இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பண்டைத் தமிழக வரலாற்றில் தொல் தொண்டை மண்டலம்

முனைவர் சு. அ. அன்னையப்பன்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 002.


தொடர்ச்சி - பகுதி 3

தொண்டைநாட்டின் சிறப்புகள்

தொண்டைமண்டலப் பகுதியில் தமிழ்மொழியானது சிறப்புற்று விளங்குகிறது என்பதைப் பின்வரும் பாடல்வரி உணர்த்துகிறது:

"தமிழ்சேர் தொண்டை மண்டலமே" (தொ.ம.ச.7)

புகழ் மேலும் ஓங்கி நிற்க தங்களுக்கு ஒரு பழிச்சொல் ஏற்படாமல் இருக்க, எழுபது பேர் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் மூழ்கி மறைந்த வரலாற்றை வேதப்பொருளாக விளங்கும் திருவாலங்காட்டில் எழுந்த பதிகங்களைப் புகழால் நிலைபெற்ற தமிழில் வகுத்த பெருமையினை உடையது தொண்டை மண்டலமாகும். காரைக்கால் அம்மையார் தொழுது வணங்கிய ஆதி ஈசன் (ஆதி கும்பேஷ்வரர்) வீற்றிருக்கின்ற தொழுதாவூருக்கும் நடராசப்பெருமான் (சிவபெருமான்) வீற்றிருக்கும் திருவாலங்காட்டிற்கும் மிக மிகப் பக்கத்தில் உள்ள ஊர்ப் பழையனூராகும். அவ்வூர் மக்கள் சொன்ன சொல்லைத் தட்டாதவர்கள் என்பதைப் பின்வரும் தொண்டை மண்டல சதகப்பாடல் காட்டுகிறது:

“இன்னும் புகழ்நிற்கவே ஓர்பழிக்கு
ஆமற்று எழுபதின்மர்
துன்னும் தழல்புக்கு ஒளித்ததெல்லு
ஆஞ்கு அருதிப் பொருளாய்
உன்னும் புரிசைத் திருவாலங்
காட்டின் உரைபதிகம்
என்னும் தமிழில் வகுத்ததன்று
ஓதொண்டை மண்டலமே” (தொ.ம.ச.8)

“வஞ்சப்படுத்து ஒருத்தி
வாணாள் கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூர்
ஆலங்காட்டு எம்அடிகளே?” (திருமுறை.1 - 45-1)

என்று இவ்வரலாறு முதற்திருமுறையில் சுட்டப்படுகிறது.

“மாறுகொடு பழையனூர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகன்உயிர் இழப்பத் தாங்கள்
கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக்
குழியிலெழு பதுபேரும் முழுகிக் கங்கை
ஆரணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்பர்
அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின்கீழ் மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிறித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ” (சே. பு.15)

என்று இவ்வரலாற்றைச் சொல்லி வேளாளர்களின் பெருமை முழுமையாக உரைக்கவியலாது என்கிறது சேக்கிழார் புராணம் (15 வது பாடல்);


“நீலிதனக்கஞ்சி நின்ற வணிகேசனுக்காக்
கேலியபயங் கொடுக்குங்கை”

என்று திருக்கை வழக்கம் என்னும் நூல் இவ்வரலாற்றைக் கூறுகிறது. இங்ஙனம் தொண்டைமண்டலம் நிலைபெற்ற தமிழில் இவ்வரலாற்றினைத் திருவாலங்காட்டுப் பதிகமாகப் பாடப்பெற்ற சிறப்பினைக் கொண்டதாகும். எழுபது வேளாளர்கள் வாய்மை காத்து நெருப்பில் புகுந்த வரலாறு: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு தலத்திலிருந்தும் தொழுதாவூர் ஆதி ஈசன் (ஆதி கும்பேஷ்வரர்) தலத்திலிருந்தும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பழையனூர் என்னும் ஒரு சிற்றூர். இவ்வூரைச் சேர்ந்த வேளாளர்கள் சொன்ன சொல் தவறாத வாய்மையாளர்கள். ஒரு செட்டிமகன் தன் மனைவியை விட்டு வேறு ஒருத்தியை விரும்பியமையால் தன்னுடைய மனைவியைக் கொன்றுவிட்டான். இறந்தவள் பேய் வடிவம் கொண்டு கணவனைப் பழிவாங்க எண்ணினாள். வெளியூருக்குச் சென்று திரும்புகையில் வழியில் உள்ள ஒரு சத்திரத்தில் கணவன் தங்கினான். நீலி என்ற பெயருடன் பேய் வடிவத்தில் இருந்த அவன் மனைவி குழந்தையுடன் சென்று வழிமடக்கி, என்னை இம்மாலை நேரத்தில் தனியே விட்டுப் போவது சரியன்று என்றாள். அப்போது அங்கிருந்த பழையனூர் வேளாளர்கள் அவர்களுடைய உரையாடலைக் கேட்டு, நீலியின் பேச்சுக்கு மதிப்புக்கொடுத்து செட்டி மகனை நோக்கி, நீ இவளோடு இங்கு தங்குக. இவளால் உன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் நாங்கள் எழுபதுபேரும் எங்கள் உயிரைக் கொடுப்போம் என்று சொல்ல, அவர்களுடைய பேச்சைக் கேட்டு வணிகன் அன்று இரவு அவளுடன் தங்கினான். பெண் உருக்கொண்ட பேய் அவனைக் கொன்று மறைந்து போனது. வேளாளர்கள் மறுநாள் காலையில் வணிகன் இறந்து கிடந்ததைக் கண்டு துன்புற்றனர். அந்நிலையில் அவ்வெழுபது பேரும் தீக்குழியில் மூழ்கி உயிர் துறந்து தேவர்க்கு அமுதமாயினர் (இராமமூர்த்தி,2013:14 -15). நீலி முற்பிறவியில் நவஞ்ஞானி என்னும் அந்தணப் பெண்ணாய் இருந்தவள். தன் கணவன் தன்னையும் தன் பிள்ளையையும் கொன்றதால் பழிக்குப்பழி வாங்க எண்ணினாள். அவள் மறு பிறப்பில் திருவாலங்காட்டில் புரிசைக்கிழாருக்கு மகளாய்ப் பிறக்க, அவன் அவளைப் பேய் என்று நீக்கி வைத்தான். அலைந்து வாழும் அவள் திரிசனச் செட்டியாகப் பிறந்துள்ள தன் கணவனைக் கண்டு களித்து அவனைப் பலவாறு மயக்கினாள். அவன் தன் விருப்பத்திற்கு இணங்காமையைப் பழையனூர் வேளாளர்களிடம் முறையிட்டு அவர்கள் எழுபதுபேரையும் அவன் உயிர்க்குப் பிணையாக இருக்க இசையச் செய்தாள். அவ்வாறே அவ்வேளாளர்கள் பிணையிருப்பதாகத் திரிசனச் செட்டிக்குக்கூறி அவளுடன் இருக்கும்படிச் செய்தனர். பின் நீலி செட்டிமகன் தன் உயிருக்குப் பாதுகாப்பாக வைத்திருந்த மந்திர வாளையும் ஊர் அவையினரிடம் முறையிட்டு நீக்கினாள். பின்னர் நீலி அவன் உடன் இருந்து அவனைக் கொலை செய்து பழிதீர்த்து நீங்கி, செட்டியின் தாய் போல் வந்து வேளாளர்களைத் தீயில் முழுகச் செய்தாள். தீயில் விழாது எஞ்சிய வல்லாளன் என்ற ஒருவன் கழனிக்குச் சென்றுவிட, அவனுடைய மகளைப்போல நீலி, சென்று நடந்த செய்தியினைக் கூறி முழங்கையை உடையவர்க்குத் தம் கையில் உள்ள கொழு (காறு) என்ற சொல்லுவதற்கு முன்னரே, முன்னே சொன்ன சொல்லே தன் செயலுக்குக் குறை உடையது எனக் கருதி வல்லாளன் உயிர்விட்டான் என்பதைப் பின்வரும் பாடல் புலப்படுத்துகிறது:

“விழுவேன் எனச்சென்று வீழ்ந்தாரில்
ஓர் மைந்தன் வேறுபடவு
உழுவேலி யில்சென்று ஒருநீலி
முன்கையு உடையவர்க்குக்
கொழுவே படைக்கலம் என்றுசொல்லு
ஆமுனங் கூறிய சொல்
வழுவேயு எனப்பொன்ற வல்லாளன்
உந்தொண்டை மண்டலமே” (தொ.ம.ச.37)


வாய்மைப் பண்பில் சிறந்தவனான பழையனூர்க்காரி என்பான் ஏர்த்தொழிலுக்குத் துணை நிற்கும் களைக்கொத்து என்னும் கருவியை ஒவையாருக்குக் கொடுத்து அன்னமிட்டு நல்ல பாரி பறித்த எனத் தொடங்கும் ஒவையாரின் பாடலால் மகிழ்ந்து புகழப்பெற்றவன். இச்சிறப்பினை உடையவான மழையைப் போல வாரித்தருகின்ற காரியும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவன் என்பதை;

“ஏரின் இயற்றும் களைக் கோட்ட
யீந்தன்னம் இட்டுநல்ல
பாரி பறித்துஎன்னும் பாடல்கொண்டு
ஓன்பண்பு சேர்பழய
னூரில் இருப்பவன் எளவைதன்
பாடற் குவந்தபிரான்
மாரி யெனத்தரு கைக்காரி
யுந்தொண்டை மண்டலமே" (தொ.ம.ச.36)

என்ற பாடல் காட்டுகிறது.

பழையனூர்க்காரியின் குறிப்பு வருமாறு: சங்ககாலத்தைச் சார்ந்த மலையமான் திருமுடிக்காரி வேறு; இப்பாடலில் போற்றப்படும் பழையனூர்க்காரி வேறு. காசி வேளாண் குலத்தைச் சார்ந்த கொடை வள்ளல்; தொண்டைநாட்டுப் பழையனூரைச் சார்ந்தவன். பழையனூர்க்காரி, தன்னை நாடிவந்த ஒவையாரைத் தன்னிடம் சில நாட்கள் இருக்கச் செய்வதற்காக வேண்டி, களைக்கொத்து என்னும் கருவியினை அவருக்குக் கொடுத்து விருந்தளித்து அவரைப் போற்றி உபசரித்து வந்தான். ஒவையார் காரியினுடைய இவ்வாழமான அன்பினைப் போற்றியவராய், பின்னர் பாடிய பாரிபறித்த என்னும் வெண்பாப் பாடலில் காரியைப் போற்றிப் பாடியுள்ளார். அப்பாடல்

“பாரிபறித்த பறியும் பழையனூர்க்
காரியன் றீந்த களைக்கொட்டும் - சேரமான்
வாராயே வென்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும்
நீலச்சிற் றாடைக்கு நேர்
என்பதாகும்” (இராமமூர்த்தி, 2013: 50 - 51)

பாண்டியனுடைய நாட்டிலும் சோழனுடைய நாட்டிலும் சேரனுடைய நாட்டிலும் வியக்க வைக்கும் தெய்வீகச் செயல்கள் மிகுதியாக நடைபெற்றுள்ளன. சோழநாட்டிலும் பயிரிட விதைக்கப்பட்ட நெல்முளை அடியவர் வேடத்தில் வந்த சிவபெருமானுக்கு அமுதாகப் படைக்கப்பட்டது. ஆனால் தொண்டை நாட்டிலோ, உறுதிகொடுத்த வேளாளர் குலத்தவர் (எழுபதுபேர்) அனைவருமே வானவருக்கு அமுதமாயினர். எனவே, மேற்சொன்ன நாடுகள் அல்லாமல் தேவர் உலகினும் காண இயலாத அவ்வரிய செயல் நடைபெற்றதும் தொண்டைமண்லத்திலேதான் என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம்:

“மீனவர் நாட்டினுஞ் செம்பியர்
நாட்டினும் வில்லவர்கோன்
ஆனவன் நாட்டினு மிக்கதுஎன்
பார்கள் அதிசயமோ
கோன்அவன் நாட்டிம் முளையமுது
ஆகிற் குலவமுதார்
வானவர் நாட்டினும் மிக்கதன்று
ஓதொண்டை மண்டலமே” (தொ.ம.ச.15)


தன்னுடைய வழிபாட்டுத்திறத்தால் சிவபெருமான் தன் திருமுடியைச் சாய்த்து நிற்க அவருக்கு மாலை அணிந்தவருக்கும் இறைவனுக்குச் சந்தனக்காப்புச் செய்ய இயலாத நிலையில் தன்னுடைய முன்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்தளித்தவர்க்கும் ஒப்பாக யாரைக் கூறமுடியும்? பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் வாய்மை காத்தலுக்காகச் செந்தழலில் மூழ்கியதற்கும் தமிழ்ச்சுவை நுகர்ந்து இன்புற, உடல் முழுவதும் முறுக்குண்டு பொடியாகுமாறு மாய்ந்த மூன்றாம் நந்திவர்மனுக்கும் மேல் சொன்ன சோழ, பாண்டிய நாட்டுச்செயல்கள் அரிதாகுமோ, எளிதாகுமோ என்று சொல்ல வேண்டியது இல்லை. அத்தகைய எல்லாச் சிறப்புகளையும் கொண்டது தொண்டைமண்டலமே ஆகும் என்பதை;

“சாய்த்திட்ட அவர்க்குத் திருமேனி
முன்கையைச் சந்தனமாத்
தேய்த்திட்ட அவர்க்குஎவர் நேர்என்பர்
ஆலங்கஞ் செந்தழலிற்று
ஓய்த்திட்ட அவர்க்குச் சார்வாங்க
முந்திரி தூள்படவே
மாய்த்திட்ட அவர்க்குஅரிது ஓவுஎளிது
ஓதொண்டை மண்டலமே” (தொ.ம.ச.16)

என்ற பாடல் வழியாக மூன்றாம் நந்தி வர்மனுடைய வரலாற்றைக் காணமுடிகிறது. இதில் குங்குலியக்கலய நாயனார், மூர்த்தி நாயனார், எழுபது தொண்டைமண்டல வேளாளர் வரலாறு, நந்திவர்மனின் வரலாறு காணக்கிடக்கின்றது. நந்தி வர்மனின் வரலாறு: மூன்றாம் நந்திவர்மன் என்னும் பல்லவ மன்னன் தன்னுடைய செல்வத்தை எல்லாம் இரப்போருக்குத் தருவதைப் பொறுக்கமுடியாமல் அவனைக் கொல்ல எண்ணிய இவனுடைய சகோதரன், வசையாகக் கலம்பகம் பாடி அதில் ஒரு புலவனை அரசன் தனித்திருக்கையில் சுவரைத் துளைத்து, அதன்மூலம் கேட்குமாறு பாடலைக் கூறிவிட்டு ஓடச்செய்தான். அப்புலவன் கூறிய செய்யுளைக் கேட்டு, அவற்றை முழுமையாகக் கேட்க நந்திவர்மன் ஆவல் கொண்டான். ஒருநாள் நகரை அவன் வலம் வருகையில் தாசியொருத்தி அச்செய்யுளை வீணை மீட்டி மகிழ்ந்து பாடக்கேட்டான்; நூல் முழுமையும் கேட்க விழைந்தான்; நூல் முழுமையையும் கேட்க இடப்பட்ட நிபந்தனையையும் ஏற்றான். நூல் முழுதும் கேட்கும்போது இறுதிப்பாடலைக் கேட்ட அளவில் தன் உயிர் போய்விடும் என்பதையும் அவன் அறிந்தான். அந்நூலின் பாடல்களைக் கேட்பதற்காக, நந்திவர்மன் பந்தல்களைச் சுடலையளவு போடச்செய்தான்; தாசியை அழைத்து ஒவ்வொரு பந்தலில் ஒவ்வொரு பாடலைப் பாடக்கேட்டு வரும்போது அப்பந்தல்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டான். இருப்பினும் தமிழ்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக, மனம் சலியாது நூறாவது செய்யுளைக் கேட்க ஆவல் கொண்டு சிதையின் மேலிருந்து,

“வானுறு மதியை அடைந்ததுஉன் வதனம்
வையகம் அடைந்ததுஉன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுஉன் வீரம்
கற்பகம் அடைந்ததுஉன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் புகுந்ததுஉன் மேனி
யானும்என் கலியும் எவ்விடம் புகுவோம்
எந்தையே நந்தி நாயகனே” (ந.க.110)


என்னும் பாடலைக் கேட்கச் சிதை தீப்பற்றி எரிய, நந்திவர்மன் உயிர் நீங்கினான். தமிழுக்கு உயிர் கொடுத்த நந்திவர்மன் தொண்டைநாட்டு மன்னன் ஆவான் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. புகழேந்திப்புலவர், தொண்டை நாட்டவர் இவ்வுலகையே இலவசமாகப் பெற்றாலும் என்றைக்கும் பொய்யைச் சொல்ல மாட்டார்கள் என்று சொல்லிப் பரிசினைப் பெற்றுள்ளார் என்பதைப் பின்வரும் பாடலால் அறியலாம்:

“கேட்டாலும் இன்பாங் கிடைக்குங்கண்டு
ஈர்கொண்ட கீர்த்தியொடு
பாட்டால் உயர்ந்த புகழேந்தி
சொன்ன படியறிந்து
பூட்டார் சிலை மன்னன் வையம்
பெறினும் பொய் தான்உரைக்க
மாட்டார் எனச் சொன்ன நாட்டார்
திகழ்தொண்டை மண்டலமே” (தொ.ம.ச.17)

படையிலும் கொடையிலும் மேம்பட்டு விளங்கியவனான திருவேங்கடப்பகுதியில் வாழ்ந்து வந்த காளிம்பன் என்னும் சிற்றரசனைக் கம்பர் புகழ்ந்து பாடிட, அவன் அளித்த கிடைத்தற்கு அரிய முத்துகளைக் கம்பர் மெருகிடக் கடையில் கொடுத்து வாங்கினார். இத்தகைய அரிய முத்துகளை உழத்தியர் பண்ட மாற்றாக உப்பிற்கு அளிக்கும் அளவில் தரையில் முத்துகளை வாரி இறைக்கும்வண்ணம் தொண்டைமண்டலமாகும் என்பதை,

“படையிற் கொடையிற் பெரியொனை
யக்கணம் பாடக் கம்பர்
கடையக் கொடுத்திட வாங்கினன்
ஆலரும் மந்த முத்தைக்
கடையிற் கடைசியர் உப்பிற்கு
மாறக் களகன்என
மடையிற்று அரளஞ் சொரிவயல்
சூழ்தொண்டை மண்டலமே” (தொ.ம.ச.25)

என்ற பாடல் காட்டுகிறது. மேலும்,

“மலிதேரான் கச்சியு மாகடலும் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும் - மலிதேரான்
கச்சிபடுவ கடல்படா - கச்சி
கடல்படுவது எல்லாம் படும்”

என்னும் யாப்பருங்காலக்காரிகை மேற்கோள் பாடல் காஞ்சியின் உள்ள செல்வங்கள் கடலில் இல்லை. ஆனால், கடலில் உள்ள செல்வங்கள் எல்லாம் கொண்டது காஞ்சி மாநகரம் என்று உணர்த்தி காஞ்சியின் பெருமையைப் பேசுகிறது. காளத்தியப்பர் வள்ளல், தாயைவிட மிக்க கருணை உடையவர்கள் தங்கள் உடலைவிட்டு உயிர் நீங்குவதாயினும் தங்களின் கொள்கையினை விடமாட்டார்கள்; தங்கள் உடல் முழுமையுமாகத் தீயில் மூழ்குவர்; நிறைசூல் கொண்ட மனைவியின் முதுகில்மேல், வந்து வேண்டிய புலவருக்காக விருந்தளித்து மகிழ்வர்; புலவரின் வறுமையைத் தீர்க்கச் செல்வம் வழங்கி உதவ முடியாத நிலைக்கு அஞ்சிச் சீறுகின்ற நல்ல பாம்பின் வாயிலும் கைவிட்டு உயிர்விடத் துணிவர். இத்தகைய அரிய செயலைச் செய்தவர்கள் வாழ்ந்ததும் தொண்டை மண்டலத்திலேதான் என்பதை,

“தாயினு நல்ல தயையுடை
யோர்க டமதுடலம்
வீயினும் செய்கை விடுவர்கொல்லு
ஓதங்கண் மெய்ம்முழுதும்
தீயினும் வீழ்வர் முதுகினும்
சோறிட்டுச் சீறரவின்
வாயினும் கையிடு வாரவர்
காண்டுதொண்டை மண்டலமே” (தொ.ம.ச.14)

என்ற பாட்டு உணர்த்துகிறது.


இன்றைய திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூரில் வாழ்ந்த பெருஞ்செல்வர் காளத்தியப்பர் என்னும் வேளாளர். அவர் தான் பெற்ற செல்வத்தை இல்லை என்னாது உள்ளம் மகிழ்ந்து வழங்கி வறியவர் ஆனார். வள்ளலாய் வாழ்ந்தவர் இல்லை என்று சொல்லாமல் ஈந்து வறுமை அடைந்ததனால் வேறு ஊருக்குச் சென்று வாழ எண்ணி திருநின்றவூரை விட்டுப் புறப்பட்டார். வழியில் இரவுப் பொழுதைக் கழிக்க ஒரு சத்திரத்தில் தங்கினார். இவரிடம் பரிசு பெற வந்த மதுரகவிராயர் என்னும் புலவரும் அச்சத்திரத்திலே தங்கி இருந்தார். மதுரகவிராயர் பாடிய,

“நீளத் திரிந்துஉழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக்கு இருப்பாயோ நல்குரவே! - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்று இரு”

என்ற தனிப்பாடலைக் காளத்தியப்பர் கேட்டு, அப்பாடலின் சொல்லழகும் பொருளழகும் அறிந்து மகிழ்ந்தார். தம்மை நாடித்தேடிவரும் புலவர் ஏமாற்றம் காணக்கூடாது என்று எண்ணிய காளத்தியப்பர் மனைவியுடன் வீடு திரும்பிப் புலவரின் வருகைக்காகக் காத்திருந்தார். ஆனால், வருகின்ற புலவரின் வறுமையைப் போக்குதற்குத் தம்மிடம் பொருள் இல்லை என்று கூற மனம் இல்லாதவராய்,

“சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை” (குறள்.230)

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, தன்னுடைய உயிரைத் துறக்க எண்ணி வீட்டுத்தோட்டத்தில் இருந்த பாம்புப்புற்றில் கையினைவிட, புற்றில் இருந்த நாகம், நாகமணியை வள்ளல் காளத்தியப்பர் கையில் கொடுத்தது. விலைமதிக்க இயலாத அம்மணியைப் புலவருக்குக் கொடுத்துக் காளத்தியப்பர் மகிழ்ந்தார் (இராமமூர்த்தி, 2013:22-23). வீரபத்திர முதலியார் என்பவர் இரவர்களை வலிய அழைத்துத்தன் நிலத்தில் உள்ள வேலியை அகற்றிக் கரும்பெல்லாம் தின்னச்செய்து, இரவலர்களின் கால்களில் விழுந்து வணங்கி அவர்களைப் போற்றியதுடன், கரும்பு தின்னக்கூலியும் அளந்துகொடுத்து, குமண வள்ளலுக்கு ஒப்பாக விளங்கியவர். இவர் தொண்டைநாட்டில் மணவூர்க்கோட்டத்தைச் சார்ந்த கண்ணூரில் வாழ்ந்தவர். அங்ஙனம் கொடைத்தன்மையால் சிறந்துநின்ற வீரபத்திர முதலியார் வாழ்ந்ததும் தொண்டைமண்டலத்திலே ஆகும் என்பதை;

“வேலிய் அழித்துக் கரும்பைஎல்
லாம்தின்ன விட்டுஇரவோர்
காலில் வணக்கமும் செய்துஏத்திப்
பின்னும் கரும்புதின்னக்
கடல்இ யளந்தும் கொடுத்தான்
ஒருவன் குமணனைப்போல்
வால்இதின் மிக்க கொடையாளன்
உந்தொண்டை மண்டலமே” (தொ.ம.ச.81)

என்ற பாட்டு உணர்த்தும். முடி சூட்டிக் கொண்டார்க்கெல்லாம் இத்தன்மை உண்டோ? வறுமை துன்புறுத்த கெட்டுப்போனவர்கள் மற்றும் கவிதையினைப் பாடி வந்தவர்கள் ஆகியவர்க்கெல்லாம் பொற்கிழியினை அளித்துத் தட்டாமல் உதவிவந்த கூவம் என்னும் தியாக சமுத்திரம் என்ற ஊரினில் வாழ்ந்து மட்டார் எனத் தொடங்கும் பாடலைப் பெற்ற கூவத்து நாராயணன் என்பவரும் தொண்டை நாட்டவரே என்பதை,

“பட்டா பிடேகம் பரிந்தார்க்குஉண்டு
ஓவிந்தப் பான்மைகெடக்
கெட்டார் கவிசொல்லி வந்தோர்க்கொல்
லாம்பொற் கிழியனைத்துந்
தட்டான் உதவிடும் கூவம்தி
யாகச் சமுத்திரத்தின்
மட்டார் கவிகொண்ட மண்டலம்
காண் டொண்டை மண்டலமே” (தொ.ம.ச.46)

என்ற பாடலால் காணலாம். இவரை ஒட்டக்கூத்தர் புகழ்ந்து பாடியதை,

“மட்டாரும் செங்கழுநீர் மணிமார்பரை வாழ்த்தும் அந்தக்
கிட்டாத யாசகர் கிட்டிவந்த தால் அதைக்கேட்டு
முன்னாள்
பட்டோலை வாசித்து அவரவர்க்கு உள்ள பரிசில்
எல்லாம்
தட்டாது அளிப்பதும் கூவம் தியாக சமுத்திரமே” (தனிப்பாடல்)

என்ற பாடலில் காணமுடியும். கூவத்து நாராயணன் வாழ்ந்த கூவத்தைத் தியாக சமுத்திரம் என்று பாடி அச்சமுத்திரத்தில் தூண்டில் இட்டதாகப் பாடிய புலவர்க்கு அவர் பொன்மீன் செய்து வழங்கினார். எனவேதான் ஒட்டக்கூத்தரும் கூவம் தியக சமுத்திரம் என்று தன் பாடல் ஒன்றில் கூறியிருப்பது கூவத்து வள்ளலின் கொடை வண்மையைப் புலப்படுத்துகிறது. ஒப்பிலாமணிப்புலவர்,

“இடுவோர் சிலர்இங்கு இரப்போர் பலரால்
கெடுவாய் நமனே கெடுவாய் - படுபாவி
கூவத்து நாரணனைக் கொன்றாயே கற்பகப்பூங்
காவெட்டல் ஆமோ கரிக்கு”


கூவத்து நாராயணன் இறந்த போது, அவரின் புகழினைத் திறம்படப்பாடி இருக்கிறார் (இராமமூர்த்தி, 2013: 61 - 62)தமிழ்ப்புலவர்களுக்காகத் தேர் கொடுத்தவனும், குதிரை கொடுத்தவனும் மனைவியைச் சேவையிட அல்லது அடியாராகக் கொடுக்கக் தலையைத் தந்தவனும், ஊரைக் கொடுத்தவனும், உயிரை ஈந்தவனும், உதைகொடுக்க மார்பினைக் காட்டியவனும் ஆகிய கொடைத்திறம் மிக்க வள்ளல்கள் அனைவரும் தொண்டைமண்டலத்தினரே என்பதைப் பின்வரும் பாடலால் காணலாம்:

“தேர்கொடுத் தோனும் பரிகொடுத்
தோனுந் திருமனையிற்
றார்கொடுத் தோனும் தலைகொடுத்
தோனும் உதை கொடுக்க
மார் கொடுத் தோனும் அனைவோருள்
ஆர்தொண்டை மண்டலமே” (தொ.ம.ச.93)

தொண்டை நாட்டவராகிய நின் தலைவர் உலகம் முழுவதும் பெறுவதானாலும் தவறியும் பொய் சொல்லமாட்டார் என்பதைப் பின்வரும் புகழேந்தியின் தனிப்பாடல் வரிகள் காட்டுகின்றன:

“நையும் படியே நாம்கொற்ற
நம்கோன் செஞ்சி வரைமீதே
ஐயம் பெறுநுண் இடைமடவாய்
அகிலின் தூப முகிலன்று;
பெய்யும் துளியோ மழையன்று;
பிரசத் துளியே; பிழையாது
வையம் பெறினும் பொய்யுரைக்க
மாட்டார் தொண்டை நாட்டாரே” (புகழேந்தியின் தனிப்பாடல். 130)

வடதமிழகத்தை அருவாநாடு என்றும் அருவா வடதலைநாடு என்றும் தமிழ் இலக்கியங்களில் வழங்கியதைக் காண்கிறோம். இதனைப் பின்வரும் பாடல் மூலம் அறியலாம்:

‘அருவர் அருவர் எனாவி றைஞ்சினர்
அபயம் அபயம் எனாந டுங்கியே’ (கலிங்கத்துப்பரணி)

‘ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்துவட நாடர்
அருவர் அருவர்என அஞ்சி - வெருவந்து
தீத்தீத்தீ என்றயர்வர் சென்னி படைவீரர்
போர்க்கலிங்க மீதெழுந்த போது’ (புலவர்.அ.நக்கீரன்,2008:40).

தொண்டைநாட்டு வடவேங்கடமலை

சங்க இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் வடவேங்கடமலையின் சிறப்புகளைப் பற்றியும் வேங்கடமலை தொண்டை நாட்டிற்கு உரியதாகவும் கூறப்பட்டுள்ளன. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி வேங்கடக்கோட்டம் என்பது தொண்டை மண்டலத்தின் கோட்டங்களுள் திருப்பதி மலையைச் சூழ்ந்த நாட்டுப்பகுதியாகும். வேங்கடம் என்பது தமிழ் வழங்கும் நிலத்துக்கு வடஎல்லையான திருப்பதிமலை (சென்னைப்பல்கலைக்கழகம்,1982:3819) என்று உரைக்கிறது. வரலாற்று முறைத் தமிழ்இலக்கியப் பேரகராதி, வேங்கடம் என்பது திருவேங்கடமலை (திருப்பதிமலை) (வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, 2002 : 2333) எனக் கூறுகின்றது. அபிதான சிந்தாமணி வேங்கடம் என்பது தமிழ்நாட்டிற்கு வடக்கின்கண் எல்லையாக உள்ள மலையாகும் (சிங்காரவேலு முதலியார், 2004 : 1830) என்று காட்டுகின்றது.

சங்க இலக்கியங்களில் வேங்கடம் என்பதற்கும், வேங்கடமலை என்பதற்கும் பற்பல சான்றுகள் உள்ளன. அவைகள் வேங்கடமலையின் சிறப்புகளையும் தமிழகத்தின் வடஎல்லையினையும் குறிக்கின்றன என்பதைப் பின்வரும் பாடல்கள் மூலம் அறியலாம்:

“மடவை மன்ற நீயே; வடவயின்” (அகம்.27:7)

“விழவுடை வழுச்சீர் வேங்கடம் பெறினும்” (அகம்.61:13)

“வியந்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்” (அகம்.83:10)

“காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்” (அகம்.209:9)

“செந்நுதல் யானை வேங்கடம் தழீஇ” (அகம்.265:21)

“வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டுஅவர்” (அகம்.393:20)

“வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்” (சிலம்பு.11:41)

“வேங்கட விறல் வரைப்பட்ட” (புறம்.385:11)

“கல்இழி அருவி வேங்கடம் கிழவோன்” (புறம்.389:11)

“வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென” (புறம்.391:7)

“கல்இழி அருவி வேங்கடக் கிழவோன்” (புறம்.389:1)

“ஒலிவெள் அருவி வேங்கட நாடன்” (புறம்.381:22)

“வேங்கட வைப்பிற் சுரன்இறந் தோரே” (அகம்.141:29)

“வேங்கட மலையும் தாங்கா விளையுள்” (சிலம்பு.6:30)
துணைநூல் பட்டியல்

1. ஆரூர்தாஸ்., 2008, திருக்குறள் அகராதி மூலமும் சொல்லாக்கமும், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

2. இராசமாணிக்கனார், மா., 2008, தமிழக வரலாற்று வரிசை - 5 பல்லவ வரலாறு, சென்னை: அமிழ்தம் பதிப்பகம்.

3. கதிரைவேற்பிள்ளை, நா., 2009, தமிழ்மொழி அகராதி, சென்னை: சாரதா பதிப்பகம்.

4. சந்தியாநடராஜன்., 2004, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, சென்னை: சந்தியா பதிப்பகம்.

5. சாந்தி சாதனா., 2001, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி மூன்றாம்தொகுதி, சென்னை: சாந்தி சாதனா.

6. சாந்தி சாதனா., 2001, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி இரண்டாம் தொகுதி, சென்னை: சாந்தி சாதனா.

7. சாந்தி சாதனா., 2001, வைணவ உரைநடை வரலாற்றுமுறைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் தொகுதி, சென்னை: சாந்தி சாதனா.

8. சாந்தி சாதனா., 2002, தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி முதற் தொகுதி, சென்னை: சாந்தி சாதனா.

9. சாந்தி சாதனா., 2002, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி ஐந்தாம் தொகுதி, சென்னை: சாந்தி சாதனா.

10. சாந்தி சாதனா., 2003, தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி இரண்டாம் தொகுதி,சென்னை: சாந்தி சாதனா.

11. சாந்தி சாதனா., 2003, தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி இரண்டாம் தொகுதி, சென்னை: சாந்தி சாதனா.

12. சாந்தி சாதனா., 2005, காங்கேயன் செய்த உரிச்சொல் நிகண்டு, சென்னை: சாந்தி சாதனா.

13. சிங்காரவேலு, ஆ., 2004, அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு), சென்னை: சீதைபதிப்பகம்.

14. சிங்காரவேலு, ஆ., 2004, அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு), சென்னை: சீதைபதிப்பகம்.

15. சுப்பிரமணியன், ச.வே., 2003, பத்துப்பாட்டு, கோவிலூர்: கோவிலூர் மடாலயம்.

16. சுப்பிரமணியன், ச.வே., 2004, சிலப்பதிகாரம், சென்னை: கங்கை புத்தகநிலையம்.

17. சுப்பிரமணியன், ச.வே., 2006, சங்க இலக்கியம் (முழுவதும்), சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

18. சுப்பிரமணியன், ச.வே., 2007, பன்னிரு திருமுறை, சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.

19. சுப்பிரமணியன், ச.வே., 2009, அகநானூறு, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

20. சுப்பிரமணியன், ச.வே., 2009, கலித்தொகை, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

21. சுப்பிரமணியன், ச.வே., 2009, நற்றிணை தெளிவுரை, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

22. சுப்பிரமணியன், ச.வே., 2009, பதிற்றுப்பத்து, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

23. சுப்பிரமணியன், ச.வே., 2009, புறநானூறு தெளிவுரை, சிதம்பரம்: மெய்யப்பன் பதிப்பகம்.

24. செளந்தரபாண்டியன், சு., 1997, தொண்டைமண்டல வரலாறுகள், சென்னை: அரசினர் கீழ்த்திசைச்சுவடிகள் நூலகம் (அ.கீ.சு.நூ).

25. நக்கீரன், அ., 2000, தமிழ் வரலாறு முதற் பகுதி, சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

26. நக்கீரன், அ., 2008, தமிழ் வரலாறு இரண்டாம் பகுதி, சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

27. மருதநாயகம், ப.(பதி.)., 2011, எல்லீசரின் தமிழ் யாப்பிலக்கணம் (A Facsimile Edition of Ellis’ Treatise on Tamil Prosody), சென்னை: காவ்யா.

28. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி - 6, சென்னை: மக்கள் வெளியீடு.

29. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 1, சென்னை: மக்கள் வெளியீடு.

30. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 4, சென்னை: மக்கள் வெளியீடு.

31. வேங்கடசாமி, மயிலை சீனி., 2001, மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி-3, சென்னை: மக்கள் வெளியீடு.

32. வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, சமயங்கள் வளர்த்த தமிழ், சென்னை: எம். வெற்றியரசி.

33. வேங்கடசாமி, மயிலை சீனி., 2002, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 5, சென்னை: மக்கள் வெளியீடு.

34. வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, சமணமும் தமிழும், சென்னை: வசந்தா பதிப்பகம்.

35. வேங்கடசாமி, மயிலை சீனி., 2003, மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி - 2, சென்னை: மக்கள் வெளியீடு.

36.வேங்கடசாமி, மயிலை சீனி., 2004, பெளத்தமும் தமிழும், சென்னை: நாம் தமிழர் பதிப்பகம்.

37. வேங்கடராமன், கா. கோ., 2006, தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை: கலையக வெளியீடு.

38. வையாபுரிப்பிள்ளை., 1982, சென்னைப் பல்கலைக்கழகப்பேரகராதி (TAMIL LEXICON), சென்னை: சென்னைப் பல்கலைக்கழகம்.

(நிறைவுற்றது)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p225b.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License