தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
திரு ர. சீனிவாசன்
(செயலாளர், கே. எஸ். ஆர் கல்வி நிறுவனங்கள், திருச்செங்கோடு)
கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறையானது நல்முனைப்புடன் பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதிநல்கையுடன் கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்தும் திறன் மிக்கதாய்த் தமிழ்த்துறை விளங்குகின்றது.
தமிழ்மொழியின் சிறப்பினை உலகறியும் வகையில் வெளிநாட்டு மொழி வல்லுநர்களைக் கொண்டு பன்னாட்டுக் கருத்தரங்குகளின் வரிசையில் “தமிழ்ச் சிந்தனை மரபுகள்” எனும் இக்கருத்தரங்கம் நடைபெறத் திட்டமிட்ட தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும், தமிழ்த்துறைப் பேராசிரியர்களுக்கும், முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.