இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பாரதிதாசன் கவிதைகளில் மொழி ஆளுமைப் பண்புகள்

கோ. தர்மராஜ்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஆனந்தா கல்லூரி, தேவகோட்டை.


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களுள் ஒப்பற்ற சுடரொளியாய் மிளிர்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன். இவர் மொழி உணர்வும், சமூக விழிப்புணர்ச்சியும், பகுத்தறிவுச் சிந்தனையும் தம் பாடல்கள் வழியாகத் தமிழக மக்களுக்கு உணர்ச்சியினை ஊட்டியவர். பாரதியின் வழித்தோன்றலாக விளங்கிய இவர் கவிதை, கதைப்பாடல், குறுங்காப்பியம், நாடகம், சிறுவர் இலக்கியம் போன்ற அமைப்பினைக் கொண்டு செறிவுள்ள கருத்துக்களைச் செம்மாந்த நடையில் வெளிப்படுத்தியவர். அந்த அடிப்படையில், கவிதைகளில் அறிவுப்பூர்வமான எண்ணங்களையும் சிந்தனை அலைகளாக வெளிப்படுத்துதல் ஒருமுறை. அதற்கு மாறாக கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், உடலால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புல உணர்வுகளை உள்ளத்தில் எழுப்புதல் அல்லது உணரச் செய்தல் மற்றொருமுறை. புலனுணர்வுகளுக்கு விருந்தளிக்கும் முறையில் கவிதையைப் படைக்கும் தன்மை கொண்டவர் பாரதிதாசன். காலந்தோறும் இயற்கையில் தோன்றும் பேரழகைத் தன் புலன்களால் உண்டு மகிழ்ந்து அதனைக் கவிதையாய் சமூகத்திற்கு வாரி வழங்கியுள்ளார். அத்தகையக் கவிதைகளில் காணலாகும் மொழி ஆளுமைப் பண்புகளைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆளுமை

ஆங்கிலத்தில் ஆளுமையைக் குறிக்கும் பர்ஸனாலிடி (PERSONALITY) என்னும் சொல் லத்தீன் மொழியிலுள்ள ‘பர்ஸொனா’ என்ற சொல்லிலிருந்து பிறந்தது. நாடக மேடையில் அக்காலத்தில் நடிப்பவர்கள் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் இயல்புக்குத் தக்கபடி அணிந்திருந்த முகமூடியை ‘பர்ஸொனா’ என்ற இலத்தீன் சொல் குறித்தது.

‘பர்ஸனாலிடி’ என்ற ஆங்கிலச் சொல்லின் பண்டைய பொருள் “ஒருவனது பண்புகளைக் குறிக்கும் வெளித்தோற்றம்” என்பதாக இருந்தது. ஆளுமையானது ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்கிறார் கில்போர்ட்.

“ஒரு மனிதன் தன் பாரம்பரியத்தினாலும், சூழ்நிலையினாலும் பெற்றுள்ள உள்ளார்ந்த மனப்போக்குகள், உளத்துடிப்புகள், செய்முறைகள், உடல் வேட்கைகள், இயல்பூக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பே அவனது ஆளுமையாகும்” என்கிறார் உட்வொர்த். “சமூக முக்கியத்துவமுள்ள, மாற்றம் பெறாத பழக்கங்களின் தொகுப்பாக” என்று ஆளுமையினை கத்ரி (E. R. Guthrie) குறிப்பிடுகிறார். மேலே கூறியவர்களின் கூற்றுக்கு இணங்கப் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் அமைந்துள்ள மொழி ஆளுமைப் பண்புகளைப் பின்வருவனவற்றுள் மொழியப்படவுள்ளது.

புலனுகர்வுத் தன்மை

புலனுகர்வுகளுக்கு விருந்தளிக்கும் முறையில் கவிதையைப் படைக்கும் இத்தன்மையையே புலனுகர்வுத் தன்மை என்கிறோம். புலனுகர்வுத் தன்மை மிக்கப் படைப்பாக்கமுறை பெரிதும் கற்பனைக்குச் சிறப்பு தரும் புனைவியல் கவிஞர்களால் பின்பற்றப்பட்டதாகும். ஆங்கில இலக்கியத்தில் “கிட்ஸை, புலனுகர்வுக் கவி” (பா. ஆனந்தகுமார், இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், ப.9) என்று பா. ஆனந்தகுமார் குறிப்பிடுகிறார். கீட்ஸைப் போல இயற்கையின் அழகுகளை உணர்ந்து படைக்கும் பண்பினைப் பாரதியிடம் காணலாம்.

“வெயிலைப்போல அழகான பதார்த்தம் வேறில்லை”

என்ற வரியில் இயற்கையை ஓர் உண்ணும் பொருள் போல பாரதி வருணிக்கிறார். ஒரு நுண்பொருளைக் காட்சி, கேட்பு முதலிய உணர்வுகளுக்குரிய பொருளாகவும், சடப்பொருள் போன்றதாகவும், முழுமையாக அனுபவிக்கக் கூடியதாகவும் காணுகின்ற மனோபாவம் பாரதிதாசனிடமும் பாரதியாரைப் போன்றும், கீட்ஸைப் போன்றும் அதிகமாகவே இருக்கின்றது. இயற்கை மீதான அவருடைய மொழி ஆளுமையைக் கவிதைகளில் சிறப்புற வெளிப்படுகிறதைக் காணலாம். அத்தகையப் பாரதிதாசனின் கவிதைத்திறனான,

“களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச் சிறுமலர் இதழ்மேல்
கூத்தாடித் துளித்தேன் சிந்தி
வெளிசிறு பிள்ளையாடும்
பந்தோடு விளையாடிப் போய்க்
கிளிச் சிறகாடை பற்றிக்
கிழிக்கின்றாய் தென்றலே நீ!” (அழகின் சிரிப்பு, ‘தென்றல்’, பா.10)

என்ற வரியில் தென்றலின் இயக்கத்தைக் காட்ட பூப்பூவாய்த் தாவித் தேனுண்ணும் வண்ணத்துப் பூச்சியின் உள்ளத்தோடு பின் தொடர்ந்து சென்றுள்ளார். காட்சி புலனாகாதத் தென்றல் காற்றினைக் காட்சிப்புலனுக்கு விருந்தாக்கிய இத்தகையக் காட்சிப் படிமங்களைக் காணும்போது அவருடைய மொழி ஆளுமைப் பண்பைக் காணமுடிகின்றது.



காட்சி

‘அழகின் சிரிப்பு’ எனும் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘செந்தாமரை’ கவிதையில் குளிர்ந்த இலைப்பரப்பின் ஊடே முகிழ்த்து நிற்கும் செந்தாமரையின் முதிர் அரும்பை, பெண்கள் கையில் ஏந்திய விளக்கின் நுனியின் தோன்றும் ஒளிப்பிழம்பாகக் காட்சிப்படுத்தும் பாரதிதாசன், அக்காட்சி அவர் விழிக்குப் பெருவிருந்தாய் அமைந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

“மங்கைமார் செங்கை ஏந்தி
அணிசெய்த நல்விளக்கின்
அழகிய பிழம்பு போலத்
தணி இலைப் பரப்பினிற் செந்
தாமரைச் செவ் வரும்பு
பிணி போக்கி என் விழிக்குப்
படைத்து பெரு விருந்தே” (அழகின்சிரிப்பு, ‘செந்தாமரை’, பா.3)

தான் விழியால் உண்ட காட்சியை நமக்குப் படிமங்களால் விருந்து படைத்த பாரதிதாசன், செந்தாமரையின் நுனி அரும்பை விளக்கின் நுனியில் தோன்றும் ஒளிப் பிழம்பிற்கு உவமையாக காட்சிப்படுத்தியிருப்பது அவரது மொழி ஆளுமைப் பண்பை உணரமுடிகின்றது. “அருவிகள் வயிரத்தொங்கல்! அடர்கொடி பச்சைப்பட்டே குருவிகள் தங்கக்கட்டி குளிர்மலர் மணியின் குப்பை” (அழகின் சிரிப்பு, ‘குன்றம்’, பா.2) இக்கவிதை வரிகளில் மலைக்குன்றில் வீழும் அருவியை வயிரமாலையாகவும், அதன்மேல் போர்த்தியிருக்கும் அடர்த்தியான கொடிகளைப் பச்சைப்பட்டாகவும், அங்கே அமர்ந்திருக்கும் குருவிகளைத் தங்கக்கட்டியாகவும், பூத்த மலர்களை மாணிக்கக் கற்களின் கூட்டமாகவும் உவமைப்படுத்தி மனக்கண்ணால் காணும் காட்சிப் படிமங்களாக்கியுள்ளதைக் காணலாம்.

“எழுந்த செங்கதிர் தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத்தூற்றல்!
வெளியெலாம் ஒளியின் வீச்சு
முழங்கிய நீர்ப்பரப்பின்
முழுதும் பொன்னொளி பரக்கும்
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!” (அழகின் சிரிப்பு, ‘கடல்’, பா.5)

என்ற கவிதையில் கடலிலிருந்து சூரியன் செங்கதிர்களோடு உதயமாகின்ற காட்சியைத் தங்கமழை பொழிவதாகக் காட்டி, அதனைப் பருக நம்மை அழைக்கின்றதை உணரமுடிகின்றது.



சுவை

கண்ணால் கண்ட உணர்வோடு, நாவால் தோன்றும் சுவையுணர்வும் ஏற்படும்படி இயற்கை அழகை எங்ஙனம் பாரதிதாசன் பாடியுள்ளார் என்பதைக் காண்போம். பாரதிதாசன் நிலவைத் தனித்தும், பிற இயற்கைப் பொருள்களோடு இணைத்தும் பல இடங்களில் பாடியுள்ளார். அங்ஙனம் பாடும் போது நிலவை உண்ணும் பொருளாகக் காண்கின்றார்.

“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி - முகத்தை
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற்
கொள்கையிலே இவ்வுலகம் சாமோ” (புரட்சிக்கவி, ப.22)

என்ற அடியில் நிலவைப் பெண்ணாக உருவகம் செய்துள்ளார். அதன் பின்னர் உண்ணும் வெண்சோறாக சுவையுணர்வு தோன்றும்படிப் பாடியுள்ளார்.

“நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிது கூழ்தேடுங்கால், பானைஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானே” (புரட்சிக்கவி, ப.23)

என்ற கவிதையில் உணரலாம்.

அழகின் சிரிப்பில் வரும் ‘கடல்’ எனும் கவிதையில் தோன்றும் சூரியனை உண்ணும் பொருளாகவே சுவையுணர்வு தோன்றும்படி பாரதிதாசன் பாடியுள்ளார்.

“திக்கெல்லாம் தெரியக் காட்டும்
இளங்கதிர்ச் செம்பழத்தைக்
கைக்கொள்ள அம்முகில்கள்
போராடும்! கருவானத்தை
மொய்த்ததுமே செவ்வானாக்கி
முடித்திடும்! பாராய் தம்பி” (அழகின் சிரிப்பு, ‘கடல்’, பா.6)

என்ற கவிதையில் வானில் தோன்றும் சூரியனைச் சிவந்த பழமாக உவமித்துக் காட்டுகின்றார்.

“உன்கதிர், இருட்பலாவை
உரித்து ஒளிச்சுளை யூட்டிற்றே” (அழகின் சிரிப்பு, ‘ஞாயிறு’, பா.5)

இருளைப் போக்கிச் சூரியன் உதிக்கும் காட்சியினை, பலாவை உரித்துச் சுளையெடுத்து உண்ணும் சுவைபடச் சித்திரிக்கும் போது அவரின் மொழிப்புலமையை அறியமுடிகின்றது.



இயற்கையோடு கலத்தல்

இயற்கை ஆன்மாவோடு, மனித ஆன்மாவை ஒன்றாகக் கலக்கச் செய்வது கவிஞனின் பாணியாகும். ஆனால் ஆன்மா மீதான நம்பிக்கைப் பாரதிதாசனுக்கு இல்லாவிட்டாலும் கூட இலையில் இலையாக, பூவில் பூவாக, கிளையில் கிளையாக, இயற்கையோடு ஒன்றிக்கிடக்கும் லயித்துக்கிடக்கும் மனோபாவம் பாரதிதாசன் கவிதைகளில் தென்படுகிறது. செந்தாமரையின் அழகை நெஞ்சில் கண்ணை வைத்து கவிதை வடித்த பாரதிதாசன், அக்கவிதையின் இறுதியில் இயற்கை எழிலின் கூடத்தில் லயித்து ஒன்றிப் போகிறார். இயற்கையின்ப உலகில் வாழ்கிறார்.

“என்னை நான் இழந்தேன்; இன்ப
உலகத்தில் வாழலுற்றேன்;
பொன்துகள், தென்றற் காற்றுப்
புதுமணம், வண்டின் பாட்டுப்
பன்னூறு செழுமாணிக்கப்
பறவைபோல் கூட்டப் பூக்கள்
இன்றெல்லாம் பார்த்திட்டாலும்
தெவிட்டாத எழிலின் கூத்து!” (அழகின் சிரிப்பு, ‘செந்தாமரை’, பா.10)

என்ற கவிதையில் பாரதிதாசனின் ஐம்புலன்களும் இயற்கையழகில் ஒன்றியிருத்தல் என்பதைக் காணும்போது அவரின் மொழி ஆளுமைச் சிந்தனையை உணரமுடிகின்றது.

நிறைவுரை

* கட்புலனுக்கும், நாச்சுவைக்கும் விருந்தாக அமைத்துக் கவிதைகளைப் பாடியுள்ளதை ஆராயும் போது பாரதிதாசனின் மொழி ஆளுமைப் பண்பை அறியமுடிகின்றுது.

* பாரதிதாசன் கவிதைகளில் இயற்கை, இயற்கையின் அழகு, பெண்ணாக உருவகிக்கப்படும் தன்மையால் புலனுகர்வுத்தன்மை மேலும் கூர்மையாக ஆக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

* பாரதிதாசன் இயற்கையின் அழகை ஐம்புலன்களால் நுகரத்தக்கப் பொருளாக அனுபவித்துப் பாடியிருப்பதைக் கொண்டு அவரின் கவித்துவத்தை அறியமுடிகின்றது.

* சொற்சுவை, பொருட்சுவை, வருணிப்பு, உவமை, காட்சி, நுகர்வுத்தன்மை போன்றவற்றைக் கவிதைகளில் புகுத்திப் படிப்பவர்களின் மனநிலையைக் கவிதையில் ஒன்றாக்கும் திறனைக் காணும்போது அவரின் மொழி ஆளுமைப் பண்பை உணரமுடிகின்றது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p117.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License