இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
அறிவியல் & தொழில்நுட்பம்

மனித வாழ்வில் தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கள்

திரவியராசா நிறஞ்சினி
உதவி விரிவுரையாளர், மெய்யியல் மற்றும் தத்துவ விழுமியக்கற்கைகள் துறை,
கலை கலாசார பீடம், கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை.


முந்தைய பதிவின் தொடர்ச்சி...

1.4.2 உயிர்த் தொழில்நுட்பம்

உயிரித்தொழில்நுட்பம் ஏற்படுத்தும் ஒழுக்க மீறுகைகள் பற்றி நோக்கும் போது தொழில் நுட்பங்கள் மானுட நலனுக்காக மட்டும் உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்படவில்லை. மானுட அழிவிற்கான ஆரம்பமாகவேத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மனிதனின் நோய்களை குணப்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் மருந்துப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் மருந்துப்பொருட்கள், கருவிகள் முதலியன மக்களது அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இதனால் காலம் தாழ்த்திய பல விதமான பாதிப்புக்கள் ஏற்படுகிறது.

வேளாண்மை உயிரி தொழில்நுட்பவியலினுடைய ஒழுக்கமீறுகைகள் பற்றி நோக்கும் போது உயிர்த் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தி வேளாண்மையில் மகசூல் அதிகரிக்கப்படுகின்றது. இதனால் உணவுகளின் தன்மைகளிலும், தயாரிப்பு முறைகளிலும் பல்வேறு இரசாயனப் பதார்த்தங்களின் சேர்க்கை காணப்படுகின்றது. மனிதனுடைய அவசரகதி வாழ்கையில் துரித உணவு (Fast Food) என்பதன் பங்கு அதிகமாக காணப்படுகிறது. இவை மனிதனின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற அதே வேளை அதனால் பல்வேறு விதமான பாதகமான விளைவுகளுக்கும் ஏற்படவும் ஏதுவாக அமைகின்றது. இவ்வுணவுப் பொருட்களை கொள்வனவு செய்பவர்கள் பெரும்பாலும் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ள பதார்த்தங்கள் தொடர்பாக கவனிக்காமையானது பல்வேறு உடலியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக எண்ணெய், கொழுப்பு, சீனி, மற்றும் அமிலப்பதார்த்த சேர்க்கை அஜின மோட்டோவின் சேர்க்கை போன்றவை மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவையாக இருப்பதனால் மனிதர்களுடைய அன்றாட வாழ்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது உடற்பருமன் அதிகரிப்பு, நோய் கிருமிகளின் தொற்று நோய் முதலானவை ஏற்பட ஏதுவாக அமைகிறது. உயிர்த் தொழில்நுட்பவியல் வேளாண்மை உயிரித் தொழில் நுட்பவியலுக்கான இயந்திரங்கள், விமானங்கள் போன்ற கருவி பயன்படுத்தப்படுகின்றது. இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. உதாரணமாக ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் இவ்வாறான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது கிருமிநாசினிகளைப் பயிருக்குத் தெளிப்பதற்காக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அதனால் அதன்செறிவு பரவலடைந்து செல்வதினால் அச்சூழல் தொகுதியில் வாழுகின்ற பல்வேறு வகையான உயிரினங்கள் ஆபத்துக்குள்ளாகின்றது. இதனால் உணவுச் சங்கிலியில் தாக்கம் ஏற்படுகின்றது.



மேலும் உயிர் தொழில்நுட்பவியலின் நிமித்தம் காடுகள் அழிக்கப்படுகின்றது. இதனால் ஆவியீர்ப்புக்கள் மந்த கதியில் இடம்பெறுகின்றன. காபனீரொட்சைட், மெதேன் வாயுக்கள் அதிகரிக்கின்றன. இதனால் வாயுக்கட்டமைப்பில் மாறுபாடுகள் ஏற்பட்டுப் புவியில் வெப்பம் அதிகரிக்கின்றன. இதன் காரணமாக முனைவுப்பகுதியில் பனிமலைகள் உருகுவதுடன் அவை கடலுக்குள் சங்கமிக்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர்வடைகிறது. அதனோடு தொடர்பாகப் பல விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. உயிர் தொழில்நுட்பம் மூலம் எயிட்ஸ் அணுக்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது. அதனை போர் ஆயுதமாகக் கையாண்டமையும் அதன் விளைவாக இன்று ஏற்பட்டுள்ள உலகளாவிய ஆபத்தும் இதற்குப் போட்டியாக கால்நடைகளில் பரப்பி விடப்பட்ட அந்த நச்சு நுண்ணுயிர்களும் உயிரியல் தொழில்நுட்பம் மூலம் இயற்கைக்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய ஆபத்தை எடுத்துக் காட்டுகின்றன. இதன் விளைவாக மனித இனமே அழியக் கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது.

1.4.3 இலத்திரனியவியல் அல்லது மின்னணுவியல் தொழில்நுட்பம்

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சில சமூகவிரோதிகள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினர் மனதில் சலனம் ஏற்படும். சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்வதும், சிலர் ஆண்களை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்வதும், தற்கொலை முதலியனவும் இடம் பெறுகின்றது.

1.4.4 மருத்துவத் தொழில்நுட்பம்

* போலி மருந்துக்கள் நடமாட்டம்

* நீண்டகாலப் பாதிப்புக்கள்

உதாரணம் : புற்று நோய்

* உடனடிப் பாதிப்புக்கள்

உதாரணம் : நோய்கள், ஞாபக மறதி, வலிகள், தொ ற்று நோய்கள் முதலியன.

1.4.5 நனோ தொழில்நுட்பம்

அபாயகரமான ஆயுதங்கள் தயாரிப்பு, உடல்நலம், சூழலியல் பிரச்சினைகளை முதலியவைகளைக் கூறலாம். பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வுகளில் நனோ தொழில்நுட்பம் எதிர்பாராத விளைவுகளைத் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நனோ புரட்சியால் பயன்கள் விளையும் அளவிற்கு அபாயங்களும் நேரிடும். எனவே நனோ தொடர்பான ஆய்வுகளும் பயன்பாடுகளும் கடுமையான கட்டுப்பாடுகளுடனே மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்வாறு மேற்கொள்வதன் மூலம் ஒழுக்க மீறுகைகளை நிறுத்திக் கொள்ளலாம்.



1.5 முடிவுரை

அறிவியல் முறையையும், பொறியியல் கருவிகளையும் பயன்படுத்தி நுணுக்கமான வேலைகள் மூலம் திட்டங்களையும் வரையீடுகளையும் செயற்படுத்தும் தொழில்நுட்பமானது விஞ்ஞான அறிவுமுறைகளையும், பொறியியல் ரீதியான இயந்திரங்களையும் கொண்டு நுணுக்கமான வேலைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். ஆரம்பகால சமூகத்தினர் அறிவு, திறன் முதலானவற்றைப் பயன்படுத்தியதன் மூலம் தொழில்நுட்பரீதியான சிந்தனைகள் உருவாக்கம் பெற்றன. இவை ஆரம்பகாலச் சமூகம் முதற் கொண்டு தற்கால நவீனச் சமூகம் வரையும் பரந்த அளவில் சேவையை நல்கி வருகிறது. இதனால் மனிதர்களுடைய அன்றாட வாழ்வில் அவர்களுடைய வேலைப்பளு குறைந்து விட்ட நிலையினைக் காணலாம். உதாரணம் விவசாயத்துறையில் பசுமைப்புரட்சியின் விளைவால் இயந்திரவழு பயன்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான உற்பத்திப் பொருட்கள் குறைந்த நேரத்தில் அதிகளவாக கிடைத்தமை. மேலும் மனிதர்களுடைய தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்யக்கூடிய நிலை காணப்படுகிறது. அத்துடன் நவீனத்துவத்தின் தோற்றத்தால் பாரம்பரிய தொழில்களில் இருந்து விடுபட்டு இலத்திரனியல் சார் தொழில்களில் மனிதர்கள் ஈடுபடுவதால் உயர்ந்த ஊதியம் கிடைக்கின்றது. இதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்வடைகின்றது. நேர விரயங்கள் தொழில் நுட்பவிருத்தியால் குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே தொழில்நுட்பமானது மனிதர்களுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு பல்வேறு வழிகளிலும் ஒழுக்கமீறல்களையும் ஏற்படுத்தி வருகிறது.

1.6 உசாவியவைகள்

1. அபிராமி.க,2001, “தகவல்தொழில்நுட்பம்” தமிழ்ப்புத்தகாலயம், உதயம் பிரிண்டர்ஸ் ,சென்னை 600017 பக்கம் (08-14 )

2. சுகுமார்.இ,2007,“தொடர்பாடலுக்கான தகவல் தொழில்நுட்பம்”, கணினி பிரிவு ,கொக்குவில் இந்துக்கல்லூரி.

3. அனஸ்.எம்.எஸ்.எம், 1996,“விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானங்களும்” பண்பாடு (07-72 )

4. எஸ்.மோசஸ்,2007,“வெகுஜனஊடகம் -மக்கள் திரள்நிலை ஊடகங்கள் பற்றிய அறிமுக விளக்கம் ,கிரு~p வெளீயீடு (11-29) (38-46 )

5. கணேசலிங்கம்.வி, 2007, “உயிரியல் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்”, இலங்கை தேசிய நூலகம்

6. லீலா.எஸ், “அன்றைய கண்டுபிடிப்புகளும் இன்றைய முன்னேற்றங்களும்”, இராமநாதன் பதிப்பகம், சென்னை

7. lnne schafer groos ,1997 ,”Tele communication “six edition ,web design group

8. Tom .L.Beauchap ,1982 , “Contemporary Issues In Bio Ethics” ,Edition -Wads Worth Publising Company Belmont ,Califonia Usa.

9. joseph .R.desjardins ,jhon.j.mccall, 1996, “contemporary issues in busines ethics” an international thomson publishing company wadworth publishing company bemont.



இணையத்தள தேடல்கள் - Online Resources

* http://www.muthamizh.word press.com/பொறியியல் பட்டப்படிப்பு

* http://www.ta.m.wikipedia.org/தகவல் தொழில்நுட்பம்

* http://www. ashokkumarkn.blogspot.in /2011/09/introduction bio technology .html ? m=1

* http://www.keetru.com/index.php/2014.03.08.04.35.27/201403.08.12.18.14 / ssivf -cms .php ?page594

* http://www.beeway.pixnet/blog/post/1752062->நனோதொழில்நுட்பம;(2008.may.12 :15:31 )

* http ://www.ta.m.wikipedia.org - உயிர்த்தொழில்நுட்பம் (2014.feb.06:09:03 )

* http://www.vidathanet.blogspot. in /2014/01 /nano robotics html ?m=1 .blogs.pot in/2012 /05/blogs-post -html (2012.may.08 :12:51 )

* http://www.wikipedia.org /wiki/ நனோதொழில்நுட்பம் (2015 .apr.03 :09:25 )

* http ://www.vembadiscu.com /site /index php ?option =com-content &view =article &id =&I temid =172

நிறைவுற்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/scienceandtechnology/p12b.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License