தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
வாழ்த்துரை
திருமதி கவிதா சீனிவாசன்
(செயல் இயக்குநர், கே. எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருச்செங்கோடு)
”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ்க்குடி”
என்பார்கள்.
மனிதன் தோன்றிய காலம் முதல் சிறப்புற்று விளங்குவது தமிழ் மொழியாகும். இம்மொழி மனித வாழ்வினைப் படம் பிடித்துக் காட்டும் பண்பட்ட மொழியாகத் திகழ்கிறது.
பிற மொழிகளுக்கு இல்லாத செம்மாந்த சிறப்பு, தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியில் உள்ள இலக்கண, இலக்கியக் கூறுகளைக் கண்டறிவது மனிதனின் கடமையாகும். அத்தோடு தமிழின் தனிச்சிறப்பை அடையாளப்படுத்துவதும் தமிழனின் உயரிய சிந்தனையாகும். அத்தகைய போக்கில் “தமிழ் சிந்தனை மரபுகள்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கம் அமைகிறது. இக்கருத்தரங்கு சிறப்படைய மனம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன். பாராட்டுகள்.
*****
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg)
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.