தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை
5. “அறியாமை” சிறுகதை - மொழியாய்வு
அ. முபாரக் அலி
முன்னுரை
உலக மக்களின் வாழ்விலும், வளார்ச்சியிலும் கதைகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இக்கதைகள் வரலாற்றுக் கதைகள், தெய்வத்தோற்றக் கதைகள், காப்பியக் கதைகள், இதிகாசக் கதைகள், புராணக் கதைகள், நாயன்மார் கதைகள், ஆழ்வார் கதைகள், சித்தர் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நாட்டுப்புற வழக்காறு கதைகள், பாடடிக் கதைகள், அறநெறிக் கதைகள், புதினக் கதைகள், தொடர் கதைகள், திரைப்பட, நாடகக் கதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், அறிவியல் கதைகள், சிறுகதைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இக்கட்டுரை ஜெயப்பிரியா முரசு, டிசம்பர்,15 இதழில் பக்கம் 78-79ல் “அறியாமை” எனும் தலைப்பில் வெளிவந்த பரிசு பெற்ற சிறுகதையின் மொழியை ஆய்வதனை நோக்கமாகக் கொண்டதாகும். இச்சிறுகதை “பணத்தை வைத்துக் கொண்டு எதையும் சாதிக்கலாம்” என்ற எண்ணம் கொள்வது தவறானது என்பதனையும், மனித நேயமே சிறந்தது என்பதனையும் மானிடச் சமூகத்திற்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர் தனது அறியாமையை உணர்வதாக இச்சிறுகதையின் முடிவு அமைந்துள்ளது.
ஒலியன்
ஒரு மொழியில் பொருள் வேறுபாட்டை உண்டாக்குகிற ஒவ்வொரு ஒலியும் அந்த மொழியில் ஒலியன் என்று கொள்ளப்படும். தமிழில் அணி என்பதும் ஆணி என்பதும் வேறுவேறு பொருள் கொண்ட சொற்கள், அ, ஆ, ஆகிய இரண்டும் தனித்தனி ஒலியன்கள் என்று கொள்ளப்படும் (பொற்கோ 1997 P.18)
தமிழில் உயிர் ஒலியன்கள்
|
முன்னண்ண உயிர் |
இடையண்ண உயிர் |
பின்னண்ண உயிர் |
உயர் |
இ, ஈ |
|
உ, ஊ |
இடை |
எ, ஏ |
|
ஒ, ஓ |
தாழ் |
|
அ, ஆ |
|
தமிழில் வழங்கும் இப்பத்து உயிரொலியன்களையும் இக்கதையில் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்.
கூட்டுயிர்
“ஐ” காரம் “ஓள” காரம் ஆகிய இரு ஒலிகளும் உயிரொலியன்களின் பட்டியலில் இணைக்கப்படவில்லை. அவற்றுள் “அ” உயிரும், “ய” கர மெய்யும் இணைந்து கூட்டொலியாக “ஐ” காரம் தோன்றுகிறது என்ற தொல்காப்பியர் விளக்கிச் சொல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
“அகரத்திம்பர் யகரப்புள்ளியும் ஐயென்
நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
என்பது தொல்காப்பிய நூற்பா
இவ்வாறே “அ” கர உயரும் “வ” கர மெய்யும் இணைந்த நிலையில் “ஔ” காரம் தோன்றுகிறது. எனவே இவ்விரு ஒலிகளையும் தனியொலியாகக் கருதாமல் கூட்டொலிகளாக கொள்ளவேண்டும்.
இச்சிறுகதையில் ஆசிரியர் “ஐ”, “ஔ” எனும் இரண்டு கூட்டுயிர்களில் “ஐ” காரத்தினைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் “ஔ” காரம் பயன்படுத்தப்படவில்லை.
மெய்யொலியன்கள்
தமிழ் மொழியில் பதினெட்டு மெய்யொலியன்கள் வழங்கி வருகின்றன. அவைகள்
|
இணை இதழ் ஒலி |
இதழ்சார் பல் ஒலி |
பல் ஒலி |
அண்பல் ஒலி |
அண்ண ஒலி |
நாவலை/ வளைநா ஒலி |
பின் அண்ண ஒலி |
நிறுத்தொலி |
ப் |
|
த் |
ற் |
|
ட் |
க் |
நிறுத்துரசொலி |
|
|
|
|
ச் |
|
|
மூக்கொலி |
ம் |
|
ந் |
ன் |
ஞ் |
ண் |
ங் |
மருங்கொலி |
|
|
|
ல் |
|
ள் |
|
உரசலில்லாத் தொடரொலி |
|
|
|
|
|
ழ் |
|
வருடொலி அல்லது ஆடொலி |
|
|
|
ர் |
|
|
|
ஊரசொலி |
|
வ் |
|
|
ய் |
|
|
இச்சிறுகதையில் ஆசிரியர் தமிழில் பயின்று வரும் பதினெட்டு மெய்யொலியன்களையும் பயன்படுத்தியுள்ளார். வடமொழி மெய்களான “ஸ்” மற்றும் “ஷ்” ஆகியவைகளை ”சாஸ்திரி”, “கஷ்டமான” எனும் வடமொழிச் சொற்களில் கையாண்டுள்ளார்.
மெய்யொலியன் கொத்துகள்
தமிழில் இரண்டு மெய்யொலியன்களைக் கொண்ட கொத்துக்கள், மூன்று மெய்யொலியன்களைக் கொண்ட கொத்துக்கள் பயின்று வருகின்றன. அவைகள்
ப்ப், த்த், ற்ப், ற்ற, ற்ச், ற்க், ட்ப், ட்ட், ட்ச், ட்க், க்க், ச்ச், ம்ப், ம்ம், ந்த், ந்ந், ன்ப், ன்ற், ன்க், ன்ச், ன்ம், ன்ன், ண்ப், ண்ட், ண்க், ண்ம், ண்ண், ஞ்ச், ஞ்ஞ், ஞ்க், ங்ங், ல்ப், ல்க், ல்ச், ல்ல், ல்வ், ல்ய், ள்ப், ள்க், ள்ள், ள்வ், ழ்ப், ழ்த், ழ்க், ழ்ச், ழ்ம், ழ்ங், ழ்வ், ர்ப், ர்த், ர்க், ர்ச், ர்ம், ர்ங், ர்வ், வ்வ், ய்ப், ய்த், ய்க், ய்ச், ய்ம், ய்ந், ய்ஞ், ய்வ், ய்ய்.
இவைகளுள்
ற்ச், ற்க், ட்ப், க்ச், ந்ந், ன்ப், ன்க், ன்ச், ன்ம், ண்ப், ண்ம், ஞ்ஞ், ங்ங், ல்க், ல்ச், ல்வ், ள்ப், ள்க், ழ்ப், ழ்த், ழ்க், ழ்ச், ழ்ங், ழ்ம், ழ்வ், ர்ப், ர்ச், ர்ம், ர்ங், ர்வ், வ்வ், ய்ப், ய்க், ய்ச், ய்ம், ய்ந், ய்ஞ், ய்வ்
ஆகியவைகள் இச்சிறுகதையில் பயன்படுத்தப்படவில்லை.
மூன்று மெய்யொலியன் கொத்துகள்
ய்ம்ம், ய்ம்ப், ய்ந்ந், ய்ஞ்ஞ், ய்ஞ்ச், ய்ங்க், ய்ப்ப், ய்த்த், ய்க்க், ர்ம்ம், ர்ம்ப், ர்ந்த், ர்ஞ்ஞ், ர்ஞ்ச், ர்ங்க், ர்ப்ப், ர்த்த், ர்க்க், ர்ச்ச், ழ்ம்ம், ழ்ம்ப், ழ்ந்ந், ழ்ந்த், ழ்ஞ்ஞ், ழ்ஞ்ச், ழ்ங்க், ழ்ப்ப், ழ்த்த், ழ்க்க், ழ்ச்ச்,
இவைகளில்
ர்ப்ப், ர்ந்த், ர்க்க், ர்ச்ச், ர்த்த், ழ்க்க்
ஆகிய மூன்று மெய்யொலிக் கொத்துக்கள் மட்டுமே இச்சிறுகதையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இருநிலை வழக்கு
“ஒரு மொழியின் இரு கிளை மொழிகள் ஒரு சமுதாயத்தில் நிரந்தரமாக ஒன்றுக்கொன்று துணையாகவும், தனித்தனி சமூகச் சூழ்நிலைகளில் பயன்படுமானால் அந்த நிலையை “இருநிலை வழக்கு” (Diglossia) எனலாம்.
“இருநிலை வழக்குகளில் உயர் வழக்கிற்கும், தாழ்ந்த வழக்கிற்கும் எல்லா நிலைகளிலும் வேறுபாடு காணலாம் என்றாலும்கூட, சொற்கோவையில் (vocabulary) அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது” (சீனிவாசவர்மா, 1980, ப.92)
இக்கூற்றுகளை நோக்குவோமானால் இச்சிறு கதையில் இருநிலை வழக்கு கையாளப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
“நம்ப மனசை பக்தியோட வச்சுக்கிட்டு,
வேண்டுதலை சாமிகாதுல போட்டுட்டு கிளம்பிடணும்”
“தப்பு பண்ணுறவங்கள ஏன் கடவுள் தண்டிக்கலை?”
“காலநேரம் வரும்போது ஒவ்வொருத்தரும் அவங்க பாவங்களுக்கான தண்டனையை அனுபவிப்பாங்க”
இது போன்ற பல தொடர்கள் இக்கதையில் கையாளப்பட்டுள்ளன. இத்தொடர்களில் பொதுப்பேச்சு மொழியோடு கொச்சை மொழியையும் ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார்
சொல்கலப்பு
மொழிகளுள் பரஸ்பர தாக்கம் ஏற்படும் பொழுது, மொழிக்கலப்பு மற்றும் மொழித்தாவலுக்கான சூழ்நிலை ஏற்படுகிறது. மொழிக்கலப்பு என்பது இரண்டாம் மொழியிலிருந்து, ஒரு சொல்லைமட்டும் முதல் மொழியில் கலப்பதாகும். இச்சிறுகதையில்
“அமைதியா இரு ! இது ஹாஸ்பிட்டல்...”
“அமைதிப்படுத்தினாள் துளசி”
“பேஷண்டோட உறவினர்கள்கிட்ட சொல்லி உடனே ரெடி பண்ணுங்க”
போன்ற தொடர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹாஸ்பிட்டல், பேஷண்ட், ரெடி போன்றவைகளே மொழிக்கலப்பாகும். மேலும் இச்சிறு கதையில் ஆங்கில மொழிச்சொற்கள் அதிக அளவில் கலந்துள்ளன. வடமொழிச்சொற்கள் மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. இச்சொற்களை நோக்கும் போது இவைகள் அனைத்தும் தமிழில் நிலைபெற்ற சொற்களாகவே உள்ளன.
ஆங்கிலச்சொற்கள்
டவுட், ஆக்ஸிடென்ட், மொபைல், போன், சைரன், ஆம்புலன்ஸ், லவ், ஹாஸ்பிட்டல், டாக்டர், நர்ஸ், ஆபரேஷன், பேஷன்ட், ஸ்டாக், சிஸ்டர், குரூப், தாங்ஸ், இமிடியட்டா
வடமொழிச்சொற்கள்
பக்தி, கஷ்டம், ரத்தம்
ஆய்வுரை
இச்சிறுகதையில் இடம்பெற்றுள்ள தமிழில் பயின்று வரும் ஒலியன்கள், இரட்டைநிலை வழக்கு, பிறமொழிச்சொல் கலப்பு ஆகிய மொழியியல் கூறுகள் இச்சிறுகதை சிறந்த உயிரோட்டத்துடன் அமைந்து ஆசிரியர் கூறும் “ பணத்தை வைத்து எதையும் வாங்கிவிடலாம்” என்பது தவறான கருத்து என்பதனை இச்சமூகத்திற்கு மிக அழகாகவும் எளிமையாகவும் கொண்டு செல்லும் அறிவூட்டும் கதையாக உள்ளது. இச்சிறுகதையில் ஆசிரியரின் மொழிப்பயன்பாடு பாராட்டுதலுக்குரியதாகும்.
உதவிய நூல்கள்
1. சீனிவாச வர்மா. கோ.1980 “இருமொழியம்” அனைத்திந்நிய தமிழ் மொழியியற் கழகம், அண்ணாமலைநகர்.
2. பொற்கோ.1997 “பொது மொழியியல்” பூம்பொழில், சென்னை.
3. ஜான் சாமுவேல்.ஜி.2008 “திராவிட மொழிகளின் ஓப்பாய்வு, முல்லை நிலையம், சென்னை.
4. கலைவேந்தன்.மு 2015 “கதைகதையாம் காரணமாம்” தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு. ப.1-9.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.