இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழர் வாழ்வில் நம்பிக்கைகள்

முனைவர் கா. இலட்சுமி


இயற்கையைக் கண்டு அஞ்சியும் தீமைகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் மனிதன் இயற்கையை இறையாக்கி வணங்கலானான். அவ்வணக்கம் காலப்போக்கில் இறை நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களையும் தோற்றுவித்தது. அப்பழக்கவழக்கங்கள் நாளடைவில் குலவழக்கமாகவும் மரபாகவும் மாறின. ஆதியின மக்கள் இன்றும் தம் குடியினருக்கான பழக்க வழக்கங்களை முறை பிறழாது பின்பற்றி வருவதைக் காணலாம். தொன்மை வாய்ந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் தொன்று தொட்டு தமிழர்களாலும் பின்பற்றப்படுகின்றன. நன்னிமித்தமாகவும் தீ நிமித்தமாகவும் பகுத்து உரைக்கப்படும் நம்பிக்கைகள் பற்றி கலித்தொகை வழி ஆய்ந்து உரைக்கும் நோக்கில் இக் கட்டுரை ஆக்கம் பெற்றுள்ளது.

நிமித்தம்

தொன்மையும் இலக்கிய வளமும் பெற்ற உயர்தனிச் செம்மொழியான தமிழின் தோற்றத்தைக் கணக்கிடுதல் அரிதாய் விளங்குகிறது. இச்சூழலில் கிடைக்கப் பெற்ற நூல்களுள் முதன்மையானதாய்க் கூறப்படும் தொல்காப்பியத்தைத் தொடர்ந்து இன்று வரை இடையறவில்லாது தொடரியக்கம் கொண்ட மொழியாய்த் தமிழ் திகழ்கிறது. தமிழ் மொழியின் காலத்தைத் தொல்காப்பியத்தின் காலத்தோடு ஒப்பிட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாய் இரா. கண்ணன் வரையறுக்கிறார். தொல்காப்பியத்தைக் காலத்தில் பிந்திய நூலாய்க் குறிப்பிடுவோரும் உள்ளனர். எவ்வாறாயினும் கிடைக்கப்பெற்ற இலக்கண இலக்கிய நூல்களைக் கொண்டு தமிழர்கள் காலப் பழமை மிகுந்த தொல்குடியினர் என்று துணிதற்கு இடமுண்டு. தொல்குடியினரிடையே தொன்மை வாய்ந்த பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் மிகுந்திருப்பது இயல்பு. அவற்றை இறைவழிபாட்டின் வாயிலாகவும் சடங்கு முறைகளின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இவை நம்பிக்கை, சகுனம், வழக்கம், நிமித்தம், விரிச்சி முதலான பெயர்களில் சுட்டப்படுகின்றன.

நிமித்தங்களை முன்னோர்களின் வாழ்க்கை அனுபவப் பாடங்களாகவும்; தொழில் நுணுக்கங்களாகவும் சுட்டலாம். வாழ்வில் கண்டுணர்ந்த நல்ல செய்திகளை நேரடியாகக் கூறினால் பின்பற்ற மறுப்பவர்களையும் நம்பிக்கையின் அடிப்படையில் அறிவுறுத்தினால் பின்பற்றுவார்கள் என்பதற்காக உருவாக்கப்பட்டவையாக நிமித்தங்களை நோக்கலாம். நிமித்தத்தை மனித உள்ளுணர்வின் வெளிப்பாடெனலாம். எனவே நிமித்தம் என்பது மனித வாழ்வினை மேம்படுத்தவும் தீமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் நல்ல நம்பிக்கைகளை மனத்தில் உருவாக்கவும் எழுந்த வாழ்க்கை நெறிகளாய்க் கொள்ளலாம்.



இலக்கணத்தில் நிமித்தம்

நிமித்தம் என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி காரணம், சகுனம், அடையாளம், பொருட்டு என்று பொருள் உரைக்கின்றது. நிமித்தம் என்னும் சொல்லானது காரணம், கூட்டம் என்னும் பொருண்மையில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிமித்தத்தமானது தலைவனுக்கு நன்மை விளையும் பொருட்டு இருத்தல் வேண்டும் என்று விளக்கும் நோக்கில்,

“நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமும்
காலங் கண்ணிய ஓம்படை” (தொல்.பொருள்.36)

என்று தொல்காப்பியம் நிமித்தம் பற்றியுரைக்கின்றது. அவற்றுள் நாள் நிமித்தம் என்பது காலத்தைப் பற்றியதாகும். புள் நிமித்தம் என்பது பறவைகளின் ஒலிக் குறிப்பினைக் கொண்டு அறியப்படுவதாகும். பிறவற்றின் நிமித்தம் என்பது விலங்குகள், மனிதர்களின் வாயிலாகப் பின்பற்றப்படும் நம்பிக்கைகளாகும்.

நிமித்தம் பார்க்கும் பழக்கத்தினைப் போருக்குச் செல்லும் வீரர்களும் பின்பற்றியுள்ளனர். போருக்குச் செல்லும் வழியில் உன்ன மரம் தழைத்திருந்தால் வெற்றி உறுதி என்றும் காரிப்பறவையின் ஒலியைக் கேட்டு நன்நிமித்தம், தீ நிமித்தம் ஆய்ந்து வீரர்கள் செல்வர் என்றும் செல்லும் வழியில் நற்சொல் செவியில் விழுந்தால் பகைவர் குடி கெடும் என்றும் வீரர்களுக்கிடையேயான நிமித்தங்கள் பற்றி புறப்பொருள் வெண்பாமாலை நிரல்படுத்துகின்றது.

“வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்” (புறப்பொருள்வெண்பாமாலை, வெட்சி-3)

ஆநிரை கவரும் பொருட்டு வெட்சிப் பூச்சூடி வீரர்கள் செல்லத் தொடங்கினால் பகைவரது ஆநிரைகள் பூட்டப்பட்ட காட்டில் காரி என்னும் பறவை அழத் தொடங்கும். இந்நிமித்தம் பகைவர்களுக்குக் கேட்டினை உண்டாக்கும் என்றும் ஐயனாரிதனார் கூறுகிறார்.

விரிச்சி என்னும் புறத்துறையானது நற்சொல் கேட்டல் என்னும் நிமித்தத்தை மையப்படுத்துவதாகும். பிள்ளைவழக்கு என்னும் துறை நிமித்திகனுக்குப் பொருள் வழங்கும் வழக்கமுறை பற்றி உரைப்பதாகும். இவ்வாறு நிமித்தம் பற்றிய நம்பிக்கைகள் பழந்தமிழரிடையே இருந்துள்ளமையை இலக்கண நூல்களின் வாயிலாக அறியலாம்.

இலக்கியத்தில் நிமித்தம்

தமிழின் தொல்லிலக்கியமான சங்க இலக்கியங்களில் நிமித்தம் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் நலம் தேற்ற தோழி தலைவனின் வருகையை நிமித்தம் பார்த்து உறுதி சொல்லித் தலைவியை மகிழ்விக்கிறாள். அதற்குப் பல்லி ஒலியினை ஏதுவாகக் கொள்கிறாள். பல்லி ஒலி ஏற்படுத்தும் இடத்தை வைத்துத் தலைவன் திரும்பி வருவான் என்று தலைவிக்கு நம்பிக்கை ஊட்டத் தோழி,

“பல்லியும் பாங்கொத்து இசைத்தன”(கலித்தொகை - 11)

என்று கூறுகிறாள்.

வானியல் அறிவு மிகுந்த கணியனைக் கொண்டு நன்னாள் பார்த்து மணம் குறிக்கும் நிகழ்வை குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.

“நெறிஅறி செறிகுறி புரிதிரிபு அறியாஅறிவனை முந்துறீஇ
தகைமிகு தொகைவகை அறியும் சான்றவர் இனமாக” (குறிஞ்சிக்கலி - 39 - ப.149)

என்பதன் மூலம் வானியல் நுட்ப நூல் நெறி அறிந்தவனும் உரோகினி, சந்திரன் இருவரும் கூடும் முகூர்த்தநாளைக் குறிப்பதில் சிறந்தவனுமாகிய காலக்கணியனை முன்னதாகக் கொண்டு தகைமிக்கவரும் தொகை அறிந்தவருமான சான்றோர் சூழத் திருமணம் நிச்சயித்துள்ளனர்.

பல்லியின் ஒலியைக் கணித்தல், கணியனைக் கொண்டு நிமித்தம் பார்த்தல் மட்டுமல்லாது கண் துடித்தலையும் நிமித்தமாகக் கொண்டுள்ளனர். கண் துடிப்பதைக் கொண்டு நிமித்தம் பார்க்கும் பழக்கமானது பழந்தமிழ் இலக்கியங்களில் மேலோங்கிக் காணப்படுகின்றது. ஆண்களுக்கு வலக்கண் துடித்தல், பெண்களுக்கு இடக்கண் துடித்தல் நன்மையை ஏற்படுத்தும். மாறி துடித்தால் தீமை உண்டாகும் என்று கண் துடித்தல் பற்றிய நம்பிக்கை பழந்தமிழர்களிடையே இருந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் பிரிந்த கோவலன் மீண்டும் சேரவுள்ளான் என்பதை உணர்த்த கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவியை விட்டுப் பிரியவுள்ளான் என்பதை உணர்த்த மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தன என்று,

“எண்ணுமுறை யிடத்தினும் வலத்தினும் துடித்தன” (சிலம்பு. புகார் - 239)

இளங்கோவடிகள் கூறுகிறார்.

முல்லைக்கலியின் 101வது பாடலில் தலைவிக்கு இடக்கண் துடித்தல் தலைவனுக்கு நன்மை விழையும் என்று நம்பப்படுகிற கருத்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவனின் வருகையை உணர்த்தத் தலைவிக்கு இடக்கண் துடித்தது என்று நன்னிமித்தம் கண்டு தோழியும் தலைவியும் மகிழ்வதாய் கலிப்பா உரைக்கின்றது.

“நல்எழில் உண்கணும் ஆடுமால் இடனே” (கலித்தொகை - 11)

மேலும் தலைவிக்கு மணம் முடிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில் தலைவன் சூடிய கண்ணி தலைவியின் தலையில் விழுந்தததை நன்னிமித்தமாகக் கருதி மகிழ்வதை முல்லைக்கலியின் 107வது பாடல் சுட்டுகின்றது.
கண் துடித்தல் நிமித்தமானது மனிதனிடையே இயற்கை தந்த உள்ளுணர்வின் வெளிப்பாடு. மனிதனின் உள்ளுணர்வு மட்டுமின்றி உடல்கூறு பற்றிய நிமித்தமும் பழந்தமிழர்களிடையே காணப்படுகின்றன. உடல் அமைப்பினைக் கொண்டு மனிதர்களின் இயல்புகள் பற்றியுரைக்கும் முறை ‘அங்க சாஸ்திரம்’ ஆகும். காப்பியங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் உடல் அமைப்பு பற்றிய நம்பிக்கைகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. மேலும் ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் “நிமித்தக்கலை” ஒன்றாய்ப் போற்றப்படுகின்றது.



நிமித்தத்தின் எச்சங்கள்

தொல்குடிச் சமூகமான தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு நிமித்தங்கள் பின்பற்றப்பட்டன என்பதை தமிழ் இலக்கண, இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது. அந்நம்பிக்கைகளின் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழ்வில் இன்றும் பல்வேறு பழக்க வழக்கங்களைக் கடைபிடித்து வருகின்றனர்.

  • காலையில் எழுந்ததும் முகம் பார்த்தல், உள்ளங்கை பார்த்தல், குழந்தைகளின் முகத்தில் விழித்தல்

  • வெளியில் செல்லும் போது நிறை குடம் தூக்கிச் செல்லுதலை நன்னிமித்தமாய்க் கருதுதல்.

  • வீட்டில் எப்பொழுதும் நற்சொற்களையே பேசச் சொல்லுதல். பொது இடங்களில் செல்லும் போது பிறர் கூறும் சொற்களைத் தனக்கு நன்னிமித்தமாய் எண்ணுதல்.

  • நாட்காட்டியில் பல்லி விழும் பலன் பார்த்தல், நல்ல நேரம் கணித்தல்.

  • காகம் கரைந்தால் விருந்து வரும் என்று நம்புதல்.

  • கண்துடித்தலை சகுனமாக எண்ணுதல்.

  • இறை வழிபாட்டையும் அது தொடர்பான சடங்குகளையும் வலியுறுத்துதல்.

    முதலான நிமித்தங்கள் மேற்கண்ட பழந்தமிழர் நிமித்தங்களின் எச்சங்களாகும்.

    அறிவியல் சார்ந்தும் தனிமனித ஒழுக்கங்கள் சார்ந்தும் மனம், உடல் தூய்மை சார்ந்தும் உணவு சார்ந்தும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் தமிழர்களிடையே அதிகம். இறைமை சார்ந்த சடங்குகளின் வாயிலாக உறவினை வலுப்படுத்தவும் அடுத்த தலைமுறையினருக்கு இறைமை உணர்வினை வளர்க்கவும் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் போற்றத்தக்கன.

    வானியல் அறிவை, தொழில் உத்திகளை, வேளாண்மை செய்யும் முறைகளை, கலைநுட்பங்களைத் தமிழர்கள் நம்பிக்கையின் வழியாக விதைத்தனர். மண் புழுக்களைக் கண்டால் வெட்டி விடும் பழக்கம் நிலத்தை வளப்படுத்தும். மஞ்சள், வேம்பினை இறைவழிபாட்டின் வாயிலாகக் கட்டாயமாகப் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் உடல்நலம் பேணுதல். உணவையே மருந்தாகப் பயன்படுத்தும் பழக்கவழக்கங்கள் முதலானவை மனிதனின் நலம் கருதி எழுந்த தொன்மை பழக்கவழக்கங்கள் ஆகும்.

    தொன்று தொட்டுப் பின்பற்றி வந்த பழக்கங்கள் வெறும் பழக்கங்களாக மட்டும் இருந்த நிலை மாறி காலப்போக்கில் மூடநம்பிக்கைகளாக உருவெடுத்துள்ளன. சுயநலம் சார்ந்த சிந்தனை சமூக நலத்தைப் பாழ்ப்படுத்தத் தொடங்கின. மனிதன் உள்ளுணர்வால் பெற்ற நம்பிக்கையோடு காரண காரியத் தொடர்பற்ற மூடபழக்க வழக்கங்கள் உட்புகுத்தப்பட்டன. குறிப்பாகத் தமிழர்களிடையே இனக்கலப்பாலும் மொழிக்கலப்பாலும் எழுந்த மாற்றங்கள் பல்வேறு மூடபழக்கவழக்கங்கள் வளர்ச்சியுற வித்திட்டன. மேலும் கற்பிதமாய் வழிவழியாகப் பின்பற்றப்படும் பழக்கங்கள் காலப்போக்கில் சமூக வழக்காகவும் பின்பற்றப்பட்டன.

  • கைம்பெண்கள் எதிரில் தோன்றுவதையும் நல்ல நிகழ்வுகளில் பங்கேற்பதையும் தீய நிமித்தமாய்க் கருதுதல்.

  • பேய், பிசாசு பற்றிய கற்பிதம்.

  • தலையில் தேங்காய் உடைத்தல், உடலைக் காயப்படுத்திக் கொள்ளுதல் முதலான இறைமை சார்ந்த மூட பழக்கங்கள்.

  • இறைவழிபாட்டினை முன்னிட்டு பெற்றோரின் இறுதி வணக்கத்தில் கூட பங்கேற்க அனுமதியாமை.

  • சாதி சார்ந்த மூட நம்பிக்கைகள்

    என்று இன்று தமிழகத்தில் பல்வேறு மூடப்பழக்கவழக்கங்கள் வேரூன்றிக் காணப்படுகின்றன. அவற்றைக் களைதல் என்பது மிகக் கடினமாகவே உள்ளன. பன்னெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட பழக்கவழக்கங்களை மீறுதலையே குற்றமாய்க் கருதும் சூழல் நிலவுகிறது. சாதியம் குறித்த கௌரவக் கொலைகள், சண்டைகள், தீண்டாமை என்று நாகரிக வளர்ச்சியுற்றவர்களும் இவற்றைப் பின்பற்றும் நிலையைக் காணமுடிகின்றது. கல்வியாலும் சமுதாய வளர்ச்சியாலும் பெரும்பாலான மூடப்பழக்கவழக்கங்கள் மறைந்து வருவன மகிழ்ச்சி அளிப்பன.



  • நிறைவாக…

    மனிதன் பாமரனாய் இருந்தாலும் படித்தவனாய் இருந்தாலும் மனித மனத்தில் வேரூன்றி வளர்ந்து நிற்கும் மூடபழக்கவழக்கங்களை மாற்றுவது சற்று கடினம். மனித மனத்தை ஒருமுகப்படுத்தித் தூய்மையான சிந்தனையை வளர்த்து உடல்நலம் பேணுதற்காக பின்பற்றப்பட்டவையே நிமித்தங்கள் ஆகும். மனிதனின் மனதில் நல்ல நம்பிக்கைகளைத் தோற்றுவித்து செயலில் வெற்றி பெறுவதற்காகவும் தீமைகளில் இருந்துத் தற்காத்துக் கொள்வதற்காகவும் தோன்றியவையே. அறிவியல், அனுபவ அறிவாகவும் உள்ளுணர்வின் எச்சரிக்கை மணிகளாகவும் திகழ்ந்த நிமித்தங்கள் காலப்போக்கில் இன, மொழிக்கலப்பால் மூடநம்பிக்கைகளாக மாற்றம் பெற்றுவிட்டன. எவ்வாறாயினும் இந்நன்னிமித்தங்களும் மூடநம்பிக்கைகளும் பின்பற்றுபவர்களின் மனத்தின் நீளத்தைப் புலப்படுத்த வல்லன. மனிதனைப் பண்பட்டவனாய் மாற்ற முயலும் நோக்கத்தில் எழுந்தவை. எனவே நம்பிக்கைகளைக் கொண்டு பிறரது நலத்தைக் காக்காவிட்டாலும் காயப்படுத்தாமல் இருப்பது நன்று.

    துணைநூற்பட்டியல்

    1. கலித்தொகை, கழக வெளியீடு, சென்னை.

    2. சிலப்பதிகாரம், டாக்டர் உ.வே.சா நூல்நிலையம், சென்னை.

    3. சிற்றிலக்கிய ஆராய்ச்சி, அப்பர் பதிப்பகம், சென்னை.

    4. தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், சென்னை.

    5. புறப்பொருள் வெண்பாமாலை, டாக்டர் உ.வே.சா நூல்நிலையம், சென்னை.

    *****


    இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

    இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/general/p62.html
    

      2025
      2024
      2023
      2022
      2021
      2020
      2019
      2018
      2017


    வலையொளிப் பதிவுகள்
      பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

      எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

      சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

      கௌரவர்கள் யார்? யார்?

      தமிழ் ஆண்டுப் பெயர்கள்

      பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

      வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

      பண்டைய படைப் பெயர்கள்

      ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

      மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

      மரம் என்பதன் பொருள் என்ன?

      நீதி சதகம் கூறும் நீதிகள்

      மூன்று மரங்களின் விருப்பங்கள்

      மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

      மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

      யானை - சில சுவையான தகவல்கள்

      ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

      நான்கு வகை மனிதர்கள்

      தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

      மாபாவியோர் வாழும் மதுரை

      கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

      தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

      குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

      மூன்று வகை மனிதர்கள்

      உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


    சிறப்புப் பகுதிகள்





    முதன்மைப் படைப்பாளர்கள்

    வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


    சிரிக்க சிரிக்க
      எரிப்பதா? புதைப்பதா?
      அறிவை வைக்க மறந்துட்டானே...!
      செத்தும் செலவு வைப்பாள் காதலி!
      வீரப்பலகாரம் தெரியுமா?
      உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
      இலையுதிர் காலம் வராது!
      கண்ணதாசனின் நகைச்சுவைகள்
      குறைச்சுத்தான் எடை போடறாரு...!
      அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
      குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
      இடத்தைக் காலி பண்ணுங்க...!
      சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
      மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
      மாபாவியோர் வாழும் மதுரை
      இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
      ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
      அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
      ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
      கவிஞரை விடக் கலைஞர்?
      பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
      கடைசியாகக் கிடைத்த தகவல்!
      மூன்றாம் தர ஆட்சி
      பெயர்தான் கெட்டுப் போகிறது!
      தபால்காரர் வேலை!
      எலிக்கு ஊசி போட்டாச்சா?
      சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
      சம அளவு என்றால்...?
      குறள் யாருக்காக...?
      எலி திருமணம் செய்து கொண்டால்?
      யாருக்கு உங்க ஓட்டு?
      வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
      கடவுளுக்குப் புரியவில்லை...?
      முதலாளி... மூளையிருக்கா...?
      மூன்று வரங்கள்
      கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
      நான் வழக்கறிஞர்
      பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
      பொழைக்கத் தெரிஞ்சவன்
      காதல்... மொழிகள்
    குட்டிக்கதைகள்
      எல்லாம் நன்மைக்கே...!
      மனிதர்களது தகுதி அறிய...
      உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
      இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
      அழுது புலம்பி என்ன பயன்?
      புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
      கடவுளைக் காண உதவும் கண்ணாடி
      தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
      உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
      ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
      அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
      கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
      எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
      சிங்கத்திற்கு வாழைப்பழம்!
      வலை வீசிப் பிடித்த வேலை
      சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
      இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
      கல்லெறிந்தவனுக்கு பழமா?
      சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
      வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
      ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
      அக்காவை மணந்த ஏழை?
      சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
      இராமன் சாப்பாட்டு இராமனா?
      சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
      புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
      பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
      தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
      கழுதையின் புத்திசாலித்தனம்
      விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
      தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
      சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
      திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
      புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
      இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
      ஆணவத்தால் வந்த அழிவு!
      சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
      சொர்க்க வாசல் திறக்குமா...?
      வழுக்கைத் தலைக்கு மருந்து
      மனைவிக்குப் பயப்படாதவர்
      சிங்கக்கறி வேண்டுமா...?
      வேட்டைநாயின் வருத்தம்
      மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
      கோவணத்திற்காக ஓடிய சீடன்
      கடவுள் ரசித்த கதை
      புத்தர் மௌனமாக இருக்கலாமா?
      குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
      சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
      தேங்காய் சிதறுகாயான கதை
      அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
      அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
      கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
      சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
      அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
      விமானத்தில் பறந்த கஞ்சன்
      நாய்களுக்கு அனுமதி இல்லை
      வடைக்கடைப் பொருளாதாரம்
    ஆன்மிகம் - இந்து சமயம்
      ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
      தானம் செய்வதால் வரும் பலன்கள்
      முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
      பிரதோஷம் எப்படி விஷேசமானது?
      விநாயகர் சில சுவையான தகவல்கள்
      சிவராத்திரி விஷேசமானது ஏன்?
      முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
      தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
      கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
      எப்படி வந்தது தீபாவளி?
      தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
      ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
      ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
      அனுமனுக்கு வடை மாலை ஏன்?
      திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
      விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
      கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
      சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
      முருகா என்றால் என்ன கிடைக்கும்?
      குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
      விபூதியின் தத்துவம்
      கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
      தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
      கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
      இறைவன் ஆடிய நடனங்கள்
      யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
      செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
      கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
      விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
      இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
      நவராத்திரி பூஜை ஏன்?
      வேள்விகளும் பலன்களும்
      காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
      பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
      அம்பலப்புழா பால் பாயாசம்
      துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
      சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
      ஈசன் உபதேசித்தத் தலங்கள்
      பரமபதம் விளையாட்டு ஏன்?
      வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
      பதின்மூன்று வகை சாபங்கள்
      இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
      சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
      பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
      சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
      உணவு வழித் தோசங்கள்
      திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
      மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
      பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
      நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
      சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
      மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
      இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
      பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
      கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
      அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
      தீர்க்க சுமங்கலி பவா


    தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                               


    இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
    Creative Commons License
    This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License