இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும்

ஆ. இராஜாத்தி
உதவிப் பேராசிரியர்,,
தூய வளனார் கல்லூரி, திருச்சி.


"ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழ விளங்கி ஏங்கொலி நீர் ஞாலத்து இருள்கடியும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரோன் ஏனையது தன்னே ரிலாத தமிழ்” என்று தண்டியலங்கார உரை மேற்கோள் கூறுகிறது. தன்னிகரில்லாத் தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் ஆய்வதே இக்கட்டுரையின் சிறப்பாகும். தமிழ் மொழியின் சிறப்பைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரிதனார் ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி’ என்று பாடியுள்ளார். இது வெறும் உயர்வு நவிற்சி அல்ல. கற்கருவி தோன்றுவதற்கு முன்னரே, மண்பாண்டம் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய குடி தமிழ்க்குடி ஆகும்.

உலகில் முதன்முதல் மக்களினம் தோன்றியது தென்னிந்தியாவில்தான் என்று சில புவியியல், மானிடவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். தென்னிந்தியாவிற்குத் தெற்கில் அமைந்திருந்த லெமூரியாவில்தான் முதன்முதல் மக்களினம் தோன்றிற்று எனவும், அவ்வினமே தமிழ்நாட்டின் ஆதிகுடிகள் எனவும் லெமூரியக் கொள்கையினர் கருதுகின்றனர். இந்த லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்து வந்த மக்களினம் வழிவந்தவர்கள் இப்போது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள் என ஆராய்ச்சி அறிஞர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் இந்த இடங்களில் வாழும் மக்களின் உடற்கூறு ஒற்றுமை, மொழி அமைப்பு ஆகியவற்றில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த லெமூரியக் கண்டம் கடல்கோளால் மூழ்கிச் சிதறுண்டது என்பதும் லெமூரியாக் கொள்கையினரின் கருத்தாகும்.

தமிழ் - திராவிடமே

ஆரிய மக்கள் ‘தமிழ்’ என்னும் சொல்லை உச்சரிக்க முடியாது. அவர்கள் நாவில் தமிழ் என்னும் சொல் ‘தமிள் - திரமில் - திரவிடம் - திராவிடா என்றே திரிந்து வந்துள்ளது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் குமாரிலபட்டர் என்னும் வடமொழி ஆசிரியர். இவர் தமிழ் மொழியையும், அதன் இனமொழிகளையும் குறிப்பதற்கு ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்னும் வடமொழிச் சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார். குமாரிலபட்டரின் காலத்திற்கு முன்பேத் ‘திராவிடா’ என்னும் சொல் ஆரியரல்லாத இந்தியரைக் குறித்துள்ளது. எனவே ஆரியர்கள் கைபர்க் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்தபோது இந்தியா முழுவதும் பரவி இருந்த மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்கள் பேசிய மொழியைத் திராவிட மொழி என்றும் அழைத்துள்ளனர். திராவிட மொழி என்பது தமிழ் மொழியையே குறித்துள்ளது என்பது இதன் வழி அறியப்படுகிறது.

ஒருமொழியின் வயதைக் கணக்கிட வேண்டுமெனில் அம்மொழியின் வரலாற்றையும் வளத்தையும் வாழ்வையும் வரையறுக்க வேண்டும். ஆனால் இந்திய வரலாற்றை ஆய்ந்தோர்கள் தமிழுக்குத் தகுந்த இடம் தரவில்லை. வட இந்திய வரலாற்று நூல்கள் தோன்றிய அளவுக்கு தென்னிந்திய வரலாறு உருவாகவில்லை. கங்கையைப் பற்றி எழுதிய அளவுக்கு காவேரி, கிருஷ்ணா, வைகை போன்றவற்றை ஆராயவில்லை என்றே அறிஞர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கிடைக்கின்றத் தகவல்களை வைத்து ஆராயப்பெற்றுத் தமிழின் பழமையைக் கண்டறிந்துள்ளோம்.



ஆதிச்சநல்லூரும் சிந்துச் சமவெளியும்

தமிழர்களின் தொன்மையான நாகரிகத்துக்குச் சான்றாக உள்ளது ஆதிச்சநல்லூர். திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் 24 கி.மீ. தூரத்தில் பொன்னன்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது ஆதிச்சநல்லூர். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் உள்ள சிறிய கிராமம் இது. இங்கே 144 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப் பெரிய இடுகாடு உள்ளது. சீனிக்கல் நிரம்பிய நிலப்பரப்பான இந்த இடுகாடு 10,000 ஆண்டுகளுக்கு முந்தியது. அந்தக் காலங்களில் இறந்தவர்களைப் பானையில் வைத்துப் புதைப்பார்கள். அந்தப் பானையை ஈமத்தாழி என்று சொல்லுவார்கள். மூன்று அடுக்குகளாகப் புதைக்கப்பட்ட ஈமத்தாழிகள் ஆதிச்ச நல்லூரில் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஈமச்சடங்குக்குக் கல் நடும் பழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. ஆனால், கல் நடும் பழக்கம் உருவாதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது ஆதிச்சநல்லூர். இங்குக் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகள் சிவப்பு வண்ணத்தில் கூம்பு வடிவமாக மூன்றடி விட்டம் கொண்டவை. தாழிகளின் ஓரங்களில் கைவிரல் பதிந்த வேலைப்பாடுகளும் முக்கோண வடிவத்தில் புள்ளிகளும் காணப்படுகின்றன. இந்த இடத்தை முதன்முதலில் ஆராய்ந்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் டாக்டர் ஜாகர். 1876ம் ஆண்டு திருநெல்வேலிப் பகுதியில் மானுடவியல் ஆய்வுக்காக வந்த ஜாகர், தற்செயலாகக் கண்டுபிடித்ததுதான் இந்தத் தொல் தமிழர்களின் நாகரிகச் சின்னம். இங்குக் கிடைத்துள்ள பானைகளின் வெளிப்புறத்தில் பெண் உருவம், விலங்குகள், பறவை, தாவரங்கள் படைப்புச் சிற்பமாக காணப்படுகின்றன. இந்த ஓவியங்களும் சிந்துசமவெளியில் கிடைத்துள்ள ஓவிய உருவங்களும் ஒத்துக்காணப்படுகின்றன. இரண்டையும் ஆய்ந்தவர்கள் சிந்துசமவெளி நாகரிகத்திற்கு முற்பட்டதாகத் தமிழர் நாகரிகம் இருக்கலாம். ஆதிச்ச நல்லூரின் தொன்மை நாகரிகம் சிந்து சமவெளியோடு ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இங்குக் கிடைத்துள்ள கலயங்களில் எழுத்துருக்கள் பொறிக்கப்பட்டு இருப்பது, கல்வியில் தமிழ் மக்கள் மேம்பாடு அடைந்த நிலையையே காட்டுகிறது. தமிழ் அறிஞர் தொ. பரமசிவன் அவர்கள் இப்பகுதியில் இரும்பு உருக்கும் அடுப்புகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளார்.

சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தோண்டியெடுக்கப்பட்ட புதைபொருட்கள் பலவற்றில் பாண்டியர்க்குரிய மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் பல சாசனங்களும் தமிழ்மொழிச் சார்புடையவையே. இவற்றையெல்லாம் வைத்தே செந்தமிழ் நாட்டிலிருந்து சிந்துச் சமவெளியில் சென்று குடியேறிய தமிழர்கள் உலகம் வியக்கும் நாகரிகத்தை அப்பகுதியில் நிலைநிறுத்தினர். அவர்களே உலகின் மற்றப் பகுதிகளுக்கும் பரவி ஆங்காங்குப் பல நாகரிகங்கள் உருவாகக் காரணமானார்கள். சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பது உறுதியாகிறது. இக்கருத்தினை ஏற்காத ஒருசிலர் மனித நாகரிகத் தொடக்கம் சுமேரியாவில் ஏற்பட்டது என்றும் வேறு சிலர் எகிப்தில் ஏற்பட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் சர் ஜான் மார்ஷசல், ஹீராஸ் அடிகளார் போன்றவர்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்தைச் சிறந்த முறையில் ஆராய்ந்து கண்ட உண்மைகளை வெளியிட்டுள்ளார்கள். மோகன்சோதாரோ, ஹரப்பா போன்ற பழைய இடங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படும் புதைபொருட்களில் காணப்படும் எழுத்துக்களும், சொற்களும் பெரிதும் தமிழ் மொழியைச் சார்ந்தவை என்றும், சுமேரியாப் பகுதிகளில் காணக்கூடிய எழுத்துக்களை விடத் தொன்மையானவை என்றும் ஹீராஸ் அடிகளார் கூறுகின்றார். உலகத்திலேயே தமிழர் பேசிய மொழியே தொன்மையானது என இதன் வழி அறியப்படுகிறது.

நாகை மாவட்டத்திலுள்ள செம்பியன் கண்டியூரில் ஆசிரியர் ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் கிணறு தோண்டுகிற போது புதிய கற்காலத்துக் கைக்கோடாரிகள் இரண்டு கிடைத்தன. அவற்றில் ஒரு கோடாரி மீது எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அக்கோடாரி ஒன்றில் பொறிக்கப்பெற்ற எழுத்துச் சிந்துவெளி எழுத்து எனவும், அந்த எழுத்தில் உள்ளதை முருகன் எனவும் தமிழகத்தின் தொல்லியல் அதிகாரி ஐராவதம் மகாதேவன் படித்துக் காட்டினார். சிந்துவெளி எழுத்துகள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டறியப்பட்டு வருகின்றன. அக்கோடரியில் வரையப்பட்ட காலம் கி.மு. 2000 க்கும் கி.மு.1000க்கும் இடைப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இச்சான்றினை வைத்துச் சிந்துவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒத்திருப்பதை உணரமுடிகிறது.



ஆரியர் வருகை

தமிழும், சமக்கிருதமும் சகோதர மொழிகளென்றும் அவற்றைச் சிவபெருமான் முறையே அகத்தியருக்கும் பாணினிக்கும் அருளிச் செய்தார் என்று காஞ்சி புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய நூல்கள் கூறி வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில்,ஆரியரின் ஆதியிடங்கள் மத்திய ஆசியா, லிதுவேனியா, ஸ்காந்தினேவியா, காக்கேசிய போன்ற பகுதிகளாகும். இவ்விடங்களில் வாழ்ந்த ஆரியர்களில் ஒரு கூட்டத்தினர் வடமேற்குக் கணவாய்கள் வழியாக வந்து பஞ்சாப்பை அடைந்தனர். கி.மு. 2000க்கும் கி.மு.1400க்கும் இடையில்தான் இவர்கள் இந்தியாவை வந்தடைந்தார்கள் என்று ‘இந்தியாவின் பண்டைய நாகரிகம்’ என்னும் நூலில் ஆர்.சி. தத்தர் கூறுகின்றார். ‘ஆரியர்கள் இந்தியாவை அடைந்த போது இந்தியா எங்கும் பரவி வாழ்ந்தோர் திராவிட மக்களேயாவர்’ என்று பல்லோர் கூற்றுக்களை ஆய்ந்து ந.சி. கந்தையா அவர்கள் ‘தமிழகம்’ என்னும் நூலில் தருகின்றார். அவ்வாறு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் இணைந்தும், வேறுபட்டும் வாழமுற்பட்டனர். பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மாத்ரை, உறை, கூடல்கட் மற்றும் கோளி, என்ற தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அதுபோலவே ஆப்கானிஸ்தானிலும் கொற்கை மற்றும் பூம்புகார் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன என்று ஐ. ஏ. எஸ். அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் கூறுவதும் சிந்திக்கக் கூடியதே. இவற்றை நோக்கும் போது தமிழ் எவ்வளவு தொன்மையுடையது என்பதை அறிய முடிகிறது.

தாய் மொழி தமிழ்

தாய்மொழியாம் தமிழ்மொழியிலிருந்து பல சேய் மொழிகள் தோன்றிவிட்டன. அச்சேய் மொழிகளைப் பேசிய மக்களும், அம்மொழிகள் வழங்கிய இடங்களும் தமிழகத்தினின்று பிரிந்திருப்பதையும் அறிகின்றோம். மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார்

‘கன்னடமும் களி தெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத்து உதித்தெழுந்தே
ஒன்றுபல ஆயிடினும்’

என்று பாயிரத்தில் கூறுகின்றார். கன்னடமொழியும் தெலுங்கு மொழியும், மலையாள மொழியும், துளுவமொழியும் இன்று தனித்தனி மாநில மொழிகளாக விளங்குகின்றன. அந்த மாநிலங்களும் தமிழகத்தினின்று பிரிக்கப்பட்டுத் தனி மாநிலங்களாகத் திகழ்கின்றன. இந்த உண்மைகள் வழி தமிழ் மொழியானது மிகப் பழமையானது எனவும் உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியானது என்பதும் தெளிவாகிறது.



தமிழகத்தின் எல்லை

தமிழகத்தின் எல்லையை வைத்தும் தமிழ் மொழியின் பழமையைக் கணக்கிடலாம். தொல்காப்பியத்தில் பாயிரம் எழுதும் குறிப்பு இல்லை. ஆனால் தொல்காப்பியத்தில் சிறப்புப் பாயிரம் அமையப் பெற்றுள்ளது. இப்பாயிரத்தைப் பாடியவர் பனம் பாரனார். பொதுப்பாயிரம் ஆத்திரையன் என்பவரால் எழுதப்பெற்றது என்றும் அது நிலைத்து நிற்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்களான இளம்பூரனார் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு) நச்சினார்க்கினியரோ (கி.பி. 14 ஆம் நூற்றாண்டு) பொதுப்பாயிரத்தைக் காட்டவில்லை. இவர்கள் சிறப்புப் பாயிரத்திற்கு மட்டுமே உரை கண்டுள்ளார்கள். தமிழகத்தின் எல்லையாக

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து”

என்று வரையறை செய்யப்பெற்றுள்ளது. ஆனால் சங்க இலக்கிய நூலான புறநானுற்றில் (புறம்.6.1-4)

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது துருகெரு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்”

என்று தமிழகத்தின் எல்லையாக வடக்கே பனிமலையாகிய இமயமலையும் தெற்கே குமரிக்கோடும் மேற்கும் கிழக்குமாகக் கடல்களும் எல்லைகளாகக் கூறப்பெற்றுள்ளது. ஆகவே பனம்பாரனார் கூறும் தமிழக எல்லை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகக் கருத இடமளிக்கிறது. தமிழ் மொழியே இந்தியா முழுமைக்கும் மூலமொழியாக வழங்கி வந்துள்ளது.

முதன்முதல் மனித இனம் தோன்றிய இடம் இலெமுரியா கண்டம். தமிழகம் இன்றுபோல் இல்லாது குமரிமுனைக்குத் தெற்கே இன்னும் விரிந்து, குமரிமலை, பஃறுளி ஆறு முதலியவற்றை உள்ளடக்கி இருந்தது. இச்செய்தியைப் பின்வறும் சிலப்பதிகாரக் காடுகாண் காதை பாடல் வரிகள் உணர்த்துகிறது.

“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னன் வாழி”


முச்சங்கங்கள்

கி.மு. 5000 இலிருந்து கி.பி. 300 வரைக்கும் தலை, இடை, கடைச்சங்கங்கள் முறையே தென் மதுரையிலும், கபாடபுரத்திலும், கூடல்மாநகரிலும் நிறுவிப் புலவர்களைக் கொண்டு பாண்டியர்கள் தமிழை ஆய்ந்து வந்துள்ளார்கள். இலக்கிய இலக்கணங்களை வளப்படுத்தி வெளிக்கொணர்ந்தார்கள். அக்காலச்சங்கங்கள் இக்காலப் பல்கலைக்கழகங்கள் போல் விளங்கியுள்ளன. ஒரு மொழி பண்பட்ட நிலையை அடைந்த பிறகுதான் அதில் ஆராய்ச்சி நடத்துவது இயலும். அவ்வகையில் தமிழ் மொழி கி.மு.5000 க்கும் முன்பே பண்பட்ட மொழியாக விளங்கியுள்ளது. தலைச்சங்கம் இருந்தது என்பதற்கு செங்கோன் தரைச்செலவு என்ற நூல் தவிர பிறவெல்லாம் கடற் பெருவெள்ளத்தால் அழிந்தன. தொல்காப்பியம், இறையனார் அகப்பொருளுரை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலம்பு, மணிமேகலை போன்றன இடை, கடைச்சங்க காலத்து நூல்களாகும். சங்கம் இருந்தது பற்றி இறையனார் அகப்பொருளுரை, சிலப்பதிகாரவுரை, கம்பராமாயணம், பெரியபுராணம் முதலிய நூல்களில் சான்றும் உள்ளன. ‘தலைச் சங்கப்புலவனார் தம்முள்’ என்ற பெரிய புராண வாக்கும் ‘அகன்பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்’ என்ற கம்பராமாயண வாக்கும் உள்ளது. ‘கூடலினாய்ந்த ஒண்டீந்தமிழ்’ என்ற மாணிக்கவாசகத் திருவாக்கினாலும் சங்கம் இருந்தது என்றும் அங்கு தமிழ் மொழி ஆராயப்பட்டது என்றும் இக்கூற்றுக்களை வைத்துக் கணிக்க முடிகிறது.

தமிழின் சிறப்புகள்

அறிஞர்கள் கருத்து

தமிழின் சிறப்புகளில் ஒன்றாகக் கால்டுவெல்லின் கருத்தும் கூறுவது பொருத்தமாகும். கால்டுவெல் தமது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் பண்டைத் திராவிடர்கள் நாகரிகத்திற்கே முன்னோடியாக விளங்கியுள்ளனர் என்று கூறுகிறார். மேலும் பழைய ஈபுரு மொழியுடைய விவிலிய நூலில் ‘தோகை, அகில்’ முதலான தமிழ்ச் சொற்கள் இருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அவற்றைக் கண்டு தமிழின் பழமையுணர்ந்து வியந்த வடமொழிப் பேராசிரியரான மாக்ஸ்மூலர் (Max muller) “இச்சொல்லாராய்ச்சி உண்மையாகுமானால், ஆரியக் குடியினர் இவ்விந்திய பழமையினை உறுதிப்படுத்துதற்கு அது சிறந்ததோரு கருவியாகும்” என்று கூறுகின்றார். இவரைத் தொடர்ந்து ஸ்லேட்டர் என்பவரும் திராவிட நாகரிகமே சிறந்தது என மொழிந்துள்ளார்.

‘தமிழ் கிரேக்கமொழியினும் நயமான செய்யுள் நடையுடையது
லத்தீன் மொழியினும் பூரணமானது’ என்று வின்ஸ்லோவும்,

‘மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும் சீருடைய மொழிகளுள் தமிழும் ஒன்று’ என்று டெய்லர் என்பவரும் தமிழைச் சிறப்பித்துள்ளனர்.

சமக்கிருதம், எபிரேயம், கிரேக்கம் என்னும் மூன்று உலக இலக்கிய மொழிகளுள் தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன என்று ரைஸ் டேவிட்ஸ் கூறுகின்றார். வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சொதாரோ மக்கள் திராவிட மொழியையே வழங்கினார்கள். அவர்கள் வழங்கிய சொற்கள் பெரிதும் தமிழில் காணக்கிடைக்கின்றன. இப்பொழுது வழங்கும் மொழிகள் எல்லாவற்றிள்ளும் தமிழ் மிகப்பழமையுடைதென்னும் கொள்கையை இது வலியுறுத்துகின்றது. மொகஞ்சொதாரோ என்னும் இடத்தில் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய மொழியில் தமிழ்ச் சொற்கள் நிறைந்துள்ளன எனப் பாதிரியார் ஹீராஸ் கூறுகின்றார்.

கிறித்தவ அருள் தொண்டரான ஜி. யு. போப் என்பவராலும் தமிழ் ஆராயப்பெற்றுது. கிறித்தவப் பணி செய்ய 1839 ல் தமிழ்நாட்டிற்கு வந்த போப் அவர்கள் தமிழை முறையாகக் கற்றுள்ளார். திருக்குறளையும், திருவாசகத்தையும், நாலடியாரையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தமிழின் பெருமையை மேல்நாட்டில் பரப்பினார். சிவஞானபோதத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். எப்போதும் ஒரு தமிழ் மாணவனாக இருக்கவும் விரும்பியுள்ளார்.


முதல் இலக்கணம்

உலக மொழிகளில் எழுந்த முதல் மொழி இலக்கண நூல் தொல்காப்பியம் 3000 ஆண்டு பழமையுடையுது. இவற்றின் இலக்கணக் கோட்பாடுகளைக் கண்டு இன்றைய மொழியலுலகம் வியப்பால் திகைக்கிறது என்பதும் பெருமையே. குறிப்பாகத் தமிழ் மொழியின் எழுத்துகள் பிறப்பினைத் தொல்காப்பியர் விளக்கியுள்ள பாங்கு கண்டு டாக்டர் எமினோ அவர்கள் இன்றைய மொழியியல் துறையும் மொழியலாளர்களும் தொல்காப்பிய எழுத்துப் பிறப்பினை அப்படியே பேணிப் பின்பற்றத் தக்க முறையில் விளங்குகிறது என்று கூறியுள்ளது தமிழின் இலக்கணச் சிறப்பைக் காட்டுகிறது.

தமிழில் உள்ள ஒலிகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 500 என்று மொழியியல் வல்லநர்கள் கணித்துள்ளனர். உலகில் வேறு எந்த மொழியிலும் இந்த அளவுக்கு ஒலி எண்ணிக்கைகள் இல்லை என்கின்றனர். சாதாரணமாக ஒரு மொழிக்கு 33 ஒலிகள் இருந்தாலே போதும் ஆனால் தமிழின் சிறப்பு 500 ஒலிகள் இருப்பதால் எந்த உணர்வையும் கருத்தையும் வெளிப்படுத்த முடியும்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர், ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்ற உயர்ந்த தத்துவச் சிந்தனையுடைய மொழி தமிழ் மொழி.

தனித் தமிழ் இலக்கியங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ் புலவர் அனைவரும் தமிழ்மொழியில் அயல்மொழிச் சொற்கள் புகுந்து விரவுதற்கு இடங்கொடாமல், இலக்கண இலக்கிய வரம்புகளோடும் தாமும் தனித்தமிழிலேயே நூல்கள் இயற்றி, ஒற்றுமையுடன் நின்று கண்ணுங்கருத்துமாய்ப் பாதுகாத்து வந்துள்ளனர். நம் பண்டையாசிரியர் இயற்றியருளிய நூல்களில் செல்லுக்கும் (கறையான்) ஆடிப்பெருக்கிற்கும் இரையாகிப்போன எண்ணிறந்த நூல்கள் ஒழிய எஞ்சியதே இன்று நம் கைகயில் கிடைக்கின்றது. தொல்காப்பியம், பரிபாடல், இறையனார் அகப்பொருளுரை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, குறுந்iதாகை, ஐங்குநுறூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருக்குறள் முதாலான அருந்தமிழ் நூல்களைச் சிறிதளவேனும் உற்று நோக்கும் போது பண்டை ஆசிரியரின் பணி எவ்வளவு மகத்தானது என அறிய இயலுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார் போன்ற விழுமிய நூல்களும் தனித்தமிழுடைய இலக்கியங்களே.

தமிழின் சொல் நயம்

தமிழ் மொழியில் சொற்கள் ஒரு லட்சத்திற்கும் மேலாக இருக்கின்றன. ‘அரி’ என்னும் சொல்லுக்கு மட்டும் 59 பொருட்கள் இருக்கின்றன. அவை யாவும் தூய தமிழ்ச் சொற்களே. பிறமொழிகளில் இல்லாத அளவுக்கு சொல் பாகுபாடு தமிழில் உண்டு. மலர் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Flower என்ற ஒரு சொல்லே உண்டு. ஆனால் தமிழில் மலரின் ஒவ்வொறு வளர்ச்சி நிலையையும் காட்டுவதாகப் பல சொற்கள் இருக்கின்றன. அலர் - அரும்பு - நனை - போது - மலர் - மொட்டு - வீ என ஒவ்வொரு நிலைக்கும் சொல் அமைப்பை நம் முன்னோர்கள் உருவாக்கியிருப்பது தமிழின் சிறப்பைக் காட்டுகிறது.

தமிழ்மொழி கலைமகளுக்கு வலது விழி

ஆரியம்மொழி போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதையாமல், சீரிளமை குன்றாமல் இருக்கும் உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழியாகும். இம்மொழி கலைமகளுக்கு வலது விழியாக விளங்குகிறதென்று உரைக்கின்றார் மனோன்மணீய ஆசீரியர்.

“கலைமகள்தன் பூர்வதிசை
காணுங்கால் அவள்விழியுள்
வலதுவிழி தென்மொழியா
மதியாரோ மதியுடையார்?”

அறிவுடைய பெருமக்கள் கலைமகளுக்கு வலது விழியாக இருப்பது தழிழே எனக் கூறுவர்.


பாரதி கூறும் பைந்தமிழ்ச் சிறப்பு

தமிழ் மொழிதான் தாமறிந்த மொழிகளிலெல்லாம் தலையானது; தனிச் சிறப்புடையது; தணியா இன்பம் பயக்கவல்லது; தமிழை நினைத்தாலும் இன்பம்; பேசினாலும் இன்பம்; கேட்டாலும் இன்பம். செந்தமிழ் நாடென்று சொன்னாலே, இன்பத் தேன்வந்து பாயுதாம் காதினிலே!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”

என்று பாடியுள்ளார்.

பாரதிதாசனின் தொன்மைக் கருத்து

“திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்”

என்று தமிழின் தொன்மையையும்,

“தமிழுக்கு அமுது என்று பேர்; தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் மொழிப் பற்றினைப் பாடுகின்றார்.

பண்டைக் காலந்தொட்டு நூல் வழக்கினும், உலக வழக்கினும் திருத்தமடைந்து மக்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்த பழைய மொழிகள் சிலவே. இப்பழைய மொழிகளுள் தமிழ்மொழியைத் தவிர பொரும்பாலான மொழிகள் உலக வழக்கின்றி இறந்தொழிந்தன. செந்தமிழ் மொழியாகியத் தமிழ் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் தன் இளமை கெடாது கழிபெரு மகிழ்ச்சியோடு உலவி வருகிறது. இவற்றை உற்று நோக்கும்போது இதனைப் பேசி வந்த நன் மக்கள் எவ்வளவு நுண்ணறிவும், நாகரிகமும் உடையவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை அறிவதோடு மட்டுமல்லாமல் உணரவும் வேண்டும்.

துணை நின்ற நூல்கள்

1. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும்

2. எஸ். ராமகிருஷ்ணன், எனது இந்தியா.

3. ச. சாமிமுத்து, தமிழ் இலக்கிய வரலாறு.

4. மறைமலையடிகள், முற்கால பிற்காலத் தமிழ்ப்புலவோர்

5. கா. சுப்பிமணிய பிள்ளை. இலக்கிய வரலாறு

6. தெ. பொ. மீ. உலக நாகரீகத்தில் தமிழரின் பங்கு.

7. ந. சி. கந்தையா, தமிழகம்

8. குணா, தொல்காப்பியத்தின் காலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/general/p114.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License