இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


18. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் பொருளாதாரச் சிக்கல்கள்

முனைவர் ச. மாசிலாதேவி

காலந்தோறும் ஏற்படுகிற சமுதாய வாழ்வியலுக்கேற்ப இலக்கிய வளங்களைப் பெருக்கிக் கொண்டு செம்மாந்து சிறக்கின்ற செம்மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியில் எழுத்தார்வம் மிக்க படைப்பாளர்கள் பலர் மக்களின் வாழ்வியலைக் களமாகக் கொண்டு, கதை இலக்கியங்கள் பலவற்றைப் படைத்து மொழியின் வளத்தைப் பெருக்கிய வண்ணம் உள்ளனர். சிறுகதை இலக்கியங்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் காட்டும் கண்ணாடியாக மட்டுமின்றி எதிர்காலச் சமுதாயத்திற்கும் விழிப்புணர்வு ஊட்டுவனவாக அமைகின்றன. நடப்பியல் உண்மைகளில் சிறிது கற்பனையைக் கலந்து சிறுகதை ஆசிரியர்கள் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர். அவர்களுள் கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் தனுஷ்கோடி ராமசாமி. முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகளில் பொதிந்துள்ள பொருளாதாரச் சிக்கல்களை ஆய்தல் இன்றியமையாததாகும். ‘வாழ்க்கைச் சிக்கல்கள் பொருளாதாரப் பிரச்சனையால் ஏற்படுகின்றன’ என்பதைத் தனுஷ்கோடி ராமசாமி தம் சிறுகதைகளில் வெளிப்படுத்தி உள்ளார்.

சமுதாயச் சிக்கல்களில் பொருளாதாரச் சிக்கல்களே சமூகத்தைப் பெரிதும் பாதிக்கும் சிக்கல்களாகும். செல்வம் ஒரு மனிதனிடமோ அல்லது தனி இனத்தாரிடமோ முடுக்கப்படுவதாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ஏற்றத் தாழ்வுகள் காரணமாகத்தான் ஏழை, பணக்காரன் போன்ற பிரிவுகளும், தாழ்ந்தவன். உயர்ந்தவன் என்ற பாகுபாடுகளும் ஏற்படுகின்றன. பொருளாதார நிலையின் அடிப்படையில் மக்களிடையே காணப்பெறும் ஏற்றத்தாழ்வுகளையும் வறியவர்களின் இரங்கத்தக்க, இயலாமை நிறைந்த, இழிவு மிக்க வாழ்க்கை நிலைகளையும் தனுஷ்கோடி ராமசாமி தம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அவற்றை விளக்கும் வகையில் இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.



வறியவர்களின் தாழ்நிலைகள்

“சுதந்திரமாயிருந்த சமூக உறுப்பினர்களிடையிலும் வகுப்பு வேறுபாடுகள் வளர்ந்தன. விவசாயிகளும், கைத்தொழிலாளர்களும் ஒருபுறம். அவர்களைச் சுரண்டி ஆடம்பர வாழ்வு நடத்தும் ஆளும் கூட்டம் மறுபுறம். கடன்பட்டவர்கள் மறுபக்கம். செல்வர்கள் ஒருபக்கம், ஏழைகள் மறுபக்கம் என்ற நிலை உருவானது மேலும் வணிக வகுப்பு தோன்றி ஏராளமான செல்வத்தைச் சேகரித்துச் செல்வாக்கும் பெற்றது. இவ்வாறாகச் சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வேரூன்றின என்று மார்க்சியப் பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்” (1)

வறுமைப்பட்ட மக்களின் தாழ்வான நிலைகளை தனுஷ்கோடி ராமசாமி தன்னுடைய பெரும்பான்மையான கதைகளில் குறிப்பிட்டுள்ளார். வறுமையின் கொடுமையை எழுதுவதற்குக் காரணம் அவருடைய மனம் சார்ந்த விளைவாகக் கூட இருக்கலாம்.

‘‘எழுத்தாளன் வாழ்பதும், பார்ப்பதும் எல்லாமே சமுதாயத்திலிருந்து தோன்ற முடியும்.’’ (2)

எனும் கருத்து இங்கு எண்ணிப் பார்ப்பதற்குரியதாகும்.

மழை இன்மையால் பயிர்கள் விளையாது பொய்த்து விடுவதால் வறியவர்கள் மேலும் வறுமைக்குள்ளாகிக் கடன்படுதல் உடமைகளை விற்றல், கடினமாக உழைத்தல் போன்ற எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

தொழிலாளர்களின் நிலை

வறட்சியினால் சொந்த ஊரில் வேலையில்லாமல் வெளியூர்களுக்குச் சென்று கூலி வேலை பார்க்கும் நிலையினை ‘ஆத்தாள்’ கந்தகக் கிடங்கினிலே என்ற கதைகளிலும் காணலாம்.

‘‘அப்பச்சி மண் வெட்ட கோசு குண்டுக்கும் போய் நாலைந்து நாட்களாகியும் வரலே’’ (3)

என்று ஆத்தாள் கதையில் காணப்படும் கதைப்பகுதியும், இவன் புருஷன் விவசாய வேலை ஏதுமில்லாததால் கார்த்திகை, மார்கழி ரெண்டு மாதம் தேனிப்பக்கம் போயி வேல செஞ்சுட்டு வாரேன் என்று சென்றுள்ளதைக் கூறும் கந்தகக் கிடங்கிலே கதையில் காணப்படும் கதைப்பகுதியும் சொந்த ஊரில் விவசாயம் இல்லாததால் வெளியூர் சென்று கூலி வேலை பார்க்கும் அவலநிலையை உணர்த்துகின்றன.



குழந்தைத் தொழிலாளர்களின் அவலநிலை

தங்கள் குடும்பத்திற்காகத் தங்களுடைய படிப்பு, எதிர்காலம், விளையாட்டுத்தனம், பிள்ளைவயது, குறும்புத்தனம் என அனைத்தையும் துறக்கும் குழந்தைத் தொழிலாளியின் துன்புறுத்தினைக் ‘கந்தகக் கிடங்கிலே...’ கதையில் ஆசிரியர் சித்தரித்துள்ளார்.

‘‘நாலு மணிக்கு முன்ன பஸ்ஸை எதி;ர்பார்த்துப் புள்ளையார் களத்துக்கு ஓடுனா… ராத்திரி எட்டு மணிக்குத்தான் திரும்பக் கொண்டாந்து அந்தப் பஸ் கொட்டிட்டு போகும்.’’ (4)

பயராபீஸ்காரனும், தீப்பெட்டி ஆபீஸ்காரனும் பிள்ளைகளை மட்டுமா அள்ளிப்போட்டுக்கிட்டு போனாங்க...? கூடவே... இந்த ஊர் விளையாட்டையும், சிரிப்பையும், அழகையும் அள்ளிட்டுப் போயிட்டாங்களே...! (5)

என்ற கதைப்பகுதி கல்வி கற்காமல் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு வறுமையை ஆசிரியர் காரணமாக்கியுள்ளார்.

தங்கள் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய இயலாத பெற்றோரே, தங்கள் குழந்தைகளைக் குழந்தைத் தொழிலாளர்களாக ஆக்குகின்றனர். தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கும் சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி போன்ற இடங்களைக் கதைக்களமாக்கியுள்ளார் ஆசிரியர்.

கல்வி கற்க இயலாமை

வறட்சியால் விவசாயியும் கூலியாட்களும் வறுமைப் பிடியில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. தனுஷ்கோடி ராமசாமியின் ‘சேதாரம்’ என்ற கதையில் சீதையின் படிப்பு நிறுத்தப்படுவதற்கு வறட்சியே காரணமாகின்றது.

‘‘ரெண்டு, மூணு வருசமாக மழையில்லை. கிணற்றில் வேறு சரியாகத் தண்ணீர் இல்லை. வெள்ளாமை, விளைச்சலும் சரியில்லை. ஒரு தடவை காலேஜ்ல படிக்கின்ற அண்ணனுக்கு பீஸ் கட்டறதுக்கு கஸ்டமாக இருந்தப்போ காளைமாடுகள் ரெண்டிலே ஒன்றை ஐயா விற்றுவிட்டார். ஒரு மாடே போதும்னு அந்த மாமா துரைப்பாண்டியனோடு சேர்ந்து கூட்டுமாடு சேர்த்து வேலை செய்ய ஆரம்பித்தார். வீட்டுக் கஷ்டத்தினாலே ஐயா அக்காள் படிப்பை நிறுத்தி தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்கு அனுப்பிவிட்டார்.’’ (6)

என்ற கதைப்பகுதி வறட்சியினால் ஒரு குடும்பம் படும் இன்னலையும், பொருளாதாரச் சிக்கலினால் சீதை கல்வி பெற இயலாத நிலையும் விளங்குகிறது.



உணவு இன்மை

வறியவர்கள் உழைத்துப் பெறும் கூலியைக் கொண்டு ஒருவேளை கூட வயிறார உணவை உட்கொள்ள முடியவில்லை. கூழ், கஞ்சி என்ற எளிய உணவை உண்ணும் பற்றாக்குறையே காணப்படுகிறது. போதிய வருமானம் இன்மையும், தொடர்ந்து வேலை இல்லாமல் போவதும் உணவு இன்மைக்குக் காரணம் ஆகிறது. தனுஷ்கோடி ராமசாமியின் ‘பாரத விலாஸ்’ என்ற சிறுகதையில் காந்திமதியின் பிள்ளைகள் பல வீடுகளில் இடும் பழைய உணவுகளை உண்பதை

‘‘நாலஞ்சு வீட்டிலாவது அவங்களுக்கு ஆகாத பழையது கழிவுகளைப் போடுவாங்க… அதவாங்கி தென்னமரத்தடியிலே உட்கார்ந்து பிள்ளைகளை பசியமத்தியிருப்பாள்… அதுக பிரியமா அவக்காட்சியோட திங்கறத பார்த்து மனசுக்குள்ளேயே ஆனந்தக் கண்ணீர் விடுவாள்’’ (7)

என்று குறிப்பிட்டுள்ளார்.


மருத்துவம் செய்ய இயலாமை

வறுமையினால் மருத்துவம் செய்ய இயலாமல் தவிக்கும் நிலையினை தனுஷ்கோடி ராமசாமி தம் கதைகளில் சித்தரித்துள்ளார். பாலகிருஷ்ணனின் தம்பி முத்துக்கிருஷ்ணன் நோயால் அவதிப்படுவதை கந்தக்கிடங்கிலே... கதையில் காணலாம்.

‘‘இப்படித்தான் அஞ்சு நாளாயிருக்கு... ராத்திரியெல்லாம் காச்சல் பொரியம். விடிஞ்சா சரியாப் போகும். காச்சவில்லை வாங்கி நாலு நாள் குடுத்துப்பார்த்தாள் கேக்கல.’’ (8)

என்ற கதைப்பகுதி மருத்துவமனைக்குச் செல்ல பணம் இல்லாமல் பக்கத்துக் கடையில் மருத்துவக் குறிப்பு இல்லாமல் தானாக மருந்து வாங்கிக் கொடுக்கும் அவலநிலையைச் சித்தரிக்கின்றது.

தொகுப்புரை

தனுஷ்கோடி ராமசாமி தன் கதையில் வறுமையின் கொடுமையில் சிக்கித் தவிக்கும் ஏழைகளின் துன்பங்களைச் சித்தரித்துள்ளார். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டில் பருவ மழை பொய்த்தால் ஏழை விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். வறியவர்களாக அவர்கள் மேலும் வறுமைக்குள்ளாகிக் கடன்படுதல், உடைமைகளை விற்றல், கடினமாக உழைத்தல் போன்ற எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆட்பட்டுவதைத் தன் கதையில் விளக்கியுள்ளார் தனுஷ்கோடி ராமசாமி.

குடும்பமே பட்டினி கிடப்பதை ‘கஸ்ப்பா’ கதையிலும், புளித்த நீரை மட்டும் ஒருநாள் முழுவதும் உணவாகத் தன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தாயை ‘ஆத்தாள்’ கதையிலும் ஆசிரியர் சித்தரித்துள்ளார். உண்ண உணவிற்கே தவிக்கும் மக்களுக்கு புது உடை, தலைக்குத் தேய்க்க எண்ணெய் என்பதெல்லாம் வெறுங்கனவாக மட்டும் காணப்படுகிறது.

பெற்றோர் வேலைக்கு செல்வதால் உடன் பிறந்தவர்களை அன்புடன் பாதுகாக்கும் மூத்த குழந்தைகள் இருக்கும் உணவைத் தன் தம்பி தங்கைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து ஒரு தாயைப் போல பரிவுடன் நடந்து கொள்வதைத் தனுஷ்கோடி ராமசாமி கதைகளில் காணலாம்.

தனுஷ்கோடி ராமசாமி தான் வாழ்ந்த பகுதியிலுள்ள மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் பதிவு செய்துள்ளார். கரிசல் காட்டு மக்களின் வறுமையினையும் குழந்தை தொழிலாளர்களின் அவலநிலையையும் சித்திக்கும் ஆசிரியரின் கதைகளில் பெண்ணியம் பேசப்படுகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கின்றதான சமதர்மச் சமுதாயம் உருவாக வேண்டும் என்னும் விழைவைக் காட்டுவனவையாக தனுஷ்கோடி ராமசாமியின் சிறுகதைகள் அமைந்துள்ளன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

சான்றாதாரங்கள்

1. தனுஷ்கோடி ராமசாமி சிறுகதைகள்

2. இரவீந்திர பாரதி (தொ.ஆ)

3. நாரணம்மா

4. தனுஷ்கோடி ராமசாமி

அடிக்குறிப்புகள்

1. எஸ். ராமகிருஷ்ணன், மார்க்சியம் பொருளாதாரம் பார்வை. ப.11-17

2. செ. சுதாகரன், அழகிரிசாமியின் சிறுகதைகள் ஒரு திறனாய்வு, ப.105

3. தனுஷ்கோடி ராமசாமி, ஆத்தாள, ப. 143

4. தனுஷ்கோடி ராமசாமி, கந்தகக்கிடங்கிலே….ப. 256-257

5. மேலது, பக். 259

6. தனுஷ்கோடி ராமசாமி, சேதாரம் ப. 206

7. தனுஷ்கோடி ராமசாமி, பாரதவிலாஸ், ப. 122

8. மேலது, ப. 258.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p18.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License