சிறுவர்களுக்கான சிறுகதைகள் கிழக்கு நாட்டிலும், மேற்கு நாட்டிலும் பல வருடங்களாக நடைமுறையில் உள்ளன. சிறுகதைகள் எனும் போது சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் கதைகளின் நடைமுறை இருக்க வேண்டும். வசன அமைப்புகளும் சிறிதாக இருக்க வேண்டும். ஒரு வசனத்தில் ஐந்து அல்லது ஆறு சொற்களுக்கு மேல் அமையாது இருக்க வேண்டும். வள்ளுவரே இதை அறிந்துதான் என்னமோ ஏழு சொற்களுக்கு மேல் குறளில் சொற்கள் இல்லாதிருப்பதைக் காணலாம். சிறுகதை எழுத்தாளன் ஒவ்வொருவரும் தமது கதை சிறுவர்களுக்கு ஆனதே என்ற எண்ணம் கதை எழுதும் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை மனதில் பதிந்திருக்க வேண்டும்.
சிறுவர்களுக்கான சிறுகதைகள் பலவற்றை http://www.magickeys.com/ books/invis-allig/index.html எனும் இணைய தளத்தில் பார்க்கலாம். கிழக்கு நாடுகளைப் பொறுத்த மட்டில் சிறுவர்களுக்கான தமிழ்ச் சிறுகதைகள் அவர்களது முதல் மொழியான தமிழில் இருப்பதைப் பார்க்கலாம். இம்மாணவர்களுக்கு சொல்வளம், மேற்கு நாட்டில் தமிழ் கற்க இருக்கும் தமிழ் மாணவர்களை விட அதிகமானதாக இருக்கும். ஏனெனில் கிழக்கு நாட்டவருக்குத் தமிழ் அவர்களது முதன் மொழி, மேற்கு நாட்டவருக்கு தமிழ் இரண்டாவது மொழி, மேற்கு நாடுகளில் ஒரு பொழுது போக்கிற்காகச் சிறுவர்கள் சிறுகதைகள் படிக்கிறார்கள். அறிவு வளர்சிக்க்குக் கிழக்கு நாடுகளில் சிறுவர்கள் சிறுகதைகள் படிக்கிறார்கள். மேற்கு நாடுகளில் மாணவர்கள் சொல்வளத்திற்காக தமிழ் சிறுகதைகள் படிப்பதில் அக்கறை காட்டுகின்றனர். அதையும் மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் கூறின் அகமகிழ்வர். மேலை நாட்டில் குழந்தைகள் தமது முதன் மொழியில் அந்நாட்டுச் சிறுகதைகளைப் படித்துச் சொல்வளத்தையும் ஆக்கத்திறனையும் மேம்படுத்துகிறார்கள். கதைகளும் இதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
கிழக்கு நாட்டு சிறுகதைகளைப் பார்க்கும்போது பல கதைகள் கற்பனைக்கு அப்பாற்பட்டனவாகவும் நிஜமற்றதாகவும் உள்ளன. அதற்கு மேல் அக்கதைகளில் சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டி அறிவை வளர்ப்பனவாக இல்லை. சில கதைகள் நியாயம் அற்றவைகளாக உள்ளன. மேற்கு நாடுகளில் அத்தகைய கதைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன. உதாரணமாக, “காகமும் வடையும்”, “ஆப்பு இழுத்த குரங்கு” ஆகிய சிறுகதைகள் குழந்தைகளின் அறிவு வளர்ச்சி எனப் பார்க்கும் போது, இதில் உள்ள கருப்பொருள்களைக் கவனிக்கும் இடத்து இது ஒரு ஏமாற்றுக் கதையாகவும் அடுத்தது மிருகவதைக் கதையாகவும் இருப்பதைக் காணலாம்.
மேலைநாட்டுக் குழந்தைகளுக்கான கதைப் புத்தகத்தில் நிறையப் படங்களைப் பார்க்கலாம். இருக்கும் படங்களைப் பார்க்கும் போது குழந்தைகளுக்கு ஆக்கத்திறன் உண்டாகிறது. வசனங்களும் குறைந்த சொற்களைக் கொண்டதாகவே இருக்கும். படங்கள் பெரிதாக இருக்கும்.
Then she found her stairs covered in toys.
She tripped on one and had to pick them all up.
Re: http://www.magickeys.com/books/invis-allig/index.html
*****
A young monkey named Sari woke up one morning and knew there was trouble.
Re: http://www.magickeys.com/books/invis-allig/index.html
*****
குரங்கு அறிஞர் !
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கைத் தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
“யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கைக் கெடுக்க வந்தாயா?” என்றான்.
“தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.
இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.
(http://www.sirukathaigal.com)
உதாரணமாக மேலே காட்டிய, உதாரணத்தில் சிறுவர் கதைகளைப் பார்க்கும் போது தமிழில் உள்ள கதையில் வசனங்கள் நீண்டதாக இருப்பதைக் காணலாம். ஆங்கில வசன அமைப்பில் அவ்வாறு இல்லாதிருப்தைக் காணலாம்.
குழந்தைகள் நல்லவர்களாக வளர, நாள் தோறும் கதைகள் படிக்க வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் கதை படிப்பதற்கென ஒரு நேரம் ஒரு இடம் ஒதுக்கப்பட வேண்டும். முக்கியமாகக் குழந்தைகள் கதை படிக்கும் போது, தரையில் இருந்து கதை கேட்க வேண்டும். இது அவர்களுக்கு ஒரு ஆரோக்கியத்தை வளர்க்கும். அதைவிட (bedtime story) படுக்கை அறையில் கதை படிப்பது ஒரு முறை உண்டு. குழந்தை படுக்கையில் இருக்கும் போது, அப்பாவோ அம்மாவோ அவர்களுடன் இருந்து கதை படிப்பார்கள். நல்ல கதைகளைப் பெற்றோர் தேர்ந்தெடுக்க வேண்டும். குழந்தைகள் கதையில் வரும் கேள்விகளைக் கேட்கும் அவற்றிற்குப் பதில் அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வாழ்க்கை என்றால் என்ன, எவ்வாறு வாழவேண்டும் வாழ்கையின் முக்கியம் என்ன ஆகியனவற்றைக் கதைகள் மூலம் விளக்க வேண்டும்.