இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

அ. கருப்பன் செட்டியாரின் தமிழ்க் கொடையும், பயண இலக்கியப் பதிவுகளும்


முனைவர் சி. சிதம்பரம்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் - 624302


முன்னுரை

பயணம் வாழ்க்கையில் நிகழும் இனிய அனுபவம். பள்ளிக்கூட நாட்களில் சென்று வந்த இன்பச் சுற்றுலா பற்றிய கட்டுரை எழுதிய அனுபவம், நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க இயலாது. பயணம் என்பது ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் சென்று வருதலைக் குறிக்கும். பயணம், தமிழில் சுற்றுலா, சுற்றுச்செலவு, பிரயாணம், யாத்திரை, வழிச்செலவு, வழிப்பயணம் ஆகிய சொற்கள் ‘இடம் பெயர்தல்’ என்ற பொருளையேத் தருகின்றன. தமிழ் இலக்கியங்களில் ‘பயணம்’ பற்றிய செய்திகளே மிகுதியாகக் குறிக்கப் பெற்றுள்ளன. இதற்குச் சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல்களின் பெருக்கத்தையே சான்றாகக் கூறலாம். ஆனால் இன்று ‘பயண இலக்கியம்’ என்றொரு புது இலக்கிய வகையேத் தோன்றுமளவிற்குப் பயணக் கட்டுரைகள் தமிழ் உரைநடையின் மலர்ச்சியால் பல்கிப் பெருகியிருக்கின்றன. ‘பயண இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படும் ஏ.கே. செட்டியாரின் பயண அனுபவங்கள் ஒரு கலைப் பெட்டகமாக அமைந்திருப்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

முதல் பயணம்

தமிழில், பயண இலக்கியத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏ.கே.செட்டியாரே தொடங்கி வைக்கிறார். இவர் தமிழகம், இந்தியா தவிர, உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டவர். பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும் வழக்கம் இவரிடம் இளம் வயது முதலே இருந்து வந்தது.

அ. கருப்பன் என்பது இவரது இயற்பெயர். நனிபுகழ் நகரத்தார் மரபின் வழிவந்த கருப்பன் செட்டியார் கோட்டையூரில் 03.11.1911 அன்று பிறந்தார். இளம் வயதிலேயேக் கதை, கட்டுரைகள் எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த இவர் பள்ளிப் பயணத்தைத் திருவண்ணாமலையில் தொடங்கினார். இளம் வயதில் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் விளைவாகச் சிறந்த இதழாளராகப் பரிணமிக்கத் தொடங்கினார். பூதலூர் வைத்தியநாத ஐயர் என்பவர் தொடங்கிய ‘ஆனந்த விகடன்’ இதழுக்குத் தன் நண்பர்கள் பலரைச் சந்தாதாரராகச் சேர்த்துக் கொடுத்தார். பிறகு பர்மா நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அங்கே சென்று சங்க இதழான ‘தனவணிகன்’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறப்புடன் பணியாற்றினார்.

வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழில் பல கட்டுரைகள் எழுதி வந்தார். அவ்வாறு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்ற தலைப்பில் பின்னாளில் நூலாக வெளிவந்துள்ளது. ஏ.கே. செட்டியார் வணிகம் காரணமாகப் பல நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி, அதனை வெளியிட்டு வந்தார். 1943-ஆம் ஆண்டில் ‘குமரிமலர்’ என்ற மாத இதழைத் தொடங்கித் தன் பயணக் கட்டுரைகளை ‘வாயாடி’, ‘காகன்’ என்ற புனைப்பெயரில் வெளியிட்டதோடு, பிறரையும் எழுத வைத்தார். குமரிமலரில் பாரதியார், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, மு. வீரராகவாச்சாரியார், திரு.வி.க. போன்ற பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகளை வெளியிட்டார்.

பாரதியார் எழுதி இதுவரை வெளிவராத பல அரிய கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனைக் குமரிமலரில் வெளியிட்டார். பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கிய செட்டியார் புகைப்படக் கலையையும் கற்றுத் தேர்ந்தமையால் குமரி மலரின் ஆண்டு மலரை (1944) முதன் முறையாகப் போட்டோ ஆப் செட்டில் படங்களை அச்சிட்டு வெளியிட்டார்.


திரைப்படக் கலைஞர்

புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஏ.கே.செட்டியார் ஜப்பானில் ஒரு வருடம் தங்கி (1935-1936) புகைப்படக் கலையில் பயிற்சி பெற்றார். காந்தி மீதும் காந்தியத்தின் மீதும் பற்றுக் கொண்ட ஏ.கே. செட்டியர் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். ஆங்கிலேயே ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே காந்திமகான் என்ற திரைப்படத்தை எடுத்துத் தமிழிலும், தெலுங்கிலும் வெளியிட்டார்.

‘காந்திமகான்’ திரைப்படத்தை எடுப்பதற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்ட இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய படங்களைச் சேகரித்தார். அங்கு காந்தியடிகள் வாழ்ந்த வாழ்வியல் சூழல்களைப் பற்றி அறியும் நோக்கில், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அனைத்து அறிஞர்களையும் நேரில் கண்டு உரையாடிச் செய்திகளைத் திரட்டி, அதனடிப்படையில் திரைப்படத்தை இயக்கினார்.

“காந்திமகான்“ திரைப்படம் எடுப்பதற்காக அவர் மேற்கொண்ட பயணங்களின் அனுபவத்தை ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ என்ற நூலில் விரிவாக விவரிக்கிறார். இந்தப் படத்தைத் தன் நண்பர்களின் கூட்டு முயற்சியால், ‘தி டாக்குமென்றி பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் வாயிலாக வேறு எந்தவித அமைப்பின் நிதி உதவியுமின்றி வெளியிட்டவர் ஏ.கே. செட்டியார். இந்தப் படம் விற்பனை முறையில் வெற்றியடையாவிட்டாலும் ‘காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை முதன்முறையாகத் திரைப்படமாகத் தயாரித்த முதல் தமிழன்’ என்ற பெருமையை ஏ.கே. செட்டியார் பெறுகிறார். இந்தப் படத்தின் ஒருபடி (COPY) இந்திய அரசிடம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


பதிப்பாளர்

கருப்பன் செட்டியார் தன்னை ஒரு சிறந்த பதிப்பாளராகவும் வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கவில்லை. 1850 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரை பல்வேறு இதழ்களில் வெளிவந்த 140 கட்டுரைகள்அடங்கிய, ‘தமிழ்நாடு பயணக் கட்டுரை’ என்ற நூலைப் பதிப்பித்துள்ளார். இந்நூலின் வழியாக மாற்றம் பெற்றுள்ள தமிழ் நடையின் வரலாற்றையும், பயண வசதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், ஊர்களின் இன்றைய வளர்ச்சி வேகத்தையும், விரிவையும், முன்னாளில் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டும், துயரப்பட்டும் மன உறுதியுடனும், இறைப்பற்றுடனும் பல இடங்களுக்குச் சென்று வந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. இந்நூலைத் தவிர, கொய்த மலர்கள், ஒளவையார் (ஒளவையார் பாடல்களை ராஜாஜி மொழி பெயர்த்தது) போன்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார். சென்னை பாரிமுனையில் இயங்கிவரும் மிகப் பழமையான நூல் நிலையமான மறைமலையடிகள் நூலக வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

கருவூலம்

ஏ.கே. செட்டியார் இதழாளர், திரைப்படக் கலைஞர், பதிப்பாளர் பயண இலக்கியவாதி என்ற பன்முகங்களைக் கொண்டு தன் ஆளுமைத் திறனை வெளிக்காட்டும் கருத்துக் கருவூலமாகத் திகழ்ந்தவர். தன் வாழ்க்கையில் வணிகம் தொடர்பான அயல்நாட்டுப் பயணங்களை இலக்கியமாக்கும் திறன் பின்னாளில் பயண இலக்கியத்தின் முன்னோடியாக இவரை மாற்றியது.

‘இவருக்கு முன் பலர், பல நாடுகளுக்குச் சென்றிருந்த போதிலும் அவர்களுக்கும் ஏ.கே. செட்டியாருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ஏ.கே செட்டியார் தமிழன் என்ற கண்ணோட்டத்துடன் பல நாடுகளையும் பார்த்தார்’ என்ற கருத்து (செட்டிநாடும் செந்தமிழும் ப.291) குறிப்பிடத்தக்கது. ஏ.கே. செட்டியார் தமிழ்நாடு, இந்தியா, உலகம் எனத் தன் பார்வையை விசாலமாகப் பார்க்கத் தொடங்கினார். அதன் விளைவாக, பிரயாண நினைவுகள், குடகு, அண்டை நாடுகள், மலேயா முதல் கனடா வரை, ஐரோப்பா வழியாக ஜப்பான், அமெரிக்கா நாட்டில் கரிபியன் கடலும் கயானாவும், உலகம் சுற்றிய தமிழன், திரையும் வாழ்வும், இட்டபணி ஆகிய பதினோரு பயண நூல்கள் கிடைத்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆவணக் காப்பகமாகவே திகழ்கின்றன. தகவல் தருதல் என்ற வரையறையை மீறிப் பயில்வோரின் உள்ளத்தில் ஓர் எழுச்சி நோக்கத்தைப் பதிக்கக்கூடிய எதுவும் இலக்கியம் தான். அந்த வகையில் ஏ.கே. செட்டியாரின் பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

‘தன் இடத்தை விட்டு அயலிடங்களுக்குச் சென்றேராதவன் மற்ற மக்களையயல்லாம் எதிரிகளாகவே நோக்குகிறான். வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருப்பவனோ, தன்னுடைய கூட்டம் வாழ வேண்டுமானால் மற்ற கூட்டங்களோடு ஓரளவாவது ஒட்டுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்கிறான்’ என்ற பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

ஏ.கே. செட்டியார் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லுவதற்கு முன்பாகவே அந்த இடத்தைப் பற்றி நன்றாக அறிந்த பிறகே பயணிக்கிறார். அந்த நாட்டின் பரப்பளவு மக்கள் தொகை போன்ற செய்திகளைப் புள்ளி விபரங்களுடன் தருகிறார். நன்றாக அறிந்து உணர்ந்த உண்மைகளை மட்டுமே தருகிறார்.

இதற்கு அவர் தரும் சான்று ‘ஏதோ மூன்று (அ) நான்கு பேரைச் சந்தித்துப் பேசிவிட்டு ஒரு நாட்டைப்பற்றிய பொதுவாக அபிப்பிராயம் கூறுவது மிகவும் தவறு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் என்பார்கள். இது சோற்றைப் பொறுத்தவரை சரியாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டைப் பொறுத்தவரை இது சரியன்று’ (மலேயா முதல் கனடா வரை பக்.13) என்று குறிப்பிடுகிறார்.

பயண இலக்கியக் குறிப்புகள்

பயண நூல்கள் தனிப்பட்ட ஒரு மனிதனின் அனுபவமாக மட்டும் இருப்பதில்லை. அது அவரின் தனித்தன்மைகளையும், பயணம் செய்யும் நாடுகளின் அரசியல் பொருளாதார கலை இலக்கிய வாழ்க்கையை - அதன் அடிநாதமாக ஒலிக்கும் பண்புகளையும் எது அவர்களின் தேசிய குணமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பதை அறிந்து சொல்லும் பாங்கிலும் இருக்கிறது. அப்படிப்பட்ட பயண எழுத்தாளர்களின் நூல்கள் சரித்திர சமூக முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. இவ்வகையைச் சேர்ந்த எழுத்தாளர்களை முதல் தரமான பயண எழுத்தாளர்கள் என்று குறிப்பிட ஏ. கே. செட்டியார் வேண்டும். இவர்கள் ஒரு நாட்டின் அடிப்படைத் தன்மைகளை தங்களின் சூட்சமமான அறிவால் அறிந்து அதனை சில மனிதர்களின் வெளிப்பாட்டின் வாயிலாகச் சொல்லி விடுகிறார்கள்.

“ஒரு நாள் இரவு சாப்பாட்டிற்குப் பின்னர் நகரின் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தேன். இளைஞர் ஒருவர் என்னிடம் வந்து ஆங்கிலத்தில் பேசினார். சிறிது நேரம் இருவரும் உரையாடினோம். பின்னர் அவரைப் பார்த்து, “நல்ல காப்பி எங்கு கிடைக்கும்?” என்றேன்.

“நல்ல காப்பி மட்டும் வேண்டுமா? அல்லது நல்ல இடமும் வேண்டுமா?” என்றார். “இரண்டும் இருந்தால் நலம்” என்றேன். “சிறிது தூரம் நடந்து சென்றதும், ஒரு பழைய கட்டிடத்துள் நுழைந்தோம். சில இடங்களில் தலை குனிந்துதான் செல்ல வேண்டும். ஆனால் கட்டிடம் பெரியது. ஒரு மூலையில் இடம் கிடைத்தது. “இந்த கட்டிடம் பழமையானது. ஆனால் சரித்திரப் பிரசித்தி பெற்றது. அதோ சுவர்களில் மீது தீட்டியுள்ள உருவங்களையும், பெயர்களையும் பாருங்கள். அவர்கள் எல்லோரும் இந்த நாட்டில் பிறந்த சிறந்த கவிகளும், ஓவியர்களும், பாடகர்களும், நடிகர்களும் ஆவார்கள். அவர்கள் அனைவரும் இந்த இடத்தில் வருஷக்கணக்காக வந்து சாப்பிட்டிருக்கிறார்கள். வெளியூரிலிருந்து வரும் நார்விஜியர் அனைவரும் இங்கு வருவது வழக்கம். இது கலைமணம் கமழ்ந்த இடம்; கமழும் இடம்” என்றார்.

“பணிவுடன் வந்த வேலைக்காரப் பெண்ணிடம் இரண்டு கோப்பை காப்பி கொண்டு வரும்படிக் கூறினோம்.” நார்வீஜியர்கள் பொதுவாகக் காப்பியில் சர்க்கரை போடுவதில்லை. காபியைச் காபியைச் சிறிது வாயில் ஊற்றிக் கொண்டதும் அதைக் குடிப்பதற்கு முன் சர்க்கரையையோ அல்லது சர்க்கரைக் கட்டியையோ எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். அம்மாதிரி அடிக்கடி செய்வார்கள். ஒவ்வொரு முறையும் நம்மைப் பார்த்து, “இந்த நார்வீஜியப் பழக்கத்தை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்வார்கள்.


மலேயா, சிங்கப்பூர், சுற்றிவிட்டு தாய்லாந்து சென்றவர், தப்பும் தவறும் இல்லாமல் தாய்லாந்து பற்றி எழுத் வேண்டுமென்பதற்காக, தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் சில ஆண்டுகளாக வசித்து வரும் அன்பர் ஒருவர் உதவியை நாடுகிறார். அவர் தாய்லாந்து மக்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பைத் தருகிறார். அந்தக் குறிப்பு தாய்லாந்து மக்களின் மனோபாவனையை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது என்று அதனை பயன்படுத்திக் கொண்டு எழுதுகிறார். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியோடு இருந்தால் அதைப் போல ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருஷமும் மகிழ்ச்சியாக இருக்கும். பொதுவாக இவர்கள் சுலபமான கவலையற்ற வாழ்க்கை நடத்துகிறார்கள். இதற்கு இந்த நாட்டில் விளையும் அபரிமிதமான உணவுப் பொருட்களேக் காரணம், ‘நீருள்ள இடத்தில் மீன் இருக்கும், நிலமுள்ள இடத்தில் நெல் இருக்கும்’ என்பது பழமொழி. இவர்கள் வரவுக்கு மீறிச் செலவு செய்கிறார்கள். சம்பாதிப்பதற்கு முன்னமேயேச் செலவு செய்து விடுவதை எடுத்துக்காட்டுகிறார். மேலும் இவர்கள் கையில் சம்பளம் வாங்கிய இரண்டாவது நாள் பணமிராது” என்று போகிற போக்கில் ஒரு நாட்டின் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டினை எடுத்துக் காட்டுகிறார். இங்குதான் ஒரு பயண எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிறது.

ஏ.கே.செட்டியாரின் குடகு பற்றிய நூலைப் படிக்கும் போது, தமிழ் மக்கள் மட்டுந்தான் காவிரி ஆற்றைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல - காவிரி தோன்றும் குடகுப் பகுதியில் வாழ்ந்து வருகின்ற குடகர்களும் தமிழர்களைப் போலவே காவிரி ஆற்றைப் புகழ்ந்து - அதில் ஓடிவரும் நன்னீரைப் பற்றி சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். காவிரி பற்றி பாடும் பாட்டொன்றையும் அவர் மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்.

“தேன்துளி தின்னத் தின்ன
சிறிதுமே திகட்டாது
தேவர் தந்த பூமாலை
சூடவும் திகட்டாது

மனைவி தந்த வெற்றிலையின்
மகிழ்ச்சியும் திகட்டாது
தாய் ஊட்டும் பால் சோறு
சாப்பிடத் திகட்டாது
தந்தை தந்த - பொன்னாடை
தரிக்கவும் திகட்டாது
காவிரித் தேவி புகழ்
பாடத் திகட்டாது”

என்று தகவல் தரும் பயண எழுத்தாளர், இந்திய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டினையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை. இது பயண ஒரு எழுத்தாளரின் தனித்தன்மையையும், கடமையும் உணர்த்துகிறது.

ஒரு நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பு, மொழி, அரசியல் கோட்பாடுகள், பழைய கதைகள், கவிதை ஒவ்வொன்றையும் வெகு கவனமாகக் கண்டு அதனைப் படித்து அனுபவிக்கும்படியாகச் சொல்லக் கூடியவர். அதனை அவர் தனது எல்லா நூல்களுக்கு உரிய ஒரு பொதுப் பண்பாகவே கொண்டு சொல்லி இருக்கிறார்.

பண்பாட்டுச் சுரங்கம்

பண்பாடு என்பது ஒவ்வொருவருக்கும் சமுதாயத்திடம் இருந்து பெறும் செல்வமாகும். இது சடப்பொருள்கள், சடப் பொருள்கள் அல்லாதன என இருவகைப்படும். வீடுகள், கருவிகள், ஆடைகள், அணிகள், உணவு போன்றவை சடப் பொருள்கள்; மொழி, தொழில், மனப்போக்கு, பழக்க வழக்கங்கள், அறநெறி போன்றவை சடப் பொருள்கள் அல்லாதன என விளக்கம் தருகிறது சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள கலைக்களஞ்சியம், ஏ.கே. செட்டியார் சென்று வந்த நாடுகளின் பண்பாட்டை உணர்த்தும் கலைப் பெட்டகமாக அவரது பயணக் கட்டுரைகள் அமைந்துள்ளது. குடகு என்ற நூலில் ‘காவேரியும் காப்பியும் தற்காலத் தமிழர்களின் இரு கண்கள்; இரண்டும் உற்பத்தியாவது குடகில் தான்’ என்று ஏ.கே. செட்டியர் காவேரி, காப்பி ஆகியவற்றின் தோற்றுவாயை விளக்குகிறார்.

குடகுப் பகுதியில் விளையும் காப்பியைப் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் காப்பியின் வரலாற்றை மிக விரிவாக விளக்குகிறார். தமிழ் நாட்டில் மட்டும் தான் காப்பியைத் தம்ளரில் வழங்கும் பழக்கம் உண்டு. அதற்குக் காரணம் தம்ளரில் எச்சில் செய்யாமல் உயரத் தூக்கி அருந்தும் பழக்கம் தான் என்ற கருத்து தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. லைட் காப்பி, மீடியம் காப்பி, ஸ்ட்ராங்க் காப்பி, டபிள் ஸ்ட்ராங் காப்பி போன்றவற்றிற்குத் தமிழில் இன்னும் கலைச் சொற்கள் இல்லை என்ற கூற்றுத் தமிழ் மொழியின் கலைச் சொல்லாக்கப் பணிகளின் தேவையை உணர்த்துகிறது. தமிழ்நாட்டில் ‘தேநீர் விருந்து’ என்று அச்சடித்து அழைப்பு அனுப்பினாலும் விருந்தில் வழங்குவது காப்பி தான்; தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காப்பியைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம் என்று குறிப்பிடுகிறார்.

உலகம் சுற்றும் தமிழன் என்ற நூலில், ‘ஹாவாயர்களின் மொழியில் பன்னிரண்டு எழுத்துக்களே உள்ளன’ என்று குறிப்பிடுவதும், மலேயா முதல் கனடா வரை என்ற அவரது நூலின் தலைப்பிலிருந்தும், ‘ஏக்கர்’ என்ற நில அளவைக்கு ஏக்ரா என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துவதிலிருந்து அவர் காலத்தில் உள்ள மொழி நிலைகளை அறிய முடிகிறது.


செலவா? வரவா?

தமிழில் ‘செலவு’ என்ற சொல் பயணத்தைக் குறிக்கும். பயணம் செய்ய பணம் தேவைப்படுகிறது. இன்று அரசு அலுவலர்கள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தன் குடும்பத்தாருடன் இன்பச் சுற்றுலா சென்றுவர (400 கி.மீ. வரை) அரசு விடுமுறையுடன் பயணப்படியும் வழங்கி வருகிறது. இத்தொகையைக் கூட சுற்றுலா செல்லாது தவறாகப் பயன்படுத்தும் சூழலில் வசதிகள் குறைவான காலக் கட்டத்தில் உலகம் முழுவதையும் தன் சொந்தச் செலவிலேயே சென்று வந்தவர் ஏ.கே. செட்டியார். சென்றதன் பயனாகப் பயண இலக்கியம் என்றொரு புதிய இலக்கிய வகையைத் தோற்றுவித்து, தமிழன்னைக்குப் புதியதொரு அணிகலனை அணிவித்த பெருமை ஏ.கே. செட்டியாரையே சேரும். தான் செய்த செலவுகளைக் கூடத் தமிழ்மொழிக்கு வரவாக மாற்றியவர் ஏ.கே. செட்டியார். ‘உலகத்தைச் சுற்றிப் பார்க்கும் முன் தமிழ்நாட்டை ஒரு முறையாவது சுற்றிப் பார்க்க வேண்டும்’ என்ற ஏ.கே. செட்டியாரின் நோக்கம் இன்றியமையாத ஒன்று.

பார்வை நூல்கள்

1. சா. கந்தசாமி, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஏ.கே. செட்டியார், சாகித்ய அக்காதெமி வெளியீடு, புதுடெல்லி, 2000.

2. ஏ.கே. செட்டியார், உலகம் சுற்றிய தமிழன், சந்தியா பதிப்பகம், சென்னை -83.

3. ஏ.கே. செட்டியார், பிரயாண நினைவுகள், அமேசான் கிண்டில் பதிப்பு, ஜூலை, 2020.

4. ஏ.கே. செட்டியார், குடகு, சந்தியா பதிப்பகம், சென்னை - 83.

5. சி. சிதம்பரம், ஏ.கே. செட்டியார் : உலகம் சுற்றிய தமிழன் - கட்டுரை, திண்ணை இணைய இதழ், 2001.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p248.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License