இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

திருவாய்மூர் - மூன்றாம் இராஜராஜரின் கல்வெட்டு

முனைவர் ப. காளீஸ்வரன்
இளநிலை அறிவியல் அலுவலர்,
தடய அறிவியல் துறை,
சென்னை.


முன்னுரை

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான திருக்கோயில்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் சேர, சோழ, பாண்டியர், குறுநில அரசர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டவை. பல அந்நியப் படையெடுப்புகளுக்குப் பின்பும், இக்கோயில்கள் பாதுகாக்கப்பட்டு பழமையை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

சப்தவிடங்க தலங்கள்

திருவாரூரைச் சுற்றி சப்தவிடங்க தலங்கள் இருக்கின்றன. அவை;

1. திருவாரூர் - வீதி விடங்கர்

2. நாகப்பட்டினம் - சுந்தர விடங்கர்

3. திருக்கரவாசல் - ஆதி விடங்கர்

4. திருக்குவளை - அவனி விடங்கர்

5. திருவாய்மூர் (நாகப்பட்டினம் மாவட்டம்) - நீல விடங்கர்

6. திருநள்ளாறு - நாக விடங்கர்

7. திருமறைக்காடு (வேதாரண்யம்) - பவனி விடங்கர்.


திருவாய்மூரும் முசுகுந்த சக்கரவர்த்தியும்

கோவில்கள் ஒவ்வொன்றுக்கும் தல வரலாறு, அதற்கென்று, சில புராணக் கதைகள் என்று இருக்கின்றன. அதைப் போன்றே, சப்தவிடங்க தலங்களுக்கும் புராணக் கதைகள் இருக்கின்றன. இந்தக் கோயில்கள், ஏராளமான வரலாற்றுச் செய்திகளைத் தன்னகத்தேக் கொண்டிருக்கின்றன. சப்தவிடங்க தலங்களுக்குக் கூறப்படும் புராணக் கதையை முதலில் பார்ப்போம்.

சப்தவிடங்க தலங்கள் திருவாரூரைச் சுற்றி அமைந்திருக்கின்றன. முசுகுந்த சக்கரவர்த்தி, அசுரர்களுடன் தேவர்களுக்காகப் போரிட்டு வெற்றி பெறுகிறார். அவருக்கு இந்திரன் பரிசு கொடுக்க நினைத்து தங்கள் வேண்டுவது யாது? என்று கேட்கிறார். முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரன் வழிபடும் சிவபெருமானைக் கேட்கிறார். இந்திரன் வழிபடும் சிவபெருமான் உளியால் வடிக்கப்படாமல் அமைந்த திருமேனியாகும். அது தேவலோகத்தில் இருக்கின்றது. முசுகுந்தர் சிவபெருமானைக் கேட்க இந்திரனுக்குக் கொடுக்க மனம் வரவில்லை. இருப்பினும் வாக்கு கொடுத்து விட்டோமே என்று எண்ணிய இந்திரன் அவரைப் போன்று இன்னும் ஆறு திருமேனிகள் செய்வித்து இந்த ஏழு திருமுறைகளில் உண்மையான விடங்கரை கண்டுபிடித்து எடுத்துச் செல்லுங்கள் என்று முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கூறுகிறார்.

அவர், அதுவரை இம்மேனியைக் கண்டதில்லை. ஆதலால், விடங்கர் எவ்வாறு இருப்பார்? என்று அவர் அறியவில்லை. ஆகவே இறைவனை மனத்தால் வேண்ட உண்மையான விடங்கர் முசுகுந்த சக்கரவர்த்திக்குக் காட்சி தர அதனை தேர்ந்தெடுக்கிறார். மகிழ்ந்த இந்திரன் இறைவன் பூலோகத்திற்கு செல்ல விரும்புகிறார் என்பதை அறிந்து அவன் செய்வித்த மற்ற ஆறு திருமேனிகளையும் சேர்த்து ஏழு விடங்கத் திருமேனிகளாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். அவர் தமிழகத்திலே வந்து அந்த ஏழு விடங்கப் பெருமானையும் நிறுவி வழிபடுகிறார். அப்படி அவர் வழிபட்ட தலங்கள் சப்தவிடங்க தலங்களாகும். அவற்றில் ஒன்றுதான் திருவாய்மூர் என்னும் திருத்தலமாகும்.


திருமுறையில் திருவாய்மூர்

திருத்தலம் பல வரலாற்றுச் சுவை மிகுந்த செய்திகளைக் கொண்டுள்ளது. சைவ சமயத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் எனும் நால்வர் பெருமை பெற்றவர்கள். அந்த நால்வரில் இருவரும் சேர்ந்து வந்து பாடிய திருத்தலம் இந்த திருவாய்மூர் திருத்தலமாகும். திருவாய்மூருக்கு அருகிலே வேதாரண்யம் உள்ளது. வேதாரண்யத்திலேக் கதவினைத் திறப்பதற்கும், மூடுவதற்கும் தமிழ் பாடல்கள் மூலம் இறைவனை வழிபட்டுக் கதவினை மூடியும், திறந்தும் வழிபட்ட அப்பர் சுவாமிகளும், சம்பந்தர் சுவாமிகளும் வேதாரணியத்திலேத் தங்கி இருந்த ஒரு நாளிலே அப்பர் சுவாமிகள் வருத்தம் அடைகின்றார். ஏனென்றால், அப்பர் சுவாமிகள் 10 பாட்டு பாடிய பிறகுதான் கதவு திறந்தது. ஆனால், சம்பந்தமூர்த்தி ஒரு பாடல் பாடியதுமே கதவு மூடிக் கொண்டது.

இதை எண்ணி வருந்தி இருந்த நேரத்திலே, அப்பர்சாமிகளின் கனவிலே ஒரு ஒளி தோன்றி திருவாய்மூர் வா என்று அழைத்துச் செல்கின்றது. அந்த ஒளியானது புறப்பட்டுச் செல்ல, அதன் பின்னாலே அப்பர் சுவாமி எழுந்து புறப்படுகிறார். அது திருவாய்மூர் வந்து நின்று விடவே திருவாய்மூர் இறைவனை வழிபட்டு நிற்கின்றார். இச்செய்தி சம்பந்தர் சுவாமிகளின் காதுக்குச் செல்லவும், அவரும் திருவாய்மூர் வருகிறார். இருவரும் சேர்ந்து திருவாய்மூர் இறைவனைப் பாடுகிறார்கள். இதனை அப்பர் சாமிகள் தன்னுடைய பாடலிலேயேக் குறிப்பிடுகிறார். எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு என்ற பதிகத்திலே இதனைச் செய்தியாகப் பதிவிடுகிறார். இதனை வரலாற்றுச் செய்தியாக நாம் கொண்டோமேயானால் உண்மையிலேயே திருவாய்மூர் திருத்தலப் பெருமை எல்லையற்ற பெருமை கொண்டது.

வட்டணை ஆடல் உடையார்

திருஞானசம்பந்தர் தன்னுடைய பாடலிலே இத்திருத்தல இறைவனைப் பாடும் பொழுது, ஒரு சில முக்கியமான வரிகளை முன் வைக்கிறார்.

“வட்டணை ஆடலுடன... ... ... வாய்மூர் அடிகளார் வருவாரே” என்று பாடலிலே வட்டணை என்ற ஒரு பதத்தினை உபயோகப்படுத்துகிறார். இந்தப் பதம்தான் மூன்றாம் இராஜராஜன் காலத்திலே கல்வெட்டிலே இடம் பெறுகிறது. இந்தப் பதமானது நாட்டியத்தின் ஓர் அங்கமாகக் குறிப்பிடப்படுகிறது. வட்டணை என்ற பதம் காரைக்கால் அம்மையாரின் பாட்டிலும் பயின்று வருகிறது.

“கழலொலி கைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டு நட்டம்
அழலுமிழந் தோரிகதிக்க ஆடும்
அப்பனிடந் திருஆலங்காடே” (திருவாலங்காடு மூத்த திருப்பதிகம், 11-ம் திருமுறை, பாடல்-7)

பெரிய புராணத்திலும் வட்டணை என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதேப் பதம் மூன்றாம் ராஜராஜன் காலத்திலேக் கல்வெட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. அவர் காலத்திலே வாழ்ந்த ஒரு மனிதருக்கும் இப்பெயர் இருந்தது. வரலாற்றில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்தியாகும்.

மேலும், திருவலம்புரம் எனும் திருத்தலத்தைப் பற்றி அப்பர் சுவாமிகள் பாடும் பொழுது, வட்டணை பட நடந்தார் என்ற சொல்லினைப் பயன்படுத்துகிறார். ஆக, இந்த வட்டணை எனும் சொல் வரலாற்றில் இடம் பிடித்த ஒரு சொல்லாகவே நாம் கருத வேண்டும். ஏனென்றால், இந்தச் சொல்லானது ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்பந்தர், அப்பர்சாமிகளால் பயன்படுத்தப்பட்டு 12ஆம் நூற்றாண்டில் இருந்த மூன்றாம் இராசராச சோழனால் கல்வெட்டிலேயேப் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, திருமுறையில் இருக்கக்கூடிய பல பெயர்கள் புழக்கத்தில் இருந்த செய்தியை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


திருவாய்மூர்

திருவாய்மூர் திருத்தலம் திருவாரூருக்கு அருகில் இருக்கக்கூடிய திருத்தலம். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியிலே எட்டுக்குடி சாலையில் பிரிந்து திருவாய்மூர் அடையலாம். எட்டுக்குடிக்கு மிக அருகில் இருக்கக்கூடிய திருத்தலம். திருவாரூரில் இருந்து எட்டுக்குடி சாலையில் செல்லும் பொழுது கச்சனம், கோயில் கண்ணாப்பூர், திருக்குவளை ஆகிய திருத்தலங்களையும் தரிசித்துவிட்டு திருவாய்மூர் செல்லலாம். திருவாய்மூர்க்கு அருகிலே இருக்கக்கூடிய தேவாரத் தலம் திருக்குவளை. திருக்குவளையும் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும்.

மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டுகள்

திருவாய்மூர் திருத்தலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இதுவரை படியெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுக்கள் எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

திருவாய்மூர் திருத்தலத்தில் காணப்படும் கல்வெட்டுகளில் 12 கல்வெட்டுகள் மூன்றாம் ராஜராஜன் காலத்தைச் சேர்ந்தவை. இவர் காலத்து கல்வெட்டுகளில் வட்டணை என்ற சொல் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இந்தத் திருவாய்மூர் திருத்தலத்தை குறிப்பிடும் பொழுது, இவருடைய காலத்திலே வட்டணை உடையார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்திருக்கோயிலில் காலத்தால் முற்பட்ட பரகேசரி, கோப்பரகேசரி கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆதித்த சோழர் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டு இருக்கலாம் என்று ஓரளவு நம்மால் ஊகிக்க முடிகிறது.

சம்பந்தரும், அப்பரும் பாடியதினால் இந்த திருக்கோவில் ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே வழிபாட்டில் இருந்ததை நாம் அறிய முடிகிறது.

மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு திருவாய்மூர் திருத்தலத்தில் பன்னிரண்டு இருக்கின்றன . அந்தப் பன்னிரண்டு கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு சிதைந்து காணப்படுகிறது. காலத்தால் முற்பட்டது மூன்றாம் இராசராசரின் எட்டாவது ஆட்சி ஆண்டு கல்வெட்டு ஆகும். கி.பி 1224 ஆம் ஆண்டு சார்ந்த கல்வெட்டு, காலத்தால் முற்பட்ட மூன்றாம் இராசராசரின் கல்வெட்டு கூறும் செய்தியே வியப்பிற்குரியச் செய்தியாகும்.

இதற்கு முன்னர் திருக்கோயில் எப்பகுதியில் இருந்தது என்ற செய்தியினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திரு வாய்மூர் உடையார் கோயில் என்றும் , இத்திருக்கோவிலில் இருக்கக்கூடிய ஆடல் உடையார், நடராச பெருமாள் வட்டணை ஆடல் உடையார் என்று இவர் காலத்திலே அழைக்கப்பட்டிருப்பதை கல்வெட்டுகள் சொல்கின்றன.


இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திருவாய்மூர் உடையார் கோயில், வட்டணை ஆடல் உடையாருக்கு என்று சொல்வதில் இருந்து மூன்றாம் இராசராசர் காலத்திலே இங்கு நடராசப் பெருமாளுக்கு முக்கியத்துவம் அளித்த செய்தியை நம்மால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

மூன்றாம் இராசராசர் காலத்திற்கு முன்பே இப்பகுதி சதுர்வேதி மங்கலமாக மாற்றப்பட்டு இருக்கின்றது என்பதனை இவருடைய ஈச்சனூரான பரமேஸ்வர சதுர்வேதி மங்கலத்து பெருங்குடி சபையோர் நாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திருவாய்மூர் உடையார் என்ற வரிகளின் மூலம் இப்பகுதி சதுர்வேதிமங்கலமாக இருந்ததை நம்மால் அறிய முடிகிறது.

திருவாய்மூர் உடைய நாயனாருக்கு அரசூர் உடையான் களப்பாளராயர் என்பவர் நந்தா விளக்கு எரிக்கவும், கோவிலில் நித்தியப்படி என்று சொல்லக்கூடிய திருசென்னடைக்கும், திருநந்தவனத்திற்கும் நிலக்கொடை அளித்துள்ளார் . 14 மா நீளமானது எல்லைகளோடு குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இந்த எல்லை குறிப்பிடப்படும் பொழுது 41 திருநந்தவனம், திருஞானசம்பந்தன் திருநந்தவரம் என்று அப்பகுதியில் இருந்த வேறு சில நந்தவனத்தின் பெயர்களும் நம்மால் அறிய முடிகிறது.

திருவாய்மூர் வராகன் என்ற ஒரு பதம் இங்கு வந்துள்ளது. இப்பகுதியில் பணமானது திருவாய்மூருக்கு என்று தனியாக பயன்படுத்தப்பட்டிருந்த செய்தியை நம்மால் அறிய முடிகிறது.


இதற்கு அடுத்தபடியாக இவருடைய இருபதாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு நான்கு காணப்படுகிறது. இந்த இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டில் வானிலைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே பார்க்கும் பொழுது, இக்கல்வெட்டின் காலம் 23-4-1236 என்று கணிக்கப்பட்டுள்ளதாக நமக்குத் தகவல் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.

மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டுகளில் இக்கல்வெட்டில் தான் முதலில் வட்டணை ஆடல் உடையார் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அவருடைய இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் நான்கிலுமே வானிலைக் குறிப்புகளின் அடிப்படையில், காலமானது கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நான்கு கல்வெட்டுகளிலும் இந்தக் கல்வெட்டேப் பழமையான கல்வெட்டு. ஆகவே, இந்தக் கல்வெட்டில்தான் வட்டணை ஆடல் உடையார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை நம்மால் அறிய முடிகிறது. மேச ஞாயிற்று அச்சரபட்சத்தில், பிரதமையும் புதன்கிழமையும் பெற்ற விசாகத்தினால் என்று குறிப்பிடுவதில் இருந்து 23- 4-1236 என்று அறியப்படுகிறது.

இராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாளை வேளூர் கூற்றத்து உடையார் திருவாய்மூர் உடையார் கோயில் உடையார் வட்டணை ஆடல் உடையாருக்கு என்று இப்பகுதியில் இறைவன் பெயர் குறிப்பிடப்படுகிறது.

இதே நாட்டைச் சேர்ந்த சிற்றாமூருடையார் அரையன் கம்பி காதனான வீர ராஜேந்திர பல்லவரையர் என்பவர் தலைமையில் நடக்கக்கூடிய புரட்டாசி திருநாளுக்கும், சித்திரை திருநாளுக்கும் கொடை தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

சித்திரை மற்றும் புரட்டாசித் திருநாளில் இறைவனை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். அந்த நாளிலே, இறைவனின் ஊர்வலத்திற்கும், நீராட்டு, சாத்துப்படி, திருப்பள்ளி தாமம் தொடுத்தல், அதாவது மாலை தொடுத்தல், அமுதபடி ஆகியவற்றிற்காக விலைக்கு நிலம் வாங்கி அளித்துள்ளார் . நிலத்துக்கான வரிகள் நீக்கப்பட்டுக் கோவிலுக்கு கொடுக்கப்படுகின்றன.

இது வானியல் கால அடிப்படையில் 19-5-1236 அன்று அளிக்கப்பட்ட கொடை பற்றிய செய்தியைத் தெரிவிக்கிறது. திருவாய்மூர் திருத்தலத்தில் உள்ள அழகிய விநாயகப் பிள்ளையாருக்கு காட்டூர் எனும் ஊரைச் சேர்ந்த செம்பொற் சோதி வட்டணை ஆடல் உடையான் என்பவர் கொடை அளிக்கிறார். செம்பொற்சோதி வட்டணையாடல் உடையார் என்பவர் தான் இந்தத் திருமேனியை எழுந்தருளுவித்தார். அவர் எழுந்தருளுவித்த அழகிய விநாயகப் பிள்ளையாருக்கு திருப்படி மாற்றுக்கு திருநாமத்துக் காணியாக அளித்த நிலக்கொடையைத் தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்ன உள்ளது என்றால், வட்டணை ஆடலுடையான் என்னும் பெயருடன் வாய்மூர் கோயிலின் இறைவன் பெயரை வைத்த ஒருவர் இருந்திருக்கிறார். கோவிலின் சாமி பெயர்களை வைக்கும் பழக்கம் இன்றும் பலரிடம் நடைமுறையில் உள்ளது. இறையுருவங்களின் பெயர்களை மக்கள் வைத்துக் கொள்ளும் பழக்க வழக்கம் அன்றே இருந்துள்ளது எனும் செய்தியை நம்மால் தெரிந்து கொள்ள இயலுகிறது.


இதற்கு அடுத்து அவருடைய இருபதாம் ஆட்சியாண்டு கல்வெட்டு வானியல் குறிப்புகளின் அடிப்படையில் 26-4-1236. கல்வெட்டில் குறிப்பிடக்கூடிய வானிலை குறிப்பானது ரிஷப ஞாயிற்று அட்சரபட்சத்தில் சஷ்டியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் ஆகும். திரிபுவன வீர தேவர் எனும் மூன்றாம் குலோத்துங்கனின் 38 ஆட்சி ஆண்டிலே இக்கோயிலின் தேவரடியாளான வடுகி வம்பு பழுத்தாள் ஆன திருவாய்மூர் மாணிக்கம் என்பவர் நந்தா விளக்கு எரிப்பதற்கு நிவந்தம் கொடுத்துள்ளார். அந்த நிவந்தத்திலிருந்து வரும் பொலிசை, அதாவது வட்டியைக் கொண்டு விளக்கெரிக்கப்படச் செய்த நிவந்தம் கொடுத்த போது, கல்வெட்டில் வெட்டப்படாமல் இருந்துள்ளது. கல்வெட்டானது ராஜேந்திர சோழர் காலத்திற்குப் பிறகு மூன்றாம் இராசராசரின் காலத்தில் கல்வெட்டில் வெட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

மூன்றாம் இராசராசரின் அடுத்தக் கல்வெட்டு வானியல் குறிப்புகளின் அடிப்படையிலே 19-5-1236 ஆம் ஆண்டு சார்ந்த கல்வெட்டு. ரிஷப ஞாயிற்று பூர்வ பட்சத்தில் ஏகாதசியும் திங்கள்கிழமையும் பெற்ற நாளாகக் குறிப்பிடப்படுகிறது. ராஜேந்திர சோழ வளநாட்டு வண்டாழை வேளூர் கூற்றது உடையார் திருவாய்மூடையார் கோயிலில் செம்பற்சோதி வட்டணை ஆடல் உடையார் எழுந்தருளுவித்த அழகிய விநாயகர் பெருமாளுக்கு மூன்று சந்தியிலும் விளக்கு எரிப்பதற்காக 600 காசுகளை இக்கோவில் முப்பது வட்டத்துக் காணியுடைய சிவபிராமணர்களிடம் கொடுக்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது.

மூன்றாம் இராசராசரின் 29 வதாவது ஆட்சியாண்டு, அதாவது கிபி 1245 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு மூன்று கல்வெட்டுகள் காணப்படுகின்றன. செம்பற்சோதி என்பவர் எழுந்தருளுவித்த அழகிய விநாயகர் பிள்ளையாருக்கு சந்தி விளக்கு ஒன்று, மூன்று சந்திக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு மூன்று சந்தி விளக்கு எரிப்பதற்கு மூன்று செவிடு நெய்க்காக இக்கோவில் முப்பது வட்டத்து காணி உடைய சிவபிராமணர்களிடம் 600 காசு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் வட்டியின் மூலம் இந்த மூன்று விளக்கினையும் எரிப்பதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டச் செய்தியை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

முடிவுரை

மூன்றாம் இராஜராஜ சோழனின் திருவாய்மூர் திருத்தலத்துக் கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும், மக்களின் சமூக நிலையும், அன்றைய மக்களின் வாழ்க்கை முறையினையும், கோவில் வழிபாட்டு முறையினையும் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்கின்றன. இன்னும் பல சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இக்கோவிலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்வெட்டுகளும் பல்வேறு வரலாற்றுச் செய்தியைத் தாங்கி நிற்கின்றன என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

மேற்கோள் நூல்கள்

1. தமிழ்நாட்டு கல்வெட்டுகள் வரிசை 29, நாகப்பட்டினம் மாவட்டக் கல்வெட்டுக்கள் - தமிழக அரசு தொல்லியல்துறை வெளியீடு (மார்ச் 2007)

2. பன்னிரு திருமுறை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (நான்காம் பதிப்பு, மார்ச் 2013)

3. நாட்டு சிவாலயங்கள் - தொகுதி 1, மா. சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (செப்டம்பர் 2013)

4. தமிழ்நாட்டு சிவாலயங்கள் - தொகுதி 2, மா. சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை (ஜூலை 2016)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p243.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License