்ளவரென உ. வே. சா வை மதிப்பிடலாம்.

இதுவரையிலான உரையாசிரியர்களின் உரைகளில் நிகழ்ந்துள்ள தற்சார்புத் தாக்கம் குறித்து எவரேனும் விரிவாக ஆராய்தல் இதுபோன்ற புரிதலை உறுதிப்படுத்திக் கொள்ள உதவும்.



20-21 ஆம் நூற்றாண்டு உரையாசிரியர் மரபில் கேஏஜி

20-ஆம் நூற்றாண்டு உரையாசிரியர்களில் 26 பேரை முன்பே மதிப்பிட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, 20-21 ஆம் நூற்றாண்டுகளில் பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களுக்கு மட்டும் உரையெழுதியுள்ள உரையாசிரியர்கள் இவர் இவரெனப் பின்வருமாறு பட்டியலிடலாம்.

பதிற்றுப்பத்து - உரையாசிரியர்கள் (அடைப்புக்குறிக்குள் உரையின் முதற்பதிப்பாண்டு)

1. பழைய உரையாசிரியர் (உரை, முதற் பதிப்பாண்டு - 1904)

2. உ.வே. சாமிநாத ஐயர் (1904 உரையாசிரியரின் உரைப் பதிப்பின் குறிப்புரை)

3. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (1950)

4. பண்டிதர் சு. அருளம்பலவனார் (1956)

5. மி. பொன். இராமநாதன் செட்டியார் (1964)

6. புலியூர்க் கேசிகன் (1974)

7. எம். நாராயணவேலுப் பிள்ளை (1994)

8. அ. மாணிக்கனார் (1999)

9. அ. மா. பரிமணம் (2003)

10. ஆ. ஆலிஸ் (2004)

11. ஞா. மாணிக்கவாசகன் (2008)

12. ச. வே. சுப்பிரமணியன் (2009)

13. கரு. அழ. குணசேகரன் (2010)

பட்டினப்பாலை உரையாசிரியர்கள் (அடைப்புக்குறிக்குள் முதற்பதிப்பு) (உரை ஆண்டு)

1. உ. வே. சாமிநாதையர் (1931) நச்சினார்க்கினியர் உரை

2. வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் (1933)

3. பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் (தேவர்) (1930)

4. மறைமலை அடிகள் (1956)

5. கதிர் முருகு (2009)

6. சாமி சிதம்பரனார் (1967)

7. ரா. ராகவ அய்யங்கார் (_____)

8. கரு. அழ. குணசேகரன் (2015)

(பட்டியல் முழுமையானதன்று)

இவ்வாறு பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களுக்கும் உரை எழுதியவர்களும் மேலாதிக்கச் சாதிகளைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அதேபோல், பெரும்பாலும் சைவப் பின்னணி கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர்.



உரையாசிரியர்களின் உரைத்திறன்களைக் குறித்துப் பேசாமல் அவர்களின் மதம், சாதி குறித்த ஆய்வு அவசியமா என்று கேள்வி எழுதல் இயல்பே. இரண்டு நூற்றாண்டுகளாகவும் (20, 21) அதற்கும் முன்பும் உரை எழுதியவர்களின் உரைகளிலிருந்து உரைகளின் நோக்குநிலைகளிலிருந்து கே ஏ ஜி வேறுபடுவதற்கும் மாறுபடுவதற்கும் புதுமையாக்கமாக - அவரே குறிப்பிட்டிருப்பதுபோல் - ஆராய்ச்சிப் புத்துரை எழுதுவதற்குமான புலமைத்துவத் தனித்தன்மை ஒளிரும் - மிளிரும் பாங்குளை எடுத்துக்காட்டுவதற்காகவே அவர்தம் சமய, சாதிப் பின்னணிகளைப் புரிந்துக்கொள்வது தேவையாகிறது.

இதுவரை உரை எழுதிய பெரும்பாலோர், மூலம், மூலப் பகுதியைப் பிரித்து அப்பகுதியின் ஒவ்வோரடிக்குமான பொருள் விளக்கம், விளக்கவுரை / தெளிவுரை / பொழிப்புரை, சொற்பொருள் விளக்கம், குறிப்புகள் என்ற வடிவமைப்பிலேயே உரை எழுதியுள்ளனர். பெரும்பான்மையான உரைகளில் புத்தம் புதிய உரை விளக்கங்களைக் காண்பது அரிதாகவே உள்ளது. பெரும்பாலும் ‘முன்னத்தி ஏர்’ சென்ற வழியிலேயே செல்லும் பின்னத்தி ஒர்களாகவே உரைகளின் வழித்தடங்கள் உள்ளன. இந்த ஏப்புமைகூடப் பொருத்தமாக இல்லை. பின்னத்தி ஏர்கள்கூட முன்னத்தி ஏர் உழவுச் சாலுக்கடுத்த மண்வரம்பைக் கிளறிக் கொண்டேதான் செல்லும். ஆனால், இந்த உரைகள் அவ்வாறானவையாக இல்லை.

முதல் உரைகாரர் என்ன எழுதியுள்ளாரோ - எந்தக் கருத்தியலை விளக்குகிறாரோ - எந்த இரசனையை, நுட்பத்தை உணர்த்துகிறாரோ - அந்த மரபொழுங்கு மாறாமல் சிற்சில புதிய விளக்கங்களை மட்டும் தன் சைக்சரக்காகச் சேர்த்து எழுதிஎழுதிக் குவித்துள்ளனர்.

இவ்வாறாகவே, ஒருபடித்தான உரைமரபைத் தொடர்ந்து கடைபிடிப்பதற்குப் பெரிதும் காரணமாகத் திகழ்வது பாடநூல்கள் எனும் பயனீட்டு நோக்கமே ஆகும். அதாவது, காலந்தோறும் தலைமுறை இடைவெளியால் ஏற்படும் மொழிப்புலநுட்பப் புரிதல் குறைதிறனை ஈடுகட்டும் - படிப்பவரின் புரிதல் திறனுக்கேற்ற உற்பத்தி - முயற்சிகளாகவே உரைகள் விளங்குகின்றன. ஓலைச்சுவடி முறையில் படிக்கத் தொடங்கிய காலம்முதல் படிப்புத் தேவைக்காக - அதன் எளிமைக்காக - உரைகள் காலந்தோறும் தோன்றிவருகின்றன. ஆக, மொழிநடை எளிமையாக்கமே பெரும்பாலான உரைகளின் உருவாக்கப் பின்புலமாகின்றது. இதற்குள் ஆங்காங்கே, ‘தன் தனித்தன்மையைக் காட்டாவிட்டால் எப்படி’ என்ற மனோபாவத்தில் அல்லது இயல்பாகவே உருவாகும் புதிய விளக்கங்களும் காணக்கிடைக்கின்றன என்பதும் உண்மைதான்!



இப்படி ஆங்காங்கே புதிய விளக்கங்கள் இடம்பெற்ற போதிலும், அடிப்படையில் எல்லா உரைகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதே இங்கு கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். அத்தகைய ‘ஒற்றை நேர்க்கோடு’ எது என்றால் அதுதான் முதல் உரையாசிரியனின் கருத்தியல் புரிதலாகும். புதிதாக உரை எழுதப்புகும் உரையாசிரியர் அவருக்கு முன்பாக வந்த எந்தஒரு உரையை முன்மாதியாக எடுத்துக்கொண்டு உரை எழுதினாலும் அவ்வுரையில் தொடர்ந்துவரும் பொதுமைப் பண்புகளே மிகுதியாக அமைந்து வந்துள்ளன.

கட்டுரையின் விரிவு கருதி, இரண்டே இரண்டு பொதுமைப்பண்புமிகு உரைச்சான்றுகளை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.

உரைச்சான்றுகள் பதிற்றுப்பத்தை அறிமுகப்படுத்தும் இதர உரையாசிரியர்கள்

“இந்நூல் முழுவதும் சேர அரசர்களைப் பாராட்டுவது” (பழைய உரை, உ.வே.சா.குறிப்புரை, 1994: iii)

“முடியுடை வேந்தர்களாகிய சேரர் பதின்மர்கள்மீது சங்கப் புலவர்கள் பதின்மர்கள் இயற்றியது” (அய்யப்பன்.,கா. பழையஉரை, உ.வே.சா. பதிப்புரை 2009 : 143)

“சேரவரசருள் பதின்மரைப் போற்றுமுகத்தான் …. பதிற்றுப்பத்து” (புலியூர்க் கேசிகன் உரை., 2013 : 3)

“சேரமன்னர்களுடைய நாட்டுவளம், கொடைச்செயல், மக்கள் வாழ்க்கை, படைத்திறன், மனை மாட்சி முதலியவற்றை இந்நூலால் அறியலாம்” (மாணிக்கனார்.,ஆ. 1999 : 4)

“சேரர் போர்மறம் பாடும்புலமை ஊற்று” (மாணிக்கவாசகன்., ஞா. 2008 : 3)

உரைச்சான்றுகள் - 2

மூன்றாம்பத்தின் முதல்பாடலுக்குப் பிற உரையாசிரியர்களின் விளக்கம்

“(உக)” சொற்பெயர் நாட்டாங் கேள்வி நெஞ்சமென்றைந்துடன் போற்றி யவை துணையாக”

பெயர் : அடுநெய்யாவுதி

“(ப-ரை)” சொல் - சொல்லிக்கணஞ்சொல்லும் நூல் பெயர் - பொருளிலக்கணஞ் சொல்லும் நூல்;

“பெற்றபெரும் பெயர் பலரகை யிரீஇய” (பதிற்.90:23) இத்தொகையுள் மேலே வந்தமையால் பெயரென்பதும் பொருளாம்.

நாட்டம் - சோதிடநூல் ; கேள்வி - வேதம் நெஞ்சமென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூய நெஞ்சினை” (பழைய உரை, உ.வே.சா குறிப்புரை, 1994:38)

“21. அடுநெய் ஆவுதி?

சொல்லிலக்கண நூலும் பொருளிலக்கணத்தைச் சொல்லும் நூலும் சோதிட நூலும் வேதநூலும் இவற்றைக் கற்று உணர்ந்த உள்ளே அடங்கிய நெஞ்சமும் என்னும் இவை ஐந்து” (புலியூர்க் கேசிகன் உரை, 2013:57)

“பெயர்: அடுநெய் ஆவுதி

முனிவர்கள், சொல்லிலக்கண நூல்களும் பொருள் இலக்கணத்தைக் கூறும் நூலும் சோதிட நூலும் வேதமும் இவற்றைக் கற்றறிந்த நெஞ்கமும் என்ற இவை ஐந்தனையும் ஒருங்கே போற்றியவர்” (மாணிக்கனார்.,அ. உரை,1999 : 100)



“21. அடுநெய் ஆவுதி

வாக்காலும் (சொல்) செயலாலும் (பெயர்) கருத்தாலும் (நாட்டம்) நினைவாலும் (கேள்வி) என்று ஐம்பொறிகளையும் புலன்வழிச் செல்ல விடாது காத்து (போற்றி) (மாணிக்கவாசன்.,ஞா.உரை, 2008:62)

“சொல் இலக்கணம் சொல்லும் நூல், பொருளிலக்கணம் சொல்லும் நூல், சோதிட நூல், வேதம், புலன்வழிச் செல்லாது உள்ளே அடங்கிய தூய மனம் என்று சொல்லப்படும் ஐந்தையும் ஒருங்கே போற்றி... ... ... (மேற்கோள், ஆலிஸ்., அ. உரை, குணசேகரன். கரு.அழ.2010:50)

மேலே கண்ட இரண்டுவகைச் சான்றுகளில் பதிற்றுப்பத்து நூலை அறிமுகப்படுத்துவதில் அத்தனை பேரும் ஒரே கருத்தை அடிபிசகாமல் வழிமொழிந்துள்ளனர். எழுத்து நடையில் நளினம் தென்பட்டாலும் கருத்து உடை பழமைமரபு மாறாமல் அப்படியே தொடர்ந்து வந்துள்ளமை தெளிவாகிறது.

மூன்றாம் பத்தின் முதற்பாடலுக்கு உரை எழுதுவதில் மாணிக்கவாசனார் தவிர்த்து, பிறர் அனைவரும் ஒரே மாதிரியான விளக்கத்தையே முன்வைத்துள்ளனர். புலியூர் கேசிகன் மட்டும் பாடலின் பெயர் குறிப்பிடும்போது “அடுநெய் ஆவுதி”? என்று வினாக்குறிப் பதிவுடன் எழுதியுள்ளார். மற்றபடி விளக்கம் ஒற்றைப் பொதுமைத் தன்மையுடனேயே விளங்குகிறது நா. மாணிக்கவாசகனார் மட்டும் புதிய பொருள்காணும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

ஆக மொத்தத்தில், மொழிநடை மாற்றமும் விளக்க நூட்பமும்தான் மிகுந்துள்ளன ; புதிய உண்மைப் பொருள் தேடும் ஆய்வுப் பாங்கு குறைவாகவே காணப்படுகின்றன.

இதே இரண்டு இடங்களுக்கும் கரு. அழ. குணசேகரன் முன்வைக்கும் விளக்கம் இதுவரை உரையுலகம் காணாததும் புதுமைப் பொருள்காணும் நோக்குநிலையினதுமாக உள்ளது. கரு. அழ. குணசேகரனின் ஆராய்ச்சிப் புத்துரை விளக்கங்கள் முறையே பின்வருமாறு:

உரைச்சான்று -1 பதிற்றுப்பத்து குறித்து அறிமுக விளக்கம்



“பதிற்றுப் பத்தில் பாணர் மற்றும் கூத்தர் மரபினர் வழியேதான் சேரனின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.” “பதிற்றுப்பத்துப் பலரும் கூறுவது போலப் புறப்பொருள் சார்ந்த ஒரு நூல். எனினும், கலையியல் பார்வையில் பதிற்றுப்பத்தினை ஆராய்ந்து பார்த்திருப்பது. இந்த உரையின் தனித்தன்மை ஆகும்” (குணசேகரன்.,கரு.அழ. ஆராய்ச்சிப் புத்துரை, முன்னுரை, 2010: vii, ix)

உரைச்சான்று - 2 பாடல் - 21

“எவ்வம் சூழாது விளங்கிய
சமண நெறிகள் ஐந்து”
“சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்துடன் போற்றி அவைதுணையாக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை
காலை அன்ன சீர்சால் வாய்மொழி”

பெயர்: அடுநெய் ஆவுதி

இப் பாடலுக்கு இவ்வுரையாசிரியர் இட்டபெயர் ஐந்தவைத்துணை பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தில் 21,22 பாடல்களில் சமணநெறி சுட்டப்பட்டுள்ள விதங்கள் குறித்து ஆராய்வது இங்கு நோக்கமாக அமைகிறது.


மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்கள் வழியே போற்றப்படும் ஒழுக்க நெறிகளைத் துணைகொண்டு பிறவிப் பெருங்கடல் நீந்தும் முறைமையை விளக்கி அமைகின்றது.”(குணசேகரன்.,கரு.அழ.ஆராய்ச்சிப் புத்துரை, 2010 : 46-48)

“உரையாசிரியர் பெருமக்கள் யாரும் இப்பாடலில் குறிப்பிட்ட ஐந்து நெறிமுறைகளும் சமணம் கண்ட அறநெறிக் கருத்துக்கள் என அவதானிக்கவில்லை” (மேலது :50)

“சொல் என்பது சொற்களில் கட்டமைத்து வெளிப்படுத்தக் கூடிய தத்துவத்தை வெளிப்படுத்தும் வாய்.
பெயர் என்பது உடம்பும் உயிரும் ஆகிய ஒரு மனிதனை மெய்ம்மைப்படுத்துவது அல்லது மெய்ப்படுத்துவது பெயராகும்.

நாட்டம் என்பது விருப்பம் என்பதாகும். அதாவது விரும்பிய போக்கினை உணர்த்துவது நாட்டம். பார்வைதான் அதாவது கண்கள்தான் நாட்டம் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

கேள்வி என்பது கேட்டறிவது கேட்டறிவது செவியின் செயலாகும். அனைத்தையும் அறிதலுக்குப் பயனாக அமைவது செவி.

நெஞ்சம் என்பது நுகர்தலும் உணர்தலும் குறித்ததாகும். உணரத் துணையாக இருப்பது மூக்கு. நெஞ்சகம் எண்ணிட நுகர்தல்வழி உணர்தலே அடித்தளமாக அமைகிறது.” (மேலது : 52)

இங்கு இந்தக் கட்டுரையைப் படிப்பதின் புரிதலுக்காக இரண்டே இரண்டு பகுதிகளுக்கு மட்டும் கேஏஜி - யின் ஆராய்ச்சிப் புத்துரைப் பகுதிகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு பகுதிகளுக்கான கேஏஜி-யின் விளக்கங்கள் வியப்பூட்டுவனவாக உள்ளன. தமிழ்ச் செவ்விலக்கிய உரைமரபில் இதுவரை - அதாவது 100 ஆண்டுகளாக எவருடைய நோக்குநிலையிலும் புலப்படாத ஆய்வுநோக்கில் கேஏஜி - யின் ஆராய்ச்சிப் புத்துரை அமைந்திருக்கிறது. இது ஒரு மாபெரும் வரலாற்றுச் சாதனை எனலாம்.

காரண-காரிய இயைபான விளக்கத்தை சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்ற ஐந்துக்கும் கொடுத்திருக்கும் பாங்கிலேயே கேரஜி- யின் உரை பிற எல்லா உரைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்கு நின்று மிளிர்கிறது. இனி, பதிற்றுப்பத்துக்கு முறையான உரையோ, ஆய்வோ நிகழ்த்துபவர்கள் கேஏஜி-யின் உரையைப் பார்க்காமல் நிகழ்த்த இயலாது என்கிற வகையில் ஒரு செம்மாந்த இடத்தைப் பெற்றுவிட்டது எனில் அது மிகையில்லை.

இந்த வகையில் ஆழ்ந்து கூர்ந்து நுணுகி அணுகினால்,

தமிழ்ச் செவ்விலக்கிய உரை மரபில் 21 ஆம் நூற்றாண்டில் கரு.அழ.குணசேகரன்,

அடித்தட்டுச் சமூக, சமய, கலை அறிவு மரபின் ஒளியீடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்த மதிப்பீட்டில் எள்ளளவும் பொய்யுமில்லை. ஆராய்வார் மேலும் ஆராய்ந்து கண்டறிந்து உச்சிமேல் உரைஞர் கேஏஜி எனக் கொண்டாடுவராக!

பதிற்றுப்பத்திலிருந்து இரண்டு பகுதிகளுக்கான கேஏஜி-யின் உரை எடுத்துக்காட்டப்பட்டது போலவே பட்டினப்பாலை- ஆராய்ச்சிப் புத்துரையிலும் காணலாம்..

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p104.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License