இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்கஇலக்கியத்தில் விருந்தோம்பல்

முனைவர் வே. தனுஜா
(உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ். ஆர்..எம்..கல்லூரி, சாத்தூர்)


சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாட்டினையும் சிறப்பினையும் வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. அவை மக்களின் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைமையினையும் விளக்குகின்றன. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சிறப்பினை அவர்களது விருந்தோம்பல் மூலம் அறிய இயலுகின்றது. சங்க இலக்கிங்கள் வழி அறியலாகும் சங்ககால மக்களின் விருந்தோம்பும் பண்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியர் சுட்டும் விருந்து

தொல்காப்பியர் புதிதாகத் தோன்றும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற சொல்லில் குறிப்பிடுகிறார்.

“விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே”
(பொருள் 1495)

என்ற நூற்பா இதனை விளக்கும். இதன் அடிப்படையிலேயே புதியதாக வருபவர்களை விருந்து என்று குறிப்பிட்டுள்ளனர்.

விருந்து

மனிதன் தான் தோன்றிய நாளிலிருந்தே உணவு தேடுவதைத் தன் தொழிலாகக் கொண்டிருக்கின்றான். உணவு, மனித வாழ்வில் மிக உயர்ந்த ஒன்றாக இருந்துள்ளமைக்குத் தமிழரின் விருந்தோம்பல் பண்பே சான்றாகிறது. சங்க காலத்தில் உணவுகள் நிலத்தின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும், வளத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. அத்தகைய உணவு எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமெனில் உணவு இருக்கின்றவர்கள் உணவு இல்லாதவர்களுக்குப் பகுத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகுத்துண்ணும் முறை இனக்குழுச் சமுதாயத்தில் தோன்றியது எனலாம்.

பகிர்ந்துண்ணல்

ஆதிச்சமுதாய அமைப்பாக (social institution) உலகெங்கும் இனக்குழுக்கள் நிலவின. தமிழகத்தின் இனக் குழுக்கள் திணைகளின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டிருந்தன. குறிஞ்சித் திணைப் பாடல்களில் வேட்டைச் சமூகத்தின் கூறுகளைக் காணமுடிகிறது. இச்சமூகத்தில் தனியுடைமைக்கு இடமும் வாய்ப்பும் இல்லை. வேட்டையாடிய பொருள் அந்த இனக்குழு முழுவதற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் சங்க இலக்கியங்களில் பகிர்ந்துண்ணும் முறையைக் காணமுடிகிறது.

“கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தளம் சிறுகுடி பகுக்கும்”
(நற் - 85:8-10)



என்ற பாடல் அடிகளும்

“கானவன் வில்லின் தந்த வெண் கோட்டு
ஏற்றை புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டி
குடி முறை பகுக்கும் நெடுமலை நாட”
(நற் -336:3-6)

என்ற பாடல் அடிகளும் குறிஞ்சி நிலத் தலைவி உணவினைத் தன் குடிமுறைக்குப் பகுத்ததாகக் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் பதிவான இவ்வேட்டைச் சமூக அமைப்பினை இன்றும் சில பழங்குடிகளிடம் காணமுடிகிறது. மலேசியாவில் வாழும் சிமாயப் பழங்குடியின் வேட்டைக் குழுவானது பல நாட்கள் திரிந்து இறுதியாகப் பெரிய காட்டுப் பன்றியை வேட்டையாடும். அதனைக் குடியிருப்புப் பகுதிக்குக் கொண்டு வந்தவுடன் குழுவினர் அனைவரும் ஒன்று கூடுவர். கிடைத்த இறைச்சியை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுப்பர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாழும் சோளகர் சமூகம் இதே போன்ற பகிர்வு முறையினை கடைபிடித்து வருகிறது என்பர்.

பகிர்ந்துண்ணும் வழக்கம் மாறிய சூழல்

இனக்குழுச்சமூகத்தில் பகிர்ந்துண்ணும் பழக்கம் மாறி, ஈதல், விருந்து என்னும் பழக்கம் உருவானதன் பின்புலம் ஆய்விற்கு உரியதாக அமைகிறது. இனக்குழுச் சமூக நாகரீகத்தில் மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களும் வேளாண் அறியப்படாத நிலையில் இருந்த பரதவர்களும் சிறு சிறு குடிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமக்குள் பண்டமாற்று முறையினையேப் பெரும்பாலும் கடைபிடித்து வந்தனர். இவர்களுக்குள் பகிர்ந்துண்ணும் பண்பே மேலோங்கி இருந்தது. இக்குழுச் சமூகத்தில் சேகரித்த உணவைக் கூறு போட்டு பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நிலவியது.

முடிவேந்தரின் உடைமைச் சமூகத்தில் வேளாண்மை, வாணிபம், போர் ஆகியவை உடைமைகளை உருவாக்கின. பகிர்ந்து கொள்ளுதல் என்ற நிலை மாறி உடைமை, உரிமையற்றோர் என்ற வேறுபாடுகள் உருவாகத் தொடங்கின. உடைமையாளனிடம் உரிமையற்றோர் இரந்து கேட்க, ஈகை என்ற பெயரில் புதிய சமூக உறவுகள் தோன்றலாயின. இரவலர்கள் வந்து பொருள் பெற்றுச் செல்வது ஒரு வீட்டின் செல்வ நிலைக்கு அடையாளமாகப் போற்றப்பட்டது.

இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு (கலி 2: 15 )

என்று ஈயாமையின் இழிவும் வலியுறுத்தப்பட்டது. தலைவன் இதன் பொருட்டே தலைவியை நீங்கி பொருள் வயிற் பிரிந்தான். விருந்தோம்பலும் கடமையாக்கப்பட்டது.



விருந்தோம்பல்

விருந்தோம்பல் என்ற சொல்லில் உள்ள ‘விருந்து’ என்ற சொல் ‘புதுமை’ என்றும், ‘ஓம்பல்’ என்ற சொல் ‘பாதுகாத்தல்’, ‘சிறப்புச் செய்தல்’ என்றும் பொருளினைத் தருகின்றன. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவளித்து சிறப்புச் செய்யும் விருந்தறத்தையே குறிக்கின்றது எனலாம். தொல்காப்பியர்,

“விருந்து புறந்தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவு மனை கிழவோன் மாண்புகள்”
(தொல். 3:150)

என்று குறிப்பிடுகிறார். இதன்வழி ‘விருந்து புறந்தருதல்’ இல்லறப் பெண்களுக்குரிய மாண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது எனலாம்.

“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” (நற் - 142:9 )

என்ற பாடல் அடி விருந்தினர் எந்த நேரத்தில் வந்தாலும் விருந்தோம்பும் தலைவியின் சிறப்பைப் புலப்படுத்துகின்றது.

“விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே”
(ஐங்-2 1-2 )

என்ற பாடல் அடிகள் இரவலரை உபசரிக்க எண்ணும் தலைவியின் உயர்ந்த எண்ணத்தை வெளிக்காட்டுகின்றன.

“வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
உரைமதி வாழியோ வலவ என தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக் கொண்டு புக்கனன் நெடுந் தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்திழையோளே”
(அகம்384 :8-13 )

என்ற பாடல் அடிகள் தலைவன் உடன் அழைத்து வந்த தேர்ப்பாகனையும் விருந்தாக எண்ணி தலைவி விருந்தோம்பிய நிலையினைக் குறிப்பிடுகின்றன.



விருந்து பேணும் முறைமை

வீட்டிற்கு வரும் புது உறவினரை வரவேற்று உணவிடுவதே விருந்தாகும். அவ்வாறு வரும் விருந்தினர்களை முகமலர்ச்சியோடு வரவேற்க வேண்டும். இல்லையெனில், விருந்தினர் மனம் புண்படும் என்பதை,

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
(குறள். 90)

என்ற குறளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

அமிழ்தமே கிடைத்தாலும், அதனைத் தனித்து உண்ணாது வரும் விருந்தினர்க்குக் கொடுத்து உண்பவரை இவ்வுலகம் வாழ்த்தும் என்பதனை,

“உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்
இயைவதாயினும் இனிதென தமியர் உண்டலுமிலரே”
(புறம்.182)

என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.



மேலும் தந்தை வழிச் சமுதாயத்தில் இனக்குழு வாழ்க்கை மாறத் தொடங்கிய நிலையில் பெண் இல்லப் பொறுப்பை ஏற்கும் முறை உருவாகியது. இந்நிலையில் விருந்தோம்பலில் பெண்ணின் பங்களிப்பு அதிகமாகும் நிலை உருவாகியது. இதனைப் பெண் ஆதிக்கத்திற்கு வர ஆணாதிக்கத்தால் சில கடமைகள் பெண்ணிற்குச் சுமத்தப்பட்டன.

1.கணவன் கூறுவதற்கு முன்பே முகக்குறிப்பறிந்து பணி செய்தல்

2. விருந்தோம்பலில் வந்தவர்க்கு முக மலர்ச்சியோடு வேண்டுவன செய்தல் ஆகியவையாகும்

அபிதான சிந்தாமணி, விருந்தினர்களை உபசரிக்கும் தன்மைகளாக ஒன்பது முறைகளைக் குறிப்பிடுகிறது.

1. முகமலர்ச்சியுடன் இன்சொல் கூறல்

2. கால் கழுவ நீர் தருதல்

3. இருக்க மனை தருதல்

4. சோறிடுதல்

5. பருக நீர் தருதல்

6. தாம்பூலம் தருதல்

7. படுக்க இடம் கொடுத்தல்

8. படுக்கப் பாய் தருதல்

9. பிரயாணம் செய்தால் வழிவிடல்

ஆகிய ஒன்பது முறைகளைப் பின்பற்றி நடப்பதே தலைச்சிறந்த உபசரிப்பாக அமையும் என்று கூறியுள்ளனர்.

பொருநராற்றுப்படை சுட்டும் விருந்தோம்பல்

விருந்தினரை ஓம்பும் முறையினைப் பெரும்பாணாற்றுப்படை

“கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணு வழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ”
(பொருநராற்றுப்படை74-88 )

என்று குறிப்பிடுகிறது. விருந்தினரிடம் நண்பன் போல் உறவு கொண்டு இனிய சொற்களைக் கூறி அன்பு கொள்ள வேண்டும் என்பதனை இதன் வழி அறியலாகின்றது.



பெரும்பாணாற்றுப்படை சுட்டும் விருந்தோம்பல்

விருந்தினர்களுக்கு உணவளிக்கும் முறைமையினைப் பெரும்பாணாற்றுப்படை

“கொடு வாள் கதுவிய வடுஆழ் நோன்கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை
அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்
அருங்கடித் தீம் சுவை அமுதொடு பிறவும்
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்
மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி”
(471- 479 )

என்ற பாடலடிகள் ஊன் கலந்த உணவினைப் பல்வேறு கிண்ணங்களில் பரப்பி தாய் பிள்ளைகளுக்கு ஊட்டுவது போல இன்பமுடன் உணவு அளித்தமையைக் குறிப்பிடுகின்றன.

மக்கள் விருந்தோம்பும் முறை

மன்னர்கள் மட்டுமின்றி மக்களும் விருந்தோம்பிய முறைமையினை ஆற்றுப்படை நூல்கள் குறிப்பிடுகின்றன. நெய்தல் நில மகளிர் சூடான குழல் மீனை அளித்து விருந்தோம்பும் முறையை

“அறல் குழல் பாணி தூங்கியவரோடு
வறல் குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்”
(162-163)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

எயிற்றியர் இனிய புளிக்கறி இட்டுச் சமைத்த உணவினை காட்டுப்பசு இறைச்சியுடன் விருந்தளிக்கும் முறையை

“எயிற்றிர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்”
(175-177)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

புறநானூறு குறிப்பிடும் விருந்தோம்பல்

மலையும் மலை சார்ந்த இடமான, குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தம் இல்லம் நாடி வரும் விருந்தினர்களுக்கு வரகையும், திணையையும் விருந்தாக அளித்துள்ளனர். வரகும், தினையும் சில காலங்களில் தீர்ந்து விட்ட நிலையில் விதைப்பதற்காக வைத்திருந்த விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றி சோறுபடைத்து விருந்தினர்க்கு அளித்தமையை

“ ... ... ... மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவலர் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
குறித்த மாறு எதிர்ப்பைப் பெற அமையின்
குரல் உணங்கு விதைத் தினை உரல்வாய் பெய்து
சிறிது பட்டன்றோ இலளே”
(புறம் - 333 : 8 - 13)

என்ற அடிகள் விளக்குகின்றன.

பறம்பு நாட்டு மலைவாழ் குறத்தி நறு நெய்யிலே கடலையை வறுத்து, அதனோடு சோறும் சமைத்து விருந்தினர்க்குக் கொடுத்தாள். இதனை,

“நறுநெய்க்கடலை விசைப்ப, சோறுஅட்டு
பெருந்தோள் தாலம் பூசல் மேவர்” (புறம்.27 : 7-9)

என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

வேட்டுவன் மனைவி மான் தோலில் உலர வைத்தத் தினையரிசியைக் கானக் கோழியும், இதனும் கவர்ந்து விட்டமையால் தினையரிசிச் சோற்றைப் பாணனுக்குக் கொடுத்து விருந்தறம் பேண முடியாது ஆகலின், ஆரல் மீனினைச் சந்தன விறகில் மணம் நாறும்படி சுட்டுத் தந்து உபசரித்தாள் என்பதனை, வீரவெளியனார்,

“கானக் கோழி யொடிதல் கவர்ந்துண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழுவள்ளுரம்
இரும்பேரொக்கலொ டொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மே பாண! ... ... ...”
(புறம் - 320 : 11 - 15)

என்ற அடிகளின் மூலம் விளக்கியுள்ளார்.



வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தில் வளம் நிறைந்த நிலப்பரப்பை மென்புலமன்றும், வளமற்ற நிலத்தை வன்புலம் என்றும் பெயரிட்டு அழைத்தனர். வளமில்லாத வன்புலத்தில் வாழும் மக்கள், மென்புலத்திற்கு இடம் பெயர்வதுண்டு. அப்பொழுது மென்புலத்தார் வன்புலத்தாரை விருந்தினராக ஏற்று விருந்தறம் பேணினர்.

விளைந்த நெல்லை அறுவடை செய்யும் காலத்தில், வயல்களில் உள்ள யாணர்த்தாகி அரிநர்கடைமடைகளிலிருந்து வாளை மீன்களையும், உழவர்கள் ஆமையையும், கரும்புக் காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தேனையும், பெரிய நீர்த்துறைகளிலிருந்து பெண்கள் கொண்டு வந்த செங்கழுநீர்ப் பூவையும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பினர்.

இதனை,

“பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலர்க் கேளிர்க்கு வருவிருந்தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந”
(புறம்.42 : 12-18)

என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

இவற்றின் வாயிலாகச் சங்ககாலத்தில் மன்னர் மக்கள் என்று வேறுபாடு இல்லாமல் விருந்திற்கு அளித்த முதன்மையையும், நிலத்தின் தன்மைக்கு ஏற்ப விருந்தளிக்கும் முறைமையினையும் அறிந்து கொள்ளலாகின்றது.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://muthukamalam.com/essay/literature/p146.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License