மனிதன் தன்னுடைய பகுத்தறிவைக் கொண்டு தன்னைச் சுற்றியுள்ள பொருட்களைப் பார்த்து வியக்கத் தொடங்கியதில் இருந்து விஞ்ஞானம் ஆரம்பமானது. விஞ்ஞானம் என்பது ஆங்கிலத்தில் Science என அழைக்கப்படுகிறது. இச்சொல்லானது Scientiya எனும் இலத்தின் சொல்லில் இருந்து தோற்றம் பெற்றது. ஆரம்பத்தில் விஞ்ஞானம் மெய்யியலிலே காணப்பட்டது. அதனால் விஞ்ஞானம் இயற்கை மெய்யியல் என அழைக்கப்பட்டது. அத்துடன் இயற்கை மெய்யியலை ஆய்வு செய்தவர்கள் இயற்கை மெய்யியலாளர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். பிற்பாடு 16, 17ம்நூற்றாண்டுகளின் பின்னர் விஞ்ஞானம் ஆனது தனித்த ஒரு துறையாக தன்னை அடையாளப்படுத்தியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வில்லியம் வேவல் என்பவர் “விஞ்ஞானி” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதுவரை விஞ்ஞானமும் மெய்யியலும் இரண்டறக் கலந்து காணப்பட்டது. விஞ்ஞானத்தினுடைய ஆய்வுப்பரப்பு ஆய்வு விடயத்தின் தன்மைக்கு ஏற்ப பல வகையாகப் பிரிய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. இப்பிரிவுகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது மெய்யியல் ஆகும். இதனால் தான் மெய்யியல் விஞ்ஞானத்தின் தாயாக (MOTHER OF SCIENCE) வர்ணிக்கப்படுகிறது. அதாவது மெய்யியலில் இருந்தே விஞ்ஞானமும் விஞ்ஞானத்துடன் தொடர்புடைய ஏனைய பிரிவுகளும் வளர்ச்சி அடையத் தொடங்கியது. விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சியாகவே தொழில்நுட்பம் விளங்குகிறது. தொழில்நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகள், உற்பத்தி செய்யப் பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு, தொழில்நுட்பக் கருவிகள், கைவினைகள், முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவற்றை பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும் அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நனோ தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் தொழில்நுட்பம், போக்குவரத்துத் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல், மண் பொருள் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், பாலிமர் தொழில்நுட்பம், ரப்பர் மற்றும் நெகிழித் தொழில்நுட்பம், உற்பத்திப் பொறியியல் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், அணுப்பொறியியல், சர்க்கரைத் தொழில்நுட்பம், எண்ணை மற்றும் தாள் தொழில்நுட்பம், பல்பஸ் மற்றும் காகிதத் தொழில்நுட்பம்
தகவல் தொழில்நுட்பம் என்றும் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம் என்றும் அழைக்கப்படும் இத்துறையானது தகவலைப் பரிமாறுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அடிப்படையானத் தொழில்நுட்பங்களைப் பற்றியதாகும்.
தகவல் தொழில்நுட்பத்தினை 03 பிரிவுக்குள் அடக்கலாம். அவையாவன
* அச்சுத் தொழில்நுட்பம்
* சாதாரண மின்தொழில்நுட்பம்
* உயர் தொழில்நுட்ப மின்தொழில்நுட்பம்
அச்சுத்தொழில் நுட்பம்
அச்சுத்தொழில்நுட்பம் என்பது எழுத்து வடிவில் தகவல்களை வெளிப்படுத்தும் தொழில் நுட்பங்களாகும். அச்சுத் தொழில்நுட்பங்களாக
* பத்திரிகை
* நாளிதழ்
* வார இதழ்
* சஞ்சிகைகள்
* துண்டுப்பிரசுரங்கள்
* விளம்பரங்கள் முதலியவற்றைக் குறிப்படலாம்.
பத்திரிகை
* செய்திகள்
உதாரணம்: நாட்டு நடப்புகள், அரசியல், சர்வதேச அறிக்கைகள், அனர்த்த எச்சரிக்கைகள் முதலியன.
* விளம்பரம்
உதாரணம்: உற்பத்தியாளர்கள் இலகுவான முறையில் தங்களது உற்பத்திகளை வெளிக்காட்டுதல்
* விமர்சனம்
* நற்சிந்தனை விதைப்பு
* பொழுது போக்கு அம்சங்கள்
உதாரணம் : கதை, கவிதை, கட்டுரை, விடுகதை, சினிமா,விளையாட்டு
* மொழியைப் பிரதிபலித்தல்
சாதாரண மின் தொழில்நுட்பங்கள்
மின்வலுவினை அடிப்படையாகக் கொண்டு ஒலி, ஒளிச் செயற்பாடுகள் என்ற வகைப்பாடுகளில் அமையும் தொழில்நுட்பமே சாதாரண மின்தொழில்நுட்பமாகும். சாதாரண மின் தொழில் நுட்பங்களாக;
* வானொலி
* தொலைக்காட்சி
* தொலைபேசி முதலியவைகளைக் குறிப்பிடலாம்.
வானொலி
* செய்திச் சேவை
* உடனடிச் சேவை
உதாரணம்: உடனடியான அவசரகால வேண்டுகோள்கள், இயற்கை அனர்த்தம் பற்றிய அறிவிப்புக்கள், விசேட அறிவித்தல்கள்
* பொழுது போக்கு
உதாரணம்: பாடல்கள், நகைச்சுவைகள், கவிதை, கட்டுரை
* அறிவு விடயங்கள்
* நேரடியான விமர்சனங்கள்
* செம்மையான மொழிப்பரப்புகள்
தொலைக்காட்சி
* படங்களின் தெளிவுடன் செய்திகள்
* அறிவுப் பூர்வமான நிகழ்ச்சிகள்
உதாரணம் : கல்வி, பொருளாதாரம், வாழ்வாதாரம், அரசியல், சட்டம்
* வணிக உலா
உதாரணம்: உற்பத்திப்பொருட்கள் பற்றிய விளக்கம், அவற்றின் பாவனை, உறுதிப்பாடு, கொள்வனவு மற்றும் பாவனை முறைகள் உற்பத்தியாளர்கள் - தெளிவாக விளக்குதல்.
* விமர்சன ஆராய்வுகள்
* பொழுது போக்கு நிகழ்ச்சிகள்
உதாரணம் : நாடகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைகள், இசை நிகழ்ச்சிகள்
* பண்பாட்டு வளர்ச்சி
உதாரணம் : ஆடை நாகரீகங்கள், திருமணச் சடங்குகள், ஆலயச் சடங்குகள், பொது நிகழ்வுகள்
தொலைபேசி
தொலைபேசி இரண்டு வகைப்படும்
1. நிலையான தொலைபேசி
2. கையடக்கத் தொலைபேசி
நிலையான தொலைபேசி
* உத்தியோகப் பூர்வ தொடர்பு
* தெளிவான தொடர்பு
* இணையத் தொடர்பு
* அழைப்பு ஏற்படுத்துபவரின் ஒலிப்பதிவு
* காட்சியுடன் கூடிய தொடர்பு
* அழைப்பவரை உறுதிப்படுத்தல்
* குறுஞ்செய்தி
கையடக்கத் தொலைபேசி
* இலகுவான வகை
உதாரணம் : அனைவராலும் பயன்படுத்தக் கூடிய நிலை
* குறுஞ் செய்தி - SMS
உதாரணம் : தகவல் பரிமாற்றம்
* காட்சிகளுடன் கூடிய தகவல் - MMS
உதாரணம் : புகைப்படம், மற்றும் காட்சிப்படம் போன்றவற்றை இலகுவாக பரிமாறுதல்
* குரல் பதிவு செய்தி - VOICE MESSAGE
* ஒரே வேளையில் பலருடன் தொடர்பு - CALL CONFERENCE
* புகைப்படக் கருவி - CAMERA
உதாரணம் : Selfie
* காட்சி மற்றும் குரல் பதிவு முறைகள் - VIDEO RECORDER , VOICE RECODER
* குரல் பாடல், காட்சியுடன் கூடிய பாடல், திரைப்படங்கள் பதியும் முறைகள் - Mp3, MP4, FM, TV, SERVICE
* கட்டணமற்ற தகவல் இறக்கு முறைகள் - BLETOOTH, INFRARED
உதாரணம் : கட்டணமற்ற காட்சிப்படம், புகைப்படம்
* இணைய வசதிகள்
* காட்சிகளுன் கூடிய அழைப்புக்கள்- 3G CONNECTION, VEDIO CALL
உயர் தொழில்நுட்ப மின் தொழில்நுட்பம்
உயர் தொழில்நுட்ப மின் தொழில்நுட்பம் என்பது தொழில்நுட்பத்தின் உரிய செயற்பாட்டின் மூலம் உருவானது. உயர் தொழில்நுட்ப மின் தொழில்நுட்பங்களாக
* கணணி
* இணையம்
* செயற்கைக் கோள்
* ரொபோட்கள்
முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
கணணி
* வீட்டுப் பயன்பாடு
உதாரணம் : குழந்தைகளுக்கான கல்வி, விளையாட்டு, இணையம்
* தொழிற்சாலைப் பயன்பாடு
உதாரணம் : தொழிற்சாலை உற்பத்திகள், ஏற்றுமதிகள், வருமானங்கள், வரவு செலவுகள்
* அலுவலகப்பயன்பாடு
உதாரணம் : அலுவலகத் தொடர்புகள், வேலைகள்
* வியாபாரப் பயன்பாடு
* இணையத்தொடர்பு
உதாரணம் : வியாபாரம், மருத்துவம், கல்வி, அரசியல், விளையாட்டு
* அதி நவீன தொழில்நுட்பப் பயன்பாடு
உதாரணம் : கிரபிக்ஸ்
* மல்டிமீடியா தொழில்நுட்பம்
உதாரணம் : பொழுது போக்கு, கல்வி
* தயாரிப்புகள்
உதாரணம் : விளம்பரம், வாழ்த்து அட்டைகள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், கடிதங்கள், புத்தக வெளியீடு
இணையம்
* மையவலை (வையக விரிவு வலை) --WWW
உதாரணம் : பல்வேறுபட்ட துறைகள் பற்றிய விளக்கத்தைப் பெறலாம்.
* மின்னஞ்சல் - E .MAIL
உதாரணம்: உரையாடல், கடிதங்கள், புகைப்படங்கள், தகவல் பரிமாற்றங்கள்
* பயன்பாட்டு வலைத்தளம் - USENET
* இணையத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கான செய்திக்குழு, தகவல் தொகுப்புக்கள், விரும்பிய பக்கங்களில் உரையாடல்கள், விவாதங்களை மேற்கொள்ளுதல்
* இணைய அட்டை
* சேமிப்புக்கள் - Saves
உதாரணம் : கோடிக்கணக்கான புத்தகங்களில் கிடைக்கப் பெறும் கல்வி, பொது அறிவு, முதலியன சேமிப்பு ஆகும்.
செயற்கைக்கோள்
* தகவல் தொடர்பு
வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம் போன்ற வகைகளில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்துகின்றது. தெளிவான முறையிலும், தடையின்றியும் தொடர்புகளை பெற்றுக்கொள்ளலாம்.
* விண்ணாய்வு
* உலகு பற்றிய ஆய்வு
உதாரணம் : உலகின் காலநிலை, வானிலை, சூழல், உலகநிலை, புவியியல் வெளிப்பாடுகள்
* GPS பயன்பாடு
* உலகின் குறிப்பிட்ட இடங்களை பதிவு செய்வதுடன் நேரடியான விளக்கப் படங்களை வழங்குதல் இதனூடாக உலகப் பரப்புக்களை தெளிவாக வரையறுக்கலாம்.
* உலகப் பொருளாதார வளர்ச்சிப் பங்களிப்பு
* தொலைதூரக் கல்வி திட்டங்கள்
உதாரணம் : உரிய கல்வித்திட்டங்கள்
ரொபோட்கள்
* தொழிற்சாலை பணி
உதாரணம் : பல மனிதர்கள் செய்யும் வேலைகளை விரைவாகச் செய்தல். மனிதர்களால் முடியாதவைகளையும் ஆற்றுதல், பெரும் உற்பத்தி கிடைத்தல்
* வரவேற்பாளராக சேவையாற்றுதல்
* அலுவலகங்களில் பணிபுரிதல்
* வீட்டுப்பணிகளை நிறைவேற்றுதல்
உதாரணம் : நபர்களை வரவேற்பது, பிள்ளைகளுடன் விளையாடுவது, ஆபத்து வேளைகளில் அபாய ஒலி எழுப்புதல்
* ஆபத்துக்களைத் தடுத்தல்
உதாரணம் : வெடி குண்டுகள் அகற்றுதல் , யுத்த முனைகளில் பயன்படுத்தல்