மனித வாழ்வில் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்
திரவியராசா நிறஞ்சினி
உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் தத்துவ விழுமியக்கற்கைகள் துறை,
கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.
முந்தைய பதிவின் தொடர்ச்சி...
1. 3. 2 உயிர்த் தொழில்நுட்பம்
உயிர் தொழில் நுட்பவியல் எனப்படுவது Applications of Bio logical Organisms in industries for human welfare’ அதாவது நுண்ணுயிரிகள், விலங்கினங்கள், தாவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு மனிதனுக்குத் தேவையான மருந்துகளையும், உணவுப் பொருட்களையும், தாவரங்கள், விலங்குகள் மற்றும் அனைத்துத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான முக்கியப் பொருட்களை உருவாக்குவதாகும்.
உயிர் தொழில் நுட்பவியல் 4 வகைகளாகப் பிரித்து நோக்கப்படுகின்றது.
1. மருத்துவ உயிரித் தொழில் நுட்பவியல்
2. வேளாண்மை உயிரித் தொழில் நுட்பவியல்
3. தொழிலிய உயிரித் தொழில் நுட்பவியல்
4. கடல் சார் உயிரித் தொழில் நுட்பவியல்
மருத்துவ உயிரி தொழில் நுட்பவியல் (Medical or Red biotechnology)
மனிதனின் நோய்களைக் குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் மருத்துவப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம் இதுவாகும். உதாரணம் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் இன்சுலின் இரத்தம் உறைதலுக்கு காரணமாக பேக்டர், நுண்ணுயிர் கொல்லிகள் நோய் எதிர்ப்புத் திறனுள்ள தடுப்பூசி, புதிய மருந்துகள் தயாரிப்பு, முதலியன.
வேளாண்மை உயிரித் தொழில் நுட்பவியல் (Agricultural Or Green Bio - Technology)
வேளாண்மையில் மகசூலை அதிகரிப்பதை நோக்காகக் கொண்ட தொழில்நுட்பம் இதுவாகும். உதாரணம் மரபணு மாற்றிய பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிரின் விளைச்சலின் சேதாரம் குறைக்கப்படுகின்றது. மேலும் இதனால் பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதைத் தவிர்த்து, சுற்றுப்புறச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றது. உதாரணம் (காய்ப்புழுவிற்கு எதிர்ப்புத் திறனுள்ள பருத்தி) இதைப் போன்று அதிகரித்த ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்புத்திறன், பழங்களை அதிக நாட்களுக்குக் கெடாமல் சேமித்து வைக்கும் திறன் படைத்த மரபணு மாற்றிய பயிர்கள் உயிரித் தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டுப் பயிரிடப்படுகின்றது. மற்றும் உயிர் சுத்திகரிப்பு, உயிர் பூச்சிக் கொல்லிகள், உயிர் உரங்கள், திசு வளர்ப்பு, நுண் பயிர் பெருக்கம் மற்றும் இந்திய வேளாண்மை வளர்ச்சியில் சம்பந்தப்பட்ட பகுதிகளான கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு முதலியன குறிப்பிடத்தக்கது. மேலும் பயிர்ப்பூச்சி எதிர்ப்புசக்தி, வறட்சி, குளிர் மற்றும் உப்பு நிலைகளைத் தாங்கும் சக்தி அதிகப்படுத்துதல், அறுவடை பின் சார் தரம் மதிப்பூட்டுதல் முதலிய காரணங்களுக்காக அதிகம் உபயோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழிலிய உயிரித் தொழில்நுட்பவியல் (Industrial OR White Bio Technology)
தொழிலிய உயிர்த் தொழில்நுட்பவியல் மூலமாக வேதிப்பொருள் மற்றும் உயிர் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும். இரசாயணங்கள், மருந்துப் பொருட்கள் உயிரி நிறமேற்றி கரைப்பான்கள் வைட்டமின்கள், உணவுச் சேர்க்கைகள் உயிரி எரிபொருள், உயிரிப் பூச்சிக் கொல்லிகள் மற்றும் உயிரிப் பிளாஸ்டிக்குகள் போன்ற பல்வேறு பொருட்களின் உற்பத்தி மற்றும் தோல் பதனிடுதல், உணவு பதப்படுத்துதல், பாலாடைக்கட்டி, மது, நொதித்தல், புதிய சிறந்த பண்புகளைக் கொண்டுள்ள ஆடைத் தயாரிப்பு முதலியன.
கடல்சார் உயிரித் தொழில்நுட்பவியல் - (Marine or blue Biotecnology)
உயிரித் தொழில்நுட்பங்களைக் கடலில் வாழும் உயிரினங்களில் பயன்படுத்தி உணவு, வாசனை மற்றும், மருந்துப் பொருள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. கடல் வாழ் உயிரினங்களிலிருந்து புற்றுநோய்க்கு மருந்துப் பொருள் கண்டுபிடித்தல் போன்ற ஆராய்ச்சியின் காரணமாகத் தற்போது இத்துறை பிரபலமடைந்து வருகின்றது.
1.3.3 இலத்திரனியல் (ELECTRONICS) அல்லது மின்னணுவியல் தொழில்நுட்பம்
இலத்திரனியல் தொழில்நுட்பம் என்பது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல கருவிகளின் இயக்கத்துக்கு அடிப்படையானதாகும்.
உதாரணம் : சமூக வலைத்தளங்கள்
* அழிவுகள் பற்றிய எச்சரிக்கை, சஞ்சிகைகளைப் பெறலாம். அதாவது சுனாமி, தாளமுக்கம், சூறாவளி போன்ற இயற்கை அழிவுகள் பற்றிய முன்னறிவித்தல்களைப் பெறலாம்.
உதாரணம் : RSS / Rich site summary செறிவுத்தள சுருக்கம் அத்துடன் புதிய சூடான செய்திகள், விருப்பத்துக்குரிய பிரபலம் அல்லது விளையாட்டு பற்றிய துணுக்குகள், செல்ல விரும்பும் நாடு பற்றிய தகவல்கள் பெறலாம் செறிவுத்தளசுருக்கம் மூலம். மேலும் நாணய மாற்று வீதம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
* புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். தரவேற்றம் செய்யலாம், பட்டியலாக்கம் செய்யலாம், தரப்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணம் : FLIKR
* நண்பர்களை தேடுதல், தொடர்புகளை ஏற்படுத்துதல், படங்கள் வீடியோக்கள் பகிர்தல்
உதாரணம் : Face Book
* திடமான பாவனையாளர்களுக்குத் திறந்த கூட்டுக் குழுமப் பக்கங்களுக்கு இடையேயான மீதித் தொடுப்புக்களை ஆதரித்தல், புதிய பக்கங்கள் உருவாக்கி வாக்கிய எடுப்பிற்கு வகை செய்தல்.
உதாரணம் : WIKIS - தகவல் தளம்
* ஒரே சமயத்தில் தகவல்களைக் கொண்டு செல்லலாம்.
உதாரணம் : Blogs- - வலைப்பதிவுகள்
* குறும் செய்திகளை பாவனையாளர்களுக்கு அனுப்புதல், வாசித்தல்
உதாரணம் : Twitter
* பதிவு செய்த அங்கத்தவர்கள் தொழில்ரீதியில் நம்பகமான அறிமுகமான ஏனையோருடன் வலையமைப்பை நிறுவுதல் மற்றும் அங்கத்தவர்கள் முகப்புப் புத்தகம், தொழில், கல்வித் தகமை மற்றும் சிறப்புத் திறன்களைக் காட்சிப்படுத்துகிறது.
உதாரணம் : Linked in
* பாவனையாளர்கள் கோப்புக்களை பகிரங்கமாகவோ தனிப்பட்ட முறையிலோ தரவேற்றம் செய்யலாம். தரவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களைத் தரப்படுத்தவும் விமர்சனம் வழங்கவும், மீள் பதியவும் வசதி செய்தல்
உதாரணம் : Slide Share
* பாவனையாளர்கள் விரும்பும் வகையில் நிகழ்படக் கோப்புக்களைத் (Video) தரவேற்றம் செய்யலாம்.
உதாரணம் : YouTube
* பங்குச் சந்தை நிலவரம் அறியலாம்
உதாரணம் : VEN
1.3.4 மருத்துவத் தொழில்நுட்பம்
மருத்துவத் தொழில்நுட்பம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இது நோய்த்தடுப்பு, குணப்படுத்தல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல்நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல் நலச் செயல்முறைகளை உள்ளடக்கியது. பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை, மகப்பேற்றுக் கருவிகள், குளோனிங் முறை, ஊசிகள், செயற்கைக் குழந்தைப்பேறு, மருந்துகள், ஸ்கேனிங் தொழில்நுட்பம் ,3டி தொழில்நுட்பம் -விபத்தில் சீர்குலைந்த முகத்தை இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் சீர்படுத்தும்முறை முதலியன.
1.3.5 நனோ தொழில்நுட்பம்
இன்றைய காலகட்டத்தில் எமது வாழ்வியலை மாற்றியமைக்கும் வகையில் நனோ தொழில் நுட்பமானது பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. நனோ தொழில்நுட்பத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்துவிட்ட நிலையிலும் மக்கள் மத்தியிலும் அவை தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவேக் காணப்படுகிறது. நனோ தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மையினைப் பின்வரும் துறைகளினூடாக விளக்கலாம், அவையாவன;
* மருத்துவத் துறை
* நுகர்வோர் துறை
* விவசாயத்துறை
* உணவுத்துறை
* தகவல் தொடர்பாடல் துறை
* போர்த்துறை முதலியவைகளைக்குறிப்பிடலாம்.
1.4 தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதகங்கள்
1.4.1 தகவல் தொழில்நுட்பம்
அச்சுத் தொழில் நுட்பம்
1.செய்திகளின் ஒழுங்கின்மை நிலை
* பக்கச்சார்புத் தன்மை
உதாரணம் : பத்திரிகைச் செய்திகள் பெரும்பாலும் பக்கச்சார்பானதாக இருத்தல். அதாவது அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டு வெளிவரும் செய்திகள், அரசின் நலனில் அக்கறை கொண்டு சாதகமான விடயங்களை வெளியிடுதல்.
* முழுமைத் தன்மை இன்மை
* தெளிவின்மை
உதாரணம் : செய்திகளில் ஒரு ஒழுங்கு இருத்தல் அவசியமானது ஆனால் சில பத்திரிகைகளில் தேவையான விடயத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல். ஈரடி இயல்பான வார்த்தைப் பிரயோகம்
2. விளம்பர அத்து மீறுகை
* கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
* பொருட்கள் தேவை, பயன்பாடு, தரம் முதலானவற்றை முக்கியத்துவப்படுத்தாமல் தேவையற்ற விடயங்களை முக்கியத்துவப் படுத்துதல்.
உதாரணம் : ஆளுக்கா விளம்பரம், பொருளுக்கா விளம்பரம் என தெரியாத நிலை
* விளம்பரங்களின் தரமின்மை
* பொருட்களின் தரமின்மை
உதாரணம் : தரமில்லாத பொருட்களைத் தரப்படுத்தி விளம்பரங்களில் காட்டுதல், பிரபல்யமான நடிகர்கள், விளையாட்டு வீரர்களைக் கொண்டு தரமில்லாத பொருளையே தரமானதாக விளம்பரங்களில் காட்டுதல்.
* பக்கச்சார்புத் தன்மை
உதாரணம் : பணம் படைத்தவர்களை சார்ந்ததாக உள்ளது.
3. விமர்சன தவறுகை
4. தவறான சிந்தனை விதைப்பு
உதாரணம் : பத்திரிகைகளில் முக்கிய செய்திகள், கதைகள், கவிதை, கட்டுரை போன்ற பல விடயங்கள் தொடர்பில் சாதி, மொழி, இனம், பெரும்பான்மை என்ற வேறுபாடுகளை உருவாக்கி வன்முறைகளை தோற்றுவிக்கும் போக்குகளை ஏற்படுத்தல்
சாதாரண மின் தொழில் நுட்பம்
வானொலி
* பக்கச்சார்பு
உதாரணம் : அரசு தரப்பு வானொலிகள் தனது கருத்துக்களை அரசின் சார்பாகவே முன்வைத்தல்
* விளம்பர மீறல்
உதாரணம் : உணர்ச்சி தூண்டல், தரம் குறைவான விளம்பரங்கள்
* தேவையில்லாத சிந்தனைகள்
உதாரணம் : வாழ்கையில் நடந்த கெட்ட பழக்கங்கள், தேவையில்லாத விடயங்கள்
* விமர்சன முக்கியத்துவம் இல்லாமை
* மொழி முக்கியத்துவம்
* அறிவிப்பாளர்கள் திறமை குன்றிய நிலை
தொலைக்காட்சி
* பக்கச்சார்பு
உதாரணம் : செய்தி அறிக்கைகள், விளம்பரக்கருத்துக்கள்
* பாலியல் தூண்டல்
உதாரணம் : திரைப்படங்கள், விளம்பரங்களில் வரும் காட்சிகள்
* வன்முறை தூண்டல்
உதாரணம் : தொலைக்காட்சியில் தோன்றும் நாடகங்கள், திரைப்படங்கள், பாடல்கள், விளையாட்டுக்கள் முதலியவற்றில் வன்முறை தூண்டல்கள் இடம் பெறுகிறது.
* நேரடி வீணடிப்பு
* கௌரவத்தை நியாயப்படுத்துதல்
* குறைவான விமர்சனப் பார்வை
தொலைபேசி
* பெருந் தொந்தரவு
உதாரணம் : வீணான அழைப்புக்கள், தேவையற்ற குறிஞ்செய்திகள்
* வன்முறைக்கான பயன்பாடு
உதாரணம் : கொலை, கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம்
* உத்தரவின்றிய அணுகுமுறை
உதாரணம் : புகைப்படம், குரல்பதிவு, காட்சியுடனான படம்
* உடலியல் ரீதியிலான பாதிப்புக்கள்
உதாரணம் : புற்று நோய், ஆண்மைப் பதிப்பு, மூளை பாதிப்பு
* ஆபாச விடயங்கள்
* சீர்கேடான பழக்கம்
* பண விரயம்
உயர் தொழில்நுட்ப மின் தொழில்நுட்பம்
கணணி
* வைரஸ் தாக்கங்கள்
உதாரணம் : முக்கியமான கோப்புக்களை சீர்குலைப்பது, இல்லாதவற்றை இருப்பதாகவும் இருப்பவற்றை இல்லாமலும் காட்டுவது பெருமளவில் தகவல்களை சேமித்து வைத்து இருக்கும் அலுவலகங்கள், நிறுவனங்கள், அரசாங்கங்கள் போன்றவை ஸ்தம்பிதம் அடையும் நாட்டின் பாதுகாப்பு விடயங்களும் அழிக்கப்படலாம்.
* மென் பொருட்களின் தவறான பாவனை
* அனுமதியின்றி நுழைதல், கோப்புக்களை களவெடுத்தல்
உதாரணம் : அனுமதிகளின்றி இரகசியக் குறியீடுகள், நுழையும் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நுழைதல் இதனால் நாட்டின் ரகசியங்கள், தனிநபர் விடயங்கள், முக்கிய குறிப்புக்கள் போன்றவை தெரியக் கூடாத நபர்களுக்கு சென்று விட்டால், நாடு என்ற ரீதியலும், தனிநபர் என்ற ரீதியிலும் பல பின்னடைவுகளை நோக்க வேண்டியுள்ளது.
* முரண்பாடான மல்டி மீடியா பாவனை
உதாரணம் : பொய்யான விடயங்களையும் உண்மையாக காட்டும் தன்மையால் மக்களின் நம்பிக்கையீனத்தை உருவாக்குதல்
* கூடுதலான பாவனையால் நோய்த் தாக்கம்
உதாரணம் : மூளை நோயால் பாதிப்பு, கண்சம்பந்தப்பட்டநோய்களால் பாதிப்படைகின்றனர்
* ஆபாசத்திற்கு முதலிடம்
இணையம்
* வைரஸ் காவுகை
* அனுமதியின்றி நுழைதல்
* ஆபாசத்திற்கு முதலிடம்
உதாரணம் : ஆபாசதிரைப்படங்கள், ஆபாசபுகைப்படங்கள், ஆபாசக்கதைகள் போன்றவை பார்பவர்களை தூண்டும் வகையில் அமைகின்றன.
* வன்முறைகள்
உதாரணம் : கொலை, தண்டனைகள், கொடூரக் காட்சிகள் போன்றவை பார்பவர் மனதில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.
* தவறான தகவல் வெளியீடு
* தேவையற்ற அரட்டைகள்
* தொடர்புகளில் தாமதம்
உதாரணம் : இணையத் தொடர்புகளை ஏற்படுத்தும் போது பல்வேறு தாமதங்கள் ஏற்படுகின்றன. முக்கிய வேளைகளில் அவசரஇணைப்புக்களை பெறமுடியாமல் போய்விடும்.
தொடரும்
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.