இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


19. ஒளிச்சேர்க்கை சிறுகதைத் தொகுப்பில் மனிதநேயமும் பகுத்தறிவுப் பார்வையும்

முனைவர் த. சாந்தகுமாரி

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிறுகதை, நாவல், நாடகம், புதுக்கவிதை போன்ற பல படைப்புகள் தோன்றியுள்ளன. இப்படைப்புகளில் சிறுகதைகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இக்கால மாத, வார தினசரி இதழ்களிலும் சிறுகதை இடம் பெற்றுள்ளது. சிறுகதையின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் ஏதாவது ஒரு நிகழ்வை மையமிட்டுச் சிறுகதைகள் படைக்கப்படுகின்றன. அவ்வகையில் ‘ஒளிச்சேர்க்கை’ என்ற சிறுகதைத் தொகுதியில் காணப்படும் மனிதநேயம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.

சிறுகதையின் இலக்கணம்

சிறுகதை அளவில் சிறியதாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். ஒரு சிக்கலைக் கருவாகக் கொண்டு அழகாக எடுத்துரைக்க வேண்டும். தொடக்கம் முதல் முடிவு வரை குதிரைப் பந்தயம் போல விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பர்.

செட் ஜிக்விக் எனும் ஜெர்மனிய அறிஞர் பிரான்டர் மாத்தியூஸ் சிறுகதை குறித்து,

“சிறுகதை என்பது ஒரே ஒரு பாத்திரத்தின் நடவடிக்கை பற்றியோ, ஒரு தனிச் சம்பவத்தைப் பற்றியோ அல்லது ஓர் தனி உணர்ச்சி தரும் விளைவையோ விளக்கிக் கூறும் இலக்கிய வடிவம்” (சிட்டி சிவபாதசுந்தரம் - தமிழில் சிறுகதை வரலாறும், வளர்ச்சியும் - ப. 4) என்று விளக்கம் தருகிறார்.

கா. சிவத்தம்பி சிறுகதையின் இலக்கணம் குறித்து,

“ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் மனித மனம் படும்பாட்டை அல்லது ஒரு பாத்திரம் இயங்குகின்ற முறைமையைக் குறிப்பதுவே சிறுகதை” (கா. சிவத்தம்பி - தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்-ப.16) என வரையறை செய்கிறார்.

இவ்வாறாக சிறுகதையின் இலக்கணம் குறித்து பல ஆசிரியர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.



மனித நேயம்

மானுடம் போற்றுவதே மனிதநேயம் எனப்படும். இனம், மொழி, மதம் இவற்றால் வேற்றுமைப்பட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவர். உலக மக்களிடையே ஒற்றுமை ஓங்கும் நேயம் என்பது அன்பு. அன்புதான் நாம் வாழ்வதற்கும், பிறரை வாழ்விப்பதற்கும் அடிப்டையான பண்பாகும். மனிதன் சகமனிதன் மீது காட்டும் அன்பு, பரிவு, இரக்கமனப்பான்மை போன்றவை மனிதநேயம் எனலாம்.

“மனித நேயம் என்பது நாடு, இனம், மொழி என்ற எல்லைகளைக் கடந்து நிற்பது. மனித இனத்தின் நாகரிகப் பண்பாட்டு வளர்ச்சியோடு பிணைந்து நிறபது. மனிதநேயம் என்பது ஓர் உயரிய பண்பாடு. இப்பண்பாட்டினால் மக்களிடையே அன்பு வளரும்” (வே. முத்துலக்குமி - பண்பாட்டுச் சிந்தனைகள் - ப. 108) என்று முத்துலக்குமி குறிப்பிடுகிறார்.

“சுகந்தி டீச்சர்” என்னும் சிறுகதையில், சுகந்தி நன்கு படித்து பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அவளின் ஏழ்மை காரணமாக அவள் விரும்பும் ஆசிரியர் வேலைக்குப் படிக்க முடியவில்லை. அவள் தந்தை தினக்கூலி, வேலை பார்க்கும் இடத்திலேயே எதிர்பாரதவிதமாக இறக்க நேரிட, குடும்பம் வறுமையில் வாடுகிறது. அதன்பின் குறைந்த ஊதியம் என்றாலும் அருகில் உள்ள பள்ளியில் ஆசிரியராக மனநிறைவுடன் பணியாற்றினாள். குழந்தைகளிடம் கனிவுடன் பழகும் சுகந்தியை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சேகர் ஸ்டேட் பாங்குல சீஃப் கேஷியர். தன் தாயிடம் அன்பான பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியதற்கேற்ப தன் பேரன் வாயிலாக அறிமுகமான சுகந்தியை மணமுடித்து வைத்தாள். வருடம் உருண்டோடியது. பள்ளி சுகந்திக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு அளித்தும், அதை சுகந்தி ஏற்கவில்லை. சுகந்திக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட சேகர் வேலைக்கு போகவேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் சுகந்தி கேட்கவில்லை. ஆண்டுதோறும் செல்லும் சுற்றுலாவிற்கு குற்றாலம் செல்ல முடிவு செய்தனர். அப்போது சுகந்தி 6 மாத கர்ப்பம். இருப்பினும் சேகரிடம் கூறாமல் மறைத்தாள். கூறினால் சுற்றுலாவிற்கு அனுமதிக்க மாட்டான். வந்து கூறிக்கொள்ளலாம் எனத் தீர்மானித்து சுற்றுலா செல்ல தீர்மானித்தாள். குற்றாலத்தில் மெயின் அருவியில் குழந்தைகள் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீர் அதிகமாக வர குழந்தைகள் அலறினர். குழந்தைகளைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு குழந்தைகளைக் கரை சேர்த்த சுகந்தி வரவில்லை. சுகந்தியின் இறப்பிற்குப் பள்ளி அஞ்சலி செலுத்தியது. அப்போது டாக்டர் சுகந்தியின் கர்ப்ப விஷயத்தைச் சேகரிடம் தெரிவிக்க சேகர் பள்ளியே அலறும்படி அழுது தீர்த்தான்.



இச்சிறுகதை வாயிலாக ஆசிரியர் சுகந்தியின் மனிதநேயத்தை,

“திடீரென அருவி கொட்டியவுடன் குழந்தைகளைக் காப்பாற்ற அருவிக்குள் சென்றாள். கையில் இரண்டு இரண்டு குழந்தைகளைச் சுமந்து வந்து வெளியே கொண்டு வந்துவிட்டு மீண்டும் உள்ளே சென்றாள். மீண்டும் குழந்தைகளைக் கொண்டுவந்து வெளியே விட்டாள். மீண்டும் உள்ளே சென்றாள். ஆனால் இந்த முறை அவள் திரும்பி வரவில்லை” என்று சுகந்தி டீச்சரின் கடமையுணர்வையும், மனித நேயத்தையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதில் தன்னைப்பற்றி எண்ணாலமல் தன்னை நம்பி வந்த குழந்தைகளைக் காப்பாற்றவேண்டும் என்ற மனித நேயமிக்க பாத்திரமாகச் சுகந்தியை ஆசிரியர் சித்தரித்துள்ளார்.

அவ்வாறே ‘பெருந்தவம்’ என்ற சிறுகதையில், ஆசிரியர் கிழங்கு விற்பனை செய்யும் வியாபாரியின் மன உணர்வினை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

சிவனாண்டி மலையில் விளையும் மரச்சீனிக்கிழங்கினைப் பறித்து வந்து வயியாபாரம் செய்பவன். கிழங்கினை மலையில் வெயிலையும் பொருட்படுத்தாது கடினப்பட்டு ஏறி பறித்துவந்து மிகவும் நேர்மையுடன் தொழில் செய்பவன். அவனைச் சாராயக்கடை நடத்தும் சுப்பையா வழிமறித்து ஏன் கடனாகக் கிழங்கைத் தந்துவிட்டு சிரமப்படற, எல்லாவற்றையும் முன்பணம் தந்துவிட்டு நானே வாங்கிக்கிறேன். துணைக்கு உன் மகனையும் அழைச்சிட்டுப்போ என்று ஆலோசனை கூறினார். அதற்கு சிவனாண்டி எல்லாக் கிழங்கையும் உங்களிடம் தந்து விட்டால் ஊர் மக்களுக்கு என்ன செய்வது. அவர்களில் பலர் இக்கிழங்கினால்தான் பசியாறுகின்றனர். அதனால் உங்களுக்குத் தர இயலாது என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினான். இதனை ஆசிரியர்,

“நீ ஒரு மட சாம்பிராணி மொத்தமா ஒரு இடத்திலே கொண்டு போட்டுட்டு காசு மாறப்பட்ட வழியைப் பாப்பியா? ஊருக்குள்ள போயி, கடனுக்கு கூவிக்கூவி விப்பியா?

அதுக்கில்லே பத்து அறுவது குடும்பம் என் கிழங்கை நம்பிப் பசியாறும்” என்பதில் இலாப நோக்கோடு செயல்பட்டால் ஊர் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதநேயப் பண்பாளனாக சிவனாண்டியை ஆசிரியர் எதார்த்தத்தோடு படைத்துள்ளார். இதில் ‘பெருந்தவம்’ என்ற சிறுகதையின் வழியாகத் தொழிலை லாப நோக்கோடு அணுகாமல் அதனை ஒரு தவமாக மேற்கொள்ளும் ஒரு வியாபாரியின் பரந்த மனப்பான்மையை ஆசிரியர் பிரதிபலித்துள்ளார்.



பகுத்தறிவு

பகுத்தறிவு என்பது எந்த ஒரு செயலையும் ‘பகுத்து-பிரித்து’ பார்த்து, அது சரியா, தவறா என தன் அறிவின் துணைகொண்டு அச்செயலைச் செய்ய முற்படுவதாகும்.

பாரதி, பாரதிதாசன், பெரியார் போன்றோர்கள் மூடநம்பிக்கையைக் கண்டித்தனர். இதில் மூடநம்பிக்கைகளைக் களைந்து பகுத்தறிவை ஊட்டியதில் பெரியார் பங்கு மிக முக்கியமானதாகும். அவரைத் தொடர்ந்து பகுத்தறிவைப் புகட்ட சரியான வழித்தோன்றல்கள் இல்லாததால் சிறிது காலம் ஒய்ந்திருந்த மூடநம்பிக்கை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. மூடநம்பிக்கை என்பது சாதகம், மாந்திரீகம், சகுனம் இவ்வாறான பல செயல்பாடுகளாகும்.

‘விழுப்புரம் சந்திப்பு’ என்னும் சிறுகதையில், நாட்டில் பரவலாக காணலாகும் மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார்.

சோமசுந்தரம் தன் மகனின் படிப்பிற்காக கிராமத்திலிருந்து பட்டணம் சென்றவர். ஒரு மகன், ஒரு மகள். மகன் மருத்துவர். மகளுக்குக் கடந்த சில வருடங்களாக உடல் நலப் பாதிப்பு. மருந்துவர்களிடம் காண்பித்தும் பலன் இல்லை. மருத்துவர்கள் இதனை மனவியாதி என்றனர். தன் சொந்தக் கிராமத்தில் மாந்திரீகத்தில் சிறப்புபெற்ற திரிசூலம் பிள்ளையிடம் காண்பித்தால் தன் மகள் வியாதி குணமாகிவிடும் என்ற நம்பிக்கையில் சொந்த ஊருக்கு தன் மனைவியுடன் பயணித்தார். மகனிடம் இட விசயமாக செல்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார். இரயிலில் சகபயணியிடம் தன் நிலையையும், திரிசூலம் பிள்ளையின் பெருமையையும் எடுத்துரைத்தார்.

இக்கருத்தை, “ திரிசூலம் பிள்ளை நாற்பது நாள் விபூதி அடித்து மந்திரம் போட்டா, இந்தவலி, மயக்கம் எல்லாம் மாயமாய்ப் போய்விடும். பலருக்குக் குணம் ஆனது எனக்கே தெரியும். இப்ப நான் அவரைப் பார்த்துப்பேசி கையோடு பட்டணத்துக்கு அழைத்துக்கொண்டு போகத்தான் வந்திண்டிருக்கேன்” என்பதின் வாயிலாக சோமசுந்தரம் மாந்திரீகத்தின் மேல் கொண்ட நம்பிக்கையை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

விழுப்புரம் சந்திப்பில் இரயில் நிற்க எதிர்பாராத விதமாக திரிசூலம் பிள்ளையின் மகனைச் சோமசுந்தரம் சந்திக்க நேரிடுகிறது. அவர் மகனை விசாரித்ததில் தன் தந்தைக்கு இதய வியாதி என்றும் மாந்திரீகம் பலனளிக்கவில்லை. உங்கள் மகனைப் பார்த்து பட்டணத்தில் மருத்துவமனையில் சேர்க்கச் சென்றுகொண்டிருப்பதாக பதிலளித்தான். உடனே தன் மகனுக்கு அவரைக் கவனித்துக்கொள்ளச் சொல்லி ஒரு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு யோசனையுடன் இரயில் வந்து ஏறிக்கொண்டார்.

திரிசூலம்பிள்ளையின் மகன், “மற்றவங்களுக்கு மயக்கம் போக அப்பா சொல்கிற அவ்வளவு பூஜை, முடிக்கயிறு, விபூதி அடிக்கறது எல்லாம் செய்து பார்த்தாச்சி. ஒரு பலனும் இல்லே. கடைசியிலே சின்னவரைப் பிடிச்சி பெரிய ஆஸ்பத்திரியிலே சேர்த்தாகனும்னு கிளம்பிவிட்டோம்”. என்று குறிப்பிடுவதில் மாந்திரீகத்தில் சிறப்பு பெற்றவரின் மகனே மருத்துவத்தின் மூலம் நோய் குணமாகும் என்பதை உணரும் விதத்தில் ஆசிரியர் பகுத்தறிவுச் சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இச்சிறுகதையிலும் மருத்துவரின் தந்தை மாந்திரீகத்தை நாடுவதும், மாந்திரீகம் செய்பவரின் மகன் மருத்துவரை நாடுவதுமாக ஆசிரியர் கதையினை அமைத்திருப்பினும், இறுதியில் மாந்திரீகம் என்பது மூடநம்பிக்கை, மருத்துவமே நோயைக் குணப்படுத்தும் என்பதைத் தன் கதாப்பாத்திரங்களின் வழியாக ஆசிரியர் பகுத்தறியும் சிந்தனையை விதைத்துள்ளார்.


இவ்வாறே ‘வேப்பமரம்’ என்னும் சிறுகதையின் வாயிலாக மக்களின் மூடநம்பிக்கையை ந. பிச்சமூர்த்தி சிறப்பாக படைத்துள்ளார்.

வேப்பமரம் தானே கதை கூறுகிறது. என்னை வெட்டச்சொல்லி பங்களாக்காரரிடம் ஒரு கூட்டம் சண்டையிட்டது. அவரும் வெட்டிவிடுகிறேன் என்று பதிலளித்தார். பல வகையிலும் எனக்குத் தொந்தரவு வந்தது. திடீரென ஒருநாள் பெரிய சத்தம். பஸ் என் மீது மோதி நின்றது. இந்த மரம்தான் பலரின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது என்று என்னை வெட்டக்கூறிய அதே மக்கள் என்னைப் பாராட்டினர். பஸ் மோதிய மூன்றாம் நாள் கிளையின் அடியில் பால் வடிந்தது. இந்த செய்தி எங்கும் பரவியது. அன்று முதல் தெய்வமாக என்னை வழிபட்டனர். அந்த பாலைப் பருகினால் நோய் குணமாவதாகவும் கூறினர். இச்செய்தியைக் கேள்விப்பட்ட ஒரு விஞ்ஞானியும், மாணவனும் என்னைக் காணவந்தனர்.

விஞ்ஞானி மாணவனிடம், “உடலமைப்பில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்வதைப்போல மரத்திலும், செடியிலும் ஜீவரசம் ஏறுவது இயற்கை. சிரங்கு வந்தால் சரீரம் பொத்துக்கொண்டு ரத்தம் முதலியன வடிகின்றனவே, அதைப்போலவே மரத்தில் பொத்துக்கொண்டு ஜீவரசம் வெளியே வந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்” என்று விளக்கிக் கொண்டிருந்தார்.

இவ்வாறாக ‘வேப்பமரம்’ சிறுகதை வாயிலாக இயற்கையாக நடைபெற்ற ஒரு நிகழ்வை தெய்வசக்தி என்று மூடநம்பிக்கை கொள்ளும் மக்களின் மன உணர்வினை ஆசிரியர் பிரதிபலித்துள்ளார்.

நாடு நாகரிகம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் மேம்பட்டிருப்பினும் மனிதன் மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கும் நிலையே நிலவிவருகிறது. மனநேயம் என்பது நாளுக்குநாள் குறைந்து பணநேயம் மனித மனங்களில் ஆட்சி செய்கிறது. மனிதநேயமும், பகுத்தறிவு சிந்தனை, மனித மனங்களில் வருங்காலங்களிலாவது வளரவேண்டும் என்ற நோக்கில் இச்சிறுகதைத் தொகுப்பு படைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை சிறப்புற இவ்விரண்டு பண்புகளும் அவசியம் என்பதைச் சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் வகையில் இச்சிறுகதைகள் திகழ்கின்றன.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p19.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License