தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
அரிமா டாக்டர் கே. எஸ். ரங்கசாமி MJF
(தாளாளர், கே. எஸ். ஆர் கல்வி நிறுவனங்கள், திருச்செங்கோடு)
உலக மொழிகளில் முதன்மையானதாகவும் தொன்மையுடையதாகவும் விளங்குவது உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி ஆகும்.
"என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ்செய்யுமாறே"
என்றார் ஞானசம்பந்தர்.
அவரது வாக்கு வன்மைக்கு ஏற்ப கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையானது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வகையான தலைப்பின் கீழ் பன்னாட்டுக் கருத்தரங்குகள், தேசியக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் முதலானவற்றை மிகப் பயனுள்ள முறையில் நிகழ்த்தி வருகிறது. ஏராளமான நிதிநல்கைகளைப் பெற்றுத் தமிழ்த்துறையானது திறம்படச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தக் கல்வியாண்டில் கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையும், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழும் இணைந்து "தமிழ்ச் சிந்தனை மரபுகள்" எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்துகிறது. இக்கருத்தரங்கில் பேராளர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு தலைப்பில் ஆராய்ச்சி செய்து, தமிழ்கூறு நல்லுலகத்திற்கு நற்பணியாற்றியுள்ளனர் என்பதை நான் அறிகிறேன். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியதாகும். மேலும் இப்பன்னாட்டுக் கருத்தரங்கல் உலகளாவிய அளவிற்குச் சிறப்பு பெற வாழ்த்துகிறேன். இக்கருத்தரங்கம் சீரும் சிறப்புமாக நடைபெறக் காரண்மாக இருந்த அனைவரையும் மனமார வாழ்த்துகிறேன்.
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.