இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்காப்பியத்தில் மார்க்சியத் திறனாய்வுக் கொள்கையின்அடிப்படை:
பொருள்முதல் சிந்தனை

முனைவர் சு. மாதவன்
உதவிப்பேரசிரியர், தமிழ்த்துறை,
மா. மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை - 622 001.


உலகத் திறனாய்வுக் கொள்கைகளின் கருக்கூறுகள் உலக இலக்கண, இலக்கியங்களில் இடம் பெறுதல் இயல்பானதே. மானுட வரலாற்றின் சிந்தனைப் பரிணாம வளர்ச்சியின் ஒரு காலகட்டத்தின் வெளிப்பாட்டுப் பதிவுகளே அவை. தற்கால உலகத் திறனாய்வுக் கொள்கைகளின் உருவாக்கம் என்பது தற்காலத்துக்கு மட்டுமே உரிமையுடையது என்றால் இயங்கியல் பிழையாகும். எனவே, ஒவ்வொரு கருத்துருவாக்கம், பொருளுருவாக்கம், செயலுருவாக்கம், விளைவுருவாக்கமும் அவ்வவற்றிற்கே உரிய நீண்ட நெடிய சிந்தனை வரலாற்றைப் பெற்றிருப்பன என்பதே இயங்கியல் பார்வையாகும். இந்த நோக்குநிலையிலிருந்து, தொல்காப்பியத்தை அணுகினால், உலகத் தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் மார்க்சியத் திறனாய்வுக் கொள்கையின் அடிப்படைகளோ மூலக்கூறுகளோ புதைபடிவங்களாக உறைந்திருப்பதைக் கண்டறியலாம் எனும் முயற்சியே இந்தக் கட்டுரையாகும்.

மார்க்சீயக் கோட்பாட்டின் அடித்தளம் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபாகும். மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களான ஜெர்மானியத் தத்துவம், பிரஞ்சு அரசியல், ஆங்கிலேயப் பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவொரு சிந்தனைக்கும் அடிப்படையாய் விளங்குவது பொருள்முதல்வாதமே ஆகும். சுருங்கச் சொன்னால், பொருள்முதல் வாதத்தை நீக்கிவிட்டு மார்க்சியத்தை எண்ணிப்பார்ப்பதே இயலாது; கூடாது; ஆகாது. எனவே, எங்கெல்லாம் பொருள் முதல்வாதச் சிந்தனைக்கான பொறி/ஊற்று இருக்கிறதோ அங்கெல்லாம் மார்க்சீயக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்ப்பதும் வளர்த்தெடுப்பதுமான நடவடிக்கைகள் எளிதில் ஏற்புநிலைக்கு உரியனவாய் விளங்கும்.

மார்க்சியத் தோற்றுவாய்க்கான மூன்று தோற்றுவாய்களாக மூன்று நாடுகள் விளங்கியபோதிலும், அது ஒரு உலகளாவிய மானுடக் கோட்பாடாய் எல்லா நாடுகளிலும் பொருந்துவதற்கான அடிப்படையை வழங்குவதும் இந்தப் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபாகும். இத்தகைய அணுகுமுறையின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டு இலக்கண, இலக்கியப் படைப்புகளிலும் இடம் பெற்றுள்ள பொருள்முதல்வாதச் சிந்தனைகளை எடுத்துக் கொண்டு அவற்றை மார்க்சீயக் கோட்பாட்டு விளக்கத்திற்கும் செயலாக்கத்திற்கும் உரியதாகப் பொருத்தும்போதுதான் ‘மண்ணுக்கான மார்க்கீயம்’ தோற்றம் கொள்ளும் என்பதுதான் மார்க்சிய இயங்கியல் வழங்கும் செய்தியாகும்.

1. பொருள்முதல்வாதச் சிந்தனை

உலகில் ஆதிகாலந்தொட்டு, இரண்டு சிந்தனை மரபுகள் இயங்கி வருகின்றன:

1. பொருள் இருக்கிறது, இயங்குகிறது; விளைவிக்கிறது. இதைக் கண்ணுற்று ஆராயும் போது சிந்தனை பிறக்கிறது. இவ்வாறு, பொருளை முதலாகக் கண்டு - முன்வைத்து - தோன்றும் சிந்தனை “பொருள்முதல்வாதச் சிந்தனை”

2. கருத்தை முன்பே நாமாக உருவாக்கிக் கொண்டு காணும் பொருளுக்கோ/ காணாப் பொருளுக்கோ ‘இன்ன பொருள்’ என்று பொருள் சூட்டுகிறோம். பின்னர் அது இயங்குவது, விளைப்பது குறித்தெல்லாம் கருத்துக்களை நாமாகவே அப்பொருளின் மீது ஏற்றிக் கூறுகிறோம். இப்படி, நம் கருத்தைப் பொருளின் மீது கற்பித்துக்கூறும் / கூறுவதால் தோன்றும் சிந்தனை “கருத்துமுதல்வாதச் சிந்தனை”

இரண்டும், பொருள் முந்தியதா? கருத்து முந்தியதா? எனும் தருக்கத்தால் விளைவன. பொருள் இல்லாமல் சிந்தனை இல்லை; சிந்தனை இல்லாமல் செயல் இ்ல்லை; செயல் இல்லாமல் விளைவு இல்லை; விளைவு இல்லாமல் உலக இயக்கம் இல்லை என்ற நோக்கும் சிந்தனை மரபைப் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபு என்கிறோம். (மாதவன்., சு., அக்டோபர் 2014 : 34 - 35)



2. ‘மொழி’ என்னும் சொல்லில் பொருள்முதல் வாதச் சிந்தனை

‘மொழி’ என்னும் சொல் பொதுநிலையிலும் பரவலான புதிதலிலும் பேச்சுமொழி, எழுத்துமொழி என்றே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், ‘மொழி’ என்னும் சொல் ‘மொழியின் பெயர்’ எனும் பொருள்படும் பொழுது பெயர்ச்சொல்லாகவும் “மொழிதல் செய்யும் சொல்” எனும் பொருள்படும் போது வினைச்சொல்லாகவும் “மொழிவதன் பொருள்” எனும் பொருள்படும் போது உரிச்சொல்லாகவும் முப்பரிமாணங்களை எடுக்கிறது. மேலும், மொழியின் பெயர் ‘தமிழ்’ என்பது வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்களால் எழுவதால் ‘எழுவாயாக’வும் மொழியின் சொல் வினைபடுநிலைகளில் நின்றியங்குவதால் ‘செயப்படுபொருளா’கவும் மொழிவதன் பொருளாய்க் கேட்போர் / படிப்போரின் சிந்தனைகளுக்குள் பயன் விளைப்பதால் ‘பயனிலை’யாகவும் இன்னொரு முப்பரிமாண நிலைகளையும் தோற்றுவிக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பொருள், அதன் இயக்கம், இயக்கத்தின் பயன் எனும் பொருண்மைகளாய் விரிவதால் ‘மொழி’ என்னும் ஒற்றைச் சொல்லே தமிழின் பொருள்முதல்வாதச் சிந்தனையின் எடுகோள் குறியீடாக விளங்குவது வியப்பாகவே உள்ளது எனில் அதில் வியப்பில்லை. மொழியின் கட்டமைப்புக்களான பெயர், வினை, உரிச்சொற்களும் செயல்நெறிகளான எழுவாய் பயனிலை, செயப்படுபொருள் ஆகியனவும் ‘மொழி’ எனும் ஒற்றைச் சொல்லுக்குள்ளே தொட்டனைத்தூறும் பாங்கு இயங்கியல் நெறியின் அடிப்படையில் தன்னகத்தே செரித்துக் கொண்டுள்ளன.

3. ‘திணை’ எனும் சொல்லின் பொருள்முதல்வாதச் சிந்தனை

‘திணை’ என்னும் சொல்லும் ‘மொழி’ என்னும் சொல்லைப் போலவே திணை வாழ்வியல் முழுமையையும் வெளிப்படுத்தும் சொல்லாக விளங்குகிறது. ‘திணை’ எனும் சொல் ‘நிலம்’ எனும் பொருள்படும் போது ஐந்திணை நிலங்களைக் குறித்துத் திணை வாழ்வியல் பாகுபாட்டில் முதல் பாகுபாடான முதற்பொருள்களான நிலமும் பொழுதும் என்ற இருநிலைகளையும் தெளிவுறுத்தி விடுகிறது. ‘திணை’ எனும் சொல் ‘மனிதர்கள் எனும் பொருள்படும் போது உயர்திணை என்பதைக் குறித்து இந்த உயர்திணைகளுடன் தொழிற்படும் பொருள்களான கருப்பொருள்களையும் குறித்து விடுகிறது. அதேபோல், ‘திணை’ எனும் சொல் ‘ஒழுக்கம்’ எனும் பொருள்படும் போது அகத்திணை, புறத்திணை ஆகியவற்றைக் குறித்து அது வாழ்வியல் வரைவிலக்கணமானதும் முதல், கருப்பொருள்களின் உறழ்விளை பொருளுமான உரிப்பொருள்களையும் தந்துவிடுகிறது. இவ்வாறு, ‘திணை’ என்னும் ஒற்றைச் சொல்லும் முப்பரிமாண - முப்பரிணாம நிலைகளின் நிலைக்களனாகத் திகழ்கிறது. இத்தகைய பொருள்கோள் நிலைக்குத் திணைகளின் (ஐந்திணை + உயர்திணை + அகம், புறத்திணை) தொழிற்படுநிலைகள் காரணிகளாக விளங்குகின்றன எனும் போது இவற்றினூடாக இயங்கி, விளைவித்துப் பயன் நல்கும் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபின் உயர்நிலையும் தென்படுகிறது எனில் அது மிகையில்லை.



3.1 அகத்திணை இயலில் பொருள் முதல் வாதச் சிந்தனை

உயிர், உயிரல் எல்லாவற்றிற்கும் உரிய பெயர்கள் எல்லாமே பொருள் சுட்டும் நோக்கத்தை உடையன. அப்பெயர்கள் பெரும்பாலும் திணைசார் பெயர்களாகவே தொல்காப்பியர் காலத்தில் இருந்துள்ளன. பெயர்களுக்கு உரியவர் / உரியவை எல்லாவற்றின் வினையும் அவ்வத் திணைசார் வினைகளாகவே இருப்பதும் இயல்பே. இத்தகைய திணைசார் பெயர்களையும் வினைகளையும் குறிக்கும் பெயர்களைத் ‘திணைநிலைப் பெயர்’ என்று சுட்டியுள்ளார் தொல்காப்பியர்.

“பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய
திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே” (தொல். பொருளதி.22)

திணையில் நிற்கும் பெயர்கள் என்பது திணைசார் வாழ்வியலோடு நிலைத்திருக்கும் பெயர்களாக விளங்குகின்றன. இந்தச் சிந்தனை, திணைகளின் பொருள்களை முதன்மையாகக் கொண்டு எழுந்தவை என்பது தெளிவு.

அகத்திணை வாழ்க்கை என்பது அந்தரத்தில் வெற்றுக் கருத்தியலில் - நிலவுவது அல்ல. அது, புறவுலகோடு தொடர்புடையது; புறவுலகிலிருந்து எழுவது என்பதை,

“புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது
அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே” (தொல். பொருளதி.58)

எனும் நூற்பா தெளிவுறுத்தி நிற்கிறது. இங்கும் புறவுலகம் எனும் பொருளை முதலாகக் (அடிப்படையாகக்) கொண்டே அகவுலக வாழ்க்கை இயல்கிறது என்னும் செய்தி மார்க்சிய இயங்கியல் புரிதலுக்கு உகந்ததாகவே விளங்குகிறது.

3.2 புறத்திணையியலில் பொருள்முதல் வாதச்சிந்தனை

“வெட்சி தானே குறிஞ்சியது புறனே” (தொல். பொருளதி.59)

என்பது போலவே வரும் எல்லாத் திணைகளுக்குளே நூற்பாக்களில் இடம்பெறும் செய்திகளும் அவற்றிக்கு முகப்பு விளக்கமாகக் காரண - காரிய உறவுநிலை அடிப்படையில் இளம்பூரணர் எழுதியுள்ள உரைப்பகுதியும் முழுக்க முழுக்கப் பொருள்முதல் விளக்கமாக அமைந்துள்ளது (தொல்.பொருளதி. இளம்பூரணர் உரை, 2005:71).

3.3 களவியலில் பொருள்முதல் சிந்தனைகள்

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை…” (தொல்.பொருளதி.89)

எனும் நூற்பா, ‘அன்பு’ என்னும் விழுமியம் பொதுநிலைக்குரியது என்ற போதிலும் அன்பொடு ஒவ்வொரு திணையும் புணர்க்கும் பொழுது வேதிவினை போன்றதொரு விளைவு ஒவ்வொரு திணை வாழ்வியலுக்கும் ஏற்பக் கிடைக்கிறது என்ற பொருள் முதல் சிந்தனை ஊடாடுகிறது.

தலைவன் தலைவியை முதன்முதலில் கண்ணுறும் பொழுது அவனது ஐயம் களையும் கருவிகளென எட்டும் பிறவும் இயல்கின்றன என்கிறார் தொல்காப்பியர். இங்கு மிக நுட்பமாக, இயங்குபவையாக உள்ள நிமித்தங்களும் அந்நிமித்தங்களைத் தரும் பொருள்களுமே ஐயங்களைக் களைகின்றன என்பதை,

“… … … … … நிகழ
நின்றவை களையும் கருவி என்ப” (தொல்.பொருளதி.92)

என்பதில் பொருள்முதல் சிந்தனை பொதிந்துள்ளமையை அறிய முடிகிறது.

காதல் வியப்பட்ட தலைவனின் மனநிலை,

“நோக்குவ எல்லாம் அவையே போறல்” (தொல்.பொருளதி.97)

என்னும் நிலையிலேயே இருக்கும். அதாவது, தலைவியை நேரில் காண இயலாத நேரங்களில் தலைவியை நினைத்துக் கொண்டே இருக்கும் ஓர்மை மனநிலையில் இருப்பதால் பார்க்கும் பொருள்களின் தோற்றம், அசைவு ஏதேனும் ஒன்றில் தன் தலைவியையே காண்பான் தலைவன். இந்த மனநிலையும் நினைவாக்கமும் ஏற்கனவே தலைவியின் உருவையும் செயன்மைகளையும் கண்டதிலிருந்து உருவாகின்றன என்பது பொருள்முதல் சிந்தனை சார்ந்ததே.



3.4 பொருளியலில் பொருள்முதல் சிந்தனைகள்

கண்ணால் இதுதான் / இவைதாம் எனக் காட்டலாகாப் பொருள்களாகச் சில உணர்வுநிலைகள் உள்ளன என்கிறார் தொல்காப்பியர். வாழ்நிலைதான் உணர்வு நிலையையும் சிந்தனை நிலையையும் தீர்மானிக்கிறது என்றொரு அடிப்படையான கோட்பாட்டுச் சிந்தனை மார்க்கீயத்தில் உண்டு. கிட்டத்தட்ட இந்தச் சிந்தனையோடு பொருந்துவதாக வரும் தொல்காப்பிய நூற்பா:

“ஒப்பும் உருபும் வெறுப்பும் என்றா
… … … … …
நாட்டியல் மரபின் நெஞ்சுகொளின் அல்லது
காட்டலாகாப் பொருள என்ப” (தொல்.பொருளதி.243)

இதற்கு உரையெழுதும் இளம்பூரணர், “ஒப்பு முதலாக நுகர்ச்சி யீறாக அவ்வழி வருஞ்சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி யாசிரியன் காட்டலாகாத பொருளையுடைய” (தொல்.பொருளதி.2005:343) என்று விளக்கம் எழுதியுள்ளார்.

சான்றாக, ‘ஒப்பு’ என்னும் காட்டலாகாப் பொருளை விளக்கலாம். ஒருவனைப் பார்த்ததும் ‘இவன் இவனது தந்தையைப் போலவே (ஒப்பவே) உள்ளான்” எனலாம். கேட்பவன் அவனது தந்தையைப் பார்த்தே இருக்க மாட்டான். சொல்பவன் ஏற்கனவே பார்த்ததன் அடிப்படையில் சொல்கிறான். பார்த்தவன் சொல்வதிலிருந்து கேட்டவன் கேட்டு உணர்ந்து மட்டுமே அறிந்துகொள்ள முடியும். முன்பே இறந்துபோன தந்தையை நேரில் கொண்டுவந்து காட்டி ஒப்புமை கூற இயலாதல்லவா? இதுபோன்ற எல்லாவற்றையும் ‘காட்டலாகப் பொருள’ என்கிறார் தொல்காப்பியர். அவற்றை உணர மட்டுமே முடியும் என்பதன் மூலம் முன்பு இருந்த பொருளைக் கண்டதை முதலாகக் கொண்ட சிந்தனை என்பதை அறிந்துகொள்ள இயல்கிறது. பிறவற்றையும் இவ்வாறே விளக்கப்படுத்தி அறியலாம்.

3.5 மெய்ப்பாட்டியலில் பொருள்முதல் சிந்தனைகள்

மெய்ப்பாட்டியலில் முழுமையுமே பொருள் முதல் சிந்தனைகளின் வெளிப்பாடுதான். ‘மெய்’ எனும் சொல் உடலைக் குறித்தாலும் ‘உயிருடல்’ எனும் சிந்தனை அதற்குள் உறைந்துள்ளது. ஒருவகையில், மெய்யில் / (உடலில்) மெய்யாய் (உண்மையாய்) தோன்றுவதெல்லாம் மெய்யே (பொருளே / மெய்ப் பொருளே) எனலாம்.

“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப” (தொல்.பொருளதி.245)

“நாலிரண்டாகும் பாலுமா ருண்டே” (தொல்.பொருளதி.246)

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பா டென்ப” (தொல்.பொருளதி.247)

ஆகிய நூற்பாக்களின் முன்னுரைகளின் அடிப்படையில், மெய்பாடுகள் -32, நூற்பா - 256ன் மூலம் ஒழுக்கமுடைமை முதலாக இதன் மெய்ப்பாடுகள் -32, நூற்பா 257 - 263 வரை விளக்கப்பட்டுள்ள அகனைந்திணை மெய்ப்பாடுகள் (பத்து அவத்தைகளும் அவற்றின் விரிகளும்) - 40, நூற்பா 266 குறிப்பிடும் பெருந்திணை மெய்ப்பாடுகள் - 20, நூற்பா 267 குறிப்பிடும் அழிவில் கூட்டம் -10 நூற்பா - 268 குறிப்பிடும் அழிவில் கூட்டத்திற்குரிய பொருள் - 10, நூற்பா - 269 குறிப்பிடும் தலைமக்கட்கு உளதாகும் ஒப்புப்பாகுபாடு, நூற்பா 270 குறிப்பிடும் தலைமக்கட்கு அகாத குணங்கள் எனவரும் எல்லாம்,

“கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே” (தொல்.பொருளதி.271)

என்பதால், ஒவ்வொரு மெய்ப்பாட்டுக் கூறுகளுக்கும் அடிப்படைத் தோற்றுவாய்களாக அமைவன வாழ்வியல் பொருண்மைகளும் (நூண்பொருள்கள்), வாழ்வியலுக்கான பொருண்மைகளும் (பருப்பொருள்கள்) என்பது தெளிவாகிறது.

இங்கு பொருள்களைக் காணும் கண், செவி என்னும் இரு புலன்களால் உணர்வு உருவாகிறது. உணர்விலிருந்து பொருள்கோள் என்னும் சிந்தனை பிறக்கிறது. இந்த உணர்வுக்கும் பொருள்கோளுக்கும் இடையில் சிந்தனையை வெளிப்படுத்துவனவே மெய்ப்பாடுகள் என்னும் பொருள்முதல் சிந்தனை மரபை உணர்ந்து கொள்ள முடிகிறது.

மெய்ப்பாட்டியலின் ஒவ்வொரு மெய்ப்பாட்டிற்கும் அடிப்படையாய்ப் பொருள்கள் இயங்குகின்றன என்பதைத் தனித்தனியே விளக்கினால் ஒரு பெரும் நூலே எழுதலாம்.



3.6 உவமவியலில் பொருள்முதல் சிந்தனைகள்

உவமை கூறும் பொருட்கள் இந்த நிலங்களிலிருந்தே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உவமிக்கப்படும் பொருட்களின் தோற்றம், வடிவம், செயல், பயன் இவற்றிற்கு ஏற்ப உவமைகள் தொழிற்படுகின்றன.

“வினைபயன் மெய்உரு என்ற நான்கின்
வகைபெற வந்த உவமத் தோற்றம்” (தொல்.பொருளதி.272)

என்ற உவமவியலின் முதல் நூற்பாவே உவமையின் தோற்றம் பொருள்முதல் சிந்தனைகளின் விளைவே என்பதை தெளிவுறுத்துகிறது. அதாவது, உவமைகள் வினை, பயன் மெய் உரு என்ற நான்கு வகைகளிலிருந்து தோன்றுகின்றன என்கிறார் தொல்காப்பியர். கட்புலனாகும் தொழில் (வினை), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகிய நான்கு நிலைகளில் உவமைகளில் தோன்றுவதால் அவை அனைத்தும் பொருள்முதல் சிந்தனைக்குரியன எனல் வெள்ளிடைமலை. பின்வரும் நூற்பா இதை மேலும் தெளிவுறுத்துகிறது.

“உவமும் பொருளும் ஒத்தல் வேண்டும்” (தொல்.பொருளதி.279)

அதாவது, மேலே கண்டவாறு வினை, பயன், மெய், உரு ஆகிய நான்கினில் ஏதேனும் ஒன்றுடனோ பலவற்றுடனோ உவமும் பொருளும் ஒத்தல் வேண்டும் எனும் போது இந்த வரையறைக்குள் பொருள்முதல் சிந்தனை உள்ளது என்பதை விளக்கிக் கூற வேண்டியதில்லை.

இத்தகைய பொருள் முதல் பார்வையுடனேயே உவமங்களின் பெயர்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது நுனித்து நோக்கத்தக்கது. 36 உவம உருபுகளும் பிறவும் (தொல் பொருளதி 282) சொல்லப்படும் போதே அந்தந்த உவமைகளின் - பொருள்களின் தோற்றம் கண்முன் தோன்றும் தகையனவாய் விளங்குகின்றன.

இதனால்தான், உவமங்களின் பெயர்கள் எல்லாம் வினைப்பாலுவமம் (தொல்.பொருளதி.283), பயனிலையுவமம் (தொல்.பொருளதி.284), மெய்ப்பாலுவமம் (தொல்.பொருளதி.285), உருவினுவமம் (தொல்.பொருளதி.286) என்றவாறு அமைந்துள்ளன என்பதும் இங்கு நோக்கத்தக்க செய்திகளாகும்.

ஒவ்வொரு உவமங்களுக்கும் அவற்றின் விரிகளுக்கும் உரிய விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் பொருள்முதல் சிந்தனைகள் இவ்வளவு பரந்து விரிந்த தன்மையில் இடம் பெற்றிருப்பதை அறிந்து சுவைத்து இன்புறலாம்.

அகனைந்திணைக் கண் தோழி உவமை கூறும்பொழுது அவ்வந் நிலங்களில் தோன்றும், வாழும், பொருள் உயிர்களையே உவமை கூறுவாள். இது மனித இயல்பைக் கூறுவதோடு எல்லாருக்குமே தான் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன் - ஐம்பூதங்களின் அடிப்படையிலேயே உவமைகள் எடுத்தாளப் பெறுகின்றன என்ற கருத்தையும் உறுதிப்படுத்துகிறது.

“தோழிக் காயின் நிலம்பெயர்ந் துறையாது” (தொல்.பொருளதி.298)

செய்யுளியற்றும் புலவன் ஐந்திணை நிலங்களிலும் புழங்கிவாழும் பாங்குடையவனாக இருப்பின், அவன் உவமை கூறும்போது மருதத்திணை பாடலுக்குள் நெய்தற்திணை உவமை இடம் பெற்றுவிடும் அல்லவா?! இதை அறியாதவரா தொல்காப்பியர்?!. உடனே அதற்கொரு திணைமயக்கப் புறனடை (விதி விலக்கு) கூறுகிறார்.

“தடுமாறு வரலும் கடிவரை யின்றே” (தொல்.பொருளதி.308)

இங்கு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில்,

“கடிசொல் இல்லை காலத்துப் படினே”

என்றாரே அதையும் ஒப்புநோக்குதல் தகும்.



3.7 செய்யுளியலில் பொருள்முதல் சிந்தனைகள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் 8-வது இயலாக அமைந்திருப்பது செய்யுளியலாகும். செய்யுளியலுக்கு முன்பாக 7 இயல்களை வைத்து 8வது இயலாகச் செய்யுளியலை ஏன் அமைத்தார் தொல்காப்பியர் என்பதற்குத் தகுந்த நெறி விளக்கம் கூறும் இளம்பூரணர்,

“செய்யுளிலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். மேலுணர்த்தப்பட்ட பொருண்மையெல்லாவற்றிற்கும் இஃதிடமாகலின் அவற்றின்பின் கூறப்பட்டது.” (தொல்.பொருளதி.2005:395)

என்று எழுதியுள்ளார். இவ்விளக்கத்தின் மூலம் அகத்திணை, புறத்திணை வாழ்வியலின் பனுவலாக்கப் பதிவுத் தொழில்நுட்பம் கூறுவதாகச் செய்யுளியல் அமைக்கப்பட்டுள்ளமை புலனாகிறது.

அகத்தினை செய்யுள்களில் இடம்பெறும் உயிருள்ள, உயிரில்லாப் பொருள்களெல்லாம் தலைவன் - தலைவியர் பேச்சுகளைக் கேட்பது போலவும் பதில் சொல்வது போலவும் செய்யுளமைக்கும் மரபு உண்டு என்பதை,

“ஞாயிறு திங்கள் அறிவே நாணே
… … … … …
சொல்லுந போலவும் கேட்குந போலவும்
சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்” (தொல்.பொருளதி.501)

என்னும் நூற்பாவில் பதிவுசெய்துள்ளார் தொல்காப்பியர். இதில், ஐம்புலன்களால் அறியத்தக்க பொருள்களைப் பேசுவதாகவும் கேட்பதாகவும் வரையறுத்திருப்பது சிறந்த பொருள்முதல்வாதச் சிந்தனை மரபின் வெளிப்பாடு எனலாம். இங்கு, புலன்களால் அறியப்பட முடியாத - கற்பிதமான எதையும் இலக்கண வரையறைக்குள் கொண்டு வராமல் இருப்பதே பொருள்முதல் சிந்தனையின் பொலிவும் பதிவுமாக வெளிப்படுகிறது எனலாம்.

மூன்று காலங்கள் - இறந்த, நிகழ், எதிர் - காலங்கள் குறித்த வரைவிலக்கணம் தரும் தொல்காப்பியர்.

“இறப்பே நிகழ்வே எதிர தென்னும்
திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உணரப்
பொருள்நிகழ் வுரைப்பது கால மாகும்” (தொல்.பொருளதி.503)

என்கிறார். இங்கு, “பொருள்நிகழ் வுரைப்பது காலமாகும்,” என்னும் செய்தி கூர்ந்து நோக்குதற்குரியது. காலம் என்பது எதை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது என்றால் பொருள் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

‘எழுதுகிறான்’ எனும் சொல் எழுதுதல் என்ற வினை பெயர் வழியாக எழுதுகிற நிகழ்வைக் காட்சிப்படுத்துகிறது. அதுவும் இப்பொழுது - நிகழ்காலத்தில் “எழுதுகிறான்” என்னும் நேர்நிகழ் - நேரலை - நேர்முகச் செய்தியைத் தருகிறது. எனவே ‘எழுதுகிறான்’ எனும் சொல் நிகழ்கால வினைச்சொல் என்பது பெறப்படுகிறது. இங்கு, எழுதுகோலின் இயக்கம், குறிப்பேடு அல்லது எழுதப்படு பொருளின் இருப்புநிலை, எழுதுகிற ஆணின் உருவம், எழுதுகிற ஆணின் செயல், எழுதப்படும் எழுத்துக்களின் தோற்றம் என்ற படிநிலைத் தொடர்நிலை செயல்நிலையை வெளிப்படுத்துவதால் இதில் பொருள்முதல் சிந்தனை இடம் பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.

புலன் என்னும் செய்யுள் வகை அமையும் பாங்கு குறித்து,

“தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளிந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழி புலனுணர்ந் தோரே” (தொல்.பொருளதி.542)

என்கிறார் தொல்காப்பியர். மக்கள் வழக்கில் - அதுவும் எல்லாப் பகுதி மக்கள் வழக்கிலும் சொன்னவுடன் புலனுக்குக் காட்சியாகும் பருப்பொருள் அல்லது புலனுக்கு உணர்வேற்றும் நுண்பொருளை அறியச் செய்யும் செய்யுள் மரபுக்குப் ‘புலன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு, ‘புலன்’ சொல் ஐம்புலன், ஐம்புலனால் காணலாகும் புலம் (இடம்) புலன்களில் அறியப்படும் புலம் (அறிவு) என்ற முப்பொருள்படும் நுட்பமும் அறியத்தக்கது. இந்த வகையில் சீர்த்த பொருள்முதல் சிந்தனை மரபைப் புலன் பெற்றிருப்பதும் அறியக்கிடக்கிறது. இந்த இடத்தில்,

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்” (தொல்.பொருளதி.56)

என்ற அகத்திணை நூற்பாவில் உள்ள, ‘பாடல் சான்ற புலனெறி வழக்கம்’ என்ற அடியின் பொருளும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாய் உள்ளது. நாடக வழக்கு (இலக்கிய வழக்கு), உலகியல் வழக்கு (மக்கள் வழக்கு) என்ற இரண்டையும் புலன்நெறியில் உள்வாங்கி பாடல் சான்ற (பாடலில் கலந்த) தன்மையைப் ‘புலன் எனும் செய்யுள் வகை’ பெற்று வெளிப்படுத்தும் என்பதும் பொருள்முதல் சிந்தனை சார்ந்ததே ஆகும்.



3.8 மரபியலில் பொருள்முதல் சிந்தனைகள்

உலக இலக்கண மரபுக்குத் தமிழர் தந்த முதற்கொடை தொல்காப்பியம். உலக இலக்கண மரபு தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குகிறது. இந்த இரு வரலாற்றுப் பெருமை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்தத் தொல்காப்பியத்திற்கே தனிச்சிறப்பைத் தருவது அந்நூலுள் - அந்நூலின் இறுதி இயலாக அமைந்துள்ள ‘மரபியல்’ எனும் ஓர் இயலே ஆகும்.

தொல்காப்பியத்தில் உள்ள 27 இயல்களில் 26 இயல்களில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கண மரபுகளை ஒரு தட்டிலும் மரபியல் என்னும் ஒரே ஒரு இயலில் வரையறுக்கப்பட்டுள்ள மரபுகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் இரண்டுமே சமநிலைபெறும் பாங்கை காணமுடியும். அந்த அளவுக்கு - அதாவது இந்த 26 இயல்களின் ஆற்றலும் மரபியல் எனும் ஒரே ஒரு இயலின் ஆற்றலும் சமநிலை பெறும் என மதிப்பிடும் அளவிற்கு உயரிய மேன்மையான - நுட்பமான - திட்பமான தகுதிப்பாடு உடையதாக மரபியல் விளங்குகிறது.

வேறுவிதமாகச் சொன்னால், பிற 27 இயல்களும் எழுத்து, சொல், பொருள் என்ற பாகுபாட்டுக்குட்பட்ட உலகியல் வழக்கங்களைப் பேசுகிறது என்றால் அந்த 27 இயல்களையும் ஒருங்கிணைக்கும் வரையரைகளையும் இந்த 27 இயல்களுக்கு மூலமாக - உயிராக விளக்கும் மானுடர்கள் பிற உயிர்கள், மொழி என்ற உயிரியல் வரையறைகளையும் மரபியல் பேசுகிறது என்பதே இங்கு புரிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும். இன்னும் தெளிவுறச் சொல்லவேண்டுமெனில் பிற 27 இயல்களும் மொழியுலக வழக்கங்களை வரையறுத்துள்ளது. மரபியல் மட்டும்தான் உலகத்தையே (பிரபஞ்சத்தை) வரையறுத்துள்ளது எனலாம்.

3.8.1 உயிர்ப்பெயர்வகை இயல்புகள்/ பெயர்களும் உயிர்களும் வகைகளும் இயல்புகளும்

பெயர்கள் உள்ள எல்லாம் பொருள்களே. அவை, உயிருள், உயிரில் பொருள்களாம். தொல்காப்பிய மரபியலின் தொடக்கமே பெயர்களின் வகைகளை அவ்வவற்றின் உயிர்களின் வகைகளோடே அறிமுகப்படுத்துகிறது. உலகப் பொருள்களின் இயக்கங்களைத்தான் உலக இயக்கம் என்கிறோம். பொருள்கள் இன்றி இயக்கம் இல்லை; இயக்கம் இல்லாமல் பொருள்களும் இல்லை. எனவேதான், மரபியலைப் பெயர்களிலிருந்து தொடங்குகிறார் தொல்காப்பியர்.

இளமைப் பெயர்கள் -9 (தொல்.பொருளதி.545),

ஆண்பாற் பெயர்கள் - 15+(546),

பெண்பாற் பெயர்கள் - 13 (547),

இளமை, ஆண்பாற், பெண்பாற் பெயர்களும் அவர்/அவைதம் இயல்புகளும் (548 --570),

விலங்குகளின் பெயர்களும் அவைதம் பருவம்சார் பெயர்களும் (579 - 614)

என்றவாறு இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நூற்பாக்களும் பொருள்முதல் சிந்தனையின் வெட்டவெளிச்ச எடுத்துக்காட்டுகள் எனலாம்.

உலக அறிவியலாளர்கள் குறிப்பாக உயிரியலாளர்கள் மிகவும் பிற்காலத்தில் கண்டறிந்ததாக உலகத்துக்கு முன்வைக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகளைத் தொல்காப்பியர் கி.மு.6 க்கு முன்பே ஆராய்ந்து விளக்கியுள்ளார் என்பது வியப்பளிக்கும் செய்தியாகும். இந்தவகைச் செய்திகள் பல இருப்பினும், உயிர்களின் பாகுபாடுகளும் அவைபெறும் பெயர்களும் அப்பெயர்பெறும் தகுதிப்பாட்டுக்கு உரியதான அறிவுநிலைகளும் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டத்தக்கதாகும்.

“ஒன்றறிவதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே” (தொல்.பொருளதி.571)

புலனுணர் அறிவுநிலைகளின் அடிப்படையில் உயிர்களைப் பாகுபடுத்தியுள்ள இந்த நூற்பா உலக அறிவியலாளர்கள் முன்வைத்து நிறுவவேண்டிய வரலாற்றுக் கடமையை இன்னும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கான விளக்கப் பகுப்புநிலை, பகுப்புநிலை விளக்கங்களை முறையே நூற்பாக்கள் 572-578 ஆகியன கொண்டு்ள்ளன. ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரையிலான வகைப்பாட்டு விளக்கங்கள் இந்தச் சிறிய கட்டுரைக்குள் அடங்கிவிடும் எல்லையுடையன அல்ல என்பதும் இங்கு பதியத்தக்க செய்தியாகும்.



3.8.2 தாவரங்கள் பாடமாக்கல், தாவர ஆவணமாக்கல் (HERBARIUM)

தாவரங்களை எடுத்துவந்து அப்படியே பாடமாக்கி அவற்றை வகைதொகை உறுப்பியல் விவரணை செய்வதைத் தாவரவியல் பாடம் மிக முக்கியமான கற்றல்-கற்பித்தல் (கற்கை) நெறியாகக் கொண்டுள்ளது. இதைத்தாவரவியலர் உலர் தாவரத்தொகுப்பு என்கின்றனர். இந்நெறியைப் பொருள்முதல் பார்வை மிளிர எடுத்துரைத்துள்ளன நூற்பாக்கள் 630 - 634 என்பது நோக்கத்தக்கது.

3.8.3. உயிருள், உயிரல் பொருள்களின் மரபுச் சொற்கள் - உலகின் தோற்றம்

“நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால இயனெறி வாழாமைத்
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்” (தொல்.பொருளதி.635)

என்னும் நூற்பா உலகத்தின் தோற்றம் குறித்த அறிவியல்பூர்வமான செய்திகளைச் சொல்கிறது. “இறைவனால் படைக்கபட்டது உலகம்” என்று கருத்துமுதல் வாதிகள் இ்ன்றும் சொல்லிவரும்போது இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஐம்பூதங்களின் கலவையும் மயக்கமும்தான் உலகத் தோற்றத்திற்குக் காரணம் என்ற பொருள்முதல்வாதச் சிந்தனையைத் தொல்காப்பியம் முன்வைத்துள்ளது.

இந்நூற்பாவுக்கு இளம்பூரணர் வரைந்துள்ள உரை சிறந்த தெளிவை உண்டுபண்ணுகிறது:

“உலகு நிலமுதலாகிய ஐம்பெரும்பூதங்கலந்த மயக்கமாதலான் மேற்சொல்லப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழாமல் திரிவுபடாத சொல்லோடே தழுவுதல் வேண்டும் என்றவாறு.

கலத்தலாவது முத்தும் பவளமும் நிலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கியொன்றாதல் போறல்.

உலகமென்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவிநிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கியொன்றினாற்போல வேற்றுமைப்படாது நிற்கும். அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலிற் கலந்த மயக்கமென்றார்.

இப்பொருள் எல்லா வுலகத்தையும் விட்டு நீங்காமையின் இவற்றை ஒரு முகத்தான் நோக்க வேறுபாடிலவா மாதலான் மேற்கூறிப் போந்த முறையானான் வேறுபடுத்து இருதிணையாகவும் ஐம்பாலாகவும் இயன்ற நெறி வழுவாமைத் திரிவுபடாத சொல்லோடே புணர்க்க என்றவாறாம்” (தொல்.பொருளதி.2005 : 530 - 531)

உலகில் உள்ள ஐம்பூதங்களும் தனித்தனியாகக் கலந்தும் - அதாவது தனித்தியங்குவதோடு ஒருங்கிணைந்தும் இயங்குகின்றன; ஒன்றனுள் ஒன்று மயங்கியும் - அதாவது ஒன்றோடு ஒன்று ஒன்றிப் பிணைந்திணைந்தும் தனித்தனியே பிரித்தறியா வண்ணம் ஒன்றியும் இயங்குகின்றன. இதைத்தான் உலக இயக்கம் என்கிறோம். இவ்வுலகில் தோன்றி இயங்கும், இருக்கும் பொருள்களுக்கெல்லாம் உயர்திணை, அஃறிணை என்ற இருதிணைப் பாகுபாட்டோடும் ஐம்பால் (ஆண், பெண், பலர், ஒன்று, பல) வகைப்பாட்டோடும் விளங்குகின்றன என்கிறார் தொல்காப்பியர். இதைத்தான் அறிவியலாளர்கள் - இயற்பியலாளர்கள் பிரபஞ்சவியல் (Cosmology) என்கின்றனர்.

இந்த நூற்பாவைப் பொருள்முதல் சிந்தனையின் மூலவுற்று என்றும் மணிமகுடம் என்றும் குறிப்பிடலாம்.



3.8.4. மனிதப் பிரிவுகளும் அவர்தம் தொழில்களும் படிநிலைகளும்

அந்தணர், அரசர், வைசியர், வேளாண் மாந்தர் என்ற நால்வகைப் பிரிவுகளாக மனிதர்களைப் பாகுபடுத்தியுள்ளார் தொல்காப்பியர். அவர்தம் தொழில்கள், அவ்வத்தொழில்கள் பொருள்களுடன் உறழ்வன-உழல்வன திகழ்வனவாக உள்ளன.

எண் மனிதப்பிரிவு தொழில் பொருள்கள்
1 அந்தணர் வேள்வி நூல், கரகம், முக்கோல், மணை
2 அரசர் ஆட்சி படை, கொடி, குடை, முரசு, தார், முடி + செங்கோல் +
3 வைசியன் வாணிகம் நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை
4 வேளாண் மாந்தர் உழவு நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை

(தொல்.பொருளதி. 615- 629)


இடையிடையே சில நூற்பாக்களில் அவரவர்க்குரிய பிற தொழில்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்திலும் பொருள்முதல் தொழில், உறவு, சிந்தனை, பயன் ஆகியவை இன்றியமையாத் தன்மைகளுடன் இடம்பெற்றுள்ளன என்பன அறியத்தக்கச் செய்திகளாகும். மேலும், இவ்வியலில் (மரபியலில்) நூல்வகைப் பாங்கும் இலக்கண நோக்கும் (635-656) இன்ன பிறவும் நுட்பமாகப் பேசப்பட்டு்ள்ளன.

ஆக மொத்தத்தில், மரபியல் கூறும் செய்திகளைத் தொகுத்து நோக்கினால் எழுத்து, சொல், பொருள் எனும் இலக்கண வரையறைகளின் தொகுப்பியலாகவும் இவற்றை வரையறுத்து வாழும் மனிதர்களின் வரலாற்றியலாகவும் மனித வாழ்வியலோடு இவ்வுலகில் வாழும் பிற உயிரியலாகவும் எனப் பன்முக அறிவாவணமாக - அறிவுக் களஞ்சியமாக (Document - Ereyclopedia) விளங்குகிறது மரபியல் எனில் அது மிகையில்லை.



4. தொகுப்புரை

இத்தகைய பார்வையில் - நோக்குநிலையில் - தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைக்கான அடிப்படைகளைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட முந்தைய கட்டுரை முயற்சி கீழ்வரும் முடிவுகளையும் கருதுகோள்களையும் எட்டியுள்ளது:

1. தமிழ் இலக்கிய - இலக்கண திணை வாழ்வியல் மரபில் வரையறுக்கப்பட்டுள்ள முதற்பொருள். கருப்பொருள் இரண்டும் மார்க்சீயம் வரையறுக்கும் அடிக்கட்டுமானக் கூறுகளைப் பொருளாதாரக் கூறுகளைப் பெற்றுள்ளன. உரிப்பொருள் என்பது மேற்கட்டுமானக் கூறுகளைப் பண்பாட்டு விழுமியங்களைப் பெற்றுள்ளன.

2. ஐந்திணை மரபு என்பது மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சியை சமூகத்தின் படிநிலை வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. குறிஞ்சியில் தோன்றி முல்லையில் கிளைத்து நெய்தலை எய்தி மருதத்தில் நிலைத்த பரிணாம வளர்ச்சியைத் தமிழ் இலக்கிய இயங்கியலாக வடிவமைத்துள்ளது திணை வாழ்வியல்.

3. ஒவ்வொரு திணையின் உரிப்பொருளும் உற்பத்தி உறவுகளின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இந்த வகையில், மருதத்தின் உரிப்பொருளான “ஊடலும் ஊடல் நிமித்தமும்“ என்பது அளவு மாற்றம் பண்பு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் என்பதை நிறுவுகிறது.

4. பொருள்முதல்வாத பார்வையின் ஊற்றுக் கண்ணாகத் தொல்காப்பியம் கட்டமைக்கும் திணை வாழ்வியல் விளங்குகிறது.

5. பொருளை மொழிய சொல் தோன்றுகிறது; சொல் பொருளை மொழிந்துகொண்டே இருக்கிறது. பொருள், சொற்களை வளர்த்துக்கொண்டே போகிறது. இந்த இயங்கியல் விதி மொழிக்குள்ளும் இலக்கியத்துக்குள்ளும் தொழிற்பட்டுக்கொண்டே இருக்கிறது.

6. தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைகளுக்கான அடிப்படைகள் உள்ளன எனக் காணுதல் சமூக வளர்ச்சி, மாற்றக்கூறுகளை உந்தித்தள்ள உதவக்கூடும். எனவே, அந்தந்த சமூகமும் தனது படைப்புகளுக்குள் மார்க்சீய இயங்கியல் விதிகளைத் தேடிக் கண்டடைதல் என்பது கண்டடைய வேண்டிய திசைவழிகளுக்கான செல்நெறிகளைக் கட்டமைக்க உதவலாம்.

இந்தக்கட்டுரையின் வழியாகக் கண்டறிந்த முடிவுகள் பின்வருமாறு:

1. ‘மொழி’ எனும் ஒற்றைச் சொல்லுக்குள்ளே தொட்டனைத்தூறும் பாங்கு இயங்கியல் நெறியின் அடிப்படையில் தன்னகத்தே செரித்துக் கொண்டுள்ளன.

2. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், பொருளியியல், மெய்ப்பாட்டியியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய ஒவ்வொரு இயலிலும் இடம்பெற்றுள்ள பொருள்முதல் சிந்தனைகள் பறவைப் பார்வையில் ஆய்ந்தறியப்பட்டுள்ளன.

3. மார்க்சியத் திறனாய்வு கொள்கையின் அடிப்படையான பொருள்முதல் சிந்தனை தொல்காப்பியத்தில் நீக்கமற நிறைந்துள்ளது.

இயங்கியல் நூல்கள்

1. இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், கழகப் பதிப்பு, சென்னை.

2. இளம்பூரணர் உரை, தொல்.பொருளதி. சாரதா பதிப்பகம், சென்னை, 2005.

3. சிவத்தம்பி. கா., பண்டைத் தமிழ்ச்சமூகம், என்.சி.பி.எச்., சென்னை. 2010

4. சுப்பிரமணியன். ச. வே, தொல்காப்பியம், தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2012.

5. துரை. சு., தமிழ் இலக்கிய ஆய்வில் மார்க்சீய நோக்கு, காவ்யா சென்னை.

6. மாதவன். சு., தொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைகளுக்கான அடிப்படைகள் நியூசெஞ்சுரியின் உங்கள் நூலகம் - மாதஇதழ், அக்டோபர் 2014.

7. Thaninayagam. s., 1997. Landscope and Poetry, International Institute of Tamil Studies, Chennai, 1997.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p150.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License