இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


35.அண்ணா முதல் அம்பை வரை சிறுகதை தொகுப்பில் பாத்திரப் படைப்புகள்

ப. சந்திரன்

தமிழில் சிறுகதைகள் வெறும் இலக்கியப் படைப்பாக அமையாமல், அது ஒரு சமூக விமர்சனக் கருவியாகவும் பயன்படுகிறது எனலாம். இலக்கியத்தைக் குறிப்பாக நாடகத்தை, அரசியல் கருத்துகளைச் சொல்வதற்காக பயன்படுத்தியவர்கள் திராவிட இயக்கத்தினரே ஆவர். திராவிட இயக்கப் படைப்பாளிகளுள் அறிஞர் அண்ணா குறிப்பிடத் தகுந்த பங்காற்றியுள்ளார். மணிக்கொடியின் அடுத்த காலக்கட்டங்களில் இவர் கதைகள் எழுதத் தொடங்கினார். அவர் ஓர் இரவு, வேலைக்காரி முதலிய நாடகங்களை எழுதியுள்ளார். மேலும் மு. கருணாநிதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், திலகவதி, பாமா, சி. ஆர். ரவீந்திரன், அம்பை போன்றோர்கள் இயற்றிய சிறுகதை தொகுப்பில் பாத்திரப் படைப்புகள் பற்றி நாம் இவற்றில் காண்போம்.

செவ்வாழை என்ற கதையின் வழியாக உழைப்பவரால் இந்த உலகம் - மக்கள் பசியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும். சுரண்டலற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லவே இந்தக் கதை புனையப்பட்டள்ளது எனலாம். செங்கோடன் பாத்திரம் காலங்காலமாக அடிமையாக வாழும் மக்களின் அத்தாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. செங்கோடன் செவ்வாழைக் கன்றைச் செல்லப்பிள்ளை போல் வளர்க்கத் தொடங்கினான் என்கிற போதே கதைக்குள் நடக்கும் சிக்கல் தெரிந்து விடுகிறது. கன்றினை நட்டு மரமாக நிற்கும் வரை ஆசையோடு வளர்த்து வந்தமையை ஆசிரியர் நுட்பமாகக் காட்டியுள்ளார். கதையின் எதிர்பாராத திருப்பமாகப் பண்ணையார் மகளுக்கு, தரிசனத்திற்காகச் செவ்வாழை வேண்டும் என்று கேட்பது அமைகிறது. கண்ணக்கை பிள்ளை பாத்திரம் செங்கோடன் கொள்ளையில் செவ்வாழை நிற்கிறது என்று சொல்வதன் மூலம் சுரண்டும் ஆண்டான் அடிமை செய்யும் அதிகாரம் செய்யும் சாதி மற்றும் முதலாளியத்தின் மனம் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகிறது. வாழைமரம் வெட்டுண்ட பிறகும் கூடப் பணக்கார வர்க்கத்தின் புத்தி போகவில்லை. உள்ளுர்க்கடையில் அதை விற்றுவிடுவதும் வளர்த்த குழந்தைகளை அதைக் காசு கொடுத்து வாங்குவதும் சமுகத்தில் நடக்கின்ற ஏழை, பணக்காரன் முரணின் தன்மையைக் காட்டுவதாக உள்ளது. அரசியல் தளத்தில் இந்தக் கதை அங்கதத்தன்மை உடையதாக அமைகிறது.



கலைஞர் கருணாநிதியுடைய 'கண்ணடக்கம்' கதையானது தலைப்பில் சமூக விழிப்புணர்வையும், சுயமரியாதைச் சிந்தனையையும் முற்போக்குக் கருத்துகளையும் கொண்டதாக அமைந்துள்ளது. தான் சார்ந்த திராவிட இயக்கச் சிந்தனைக்கேற்ப கடவுள் மறுப்புக் கொள்கையை இந்தக் கதையின் முன்வைக்கிறார். எனவேதான் கடவுளையும் மனிதனையும் சந்தித்துப் பேசவைக்கிறார். இது புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் கதையினை நினைவுபடுத்துகிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் உரையாடலில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றும் முயற்சி வெகுநுட்பமாகக் காட்டப்பட்டுள்ளது. மனிதன் தான் கடவுளைப் படைத்தான் என்பது உன்னைப் போல் ஒரு பக்தனால்தான் கண்பார்வை போய்விட்டது என்று கடவுள் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது. கதையின் முடிவும் 'கடவுளை மற மனிதனை நினை' என்ற கொள்கையினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. இதனைக் கடவுளோடு வாதம் செய்வதை விட்டுவிட்டு அடுத்தவர்களோடு நோய் தீர்க்கப் போகும் கதை முடிவைக் காட்டுகிறது.

புதுமைப்பித்தனின் இலக்கியப் படைப்புகளில் படைப்பாளர்கள் பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்துள்ளனர். 'நினைவுப் பாதை' என்னும் கதை நேரடி கதை நிகழ்வு உத்தியும் நனவோடை உத்தியும் கலந்து அமைந்துள்ளது. மேலச்செவல் என்ற கிராமத்தை வைரவன் பிள்ளை என்ற பாலசுப்பிரமணிய பிள்ளையின் மனைவி இறந்து விட்டதிலிருந்து கதை தொடங்குகிறது. இறப்பு நடந்த வீட்டின் நிகழ்ச்சிகளின் ஊடாகப் பல்வேறு சிறுசிறு பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சுந்தரம் பிள்ளை இசக்கி போன்றவர்கள் துணைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டு வைரவன் பிள்ளையின் உணர்வோட்டத்தினை வெளிப்படையாகப் புரிந்து கொள்ள துணை புரிகின்றனர். இக்கதை ஒரு தத்துவ நிலையில் இயங்குவதைப் பார்க்க முடிகிறது. இறப்பு என்னும் இழப்பு நிகழ்ந்த நிலையில் மனம் கலங்கிக் கனத்துகிடந்தாலும், பிறப்பைப் போல இறப்பும் இயல்பானதுதான் என்னும் வாழ்வின் எதார்த்தத்தை வீட்டிற்குள் இருந்து தாம்பாளத்தில் பால், இளநீர் முதலியவை பூஜைக்கு வேண்டியவற்றையும் குடம், செம்பு முதலியவற்றை எடுத்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை எல்லாம் காலாகாலத்திலே போயீட்டு வந்திட்டா நல்லதுதானே நீங்க மேல வீட்டு அண்ணாச்சிய சத்தங்காட்டுங்க என்று காட்சிபடுத்துவதிலிருந்து உணர்கிறோம்.



கணவன், மனைவியாக இணைந்து வாழ்ந்து இப்பொழுது தனியாளாய் நிற்க்கும் கணவனின் உணர்வுகள் ஆழ்மன வெளிப்படாக என்ன வாழ்க்கை வாழ்ந்தோம்? சரியான வாழ்க்கையா, மனைவிக்கு நிம்மதியைச் சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறோமா? இந்த வாழ்க்கை அர்த்தமுடையதுதான? இனிமேல் இது போன்றதொரு வாழக்கை வாழ முடியுமா என்றெல்லாம் நினைத்து ஏங்குவது கதை முழுவதும் படிந்து கிடக்கிறது. சுடலை போனறவர்களின் சங்கொலிதனை நமக்கு நினைவுப்படுத்துகிறது.

தமிழச் சிறுகதை உலகில் ஜெயகாந்தனுக்கு என்று சிறப்பான இடம் என்று உண்டு. புதுமைப்பித்தனுக்குப் பிறகு வேகமும் விறுவிறுப்பும் கொண்ட கதைகளைப் படைத்தவர் ஜெயகாந்தன். 'குருபீடம்' என்ற கதை வழி இந்த மனிதர்களின் ஆசைகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. பற்றற்றவர்களாக வாழ்வதாக நினைக்கும் பிச்சசைகாரர்கள் கூட ஏதேனும் ஒரு விருப்பத்தோடு உடன்பட்டவர்களாக மாறிவிடும் நிலை உண்டாகிறது. பிச்சைக்காரனாகப் படுத்துத் தூங்கியபடியே கிடப்பவன் உலகத்தோடு எந்த விதத்திலும் கூட ஒட்டதாவனாக இல்லை. இந்த உலகமே பிடிக்கவில்லை. வாழப் பிடிக்கவில்லை என அலங்கலாய்த்துக் கொள்ளும் சாதாரண இளைஞனும் ஏதோ ஒரு வகையில் இந்த உலகத்தோடு இணைந்து வாழ்பவனாக இருக்கிறான். இந்த இருவருக்குமான முரண் இந்தக் கதையிலே சொல்லப்பட்டுள்ளது.

சந்தைத் திடலிலே யாருடைய கவனிப்பையும் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் தூங்கிக்கொண்டே கிடக்கும் பிச்சைக்காரன் ஒரு ஞானியைப் போலச் சித்தரிக்கப்படுவதும், சாதாரண ஒரு இளைஞன் மடைப்பள்ளியில் வேலை செய்பவன் குருவை மிஞ்சிய அடியானவாகவும், அப்பனுக்கே பாடம் சொன்ன முருகப் பெருமான்போல் படைக்கப்பட்டிருப்பதும் ஆய்வுக்குரியது. அதாவது, இந்த உலகத்தில் யாருக்கும் யாரிடமும் கற்றுக் கொள்ள விசயம் இருக்கிறது என்பதைச் சூசகமாகச் சொல்கிறார்.



பிச்சைக்காரனும் இளைஞனும் குரு அடியனாக மாறிவிட்ட பிறகு இரண்டு பேரும் பேசி விவாதிக்கக் கூடிய கருத்துக்கள் தத்துவ விசாரணை போல இருக்கிறது. இயல்பிலேயே மனிதனுக்குள் அமைந்துள்ள இயற்கை குறித்து கேள்விகளின் தன்மையாகப் பிச்சைக்காரனிடம் இளைஞன் கேட்கும் கேள்விகள் அமைகின்றன. கதையின் முடிவு மிகச் சாதாரணமாக அமைந்து, ஆனால் விவாதத்ததைத் தொடங்குவதாக உள்ளது. எந்த மனிதனுக்குள் என்ன திறமை, தன்மை ஒளிந்து கொண்டிருக்கும் என்று சொல்ல முடியாது. கற்றுக் கொள்ள வந்தவனிடமே கற்றுக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்த உலக வாழ்க்கையும் அப்படித்தான் அமைகிறது என்னும் கருத்து இரண்டு பாத்திரங்களின் வழியே எடுத்துச் சொல்லப்படுகிறது.

சிறுகதை படைப்புகளில் திலகவதி அவர்கள் எழுதிய 'உயிரின நிறம்' என்ற கதை பெண்களின் பெண்மையின் பெண் உள்ளத்தின் உணர்வுகளைச் சொல்வதாக அமைந்துள்ளது. நல்ல ஒரு சிறுகதையின் தொடக்கம் என்பது அந்தக்கதையின் முழுப்போக்கையும் சொல்லிவிடும் என்பர். பீங்கான் ஜாடிக்குள்ளே உருள்கிற கோலிக்குண்டுங்க மாதிரி கூட்டுக்குள்ளேயிருந்த குருவிக் குஞ்சுங்க கிய்கிய்னு கத்துற மாதிரி சத்தம். முழிச்சு எழுந்து பார்த்தா கூண்டுமில்ல குருவியுமில்ல. பிரிவோட ரூம்ல மாட்டியிருக்கிற கடிகாரமணி அடிக்கிற சத்தம் என்று கதை தொடங்கும் பொழுது, எதிர்பார்ப்பும் கதை நிகழும் களமும் தெரிந்து விடுகிறது. ஓர் அறைக்குள்ளே நடக்கிற விசயங்கள் கதையாகியுள்ளது. குழந்தைகளின் அறையெங்கும் விளையாட்டுப் பொருட்களும் கனவுகளும் நிரம்பிக் கிடக்கும். எனவேதான் இந்தக்கதை முழுவதும் குழந்தைகளின் கனவுலமாகவே விரிகிறது.


பிரியா என்கிற ஒரு குழந்தையின் அறையையும், அறையிலுள்ள பொருள்களையும், ஏன் பிரியாவையுமே பராமரிக்க ஒரு குழந்தை இருக்கிறது. பிரியா வீட்டில் பெரியவர்களாக மட்டுமே இருந்ததால் பொம்மைகளே இல்லை என்பதும் அந்தக் குழந்தையின் வருத்தமாக இருக்கிறது. அதோடு தினமும் வேலை செய்யச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஓய்வு இல்லை, கால் கை வலித்துக் காய்ச்சலே வந்து விடும் என்று பேசுகிறாள். குழந்தை பெரிய மனுசி போலப் பேசும் தன்மை இங்கே வெளிப்படுகிறது. பிரியாவுடன் தனக்குள்ள உறவைப் பெருமை பொங்கப் பேசிக் கொண்டே இருப்பதாகக் காட்டுகிறார். இதுவும் கூட பெரியபிள்ளைத்தனமாகவே தெரிகிறது.

கதையின் ஓட்டத்தின் ஊடே தனது சொந்த வீட்டுக் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்து குழந்தை பேசுகிறது. வீட்டில் கட்டிய குருவிக் குஞ்சுகள் நாகு எனப்படும் நாய்குட்டியின் சேட்டை என ஒவ்வொன்றையும் பிரமிப்புடன் பேசி, பிரியாவுக்கு இவை எந்த அளவு பிடிக்கும் என்பதன் வழியாக எல்லாக் குழந்தைகளும் விளையாடிய படியும் கனவைச் சுமந்து கொண்டு திரிபவர்கள் என்பதை நுட்பமாகக் காட்டியுள்ளார். பிரியா மற்ற குழந்தைகளோடு விளையாடுவதையும் விளையாட்டுப் பொருள்களையும் பாதுகாப்பும் கண்டிப்பும் அந்தக் குழந்தைக்கு அநீதியாக இருந்தது. தன் வீட்டில் அப்படி யாரும் நடந்து கொள்வதில்லை என்று அந்தக் குழந்தைக்கு ஏக்கமாக இருந்தது. ஒரு முறை பொம்மை போட்ட புத்தகமும் வண்டுப்பெட்டியும் வாங்கி பிரியாவிற்குக் கொடுத்தார்கள். அது எனக்கு பிடித்திருந்தது என்று குழந்தை பேசும். குழந்தைகளின் பிரியங்கள் நமக்குத் தெரிகிறது. அந்த வண்டுபெட்டி பிரியாவின் பிறந்த நாள் பரிசாகத் தனக்கு கிடைக்கும் என்று மற்ற குழந்தைகள் நினைக்கின்றது. ஆனால் பிரியாவின் அம்மாவோ பணத்தை கொடுக்கிறாள். அது குழந்தைக்கு ஏமாற்றமாகிறது. அம்மாவுக்கு காசு தேவைப்படுகிறது. ஆனால் அப்பாவுக்கு என்னை புரிந்திக்கிறது என குழந்தை கருதுகிறது. இதனை அழுதுகொண்டு அப்பாவிடம் போய் வண்டுப்பெட்டியை பற்றிச் சொன்னேன். அப்பா பேசாம கேட்டுக்கிட்டாரு. என்னய மடியில் படுக்க வச்சுக் கண்ணத் தொடச்சி விட்டாரு. முதுகு தலையெல்லாம் தடவி விட்டாரு. நான் அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். அவரு கண்ணு பளபளன்னிச்சி அப்பா நீயும் அழுவுறியான்னேன். இல்லடான்னாரு என்ற வரிகளின் மூலம் உணர்ச்சிததும்பப் படைத்துக் காட்டியுள்ளார். இரண்டு வெவ்வேறு குழந்தைகளின் மன உலகினைச் சிருஷ்டித்துக் காட்டுவதன் மூலம் ரத்தமும் சதையுமாக விளங்கும் மனித உறவுகளின் ஆழம் உயிரின் நிறமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாமாவின் ''பொங்கல்'' சிறுகதையில் சொல்லப்படும் தன்மையினால் மட்டுமல்லாது சொல்லப்படுகின்ற விசயத்தினாலும் சிறப்புத்தன்மை உடையதாக அமையும். சமூக அமைப்பில் முதலாளி என்ற வேறுபாட்டின் அடிப்படையில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளை இந்தக்கதை காட்டுகிறது. மாடசாமி உழைக்கும் வர்க்கத்தின் சார்பாளனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனது மகனாக வரும் இசக்கி மரபை பழமையை மறுக்கும் ஆண்டான் அடிமை முறையை மறுக்கும் பாத்திரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். பொங்கல் நாளைக்கு முதலாளிக்குப் பூசணிக்காயும் இலையும் கொடுக்கும் மக்களின் சமூக நிலையை மாடசாமி பாத்திரம் எடுத்துக் காட்டுகிறது. ஆனால் இளைய தலைமுறையான படித்தவனாக மகன் இசக்கி இதெல்லாம் எதுக்குய்யா கொண்டு போய் மொதலாளிக்கு குடுக்கணும். நம்ம குழம்பு வச்சுத் தின்னாலும் ஒரு நேரமாச்சும் வாயுக்கு ருசியாகச் சாப்பிட்ட மாதிரி இருக்கும் என்றும் நாம இவ்வளவு பொருள் கொடுத்தும் பதிலுக்கு அவரு பெரிசா என்ன செஞ்சு கிழிச்சிறப் போறாரு சொல்லுய்யா என்று கேள்விகள் கேட்பவனாக மாறுகிறான். பழைமையிலும் அடிமைத்தனத்திலும் ஊறிப்போன மாடசாமி மீண்டும் மீண்டும் முதலாளியைப் பகைக்கக்கூடாது அது தப்பு என்றே பேசுகிறான். ஆனால் இசக்கி அதை மறுப்பவனாக இருக்கிறான். உழைத்து உற்பத்தி செய்த பூசணிக்காய் வாழை இலை எல்லாம் சேர்த்துக் காசு மதிப்புப் பார்த்தால் அதிகம் வரும். ஆனால், அதற்குப் பதிலாக முதலாளி தருவது மிகக் குறைவு. இது சுரண்டல் தன்மை உடையது என்பதை காட்டுகிறார். இதனை 'இத்தினிக்கானி பொங்க சோத்துக்கும் ஒருபத்து ரூவா துண்டுக்கும் கெதியட்டுப்போனது கெனக்கா எழுதுவது எம்பது ரூவா சாவலு இதத்தாந்தண்டி பூசணிக்காய் பத்து ரூவாக் கரும்புத்தட்ட ஒரு தாரு வாழப்பழம் நாலுப்படி பச்சரிசி குடுக்கனுமாக்கும். ஏன் இத நாம வச்சுக்கிட்டுக் காச்சிக்குடுச்சா ஒரு நாலஞ்சு நாளு பொழுது ஓட்டலாமுல்ல' என்று இசக்கி கேட்பதன் வழி நிறுவுகிறார். கல்வி அறிவு பெற்ற சமூகமாக ஒரு பிரிவினர் மாறுகிற பொழுது, அந்தச் சமூகம் முழுமைக்கும் மாற்றத்திற்கு உள்ளாகிறது என்பர். அதற்கு ஏற்ப இந்தக்கதையில் வரும் மாடசாமியைப் போன்றவர்கள் எத்தனையோ பேர் இன்னும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இசக்கியைப் போன்ற ஒருசிலர் படித்து முன்னேற மனித நேயமிக்க சமத்துவமுடைய சமூகத்தைப் படைப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தக் கதையின் வழி அறியக் கிடைக்கிறது.


சி.ஆர். ரவீந்திரன் எழுதிய 'வழுக்குமரம' கதையின் தலைப்பே குறியீட்டுத் தன்மை உடையதாக அமைந்துள்ளது. கதையாசிரியர் கதையைச் சொல்லாமல் பாத்திரத்தின் மொழியிலேயே சொல்லி இருப்பது பாத்திரத்தின் உணர்வினை முழமையாகக் புரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது. கொங்கு வட்டாரப் பேச்சு மொழியிலே கதை மொழி அமைந்துள்ளதால் வாசிப்பில் சற்றுத் தடை ஏற்பட்டாலும் வட்டார மொழி என்ற நிலையில் கதை நகர்வு சிறப்பாகவே நடக்கிறது. ஆனால் கிழவரின் மொழியிலேயே கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது மணல் துகள்கள் இலேசாக முதுகுப்புறத்தில் உறுத்தின. காளியம்மன் கோயில் கொடிக்கம்ப தூரத்தில் பஸ் ஒன்று கிளம்புவது தெரிந்தது. நெருப்பணைந்த பீடியைத் திரும்பவும் பற்ற வைத்துப் புகையை வேகமாக இழுத்து ஊதினார். சேவல் ஒன்று எங்கிருந்தோ கூவியது என்பது போன்ற இடைக்காட்சிப் படிமங்களை ஆசிரியர் எழுதிக் கொண்டே செல்வது மன உணர்வின் வெளிப்பாட்டுத் தன்மையில் நேர் செல் நெறியில் சிறிய தடங்கல்களை ஏற்படுத்துகிறது. கிழவர் விடாப்பிடியாகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்தியே பிறரின் தவறுகளை (மகன் மருமகள்) சொல்லிக்காட்டிய படியே பாத்திரத்தின் தன்மையைக் காட்டுகிறது எனலாம். வழுக்குமரம் பற்றிய சித்திரம் கூட கிழவரின் மனம் வழுக்கு மரம் ஏறுவது போலச் சரிந்து சரிந்து மேலேறுகிறது எனக் காட்டிக் கொள்வதே எனலாம். கதை நகர்ந்து சென்று கிழவர் காத்திருப்பதிலேயே முடிகிறது. மருமகனும் மருமகளும் பேரனும் கூப்பிடுகிறார்கள். அழுத்தமான அவர் மனுசு இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மனித உறவுகளுக்குள் வரும் முரண்களும் மோதல்களும் வந்து வழி தெரியால் போய்விடும், போய்விட வேண்டும், அப்பொழுது தான் வாழ்க்கை வசப்படும் வாசமாய் இருக்கும் எனக் குறிப்பாகக் காட்டுகிறார் ஆசிரியர். கிழவரின் மனசைப்போல வழுக்கு மரமாய் ஏறி ஏறி இறங்க கூடாது என்பதையும் கருத்தாகச் சொல்லியுள்ளார்.

அம்பை என்னும் புனைப்பெயரில் கதை எழுதி வருபவர் சி. எஸ். லட்சுமி ஆவார். நவீனப் பெண்ணியச் சிந்தனையின் வெளிப்பாடாக அம்பை காட்டப்படுகிறார். வாழ்க்கையில் இயல்பாகவே அமையும் நிகழ்வுகளை நுட்பமாகப் பார்த்து, அதனுள் பொதிந்து கிடக்கும் பௌதிக விவரங்களை வெளிக்காட்டுவர். 'வல்லூறுகள்' இக்கதை தாய்க்கும் மகளுக்குமான உரையாடலாகத் தொடங்குகிறது. தாய் விளக்கம் சொல்பவளாக, மகள் கேள்வி கேட்பவளாக அமைந்து கதை போக்கில் மாறுபாடு ஏற்படுகிறது. தன் குழந்தையாக இருந்த காலத்தில் அம்மாவின் சிநேகிதங்களை ஒரு குழந்தை நிலையிலிருந்து பார்க்கும் விதத்தில் அமைத்த ஆசிரியர் வளர்ந்த பிறகு அம்மாவின் செயல்பாடுகளை விவரம் தெரிந்த பெண்ணான பிறகு பார்க்கும் வழி சொல்லவில்லை. பெற்றேர்கள் போலவே குழந்தைகள் எல்லாம் தெரிந்தவர்களாகப் பேசுகிறார்கள். அம்மாவின் கூடவே பயணிக்கும் பொழுதும் கூட தனக்கான தனித்த சுயசிந்தனைப் பண்புகள் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாக, மகளின் செயல்பாடுகளை அமைத்துள்ளார் என்று தோன்றுகிறது. தாயினுடைய பார்வையில் அப்பாவின் குணங்கள் பேசபடுகிறதே ஒழிய, குழந்தை மகள் என்ற நிலையில் இருந்து அப்பாவின் ஆணின் மனம் பேசப்படவில்லை எனலாம். ஆண்கள் எப்பொழுதும் வல்லூறுகள் போல் இறக்கைகளை விரித்துக் கொண்டே திரிகிறார்கள் என்னும் பெண்ணிய அடிப்படைப் பார்வை கொண்டுள்ளதாக, சந்தேகம் என்பது ஆணுக்குரியதென்னும் வழமையான சொல்முறை இதிலும் பின்பற்றப்படுகிறது. அம்மா தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு உள்ளவாவதைப் பார்க்கும் மகள் அம்மாவின் மாற்றத்திற்குச் செயல்பாட்டிற்குக் காரணமாக அமையவில்லை அப்பாவே கரணமாகிறார். ஒரு காலத்தில் தெரியாமல் குப்புறக்கவிழ்ந்து அழுத அம்மா அரிவாளைக் கிழித்து எல்லாரும் எடுத்துக்கொள்ளச் செய்கிறாளென்பது சிறுகதைக்கேயுரிய திடீர்திருப்பம் என்னும் உத்தியினடிப்படையில் அமைந்துள்ளது எனலாம். எல்லா நேரங்களிலுமே, படுக்கையறையிலும், வெளி உலகிலும் சரி ஆண்கள் பெண்கள் கடித்துக் குதறும் வல்லூறுகளாகவே திரிகிறார்கள் என்பதை கதை முடிவிலும் உறுதிபடுத்துகிறார். மூட்டைகளைத் திறந்து விட்ட அம்மாவை மோதி அடித்துக்கொன்று போட்டு விட்டு வெறியோடு பார்த்து நின்றனர் எனப் படைக்கிறார். அம்மாவின் பாத்திரப் படைப்பு தொடக்கம் முதல் முடிவு வரை பெண்ணியத்தின் பிரதிநிதியாகவே படைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வானத்திலுள்ள நட்சத்திரங்களை ரசிக்கும் இயல்பான எளிய உள்ளம் கொண்டவர்களாக இருக்கும் போரட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது படிப்படியாகச் சித்தரிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p35.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License