இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் சிலேடை


முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


முன்னுரை

’அணி’ என்ற சொல்லுக்கு ’அழகு’ என்பது பொருள். கம்பர் தம் காப்பியத்தில் வேற்றுமை பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, மடக்கணி, ஒப்புவினை புணர்ப்பு அணி, ஏகதேச உருவக அணி, உருவக அணி, உவமை அணி, அலங்கார அணி, குறிப்பு மொழி அணி, தன்மை நவிற்சி அணி, உடன் நவிற்சி அணி, பிற குறிப்பு அணி, மேல் மேல் முயற்சி அணி அலங்கார வினோதங்கள், அவநுதி அணி, எடுத்துக்காட்டு உவமை அணி, உயர்வு நவிற்சி அணி என பல அணிகளைக் குறித்துள்ளார். அவற்றுள் ஒன்று சிலேடை அணியாகும். கம்பர் தன் காப்பியமான கம்பராமாயணத்தில் சிலேடைஅணி குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்வோம்.

அணி இலக்கணம்

புலவர்கள் தன் கற்பனைத் திறத்தாலும், புலமையாலும், சொல்லிலும், பொருளிலும் அழகு சேர்த்து செய்யுள் இயற்றுகின்றனர். இத்தகைய அணிகளைப் பற்றி கூறும் நூலே ’அணியிலக்கணம்’ ஆகும்.

அணிகளின் வகைகள்

அணியானது சொல்லணி, பொருளணி என இரு வகைப்படும். சிலேடை, மடக்கு, யமகம், திரிபு முதலியன சொல்லணியின் வகைகளாகும். உவமை, உருவகம், முதலானவை பொருளணியின் வகைகளாகும்.

சிலேடை அணி

சிலேடை ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது “சிலேடை” எனப்படும். இதனை “இரட்டுற மொழிதல்” என்றும் கூறுவர்.

"ஒருவகைச் சொற்றொடர் பல பொருட்பெற்றி
தெரிதர வருவது சிலேடையாகும்" (தண்டியலங்காரம் 76)

சிலேடை அணி செம்மொழிச் சிலேடை என்றும், பிரிமொழிச் சிலேடை என்றும் இரு வகைப்படும்.

"அதுவே செம்மொழி பிரிமொழி
யெனவிரு திறப்படும்" (தண்டியலங்காரம் 77)


செம்மொழிச் சிலேடை

ஒரு சொற்றொடரில் உள்ள சொற்கள், பிரிக்கப்படாமல் அப்படியே நின்று பல பொருள் தருவது “செம்மொழிச் சிலேடை” எனப்படும்.

சீதையைத் தேடிச் செல்லும் வானரர், விந்திய மலைப்பக்கம் சென்று பார்த்த போது, அம்மலை சிந்தூரம் எனும் பொடியுடன் மணிகள் பொருந்தி அந்திவானம் போல் தோன்றுதலாலும், பாம்பு - திங்கள் - ஆறு ஆகியவை பொருந்தி இருத்தலாலும் சிவன் முடியை ஒத்திருந்தது.

"சிந்து ராகத் தொடும் திரள்மணிச் சுடர் செறிந்து
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினொடு" (பிலம் புக்கு நீங்கு படலம் 814)

விந்திய மலைக்கும், சிவனுக்கும் பொதுவான செய்திகளைக் கூறி, இரு பொருளான சிலேடை அணி உடையதாகவே அமைந்துள்ளது. செந்நிறச் சிந்தூரப் பொடியும், செம்மணிகளும் உடைமையால் மலை செந்நிறமுடையதாகத் தோன்றுகிறது. ’சிவன் எனும் செம்மேனி அம்மான்’ சிவனும் செந்நிறத்தான். மலையிலும் பாம்பு உள்ளது, சிவனின் தலையிலும் பாம்பு உள்ளது. மலையில் இருந்து ஆறு தோன்றும், சிவனின் தலையிலும் பாம்பு, திங்கள், கங்கை ஆறு உள்ளது. ஆகவே சிவனும், விந்திய மலையும் ஒப்புமை உடையனவாகும்.

மற்றொரு பாடலாக, ஆறு செல் படலத்தில் சீதையாகியப் பெண்ணை நாடிச் சென்றவர்கள் பெண்ணை அடைந்தனர். அதாவது, பெண்ணை ஆற்றை அடைந்தனர். மணல் மேடாகிய முலைகளையும், ஆம்பலாகிய இதழ் வாயினையும் முத்துக்களாகிய பற்களையும் உடையது.

"புள் நைவெம்முலைப் புள்ளினம் ஏய்தடத்து
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய்
வண்ண வெண் நகைத் தரள வாள் முகப்
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார்" (ஆறுசெல்படலம் 896)

உவரிகைகளிலே குறைவில்லாமல் விடப்பட்ட சாளரங்களில் இருந்து அழுத பெண்கள் கூண்டுக்கிளிகள் போல் காணப்பட்டனர். சொரிந்தது மாடங்களும் இராமனுக்கு இறங்கி அழுதது போல் இருந்தது.

"மன் நெடுங் குமரன்மாட்டு அழுங்கி மாடமும்
பொன் நெடுங்கண் கழித்து அழுவ போன்றவை" (நகர்நீங்கு படலம் 485)

மாடங்களின் கண்ணீர் இடங்கள் நீர் விழுந்து குழியா என இது சிலேடை.

இராமனும், சீதையும் சேர்ந்து கங்கையில் நீராடுவதாகப் பாட்டு. (சிவபெருமானும் இராமனும்) சிவபெருமானுக்கும், இராமனுக்கும் சிலேடை).

"வெங் கண் நாகக் கரத்தினன் வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன் கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்" (கங்கைப்படலம் 627)

திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான். சிவபெருமானைக் குறிக்கும் போது, நாகக் கரத்தினம் என்பது கொடிய பாம்புகளை அணிந்தவன் என்றும், கங்கைவார் சடை கற்றையன் என்பது கங்கை ஒழுகும் நீண்ட சடைத் தொகுதியை உடையவன் என்றும், மங்கை காண நின்று ஆடுகிறான் என்பது உமாதேவி காண, நின்று கூத்தாடுகிறான் என்றும், எளிதில் பொருள்படும். இராமனைக் குறிக்கையில், இவை முறையே, கொடிய கண்களை உடைய யானையின் துதிக்கைப் போன்ற கைகளை உடையவன் என்றும், தவக்கோலத்துக்கு ஏற்பப் புனைந்த சடைமுடியில் விழும் போது, கங்கை நீர் ஒழுகியதென்றும், சீதைக்காண நின்று நீராடினான் என்றும் பொருள்படும்.


பிரிமொழிச் சிலேடை

ஒரு சொற்றொடரில் உள்ள சொற்களை வேறு வேறு வகையாகப் பிரித்துப் பல பொருள் கொள்வது “பிரிமொழிச் சிலேடை” எனப்படும்.

சீதையின் அழகு குறித்துச் சூர்ப்பணகை, இராவணனிடம் கூறும் போது,

“இந்திரன் சசியைப் பெற்றான் இருமூன்று வதனத்தோன்தன்
தந்தையும் உமையைப் பெற்றான் தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான் சீதையைப் பெற்றாய் நீயும்
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா” (சூர்ப்பணகை சூழ்ச்சிப்படலம் 626)

இப்பாடலில் கடைசி வரி இரண்டு அர்த்தங்களைக் கொண்டதாக உள்ளது. இந்திரனுக்கு இந்திராணி, ஆறுமுகக் கடவுளின் தந்தைக்குப் பார்வதி, தாமரைக் கண்ணனாகியப் பெருமாளுக்கு லட்சுமி போன்று, உனக்கும் சீதை கிடைத்து விட்டால், உன்னோடு அவர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், உயர்வு உனக்குத்தானே தவிர, அவர்களுக்கு இல்லை.

’அந்தரம் பார்க்கின் நன்மை, அவருக்கு இலை, உனக்கே ஐயா’

என்று கொண்டால், இராவணன் சீதை ஜோடிதான் உயர்ந்தது மற்றும் மூவரின் ஜோடியும் நன்மை பயவாதது என்ற பொருள்.

இன்னொரு விதமாக இதே வரியைப் படித்தோமானால்

’அந்தரம் பார்க்கின் நன்மை அவருக்கு, இலை உனக்கு ஐயா’

என்று கொண்டு எல்லா நன்மைகளும் அந்த மூவருக்கும்தானேத் தவிர, சீதையைப் பெற்றதால் உனக்கு ஒரு நன்மையும் இருக்கப் போவதில்லை என்ற பொருளும் தொனிக்கும்.


சூர்ப்பணகை, இராவணனிடம் மும்மூர்த்திகளும் அவரவர் தேவியருக்கு அவரவர் மேனியிலேயேத் தகுந்த இடத்தைத் தந்து, பெருமைப்படுத்தி இருக்கின்றார்கள். சிவன் தன் இடப் பாகத்திலும், திருமால் மார்பிலும், பிரம்மன் நாவிலும் தன் தேவியரை நிறுத்தி இருக்கின்றார்கள், இப்போது நீ சீதையை எந்த இடத்தில் வைக்கப் போகிறாய்? உனக்கு 10 தலைகளும், 20 தோள்களும் இருக்க, அவர்களை விட, நீ சீதைக்கு நல்ல இடமாக அமைத்துத் தர முடியும் அல்லவா?

“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத் தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி” (சூர்ப்பணகை சூழ்ச்சி படலம் 627)

பாகத்தில் ஒருவன் இப்பாடலிலும் கடைசி வரி இரு பொருள் தந்து நிற்கிறது.

’எங்ஙனம் வைத்து வாழ்த்தி’

மற்றவர்கள் தம் மனைவியருக்கு இடம் கொடுத்து வாழ்வது போன்று, நீயும் சீதைக்கு உன் மேனியில் எந்த இடத்தைக் கொடுத்து வாழப் போகிறாய் என்பது நேரடியான ஒரு பொருள்.

“இன்னொரு விதமாக ’எங்ஙனம் வைத்து வாழ்த்தி”’

என்ற கேள்விக்கு, மற்றவர் எல்லாம் தம் தம் மனைவியரை, நல்ல முறையில் வைத்து வாழ்கின்றார்கள். ’நீ எங்கே அப்படி வாழப் போகிறாய். (சீதையுடன்) நீ அவளுடன் வாழப் போவதே இல்லை’ என்ற விளக்கமும் அளிக்கலாம்.

மழலை சிந்தும் பேச்சுடைய சீதையைப் பெற்ற பிறகு, அவள் சொன்னதுதான் உனக்கு வேத வாக்காகப் போய்விடும். அவள் சொன்னதைத் தவறாமல் நிறைவேற்றவே நீ பார்ப்பாய். அதனால், அள்ளஅள்ளக் குறையாத உன் செல்வத்தையெல்லாம் அவளுடைய விருப்பத்திற்குக் கொடுத்து விடுவாய், அப்படிச் செய்வது சரிதான். சீதைக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவளை அடைந்ததால் மூவுலகிலும் உன் பெயரும், புகழும் ஓங்கி வளரும். இப்படி உன்னுடைய நன்மைக்காக, அவளை உனக்கு நான் காட்டிக் கொடுத்தாலும், என் மனதில் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. உன்னுடைய மற்ற மனைவியருக்கெல்லாம் நான் தீங்கு செய்கின்றேனோ என்று என்ன செய்வது, ஒரு பெரிய நன்மை நமக்குக் கிடைக்கும் போது, சில சிறு சிறு துன்பங்களையும் நாம் ஏற்றுக் கொண்டுதானே ஆக வேண்டும்.

“பிள்ளை போல் பேச்சினாளைப் பெற்ற பின் பிழைக்க லாற்றாய்
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும்
கிள்ளைபோல் மொழியார்க்கு எல்லாத் கேடு சூழ்கின்றேன் அன்றே” (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 77)

இப்பாடலில் சீதை பேசியப் பேச்சை நீ மீற மாட்டாய் என்பது ஒரு பொருள்.

’பிழைக்கலாற்றாய்’ என்பது ஒரு பொருள். சீதையைப் பெற்ற பின்னர், ’நீ எங்கே உயிர்ப் பிழைக்கப் போகிறாய், உனக்கு இயலாது’. ஏனெனில், ’சீதை தான் விஷம் ஆயிற்றே’ என்பது மற்றொரு பொருள்.

சீதையை நீ பெற்று ஆனந்தமாக இரு. அதே வேளை உன் வாள் வலிமையை உலகங்கள் எல்லாம் கண்டு வாழ்த்தும்படி, அந்த இராமனைப் பிடித்து என்னிடம் தந்துவிடு,

“மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த
தேன் கொண்டு ஊடாடு கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ உன் வான் வலி உலகம் காண
யான் கொண்டு ஊடாடும் வண்ணம் இராமனைத் தருதி என்பால்” (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 630)

ஊடாடுதல் என்பது இரு பொருள் தந்து நிற்கிறது. கடைசி வரியில் இராமனோடு நான் மகிழ்ந்திருக்கும்படி, கூடியிருக்கும்படி அவனை எனக்குத் தந்துவிடு என்கிறாள்.


நேரடியாக இராமனை எனக்குத் தந்துவிடு என்று இராவணனிடம் கேட்காமல் ’ஊடாடும் வண்ணம்’ என்று கூறுகிறாள். ஊடாடுதல் என்றால் ’குறுக்கேப் புகுந்து துன்புறுத்துதல்’ என்ற பொருளும் தோன்றும்படி பேசினாள்.

மற்றொரு பாடலில், 14 ஆண்டு வனவாசம் என்று கைகேயி கூறியவுடன் இராமன், அன்னையே மன்னவன் கட்டளை இடாவிட்டாலும் காட்டிற்குச் செல்லுமாறு நீங்கள் பணித்தால் நான் மறுப்பேனோ? மறுக்க மாட்டேன். என் பின்னவனாகிய பரதன் அரசு செல்வம் பெற்றதை, யான் பெற்றதாகவேக் கருதி மகிழ்கிறேன். தம்பிக்கு நாடு தந்து, நான் காடு சென்று தவம் புரியும் இந்த வாய்ப்பை விட, வேறு நல்ல வாய்ப்பு இனி இருக்க முடியாது. இந்த நல்ல பணியைத் தலைமேல் கொள்கிறேன். காட்டுக்கு இன்றே, இப்பொழுதேப் போகிறேன். விடையும் பெற்றுக் கொண்டேன் என்கிறான்.

“மன்னவன் பணி அன்றாகின் நும்பணி மறுப்பெனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றது அன்றோ
என் இனி உறுதி அப்பால் இப்பணி தலைமேல் கொண்டேன்
மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்“ (கைகேயி சூழ்வினைப் படலம் 291)

மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ என்பதற்கு, இது மன்னவன் பணி அல்ல. ஆனால், உன் பணிதான். நான் மறுக்க மாட்டேன் என்று பொருள் கூறுவதும் உண்டு. என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றது அன்றோ? என்பதற்கு,

என் பின்னவன் பெற்ற செல்வம் என்பதும், நான் இப்போது பெற்றுள்ள மரவுரியணிந்த வாழ்க்கைதான் எனும் பொருள் கூறுவதும் உண்டு. பின்னால் பரதன் 14 ஆண்டு காலம் மரவுரி தரித்து, நகருக்கு வெளியே, நந்தியம்பதியில் தவக்கோலத்துடன் இராமனது பாதுகையை வைத்துக் கொண்டு வழிபடப் போகிறானே என்பதும், உள்ளுரைப் பொருள்.

முடிவுரை

சிலேடை ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல், பல பொருள் படும்படி அமைவது “சிலேடை” எனப்படும். இதனை “இரட்டுற மொழிதல்” என்றும் கூறுவர். சிலேடை அணி செம்மொழிச் சிலேடை என்றும், பிரிமொழிச் சிலேடை என்றும் இரு வகைப்படும்.கம்பராமாயணத்தில் செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச் சிலேடை என்ற இரு வகைச் சிலேடை அணிகள் குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

2. ஞானசம்பந்தன் அ.ச, இராமன் பன்முகநோக்கில், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

3. நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம், சாரதா பதிப்பகம், சென்னை, 2012.

4. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/literature/p325.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License