இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


36.க. நா. சுப்ரமணியத்தின் சிறுகதைகளுக்கான கதைக்களத் தேடல்

முனைவர் நா. ஜானகிராமன்

சிறுகதைக்கான களங்கள் ஆசிரியரைப் பொறுத்து மாறுபடுகின்றன. படைப்பாளன் தாம் வாழ்கின்ற சூழல் மற்றும் வாழ்விடம் சார்ந்த நபர்களால் கதைக்களங்கள் தீர்மானிக்கப்பெறுகின்றன என்கின்றனர் அறிஞர்கள். இலக்கியங்கள் படைப்பாளர்களின் மனதில் ஏற்படும் தாக்கங்களாலும் (Influence), பாதிப்புகளாலும் (Suffer) உருவாகின்றன. ஒரு படைப்பு சிறப்புறவும் வெற்றிபெறவும் கதைக்களத் தேடல்களிலும், புரிதல்களிலுமே வெற்றியடைகின்றன என்பது முற்றிலும் உண்மையாகும். எட்கர் ஆலன்போ இதற்குப் பல சான்றுகளைத் தருகின்றார். அனைத்துப் படைப்புகளும் எழுத்தாளனின் கதைக்களத் தேடல்களிலேயே நாட்கள் பல போகின்றன. சில படைப்பாளர்களை அணுகிக் கேட்கையில் எனக்குக் கதைக்கரு அல்லது கதைக்களம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஒவ்வொரு படைப்பாளரின் அனுபவத்திற்கு ஏற்பவும் பழகும் கதைமாந்தர்களுக்கு ஏற்பவும் கதைக்களம் மாறுபாடு அடைகின்றது. கதையும் வெற்றியடைகின்றது. க. நா. சுப்ரமணியமும் கதைக்களத் தேடலுக்கான வித்தகர். அவர் பல கதைக்கருவினையும், கதைக்களத்தையும் தேடி அதில் வாசகர்களை ஒன்றவைத்தவர். அவர் தேர்ந்தெடுத்த சில கதைக்களங்களைப் பற்றியும் அவற்றில் ஆசிரியரின் ஆளுமைப்பற்றியும் பல்வேறு கோணங்களில் நோக்கலாம்.

க. நா. சுப்பிரமணியம்

வலங்கைமானில் பிறந்த க. நா. சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க. நா. சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். இராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது.



* தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதிமணி க. நா. சு. வின் மருமகன்

* சர்மாவின் உயில், பசி, வாழ்வும் தாழ்வும், சக்தி விலாசம், ஏழு பேர், ஒரு நாள், புழுதித்தேர், மால்தேடி, நடுத்தெரு, கோபுரவாசல், பொய்த்தேவு, அசுரகணம், பித்தப்பூ ஆகியவை இவர் எழுதிய நாவல்களாகும்.

* விமர்சனக் கலை, படித்திருக்கிறீர்களா, உலகத்து சிறந்த நாவல்கள், இலக்கிய விசாரம் போன்றவை இவர் எழுதிய விமர்சனக் கலை நூல்களாகும்.

* அன்புவழி, தபால்காரன், மதகுரு, நிலவளம், மிருகங்கள் பண்ணை (Animal Farm) ஆகியவை இவர் எழுதிய மொழிபெயர்ப்புப் படைப்புகளாகும்.

சிறுகதைப் படைப்புகள்

1940 களில் இருந்தே பல்வேறு சிறுகதைகளை எழுதி வந்தவர் க. நா. சு. ஏறத்தாழ 67 சிறுகதைகளை எழுதியுள்ளார். “தெய்வ ஜனனம்”தொடங்கி “கபாலி” என்பது வரையிலான கதைகள் அனைத்தும் சிறப்பு பெற்ற கதைகளாகும். இவர் தேர்ந்தெடுத்த அனைத்துக் களங்களும் மிக இயல்பாக அனைவரும் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் சூழல்களாக அமைந்துள்ளன. பொதுவாக ஓர் படைப்பு ஜனரஞ்சக இயல்பைப் பெற்று விட்டதென்றால் அது ஓர் இயல்பான படைப்பாகி விடுகின்றதெனலாம். மக்கள் இலக்கியம் என்ற சொல்லக்கூடியது இதுவே ஆகும்.

மக்களின் நன்மதிப்பைப் பெற்ற இலக்கியங்கள் மக்கள் சார்ந்த சிக்கல்களையும் அதனை அவிழ்ப்பதற்குமுரிய தீர்வுகளையும் சொல்லியாக வேண்டும். க. நா. சு. வின் கதைகளில் இது உள்ளது. மேலும், தமிழ்ப்பண்பாட்டுப் பதிவுகளை மெல்லிய இழையில் ஓடவிட்டு அதனை அழுத்தமாகப் பதிவு செய்தவர் சுப்ரமணியம் என்றால் அது மிகையில்லை.

க. நா. சு. வின் இலக்கிய ஆளுமைகள் பின்வரும் பாகுபாடுகளில் தனிச்சிறப்பு பெறுகின்றன. அவற்றுள் முக்கியமானது தமிழ்ப்பண்பாடு மற்றும் கலைகள், அவரின் முதல் சிறுகதையே இதற்குச் சான்றாய் விளங்குகின்றது. 1943-ல் எழுதிய இவரின் சிறுகதையில் குறிப்பிட வேண்டியதாகும். ஏறத்தாழ 45 ஆண்டுகள் எழுதியுள்ளார்.



க. நா. சுவின் ஆளுமைகள்

உறவுகள், தெய்வ நம்பிக்கை, தனிமனிதம், சமூகம், கலைகள், கற்பனை, தனிமனித உணர்ச்சி, பொதுப்பண்புகள், இல்லறம், துறவு, பிராமணியம், தமிழம், வரலாற்றுக்குறிப்புகள், நம்பிக்கை, எளிமை, கேலி, ஆழ்மனம், இறைநட்பு என இந்தப்பாகுபாடுகள் மிகக் குறுகியதாக இருப்பினும், இவரது படைப்புகளில் பல்வேறு ஆளுமைக் கூறுகள் பொதிந்துள்ளன.

இறையுணர்வு வெளிப்பாடு

“தெய்வ ஜனனம்” என்னும் தலைப்பில் க. நா. சு எழுதிய சிறுகதை பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது. இக்கதையில் வரும் பாத்திரங்கள் உலகளாவிய சிந்தனைகளை முன்வைக்கின்றன. தமிழர்களுக்குத் தம் திறமையில் என்றும் நம்பிக்கை வைப்பது கிடையாது என்பதை உணர்த்தியுள்ளார். பூம்புகார் நகரத்தைப் பொன்பரப்பும் நகரம் என்று வருணித்துள்ளார். காவிரிப்பூம்பட்டினம் என்ற நகர் கந்தர்வர்கள் வந்து உலவும் நகரம் பாலும் என்றும் உவமிக்கின்றார். பத்து நாட்கள் நடக்கும் சிற்பத் திருவிழாக் கண்காட்சியில் ஐம்பத்தாறு தேச சிற்பிகள் வந்து தத்தம் சிற்பங்களை வைத்துள்ளார்கள். அவற்றுள் தமிழ்சிற்பியின் சிற்பமும் காட்சியளிக்கின்றது. ஆனால், அது மறைந்திருக்கின்றது. அது ஏன் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு க. நா. சு தரும் விளக்கம் பல. இருப்பினும் தமிழர்களுக்கு அவரவர் திறமை மீது நம்பிக்கை வெகுவாகக் குறைந்தே காணப்பெறுகின்றது என்பதை வலியுறுத்தியுள்ளார். அந்தச் சிற்பத்தைச் செதுக்கியவன் சாதாரணமானவன் அல்லன். அவன் ஓர் தேவலோகச் சிற்பி, அவன் பெயர் மயன். அவனுக்கு ஏன் மயன் எனப் பெயர் வந்துள்ளது தெரியுமா? அவன் மாயவரத்தில் பிறந்தவன் என்பதாலேயே என்னும் காரணத்தை முன்வைக்கின்றார். அவ்வப்போது கதையில் சுந்தாப்பாட்டி வந்து போகின்றாள். தம் 67 கதையிலும் இப்பாட்டி வருகை குறிப்பிடத்தகுந்தது. பெரும்பாலும் கதையின் நிகழ்வுகள் களங்கள் முடிந்துவிடும். ஆனால், இவரின் கதையில் வரும் பாத்திரங்கள் சில தொடர்ந்தே அனைத்துக் கதையிலும் வருகின்றது. யவனச் சிற்பி பிராக்டிலிஸ் மற்றும் வசுதேவன் வடித்த சிற்பங்கள், நேபாளத்திலிருந்து வந்த பதுமன் ஆகியோர் வடித்த சிற்பங்களைத் தமிழக மக்கள் பார்வையிடுகின்றனர். ஆனால். தமிழகத்துச் சிற்பி வடித்த ஒளிவடிவச்சிலை மட்டும் யவன நாட்டுச்சிற்பியால் கண்டெடுக்கப்படுகிறது. இங்கே ஆசிரியர் இறையுணர்வுக் காட்சியையும் தமிழகத்துச் சிற்பத்துக் கலையினையும், நடராசபெருமானின் திருவடி நடனத்தையும் பதிவு செய்கின்றார் க. நா. சு. ‘இது உருக்கிய உலோகமுமல்ல, செதுக்கிய கல்லுமல்ல, பிசைந்து வைத்த மண்ணுமல்ல, ஒளியையே பிடித்து வடிவாகச் சமைத்து வைத்திருக்கிறானடா! என்றான்’ என்னும் வகையில் பிரமிப்புச் செல்கிறது.



தனிமனிதப் பாத்திரங்கள்

பாத்திரங்கள் கதைக்களமாக இருப்பதைக் காணமுடிகிறது. சாம்பமூர்த்தி மற்றும் சீதாராமன் ஆகியோர் மனவுணர்வுகள் கதைகளாகி விட்டன. சாம்பமூர்த்தியின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படிக்கும்போது ஒரு நாவலுக்கான உணர்வு எழுகிறது. வசதி படைத்த தமது தந்தை சேகரித்து வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் பின்னாளில் குறைய மனைவியின் உடல்நலம் குன்ற சேகரித்து வைத்த சொத்துகள் ஒவ்வொன்றாய்க் குறைகிறது. “குந்தித்தின்றால் குன்றும் மாளும்” என்ற பொன்மொழிக்கேற்ப வளம் குன்றிய வாழ்க்கையாகிறது சாம்பசிவத்தின் வாழ்க்கை. தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோகத்தை மறைக்க தாசி, மதுவுக்கு அடிமையாகிறார் சாம்பமூர்த்தி. இருந்தாலும் மனம் அதில் ஒட்டவில்லை. ஆனால் குடிப்பழக்கத்திலிருந்து அவரால் முடியவில்லை. ஒருநாள் குடித்துவிட்டு மணிக்கூண்டைப் பார்த்த படியே செல்கிறார். அந்த மணிக்கூண்டில் உள்ள முள்ளானது தம்மைத் துரத்தி வந்து குத்துவது போல உள்ளதாகக் கதை சித்திரிக்கப் பெற்றுள்ளது. தானதர்மங்கள், குடி, கூத்திகள், இப்படியாக முக்கால் வாசிக்கு மேல் மறைந்து விட்டது. எஞ்சி இருந்தது ஒரு வீடு மட்டும் தான். நிலத்தில் ஒன்றிரண்டு வேலிதான் மிச்சம். இவ்வாறு சாம்பமூர்த்தியின் வாழ்க்கை செல்கிறது. ஒவ்வொரு தனிமனிதவாழ்விலும் எல்லை இதுவாகவே அமைகின்றது. விதியின் வழியே மதி செல்லும் என்பதற்கும் விதியைவிட வலியது ஒன்றுமில்லை என்பதற்கும் சாம்பமூர்த்தியின் வாழ்க்கை ஒரு உதாரணமாகும். எல்லோர்க்கும் வாழ்வில் விரக்தி உண்டு. விரக்தியின் விளிம்பில் நிற்கும் மனிதர்கள் என்றாவது ஓர்நாள் மீண்டு வருவோம் என எண்ணுவதும், அது பின்னாளில் முடியாமல் போவதும் வாழ்க்கை நிகழ்வுகளாகி விடுகின்றன. இவரது கதைகளிலும் இதனைக் காணலாம்.


பெண்மனம் சார்ந்த உணர்வுகள்

பெண்மனம் சார்ந்த உணர்வுகள் களமாக்கப்பட்டுள்ளன. இரு மனைவியர் கட்டிக்கொண்ட ஒருவன் தம் மூத்த மனைவியின் பிள்ளைக்குச் சொத்தில் பாகம் சரியாகக் கொடுக்காமல் வஞ்சனை செய்தால் பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் என்பதே இந்தச் சிறுகதையின் களம் மற்றும் கரு. உலகில் பலர் இத்தகைய செயல்களையே செய்கின்றனர். “தன் கணவன் உயிரோடு இருக்கும்போது செய்த அக்கிரமங்கள் போதாதென்று இறந்த பிறகும் மூத்தாள் பிள்ளைக்கு அநீதி செய்ய முயலுகிறாரே என்று லட்சுமிக்கு மிகவும் வருத்தம். தம் மூத்த பிள்ளையை ஒதுக்கிவிட்டு மற்ற மூவருக்கும் தம் ஆஸ்தியைச் சமமாகப் பங்கிட்டு அவர் உயில் எழுதியபோது அவள் தன்னால் ஆனவரையில் ஆட்சேபித்துப் பார்த்தாள். தர்ம நியாய சாஸ்திரங்களில் புலியான சுப்பையா தீட்சிதர் அவள் பேச்சைக் காதில் வாங்கவே இல்லை” என்னும் வரிகள் பெண்மனச் சிதறல்களை வெளிக்காட்டுகிறது. க. நா. சு. அவர்கள் இத்தகைய பல நிலைகளில் உள்ள பெண்களில் மனக்குமுறல்களைப் படம்பிடித்துள்ளார்.

மாயை மற்றும் மனப்பிரம்மை

மாயை மற்றும் மனப்பிரம்மையை வைத்துப் பல ஆசிரியர்கள் கதைகள் பின்னியுள்ளனர். அவற்றுள் இக்கதை மிகவும் சுவாரஸ்யமானது. திருமண நிச்சயதார்த்த விழாவில் அனைவருக்கும் விருந்து கொடுக்கப்பட்டு வெற்றிலைப்பாக்கு வழங்கப்பட்டது. முற்றத்தில் வந்திருந்த மக்கள் திடிரென்று கூச்சலிட்டனர்.

இதனை, “திடிரென்று சபை அல்லோப்பட்டது. சபா தாம்பூலத்தில் வைத்து வழங்கிய வெற்றிலையில் வைத்திருந்த பாக்கெல்லாம் தேளாக மாறிவிட்டது. கையில் தாம்பூலத்தை வாங்கியவர்கள் “ஐயோ தேள்” என்று கீழே போட்டார்கள். ஏற்கனவே கையில் வாங்கி வைத்திருப்பவர்கள் கையில் ஏதோ நகருவது போன்று உணர்ந்தார்கள். தேள்! தேள் என்று பதறினார்கள். கல்யாணவீடெல்லாம் தேளாக மாறிவிட்டது” என்று நிறைவு செய்கிறார். மனதில் உள்ள அதீதக் காட்சி இவ்விடத்து வெளிப்படுவதை உணரமுடிகிறது. படைப்பாளனின் மனநிலையும் மக்களின் மனநிலையும் ஒன்று சேர்வது இவ்விடத்தில்தான். ஏற்கனவே சுடுகாட்டைக் கடந்துவரும் ஒருபாத்திரம் வீடடைந்து பிறகு பேய் வருவதைப்போலவே உணரும் மனநிலையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.


தொகுப்புரை

க. நா. சு. சிறந்த இலக்கிய விமர்சகர். பல படைப்புகளை வெளியிட்டுள்ளார். தமது சிறுகதையில் பல்வேறு உணர்வுகளைக் களமாக்கியுள்ளார். பாத்திரங்கள் களமாகியுள்ளன. 67 சிறுகதைகளில் உள்ள ஆளுமைகள் பல “தெய்வ ஜனனத்தில்” வெளிப்பட்டுள்ளது. மயன், சித்ராந்தகி, ஐம்பத்தாறு தேசங்கள் போன்ற செய்திகள் தமிழகத்தின் பாரம்பரியத்தைக் காக்கின்றன. வசதி படைத்தவர்கள் வறுமைக்குள்ளாவதும், வறுமையுற்றவர்கள் மீண்டு வருவதும் இயல்பாகும். இத்தகைய பதரப்பட்ட வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். பெண்மனவுணர்வுகள் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. சாம்பமூர்த்தி போன்ற பாத்திரங்கள் தனிமனித உணர்வுகளைக் காட்டுகின்றன.

துணைநூற்பட்டியல்

1. ஞானசம்பந்தன். அ. ச, இலக்கியக்கலை, பாரிநிலையம், சென்னை (1985)

2. மதியழகன். மா, நவீனத்தமிழ் இலக்கியம், நியு செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை ( 2002)

3. தமிழவன், இலக்கியக் கருத்தாடல், பாரிநிலையம், சென்னை (2003)

4. வையாபுரிப்பிள்ளை. எஸ், இலக்கியச் சிந்தனைகள் (1978)

5. வரதராசன். மு , இலக்கியத்திறன் (1987)

6. ராகவையங்கார். வ , தற்காலத் தமிழிலக்கியம் (1980)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/essay/seminar/s2/p36.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License