இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

உலகப் புகையிலை இல்லா தினம்

ஆல்பர்ட் பெர்னாண்டோ


ஜீன் மாதம் ஐந்தாம் நாள்- உலகப் புகையிலை இல்லா தினம்!

புகையிலை...புகை இல்லை..என்று புகையிலையை வெவ்வேறு வடிவங்களில் உபயோகிப்பவர்கள் சொல்லி அந்தப் பழக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளும் ஒப்பற்ற உறுதி மொழியைத் தாங்களுக்குத் தாங்களே வாசித்து நிறைவேற்ற இன்று உகந்த நாள்.

"உலக புகை இல்லா சுற்றுச் சூழல்" என்ற கருப் பொருளைக் கொண்ட இந்த நாள் புகை பிடிப்போர் சிந்தனை செய்யவேண்டிய நாள்! உலகில் 67 விழுக்காட்டினர் இந்த புகையிலை என்னும் கொடிய நச்சைச் சுவைத்தும், சுவாசித்தும் தங்கள் சுவாசத்தை குறைத்துக் கொள்ள போட்டி போடுகிறார்கள். இந்தியாவில் 56 சதவீத ஆண்கள் புகையிலையை உபயோகிக்கின்றனர். கிராமப்புறங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர். இளைஞர்களில் 40 சதவீதம் பேர் இக் கொடிய பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களும் 5 கோடி பெண்களும் புகையிலையைப் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

புகையிலைப் பழக்கம் என்பது புகையிலையை வெற்றிலையோடு மடித்துச் சுவைக்கவும், அதில் சில வேதி பொருட்களைக் கலந்து இனிப்பு புகையிலையை வாயில் போட்டு குதப்பிக் கொள்ளவும், பீடி, சிகரெட், பான் மசாலா, மூக்குப் பொடி என பல பெயர்களைப் பெற்று விளங்குகிறது. புகையிலையில் 4,000 வேதியியல் பொருள்கள் உள்ளன. அவற்றில் 55-க்கும் மேற்பட்டவை புற்று நோய் உருவாக்கும் காரணிகள் என கண்டறியப் பட்டுள்ளன.



நுரையீரலில் வரும் 90 சதவீத புற்று நோய்க்குப் புகையிலையே காரணம். வாய், நாக்கு, உணவுக் குழாய், கருப்பை, மூத்திரப் பை, வயிறு, சிறுநீரகம் எனத் தலை முதல் கால் வரை உள்ள முக்கிய உறுப்புகளில் புற்று நோய் ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

புற்று நோய் மட்டுமின்றி இதயத்தில் மாரடைப்பு, நுரையீரலில் ஏற்படும் தீராத சளி, கால்களில் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துவது என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் ஏற்படும் தீராத புண், வெள்ளை தழும்பு, சிகப்பு தழும்பு போன்ற வடுக்கள் உடம்பைப் பாழ்படுத்துகின்ற நிலை ஏற்படுகிறது.

பணம் கொழிக்கும் புகையிலைத் தொழில்

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பண்ணைகளில் புகையிலை சாகுபடி செய்யப் படுகின்றது. அநேகமாக, புகையிலை பயிரிடும் விவசாயிகள், புகையிலையை பணப் பயிராகக் கருதியே வளர்க்கின்றனர். அமெரிக்க அரசின் விவசாயத் துறை, புகையிலைப் பயிரை ஒரு முக்கியமான பணப்பயிராகக் கருதி ஒருபுறம் சலுகைகளை வாரி வழங்குகிறது. காரணம், நீண்ட நெடிய விவசாய வரலாற்றில் தொடர்ந்து நாட்டின் ஏழாவது பணப்பயிராக புகையிலை இருப்பதும், ஏற்றுமதி செய்யக் கூடிய பணப்பயிரில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதும்தான்! அதுமட்டுமல்ல, அமெரிக்க சிகரெட், சுருட்டு தயாரிப்பாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பிரதான இடத்தைப் பெற்றிருப்பதும், அவர்களின் உள் மற்றும் வெளிநாட்டு சந்தையை தரத்தோடு நிர்வகித்து கோடிக்கணக்கில் இலாபகரமான தொழிலாகவும் செய்து வருவதுதான்.

புகையிலை பிறந்ததும் வளர்ந்ததும்

அமெரிக்காவைப் பொறுத்த வரை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புகைப் பிடிக்கும் கலாச்சாரம் முளைத்ததாகத் வரலாற்றுப் பக்கங்கள் தெரிவிக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த 1492களில் காய்ந்த புகையிலைச் செடியைச் சுருட்டிப் புகைப் பிடித்ததைத் தன் பயணக் குறிப்பில் தெரிவித்திருக்கின்றார். 1586ல் பிரிட்டனில் சர் வால்ட்டர் ராலே புகைப்பிடிக்க புகைக் குழாயைக் கண்டறிந்து அறிமுகப் படுத்தினார். 1881ல் சிகரெட் என்ற முதல் தயாரிப்பை இயந்திரத்தில் தயாரித்து அறிமுகப்படுத்திய பெருமை அமெரிக்காவுக்கு உண்டு.



தடைகளை மீறி

புகைப் பிடித்தல் உடல் நலத்திற்கு மிகக் கேடு என்ற புரிந்துணர்வை ஏற்படுத்த புகைப் பழக்கத்திற்கெதிரான இயக்கங்கள், புகைப்பிடிக்காதவர்களைக் கொண்டு புகையில்லாச் சுற்றுச்சூழலை ஏற்படுத்தலின் அவசியம், புகைப் பிடித்தலால் ஏற்படும் தீமைகளை வெளிப்படுத்தும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல், சிகரெட் அட்டைப் பெட்டியின் மேல் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிக்க வைத்தல், பொது இடங்களில் அல்லது பணியிடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடை செய்தல், வயதுக்கு வராதவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்தல் கூடாது போன்ற எண்ணற்ற தடைகளையும் மீறி புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 400,000 பேர் பலியாவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

புகைச் சகதி என்ற புதைச் சேறில்

புகைப் பிடித்தல் என்பது சிறு பிராயத்திலிருந்தே துவங்கி விடுகின்ற பேராபத்தாகத்தான் உணர முடிகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரம் அமெரிக்க இளையர்கள் இந்தப் பழக்கத்திற்கு ஆட்படுகின்றதாகவும் புகைப் பிடிக்கத் துவங்கும் பத்துக்கு ஏழு பேர் விட்டு விடலாம் என்று எண்ணினாலும் அவர்களால் விடமுடியாத பழக்கமாக மாறி அவர்களை உடனிருந்து கொல்லும் நோயாக தொற்றிக் கொள்வதாக ஆய்வுகள் அமர்க்களமாகச் சொல்லுகிறது. பெரும்பாலான விடலைப் பருவத்தினர் புகைப்பிடிப்பதை ஒரு வீரதீரச் செயலாக எண்ணிக் கற்றுக் கொண்டு பின்னர் அதற்கு அடிமைப் பட்டுப் போகின்றதும் அப்படிக் கற்றுக் கொண்ட பேர்வழிகள், தான் பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்ற பரந்த மனத்தோடு (!) தங்கள் வழிக்கு ஒத்து வராத அப்பாவிகளை பலவந்தமாகவும், அவர்களின் பலவீனங்களைக் காட்டியே இந்தப் புகைச் சகதி என்ற புதை சேற்றில் சிக்க வைக்கும் அவலமே நிகழ்வதாக சோகத்தோடு ஒரு செய்தி முன்னுரைக்கிறது.

தங்களைத் தாங்களே அழித்து

பெற்றோர்களைப் பார்த்துத் தடம் மாறும் பிள்ளைகளும், சின்னஞ்சிறுசில் சிகரெட் குடித்துச் செத்தோர் உண்டா? தைரியமாக நீ, பிடி என்று புகைப் பழக்கத்தோடு உடன்பாடு செய்து கொள்கின்ற சிறார்களுக்குப் பின் விளைவுகள் அப்போது தெரிவதில்லை; பழகிவிட்ட பெரியவர்களோ, நிகோடின் என்ற நச்சுத் தேவதையை மரணம் தொடும் வரை விட்டொழிக்கத் தெரிவதில்லை. இன்னும் சில மங்கையர்கள் திலகங்களோ புகைப் பிடித்தால் குண்டாக மாட்டோம் என்று குருட்டுத் தனமான நம்பிக்கைகளுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுகின்ற ஆரவாரங்களும் துணுக்குச் செய்தியாய் பவனி வருகிறது.



அக்கறையுள்ள அரசுகள்

பிரான்சு தேசம் சிகரெட் குறித்து எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்று தடை செய்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே புகைப் பிடித்தலுக்கெதிரான சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. 1971லிருந்து பிரிட்டன் சிகரெட் பெட்டியில் சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அறிவிப்பை வெளியிட்டுத்தான் சிகரெட்டை விற்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இத்தாலி பொது இடங்களில் புகைப் பிடித்தலைத் தடை செய்துள்ளது.

நச்சு நாகம் நிகோடின்

அப்படி என்னதான் இந்தச் சிகரெட்டில் இருக்கிறது? மனிதனை மரணத்தின் வாயிலில் தள்ள அத்தனை வலிமையா? இந்தச் சாதாரண சிகரெட்டுக்கு? அடடா, என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்? ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? ஒராயிரமா, ஈராயிரமா? நாலாயிரம் நச்சு மறைந்துள்ள நாகம் அது என்றால், மிகையல்ல; கார்பன் மோனாக்சைடு, பார்மல்டிஹைடி(formaldehyde), அம்மோனியா, கார்பன் டை ஆக்சைடு, அலுமினியம், காப்பர், லெட், மெர்குரி, துத்தநாகம் உட்பட அனேக நச்சு உலோகக் கலவைகள் இதில் பொதிந்துள்ளது.

நச்சு விளம்பரங்களுக்கு

இவ்வளவு நச்சு இருக்கிறது என்று அறிந்தும் இதைச் சுவாசிக்க யாராவது மனமொப்புவார்களா? அமெரிக்காவில் இறக்கும் ஆறில் ஒருவர் புகைப் பிடிப்பதால் என்பது நீக்கமற அறிந்த உண்மை. ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் அமெரிக்கர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். கேட்கவே இனிமையாக இருக்கிறதே, என்கிறீர்களா? அவசரப் படாதீர்கள். அடுத்த அதிர்ச்சியை நான் சொல்கிறேன். 50 மில்லியன் புதிய புகைப்பாளர்கள் உருவாகி விடுகிறார்களே!

புகை பிடிப்பாளிகளை கவர்ந்திழுத்து புகைக்க வைக்க, நான், நீயென்று பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 5,000 டாலர்கள்! கவர்ச்சி விளம்பரத்துக்குப் பலியாகி, சிகரெட் மோகத்திற்கு அடிமையாகித் தங்களையே சிதைத்துக் கொள்ளும் மனிதர்கள் தங்கள் உடற் கேட்டிற்குச் செலவழிக்கும் தொகை வருடத்திற்கு 65 பில்லியன் டாலர்கள்...ஏ...அப்பா என்று வாய் பிளக்க வைக்கிறதா?



வியாதிகள் பலவிதம்

நுரையீரல் வியாதி, நுரையீரல் புற்று நோய் (85சதம் குணப்படுத்த இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது), மூக்கடைப்பு, மூக்கு, தொண்டை சிவந்தும் தடித்தும் ஏற்படும் நோய் உட்பட பெயர் வாயில் நுழையா நோய்கள் 80 முதல் 90 சதம் நோய் புகையுறிஞ்சுவதால் மட்டுமே வருகிறது.

சிகரெட் புகைப்பவர்களில் முப்பது விழுக்காடு இதய நோய் பாதிப்பால் விழுந்து அல்லலுறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுதான் இதற்கு முழு முதற்காரணம். உறிஞ்சுகின்ற புகை இதயத்திலிருந்து இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிற இரத்தக் குழாய்ச் சுவரின் உட்பகுதியை தடிமனாக்கி விடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய முடியாமற் பிரளயத்தை ஏற்படுத்தி மரணத்தின் அழைப்பு மணியை அடி நாதமாய் ஒலிக்க வைக்கின்றது.

நிகோடின் என்ற நச்சு, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, பிராண வாயுத் தகராறு என்று மெல்லக் கொல்லுகின்ற பேராபத்துக்கு அடித்தளமிடுகிறது. புகையுறிஞ்சல் அதிகரிக்கும் போது நெஞ்சுவலியும் திடீர் மாரடைப்பும் ஏற்படுகின்ற கொடூரம் நிகழும். இரத்தம் உறை நிலை (Blood clots) என்பது புகைப் பிடிக்காதவர்களை விட புகைப் பிடிப்பவர்களுக்கு எளிதில் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகமுண்டு.

புற்றுநோய்...ஒருவர் புகைப்பதால் உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள் (salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி(larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus) மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும். வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்து கொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.

பெண்களுக்கு

புகைப் பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள் சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில் உடைந்து விடுகின்ற தன்மையையும் (osteoporosis) ஏற்படுத்தும். கொடிது கொடிது அடுத்தவர் ஊதும் புகையைச் சுவாசிப்பது....நான் புகைப்பிடிக்கும் பழக்கமில்லதவன் என்று மார்தட்டிக் கொள்ளுபவர்களே! நீங்கள் கூட புகைப் பிடிப்பவரிடமிருந்து விலகி இருக்காவிடில் பிறர் ஊதித் தள்ளும் புகையை நீங்கள் சுவாசிக்க நேரும் சந்தர்ப்பங்கள் அதிகமானால் உங்களையும் நோய் நெருங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

புகைப் பழக்கமில்லாத, ஆனால் பிறர் விடும் புகையை உள்ளிழுத்துக் கொண்டவர்களைச் சாவு அரவணைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அமெரிக்காவில் 53,000 பேர்! இதில் மிக மோசமான கார்டியோவாஸ்குலர் நோய் தாக்கியிருந்ததாக அறியப்பட்டோர் மட்டும் 37,000 பேர்.

புகைப் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கெடுதல்களை ஏற்படுத்துமோ, அதைவிடக் கொடிது அவர்கள் ஊதித்தள்ளும் புகையை சுவாசிப்பதும் உறிஞ்சுவதும் ஆகும். வீட்டில் புகையை ஊதித் தள்ளுவதால், கைக் குழந்தைகளும், சிறார்களும் அந்தப் புகையால் அவர்களின் இளந் திசுக்களும் சீர்கெடுவதோடு, அவர்களும் பலவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும். ஒவ்வொரு வருடமும் அடுத்தவர் ஊதித்தள்ளும் புகைக்குப் பலியாகிறவர்கள் நியூ மெக்சிக்கோவில் மட்டும் 2,000 பேர் என்பது அமெரிக்க மாநிலங்களிலேயே மிக அதிகமாகும்!



வல்லமை படைத்த விரோதி

நிகோடின் நஞ்சு வயோதிகத்தை வரவழைக்கும் வித்தைக்காரன். இரவுத் தூக்கத்தை குறைக்கும் மாபெரும் அரக்கன் இந்த நிகோடின். உண்ட உணவு செரித்து விடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளும் சுய நலவாதி! அடுத்தவர் உறக்கத்தை உண்டு இல்லையென்று செய்துவிடும் குறட்டையைப் பரிசாகத் தந்திடும் இனிய விரோதி! புகை உங்கள் இனிய குரலை கரடு முரடாக மாற்றிச் சாகசம் செய்ய வைக்கும்! அதிலும் பெண்கள் குரலை ஆண் குரலுக்கு இணையாக மாற்றி அற்புதச் சாதனை படைக்க வல்லது! புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, புகை பிடிக்காதவர்களை விட 7 மடங்கு முகத்தில் முடி வளருகின்ற அரிய வாய்ப்பை வழங்கும் வல்லமை படைத்தது.

இன்றைக்கு, புகையுறிஞ்சுவதும், புகையிலையை மென்று உள்ளே தள்ளுவதும் எவ்வளவு உயிராபத்து என்று அறிந்து கொள்ளுகின்ற வாய்ப்பை உலகில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அளப்பறிய பணியாற்றி வருவதை அறியும் போது மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது.

வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்...புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 400,000 உயிர்ப் பலிகளை நிகழ்த்தும் எமனாக சிகரெட் அமெரிக்காவில் உள்ளது என்பது எந்தக் கலப்புமில்லா உண்மை. அதாவது ஒவ்வொருநாளும் 1,100 பேர் பலியாகின்றனர்.

புகைப் பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஒவ்வொரு நாளும் விமான விபத்தில் 1,100 பேர் விழுந்து செத்துப் போகிறார்கள் என்றால் யாராவது விமானப் பயணத்துக்கு உடன்படுவார்களா? அதைப் பிடிப்பதால் மரணம் நிச்சயம் என்று நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை! பிடித்ததைப் பிடிக்காமல் செய்யுங்கள்; உங்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளதை கண் காணாத தூரத்திற்கு தூக்கி வீசுங்கள்; நல்ல காற்றைச் சுவாசிக்க உங்கள் சுவாசப் பைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். உங்கள் கை விரலிடுக்கில் தப்பித் தவறி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; புகை வலையங்களுக்குள் சிக்கிக் கொள்வதில்லை என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் உங்கள் வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும் எமனிடமிருந்து விலகி விட்டீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்று நிரூபியுங்கள். குறைந்தபட்சம் இந்த ஒரு நாளாவது புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒத்தி வைக்க யாரேனும் தயாராக இருக்கிறீர்களா? இந்தக் கட்டுரையைப் படித்து ஒருவராவது புகைப் பிடிப்பதை நிறுத்தினால் அதுவே ஒரு துவக்க வெற்றி என்று கருதலாம்! புகையிலை, புகைப்பழக்கம், புகையிலை உற்பத்தி, புகையிலை தரும் நோய் குறித்து அறிந்து நம்மால் ஒருவரை புகை பிடிப்பதிலிருந்து நிறுத்த இயலுமெனில் செய்வோமே!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p13.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License