இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பண்டைத் தமிழகத்தின் செந்தமிழ்நிலம்

முனைவர் சு. அ. அன்னையப்பன்
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620 002.


தொல்காப்பியர் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ்பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இருவழக்கிலுள்ள எழுத்துக்களையும் சொற்களையும் பொருட்பண்புகளையும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். இவர் செய்யுள் இயற்றுவதற்குரிய சொற்கள் நான்காகும் என்கிறார். அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்காகும் என்பதை,

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச்சொல்லே" (தொல்.எச்.880)

என்ற நூற்பாவில் சுட்டிக்காட்டுகிறார். இக்கூற்றை,

அதுவே

"இயற்சொல் திரிசொல் இயல்பிற பெயர்வினை
எனவிரண் டாகும் இடைஉரி யடுத்து
நான்குமாந் திசை வடசொல் அணுக வழி (நன்.270)

என்று நன்னூலும்,

"இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே (முத்து.வீ.ஒ.48)

என்று முத்துவீரியமும் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் செந்தமிழ்நிலத்து மொழியாய் திரிதல் இல்லாமல் கற்றார்க்கும் கல்லாதார்க்கும் தம்பொருள்களை எளிதில் விளக்கும் தன்மையையுடைய உலகு வழக்குச் சொற்களே இயற்சொற்கள் எனப்படும் என்கிறார். இவர் செந்தமிழ்நிலத்தில் வழங்கும் வழக்காற்றுச் சொற்களைப் பற்றிக் கூறுகின்றபொழுது,


அவற்றுள்

"இயற்சொல் தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே (தொல்.எச்.881)

என்று குறிப்பிடுகிறார். இவர் இயற்சொல் என்பது கல்வி கற்றவர்களுக்கும் கல்வி கல்லாதவர்களுக்கும் இயல்பாக விளங்கும் என்று காட்டுகிறார். இதனை,

"செந்தமி ழாகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்" (நன்.271)

என்று நன்னூலும்,

"இயற்சொல் என்பது இயல்பில் திரிபிலா
தான் எளிது எவர்க்கும் தன்பொருள் விளக்கவே" (தொன்.வி.43)

எனத் தொன்னூல் விளக்கமும்,

அவற்றுள்

"செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்" (மு.வீ.ஒ.49)

என்று முத்துவீரியமும் இயற்சொற்களுக்கு இலக்கணம் கூறுகின்றன. இவைகள் செந்தமிழ்நிலத்தில் வழங்கும் வழக்காற்றுச் சொற்களுக்கும் உலக வழக்குச் சொற்களுக்கும் இலக்கணங்களாகும்.

செந்தமிழ்நிலம் என்பதற்கு உரையாசிரியர்கள் அவரவர் விருப்பத்திற்குக்கேற்ப இடவரையறை செய்கின்றனர். செந்தமிழ்நிலம் என்பது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாகும் என்று சேனாவரையர் குறிப்பிடுகின்றார். இவர் சோழநாட்டைச் செந்தமிழ்நிலம் என்று சுட்டிக்காட்டுகிறார். இவர் குறித்துக்காட்டுகின்ற சோழநாட்டினையே செந்தமிழ்நிலம் என்று இளம்பூரணர், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், யாப்பருங்கலக்காரிகை உரையாசிரியர் ஆகியோரும் கூறுகின்றனர். நன்னூலுக்கு உரைவகுத்த சங்கர நமச்சிவாயர் பாண்டியநாடே செந்தமிழ்நாடு என்கிறார். தேவநேயப்பாவாணரும் பாண்டியநாட்டையே செந்தமிழ்நிலம் என்று காட்டுகிறார். ஆனால் தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர் தெய்வச்சிலையார் வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரவியுள்ள அகன்ற தமிழ்நாடே செந்தமிழ்நிலம் எனத் தெளிவுப்படுத்துகிறார்.


தொல்காப்பியத்தில் செந்தமிழ்நிலம் என்று பாண்டிய நாட்டையோ சோழ நாட்டையோ தொண்டை நாட்டையோ தனித்தனியாகக் குறித்துக்காட்டவில்லை. தொல்காப்பியத்தில் தமிழ்நாடானது பலபகுதிகளை உள்ளடக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் தமிழ்நிலமாக இருந்துள்ளது. அது பரந்து விரிந்த நிலையில் இருந்துள்ளது. அந்த நிலப்பகுதிகளில் செந்தமிழ்பேசும் மக்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று இருவழக்கில் உள்ள செந்தமிழ் மொழிச் சொற்களைப் பேசியுள்ளனர். அவர்கள் பேசியமொழி செந்தமிழ் மொழியாகும் என்பதை இங்கு உணரவேண்டும். எனவே, செந்தமிழ்நிலம் என்பது வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரவியுள்ள அகன்ற நிலப்பகுதியே ஆகும். இங்கு செந்தமிழ்நிலம் என்று தெய்வச்சிலையார் கூறுகின்ற கருத்தே ஏற்புடையதாக உள்ளது. செந்தமிழ்நிலம் என்பதற்குத் தெய்வச்சிலையார் கூறுகின்ற கருத்துப் பின்வருமாறு அறியலாம். செந்தமிழ்நாடாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணம் காணாமையானும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்களூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரிநிலமாதல் வேண்டும் என்பர்.

தமிழ்கூறும் நல்லுலகம் எனச் சிறப்புத்தன்மையாலும் கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தெற்கெல்லை கூறியதனால் குமரியின் தெற்காகிய நாடுகளை ஒழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ்நிலம் என்று தெய்வசிலையார் கூறுகிறார். எனவே, தெய்வச்சிலையாரின் கூற்று ஏற்புடையதாக இருக்கின்ற காரணத்தினால் இவ்வாய்வில் அவருடைய கூற்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பன்னிருநாடுகள்

தொல்காப்பியர் திசைச்சொல்லுக்கு இலக்கணம் கூறுகின்றபொழுது, செந்தமிழ்நிலத்தில் பன்னிரண்டுநாடுகள் இருக்கின்றன. அந்நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு மட்டுமே பொருள்விளங்குமாறு வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும் என்பதை,

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி" (தொல்.எச்.883)

என்ற நூற்பாவில் அவர் குறிக்கிறார். இதனை,

"செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்மொழி நிலத்தினும்
தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப" (நன்.273)

என நன்னூலும்,

"செந்தமிழ் நிலனைச் சேர்ந்த ஈராறு
நிலத்தினும் தங்குறிப்பின் திசைக்கிளவி" (மு.வீ.ஒ.52)

என்று முத்துவீரியமும் உணர்த்துகின்றன. தொல்காப்பிய இந்நூற்பாவிற்கு உரைகூறுகின்ற உரையாசிரியர்களும் நன்னூலுக்கு உரைகூறுகின்ற உரையாசிரியர்களும் பல்வேறு விளக்கங்களைக் கூறுகின்றனர். இதனைப் பின்வரும் பகுதியில் காணலாம். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடு பன்னிரண்டாகும். அந்நாட்டகத்து மக்களுக்கு மட்டுமே பொருள்விளங்குமாறு வழங்கும்சொல் திசைச்சொல் எனப்படும் என்கிறார். இவர் திசைச்சொற்களை வட்டார வழக்குச் சொற்கள் எனப்படும் என்கிறார்.


யாப்பருங்கலக்காரிகை உரையில் கொடுந்தமிழ்நிலம் பன்னிரண்டு என்று காட்டப்படுகின்றது. இதனைப் பின்வரும் பாடலில் காணலாம்:

"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி

பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண் ’ (யா.கா. உரை.57)

தமிழ் ஒழிநிலம் பதினாறு என்பது சங்கர நமச்சிவாயர் கருத்தாகும். மயிலைநாதரும் (நன்.272) வைத்தியநாததேசிகரும் (இ.வி.174) பதினேழு என்று கூறுவர் (அ.தாமோதரன்,1999:327) நன்னூலூக்கு உரைகூறும் ஆறுமுகநாவலர்: செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலங்களிலும் பதினெண் மொழிகளுள்ளே தமிழ்நிலம் ஒழிந்த நிலங்களிலும் உள்ளோர் தங்குறிப்பினவாய் அத்திசைகளினின்றும் செந்தமிழ்நிலத்து வந்து வழங்குவன திசைச்சொல் என்று சொல்லுவர் புலவர் என்கிறார் (ஆறுமுகநாவலர்,1992:23-24). தண்டபாணிதேசிகர், செந்தமிழ்நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ்நிலத்தின் கண்ணும் பதினெண்மொழியுள் தமிழும் மேற்கூறும் வடசொற்குக் காரணமாகிய ஆரியமொழியும் ஒழிந்த பதினாறுமொழியும் வழங்கும் பதினாறு நிலத்தின்கண்ணும் உள்ளோர் தங்குறிப்பினவாய்ச் செந்தமிழோர் குறிப்பினவன்றி அத்திசைகளினின்றும் செந்தமிழ்நிலத்து வந்து வழங்குவன திசைச் சொல் என்று கூறுவர் புலவர் என்கிறார் (தண்டபாணிதேசிகர்,2008:225). வில்வபதி, செந்தமிழ்நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளிலும் பதினெட்டுமொழிகளுள் தமிழ்ஒழிந்த ஏனைய மொழிகள் வழங்கும் நாடுகளிலும் வாழும் மக்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்குகின்றனரோ அதே பொருளில் அச்சொற்கள் தமிழில் வந்து வழங்குமானால் அவை திசைச்சொற்கள் எனப்படும் என்கிறார் (வில்வபதி,2003:306). தொல்காப்பியர் குறிப்பிடுகின்ற பன்னிரண்டு நாடுகள் பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு எனத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பால் ஈறாகும் என்கிறார்.


செந்தமிழ்நிலம் அல்லாத பிற பன்னிரண்டு நிலங்களை அகத்தியச்சூத்திரத்தால் பின்வருமாறு அறியலாம்:

"குடபால் இருபுறச் சையத்துடன் உறையுபு
கூரும் தமிழ்திரி நிலங்களும்
முடியுடை மூவர் இருநில ஆட்சியின் அரசுமேம்
பட்ட குறுநிலக் குடுமிகள்
பதின்மரும் உடனிருப்பிருவரும் படைத்த
பன்னிருதிசையில் சொன்னய முடையவும்" (அகத்தியச்சூத்திரம்)

இவைகள் குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூவகமும் சிங்களமும் சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும் கிழக்குப்பட்ட கருநடகமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும் (சிவலிங்கனார்,1988:19-27). இதனைப் பின்வரும் நூற்பாமூலம் அறியலாம்:

‘கன்னித் தென்கரைக் கடற்பழந் தீபம்
கொல்லங் கூபகம் சிங்களம் என்னும்
எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம்
கலிங்கம் தெலுங்கம் கொங்கணம் துளுவம்
குடகம் குன்றகம்’. அகத்தியர் (இராவகவையங்கார்,1941:16 - 17)

துணைநூல் பட்டியல்

1. ஆறுமுகநாவலர்., 1992, நன்னூல் காண்டிகையுரை சொல்லதிகாரம், சென்னை: முல்லை நிலையம்.

2 ஆறுமுகநாவலர்., 2005, சூடாமணி நிகண்டு, சென்னை: வசந்தா பதிப்பகம்.

3. இராகவையங்கார்., 1947, குறுந்தொகை விளக்கம், சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

4. இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

5. இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் சொல்லதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

6. இராமசுப்பிரமணியம், வ.த., 2008, தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் விளக்கவுரையும், சென்னை: பூம்புகார் பதிப்பகம்.

7. சாமி ஐயர்,சு., 2003, யாப்பருங்கலக்காரிகை, அண்ணாமலை நகர்: அண்ணாமலை பல்கலைக்கழகம்.

8. சிவலிங்கனார், ஆ., 1988, தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைவளம் எச்சவியல், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

9. சிவலிங்கனார், ஆ., 1988, தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைவளம், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

10. சுந்தரமூர்த்தி, கு., 1972, முத்துவீரியம், திருநெல்வேலி, சென்னை: திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

11. தண்டபாணி தேசிகர், ச., 2003, நன்னூல் விருத்தியுரை, சென்னை: பாரிநிலையம்.

12. தண்டபாணி தேசிகர், ச., 2008, நன்னூல் விருத்தியுரை, சென்னை: சாரதா பதிப்பகம்.

13. தண்டபாணி தேசிகர், ச., 2008, நன்னூல் விருத்தியுரை, சென்னை: சாரதா பதிப்பகம்.

14. தாமோதரன்., 1999, நன்னூல் மூலமும் விருத்தியுரையும், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

15. தாமோதரன்., 1999, நன்னூல் மூலமும் விருத்தியுரையும், சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.

16. மெக்கென்சிகாபன் அய்யர், ஜி., 1891, வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம் மூலமும் உரையும், சென்னை: அடிசன் பதிப்பகம் & கோ.

17. வில்வபதி, கோ., 2003, நன்னூல் மூலமும் உரையும், சென்னை: பழனியப்பா பிரதர்ஸ்.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p228.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License