இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

புதுமைப்பித்தன் படைப்புகளில் ஆண்பாத்திரங்கள்

சு. விமல்ராஜ்
உதவிப்பேராசிரியர்,
ஏ. வி. சி. கல்லூரி, மன்னம்பந்தல், மயிலாடுதுறை.


பகுதி - 3

10. ஒருநாள் கழிந்தது முருகதாசர்

முருகதாசரும் ஒரு கதாசிரியர்தான். இவருக்கு ஒரு ஒண்டிக்குடித்தன வீடு. அது நகரத்து வீடென்றால் சொல்ல வேண்டியதில்லை. மனைவி, ஒரு பெண்பிள்ளை இவர்களை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என்பதைவிட எப்படியாவது வாழ்ந்து வருகிறார் முருகதாசர்.

எப்படியாவது வாழ்வது என்றால் முறையற்ற வாழ்க்கை என்று பொருள் இல்லை. இச்சிறுகதையின் பல இடங்களில் முருகதாசரும் அவர் மனைவி கமலமும் நடுத்தரக் குடும்பத்து நிலையிலும் நேர்த்தியாக நடந்து கொள்ளும் பல சூழல் வெளிப்படுகிறது.

வறுமையிலும் செம்மை என்ற ஒரு வழக்கு தமிழில் உண்டு. அவ்வழக்குக்கு இணங்க இவர்கள் வாழுகிறார்கள். இவ்வளவு வறுமையிலும் அவர்களது குழந்தையின் மனம் கோணாது அவளை வழி நடத்துகின்றனர். வீட்டில் எப்பொழுதுமே பற்றாக்குறைதான். தீப்பெட்டி இல்லை, அப்பளம் சுட எண்ணெய் இல்லை, விலை குறைவான ஈர விறகு, நண்பர்கள் வருகை, வந்தவர்களுக்கு காபி, தண்ணி என்று எதையாவது பகிர்ந்து கொடுப்பது என்று முருகதாசரும் அவரது மனைவியும் வென்று விடுகின்றனர்.

இச்சிறுகதையின் வழியாக மற்றொரு கருத்து வெளிப்படுகிறது. கணவனும் மனைவியும் இணைந்து செயல்பட்டால் வறுமையையும் எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதுமாம்.

முருகதாசரின் ஒவ்வொரு நாள் பொழுதும் எப்படி நகர்கிறது என்பதுதான் கதை. ஒரு நாள் கழிந்ததென்றால், அவரின் குடும்பத்துடனான பொருளாதாரச் சிக்கல்கள் கொண்டு எப்படி ஒரு நாள் கழிகிறது என்பதுதான். ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிகிறது.

கதை எழுதுகிறோம் என்கிற பேர்வழியா? இல்லை எழுத எத்தனையோ கதையும், திறமையும், கற்பனையும் இருந்து எழுத முடியாத சூழலில் இவருடைய குடும்பம் இவரைக் கட்டிப்போட்டு விடுகிறதா? என்றால் அவருடைய சிக்கலானச் சூழலை விளக்குவது கடினமான காரியம். எழுத்தாளனுக்கு எப்போதும் ஒரு தீ எரிந்து கொண்டே இருக்கும். அந்தத் தீ சமூகத்தின் மீது அவன் கொண்ட காதலின் வெளிப்பாடு. சமூகத்தின் மீதான அன்பு,கோபம் இவைகள் எப்போதும் தன் படைப்பின் மூலமாக வெளிப்படும்.

பல இடங்களில் முருகதாசர் எப்படிப்பட்டவர் என்பது வெளிப்படுகிறது. முதலில் அவருடைய பொருளாதாரச் சூழல். “கையில் இருக்கும் கோரைப்பாயை விரிப்பதே ஒரு ஜாலவித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக்கப்படாததால், அது நடு மத்தியில் இரண்டாகக் கிழிந்து, ஒரு கோடியில் மட்டிலும் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்றால், முதலில் உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருந்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை. பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக்கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க, ஒரு துண்டையோ, அல்லது மனைவியின் புடவையையோ அல்லது குழந்தையின் பாவடையையோ, எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும்” (45)

இந்த ஒரு காட்சியில் முருகதாசரின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்து விடுகிறது. எழுத்துத்துறையில் இருந்து கொண்டு போர் புரியும் பலரது சூழல் செல்வச்செழிப்பு என்பது இல்லாததுதான். கவிஞர்கள், எழுத்தாளர்கள் வறியவர்களாக இருப்பது காலங்காலமாக நிகழ்ந்து வந்திருக்கின்றது. முருகதாசர் அழகான கதைகளை சொல்லக் கூடியவர். ஆனால் அது விலை போகிறதா என்றால் அதுதான் கடினமாக இருக்கிறது. “முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டுவதில் மிகவும் சமர்த்தர்.” (46) கற்பனைக்கதைகளில் வல்லவர்தான் முருகதாசர். ஆனால் அது ரசிகர்களை சென்று சேரும் விதமாக இருக்க வேண்டும்.


முருகதாசரின் வறுமை, “இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்பாடாத காலங்களில், அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி ஆனால், எண்ணெய் நெருக்கடி காலங்களில் சிவபிரானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல் எதிர்ப்பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பரேஷன் தயவு வரும் வரை, ஸ்ரீ முருகதாசர், வேறு வழியில்லாமல், தெருநடையில் நின்று அலமுவின் வருகையை எதிர் நோக்கியிருக்க வேண்டியதாயிற்று” (47) என்று அவரின் கடுமையான வருமையை இந்தக்காட்சி வெளிப்படுத்துகிறது.

முருகதாசர் தன் மனைவியை, வீட்டுச்செலவை, குழந்தையை, தன்னைச்சுற்றி இருக்கிற நண்பர்கள் என்ற அனைத்தையும் சமாளிக்கிறார். மிக நேர்த்தியாக அவற்றை ஒவ்வொரு நாளும் சமாளிப்பதில் அவர் கைதேர்ந்தவராக இருக்கிறார்.

வேறொரு காட்சியில்,

“நீ என்ன பத்திரிகையை விட்டுவிட்டாயாமே! இப்பத்தான் கேள்விப்பட்டேன்.

வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன? சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு பிஸினஸ் ஆக இருந்தது. அதில் ஒரு சான்ஸ் கிடைத்தால், அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிக்கையை விட்டுவிட்டா, கதை எழுதாமல் இருந்து விடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்குப் ‘பிளான்’ போட்டிருக்கிறேன்.

தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக்கும். அதில் சென்ட்ரல் ஐடியா என்ன தெரியுமா?” (48) என்று முருகதாசர் எந்தத் தொழிலில் இருக்கிறார், அதில் அவர் தொடர்ந்து நம்பிக்கையுடனும் தீர்க்கமான உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கிறாரா? அந்தத் தொழிலில் அவர் அர்ப்பணிப்போடு கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்கிறாரா? என்ற கேள்விக்குப் பதிலைத்தரும் விதமாக இருக்கிறது.

‘தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்’ என்ற ஒரு பழமொழி தமிழில் உண்டு. எவன் ஒருவன் தான் தேர்ந்தெடுத்த தொழிலில் மட்டும் கவனமாக இருந்து கடுமையாக உழைக்கிறானோ அவன்தான் அத்தொழிலில் ஒரு சாதனையை நிகழ்த்தமுடியும். முருகதாசர் என்ன தொழில் செய்கிறார் என்று அவருக்கே தெரியாத ஒரு நிலை உள்ளது. எழுத்தாளரா? கவிஞரா? நாவல் படைப்பாளியா? சிறுகதை எழுதுபவரா? விமர்சனம் செய்பவரா? என்ன தொழில் செய்கிறோம் என்று அவருக்கேத் தெரியவில்லை.


இப்படிப்பட்ட மாந்தர் பண்பின் அடையாளமாகத்தான் முருகதாசர் இருக்கிறார். வருமானம் எந்த வழியில் வருகிறதென்று அவருக்கேத் தெரியவில்லை.

முருகதாசரிடம் இருக்கும் சில்லரையைப் பார்த்துவிட்டு ‘இதேது’ என்றாள்,

“சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்.

உங்களுக்கும் வேலையில்லையா? என்று முகத்தைச் சினுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக் கொண்டு, ஆமாம் இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடி இல்லை. அதெ வச்சு வாங்கிவாருங்களேன்! என்றாள்.

அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்

திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானெ சொன்னீர்களாம்!

அதற்கென்ன இப்பொழுது?

போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!

திங்கட்கிழமைக்கு?

திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!” (49)

என்று கதை நடந்து முடிகிறது. முருகதாசரின் ஒவ்வொரு நாளும் இப்படித்தான் கழிந்து போகிறது. முருகதாசர் மனைவியோடு இணங்கிச் செயல்படுவது அவருடைய பலம். இல்லையென்றால் சண்டை சச்சரவு என்றே காலம் கழியும்.

11. நினைவுப்பாதை வைரவன் பிள்ளை

ஒரு கூட்டுக் குடும்பம் அதன் மாந்தர் கூட்டம் அவரவர்க்குள்ளும் இருக்கும் மனிதம், பாசாங்கு, வன்மம், புன்னகை இன்னும் வெவ்வேறுவிதமான உணர்ச்சி ஓட்டங்கள் என எல்லாம் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. ஒரு குடும்பத்தில் பல்வேறு எண்ணவோட்டமுடைய மனிதர்கள் நிரம்பியிருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய தாக்கமும் வேறுவேறு திசையில் பயணிக்கும். ஒரே நேரத்தில் ஒரு காட்சியமைப்பில் ஒவ்வொரு மனிதரின் எண்ணவோட்டமும் வெவ்வேறுவிதமாக இருக்கும். அவரவர்களும் அந்த நேரத்து நிகழ்வை தங்களுடைய எண்ணவோட்டத்தின் பின்னணியில் இருந்துதான் அணுகுவார்கள்.

வைரவன் பிள்ளையின் மனதுக்குள் பலத்த சிந்தனை. அவர் மனதின் உள்சுழலும் வெப்பவீச்சின் வீரியம் வேறு யார்மனதிலும் இல்லை. இறந்து போன வள்ளியம்மை ஆச்சியின் உணர்வு, உறவு சார்ந்த எத்தைனையோ மாந்தர்கள் இருப்பினும் அவளின் கணவன் என்ற உணர்விலும், உறவிலும் கூடுதல் சுழலுக்கு உந்தித்தள்ளப்பட்டது வைரவன் பிள்ளைதான். இறந்துவிட்ட வள்ளியம்மை ஆச்சி கிடத்தப்பட்டிருக்கிறாள்; ஒரு மனது மட்டும் தன் நினைவை பின்னோக்கி நினைத்துப் பார்த்து அதன் வீரியத்திற்குள் கலந்து விடுகிறது. அந்த மனம் உணர்ச்சிப் பிழம்பாய் உருகி வழிகிறது. அதுதான் மேலச்செவல் வைரவன் பிள்ளை.


சமூகத்தைப் பின்னணியாகக் கொண்ட கதைகளுள் ‘நினைவுப்பாதை’ அவ்வப்போது தோன்றி மறையும் செய்தியினைப் பின்னணியாகக் கொண்டது.

புதுமைப்பித்தன் ஓரிடத்தில்,

“வயதில் மூத்தவர்கள் இறந்தால், அழுகைக்கும் ஓலத்திற்கும் குறைவில்லாவிட்டாலும், வருத்தமிருக்காது. பெண்கள் ரசித்து அழுவார்கள். வார்த்தைகள் முத்து முத்தாய்க் கோவையாக வந்து விழும். அத்துடன் ஓரிரண்டு துளி கண்ணீரும் கலந்திருக்கலாம். ஆனால், அது அழுகிறவர்களின் சொந்த அந்தரங்க வருத்தத்தைப் பற்றியதாகவே இருக்கும்” (50) என்று குறித்துக் காட்டுகிறார்.

வள்ளியம்மையாச்சியின் இறப்பிற்கு வருந்தி அழுகிறார்கள், ஆனால் அது உண்மையான வருத்தமேயொழிய அதில் சிறிதும் உணர்ச்சியில்லை. அதைத்தான் புதுமைப்பித்தன் அவ்வாறு பதிவு செய்கிறார்.

இறந்துவிட்ட ஒருவரின் பிணத்திற்கு இரவுக்காவல் உண்டு. இரவு முழுவதும் பெண்கள் பிணத்தைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். ஆண்களும் இருப்பார்கள். உறவும் ஊரும் கூடியிருக்கும். அருகில் இருப்பவர்கள் கண் விழித்திருப்பார்கள். ஆனால் இறந்து போயிருப்பவரின் ஆன்மாவை நேசித்தவர்கள் மட்டும்தான் அவர்களைப் பற்றிய நினைவில் தோய்ந்து போயிருப்பார்கள். அப்படித்தான் வைரவன் பிள்ளை அவர்கள், வள்ளியம்மையின் நினைவு தேக்கி உணர்ச்சிப் பிழம்பாய் இருக்கிறார்.

வைரவன் பிள்ளை உணர்ச்சியில் மேலோங்கி இருக்கும் போது,

“ஏட்டி, அஞ்சு கொத்துச் சவரி (சங்கிலி) உனக்குன்னு தானேட்டி சொன்னா, பேச்ச்சியம்மை கேக்கதுக்கு மின்னே நீ போய் உங்க தாத்தாகிட்ட கேட்டு வாங்கிக்க…!” (51) என்ற உரையாடல்.

இறந்து போன அம்மாவின் பிரிவின் மீதான வருத்தத்தை விட தங்கச்சங்கிலி குறித்த தேடலும் உரிமையும்தான் அதிகமாய் நினைவுக்கு வருகிறது. ஆனால் வைரவன் பிள்ளை அவ்வாறு நினைக்க முடியாது அல்லவா? அவரது உறவின் முடிச்சி அப்படிப்பட்டது.


வைரவன் பிள்ளையை,

1. வைரவன் பிள்ளை வளைவின் வெளிக்குறட்டில், கோரைப்பாயின் மீது முழங்காலைக் கட்டிக் கொண்டு ஓர் உருவம் உட்கார்ந்திருக்கிறது. வேறு யாறுமில்லை. அவர்தான். அன்று அவ்வீட்டில் தூங்காதவர் அவர் ஒருவர்தான். (52)

2. வைரவன் பிள்ளை உணர்வற்ற நிலையிலே, அவனை ஒரு கையால் அணைத்தார். (53)

3. வைரவன் பிள்ளை மனக்கண்முன், மணக்கோலத்தில் பதினாறு வயதில் பார்த்த வள்ளியம்மை ஆச்சியின் உருவம் நின்றது. (54)

4. சுடலை சங்கை முழங்கினான்…

இனிப்பார்க்கப்போவதை வைரவன் பிள்ளை மனது நினைக்க மறுத்தது. (55)

என்ற காட்சிப்படுத்துதலில் புதுமைப்பித்தன் வைரவன் பிள்ளையின் மன நிலையைத் தெளிவுபட விளக்குகிறார். அத்தோடு இழப்பு என்பது சுற்றத்தை முழுமையாகப் பாதிக்கும் வாய்ப்பில்லை என்பதனையும் உணர்த்திவிடுகிறது.

வாழ்க்கையின் எல்லாப் படிநிலைகளையும் கடந்து வந்த ஒரு மனிதர் மேலச்செவல் வைரவன் பிள்ளை. இந்தப் பாத்திரம் ஒரு அனுபவம் மிக்க பாட்டனார் பாத்திரத்தின் எதிரொலி. கனவன் மனைவி உறவின் உண்மையுணர்ச்சிக் குறியீடு. மனித வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உள்ள அனுபவத்தின் உள்ளார்ந்த அர்த்த வெளிப்பாடு.

12. நியாயம் தேவஇரக்கம் நாடார்

தேவஇரக்கம் நாடாரைப் போன்ற பாத்திரத்தின் தன்மையுடையவர்கள் பலர் நாட்டில் உளவுகிறார்கள். சில விமர்சனங்களை மிக நேர்த்தியாக வெளிப்படுத்த வேண்டும். காரணம் பல சிக்கல்கள் உடைய ஒரு பிரச்சனையை அவ்வாறு சொல்லுவதன் மூலம்தான் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை சொல்லுவதும், அதன் சமூகச் சிக்கல் மீதான காரன காரியங்களை காயப்படுத்தாமலும் இருக்கலாம்.

இந்தப்பாத்திரத்தை ஒரு கிருத்துவராகப் பார்க்கக்கூடாது. அவர் எந்த மதத்தை, சாதியை சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு போதிக்கப்பட்டிருக்கிற நல்லது கெட்டதுகளின் மீதான உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து நடக்கிறாரா? என்பது நம்முன் எழும் சிக்கல். ஒரு கருத்துச் சிந்தனையை ஏற்றிருக்கிறோம். அந்தச் சிந்தனை வெளிப்படுத்தும் பலவற்றை சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகளின் மீது ஏற்றிப்பார்க்கும் பொறுப்பும் இருக்கிறது. தேவஇரக்கம் கிருத்துவத்தின் பாவமன்னிப்பை ஓர் இடத்தில் சீர்தூக்கிப்பார்க்க மறந்து விடுகிறார்.


புதுமைப்பித்தன் இவரை அறிமுகம் செய்கையில், “ராஜபக்தியும், சமூகசேவையும் ஒத்துவராத இந்தக் காலத்தில், மரியாதையாகச் சமூக சேவை என்று சொல்லப்படும் தமது பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவியில் கொஞ்சம் பெருமையுண்டு. ஒரே கல்லில் இரண்டு காக்கையடித்தால் பெருமையடைய மாட்டார்களா? அவரும் மனிதன் தானே?” (56) என்று விமர்சனப் பார்வையில் அறிமுகப்படுத்துகிறார்.

நீதிமன்றத்தில் அன்று வந்தவன் ஒரு குதிரைக்காரன், காயம்பட்ட குதிரையைப் பிழைப்புக்காக ஓட்டி விட்டான். காயமடைந்த குதிரையை ஓட்டுவது நீதிமன்றத்தின்படி மட்டுமல்ல, உயிர் இறக்க மனித இயல்புப்படியும் அது தவறுதான். ஆனால், தான் வைத்திருக்கிற ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகளின் மீது தன் குழந்தையின் மீது அன்பு செலுத்துவது போன்ற நட்பைக் கடைபிடிப்பவர்கள் சாதாரண மக்கள். அந்த வண்டிக்காரன் எப்போதும் காயம்பட்ட குதிரையை ஓட்டிப் பிழைப்பு நடத்துகிறவனாக இருக்கப் போவதில்லை.

சொள்ளமுத்து “தரும தொரைகளே! எங்குருதய புள்ளமாதிரி வளக்கேன். வவுத்துக் கொடுமை; இல்லாட்டாக்கே நாம் போடுவனா சாமி? இனிமேல இப்பிடி நடக்காது. ஒருதடவை, தருமதொரைக மன்னிக்கனும்” (57) என்று கெஞ்சுகிறான். உண்மை என்னவென்றால், சொள்ளமுத்தைப் போன்றவர்கள் உலகத்தில் பல தீயவழிகள் பிழைப்பு நடத்த இருக்கும் போது உழைத்துப் பிழைக்கிற இயல்பு மனிதமனம் உடையவர்கள். அத்துனை மிகப்பெரிய கொடுமை புரிகிற மனிதர்கள் அல்லர்.

தேவஇரக்கம் நாடார் இறைவனிடம் வேண்டுகிறார், “பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! உமது நாமம் பரிசுத்தப்படுத்தப்படுவதாக! உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய அப்பத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடம் கடன் பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே… ஆமென்!” (58) இந்தப் பிரார்த்தனையின் சிலவற்றில் கடவுளிடம் அவர் வைக்கும் கூற்றின் பொருளை தாம்மேற்கொள்ளும் சிலகடமைகளின் போது அவற்றை கடைபிடிக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது. இதில், எங்களிடம் கடன்பட்டவர்களுக்கும் மன்னிக்கிறோமே… என்ற ஒரு எண்ணத்தை முன்வைக்கிறார் கடவுளிடம், ஆனால் சொள்ளமுத்துப் பிள்ளையை மன்னிக்க மறந்துவிட்டார்.

“கண்ணை விழித்து எழுந்தார். அந்த அஞ்ஞானி வண்டிக்காரனைப் பற்றி ஞாபகமேயில்லை.” (59) என்று புதுமைப்பித்தன் முடிக்கிறார். கடவுளிடம் கோரிக்கை வைப்பது சரி. ஆனால் நிஜவாழ்வில் அவற்றைப்போல் தங்களுக்கும் என சிந்திப்பதை மறந்து விடுகிறார்கள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/general/p132b.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License